
Written by S NAGARAJAN
Date: 8 March 2017
Time uploaded in London:- 6-52 am
Post No.3702
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 32
by ச.நாகராஜன்
111ஆம் வயது (1950-1951)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 111. வசந்த காலத்தில் ஸு யுன், நான் ஹுவா ம்டாலயம் சென்று சூத்ரங்களை இசைத்தார். ஒரு வார கால ‘சான்’ தியானப் பயிற்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிலருக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்டது.
யுன் மென் ம்டாலயத்திற்கு வந்த பின்னர் ஸு யுன் தனது கையெழுத்துப் பிர்திகளையெல்லாம் ஒழுங்கு படுத்த் ஆரம்பித்தார். இது சுலபமான வேலையாக இல்லை. ஏனெனில் அவர் எழுதியதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்ன்ர் எழுதிய்தாகும்.
112ஆம் வயது (1951-1952)
ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 112. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைக்கும் போது யுன் மென் மடாலயத்தில் ஒரு பெரும் துர்பாக்கியமான நிலை நேரிட்டது.
குறிப்பு : இது வரை தான் மாஸ்டர் ஸு யுன் தனது நாட்குறிப்பை எழுதி வைத்துள்ளார். மீதியுள்ள எட்டு வருடங்களில் நடந்தவற்றை அவரது சீடர்களே தொகுத்து எழுதியிருக்கின்றனர்.
இந்த ஆண்டு கம்யூனிஸ்டுகளின் புரட்சி ஏற்பட்டது. சூத்ரங்களை இசைத்த போது ஆண் பெண் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். இரண்டாம் மாதத்தின் 24ஆம் நாளன்று. திடீரென்று நூறு கம்யூனிஸ்ட் குண்டர்கள் மடாலயத்தைச் சூழ்ந்து கொண்டு நின்றனர். யாரையும் வெளியில் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.
மாஸ்டரையும் இதர அனைவரையும் அவரவர் இடத்தில் அப்படியே இருக்குமாறு கூறிய் அந்த குண்டர்கள் கூரையிலிருந்து தரை வரை ஒவ்வொரு இடமாக் ஆராய்ந்தனர். இரண்டு நாள் இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்தது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதாக ஒன்றைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியில் பிக்ஷு மிங் காங் உள்ளிட்ட ஐந்து பேரை இழுத்துச் சென்றனர்.

அநியாயமான புகார்களை மடாலயம் மீது சுமத்தினர். மடாலயத்தில் அபாயகரமான் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக் அபாண்டமான புகார்களை அவர்கள் அள்ளி வீசினர்.
26 பிக்ஷுக்கள் கைது செய்யப்பட்டனர். பயங்கரமாக் அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.
பிக்ஷு மியாவோ யுன் அடித்தே கொல்லப்பட்டார். பிக்ஷு வு யுன் மற்றும் டி ழி ஆகியோர் அடிக்கப்பட்டு கைகள் உடைக்க்ப்பட்டனர். இன்னும் சிலரைக் காணவே காணோம்.
ஸு யுன்னை மூன்றாம் மாதம் இன்னொரு அறைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அறைக்கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டன. குடிக்கவோ சாப்பிடவோ ஒன்றும் அவருக்கு வழங்கப்படவில்லை.
மூன்றாம் நாள் உள்ளே வந்த சில பத்து குண்டர்கள் மாஸ்டரிடம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கம், வெள்ளி முதலானவற்றை உடனே கொடுக்குமாறு மிரட்டினர்.
தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மாஸ்டர் ஸு யுன் சொல்லவே அவரை உருட்டுத் தடிகளால் அடிக்க ஆரம்பித்தனர். பின்னர் இரும்புத் தடிகளால் அடிக்கவே அவரது தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் ரத்தம் பெருகியது. அவரது விலா எலும்புகள் உடைந்து நொறுங்கின.
ஸு யுன் ஆழ்ந்த ச்மாதியில் ஆழ்ந்தார். நான்கு முறைகள் இப்படி அடித்த பின்னர் அவரைத் தரை மீது அந்த குண்டர்கள் தூக்கிப் போட்டனர்.
அவர்கள் ஸு யுன் இறந்து விட்டார் என்று நினைத்து வெளியில் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து சீடர்கள் அவரை தூக்கிக் கொண்டு இன்னொறு அறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஸு யுன் தியான நிலையில் அமர்ந்தார்,
ஐந்தாம் நாள் மாஸ்டர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று கேள்விப்பட்ட் குண்டர் பட்டாளம் மீண்டும் திரும்பியது. அவரை அடி அடி என்று அடித்து தரையில் போட்டு உருட்டி லெதர் பூட்ஸால் மிதித்து நொறுக்கினர்.
அவர் தலையிலிருந்து ஆறாகப் பெருகிய ரத்தத்தைக் கண்டு சந்தோஷம் அடைந்த அவர்கள் ஸு யுன் இறந்து விட்டார் என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு வெளியேறினர்.
இரவு நேரத்தில் சீடர்கள் மீண்டும் ஸு யுன்னை தூக்கிக் கொண்டு சென்று படுக்கையில் கிடத்தினர். பின்னர் தியான நிலையில் அவர் அமர உதவினர்.ஒரு நாள் முழுவதும் அவர் புத்தரைப் போல இதே நிலையில் இருந்தார்.
மறு நாள் சீடரில் ஒருவர் ஒரு நூல் திரியை எடுத்து அவர் நாசித் துவாரங்களில் வைத்துப் பார்த்தார். மூச்சே இல்லை. அவர் இறந்து விட்டா என்றே முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அவரது உடலோ வெப்பம் குறையாமல் இருந்தது. அடுத்த நாள் காலை மாஸ்டர் மெல்லிய குரலில் முனகுவது போலக் கேட்டது.
உடனே சீடர்கள் அவரை ந்னகு உட்கார வைத்தனர். மெல்லிய குரலில் ஸு யுன், “சில நிமிடங்கள் தான் க்ழிந்திருக்கிறது என்று நினைத்தேன். ஒரு பேனாவையும் பேப்பரையும் கொண்டு வந்து நான் சொல்வதை எழுதுங்கள். யாரிடமும் இதைச் சொல்ல வேண்டாம். தெரிந்தால் அவர்கள் உங்களைச் சும்மா விட மாட்டார்கள்” என்றார்.
அவர் சொல்வதை சீடர்கள் உன்னிப்பாகக் கேட்டு எழுத ஆரம்பித்தனர். ஸு யுன் மெதுவாகக் கூறலானார்:-
தொடரும்
***