
Australian aborigines
WRITTEN BY S NAGARAJAN
Date: 25 August 2018
Time uploaded in London – 6-14 AM (British Summer Time)
Post No. 5360
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 3
ச.நாகராஜன்
5
எங்கு கிறிஸ்தவ மத வெறியர்கள் சென்றாலும் அங்குள்ள பூர்வ குடியினருக்கு ஆபத்துத் தான். கலவரம், கொள்ளை, கொலை இவைகளே அவர்களின் வழிமுறைகள்.
ஹவாயில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 5 லட்சம் பூர்வ குடியினர் வசித்தனர். ஆனால் இன்றோ அவர்களின் ஜனத்தொகை வெறும் ஐம்பதினாயிரமாகக் குறைந்து விட்டது. அவர்களது பண்பாடு, பழக்க வழக்கம், மதம் எல்லாம் போயே போய் விட்டது. அவர்களது மொழியோ வெறும் ஐந்நூறு பேர்களால் மட்டுமே இன்று பேசப்படுகிறது. அவர்கள் தொழுத கடவுளோ வெறும் கஹுனா (Kahuna) குருமார்களால் மட்டுமே தொழப்படுகிறது.
ஸ்பெயின் நாடு வெற்றிகரமாக மதத்தைப் பரப்பிக் கொள்ளை அடித்து செல்வம் சேர்த்து வருவதைப் பார்த்த போர்த்துக்கல் நாமும் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கக் கூடாது என்று எண்ணியது. தென் அமெரிக்கா முழுவதும் ஸ்பெயினால் காலியாக்கப்பட்டதை எண்ணிய போர்த்துக்கல் தமது நாட்டினரையும் கப்பலில் அனுப்பி பார்த்தவர்களை எல்லாம் கொன்று பணத்தை எடுத்து வாருங்கள் என்று அனுப்பியது.
இதைப் பார்த்த ஸ்பெயினுக்குக் கோபம் வரவே இது ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்குமான போராக மாறியது.
இதைப் பார்த்த வாடிகன் போப் திடுக்கிட்டார். மதமாற்றம் என்னும் முதலுக்கே மோசம் வந்து விட்டதே என்று எண்ணிய அவர் இரு நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார்.
அவரது சமரச திட்டத்தின் படி கொள்ளை,கொலைக்கான எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது லத்தீன் அமெரிக்காவில் ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டு தென் பிராந்தியங்கள் எல்லாம் ஸ்பானியர்களின் கொள்ளை, கொலை பிரதேசம் என்றும் வட பிராந்தியங்கள் எல்லாம் போர்த்துக்கல்லின் கொலை, கொள்ளை பிரதேசம் என்றும் வ்ரையறுக்கப்பட்டது.
ஆகவே தான் ஸ்பெயினின் மாரடோனா இன்று ஸ்பானிஷ் (Maradona of Spain) மொழி பேசுவதையும் பிரேஜிலின் பீலே (Pele of Brazil) போர்த்துக்கல் மொழி பேசுவதையும் இன்று நம்மால் பார்க்க முடிகிறது.
இப்படி மதமாற்றத்திற்கு ஊறு நேராத படி சமரசம் செய்வதில் போப்புகள் வல்லவர்கள். மதமாற்றம் அல்லாத போர்களைப் பற்றி அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள்.
ஆனால் கிறிஸ்தவ மத மாற்றும் முயற்சியில் ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அவ்வளவு தான், வரிந்து கட்டிக் கொண்டு சமரச முயற்சியில் தங்களது போப் என்ற செல்வாக்கை வைத்துக் கொண்டு இறங்குவார்கள்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தை எடுத்துக் கொள்வோம்.
ஹிட்லர் கத்தோலிக்க கிறிஸ்தவர். அவர் லட்சோபலட்சம் அப்பாவி யூதர்களைக் கொன்று குவித்தார். இதைப் பார்த்த உலகமே திடுக்கிட்டு பிரமித்தது. ஆனால் போப்போ இதைக் கண்டிக்கவே இல்லை. ஏனெனில் சாவது யூதர்கள் தானே!
ஒரு முறை இப்படிப்பட்ட கோரக் கொலைகளை போப் கண்டிக்கவில்லை என்பது சோகமான ஒரு வரலாற்று உண்மை!
6

விஞ்ஞானத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் ஆரம்ப காலம் முதலே சண்டை தான். ஏனெனில் பல விஞ்ஞான உண்மைகள் கிறிஸ்தவம் கூறும் கொள்கைகள் தவறு என்பதை நிரூபிப்பதால் தான்.
கலிலியோ சூரியனைச் சுற்றியே பூமி வருகிறது என்பதை நிரூபித்தார். ஆகவே பைபிள் கூறுவது அபத்தமானது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். வந்தது கோபம் போப்பிற்கு.
உடனடியாக அரசாளும் மன்னருக்கு உத்தரவு போட, கலிலியோ கைது செய்யப்பட்டார்.
கலிலியோ தனது “கண்டுபிடிப்பை” வாபஸ் வாங்குமாறு செய்யப்பட்டார்.
முதுமைக் காலத்தில் கலிலியோ சிறையில் வாடியதும் அவர் எழுதிய கடிதங்களும் தனி ஒரு நூலுக்கான விஷயம்.
பைபிள் அபத்தம் என்று கூறும் விஞ்ஞான உண்மைகளைக் கூறும் விஞ்ஞானிகள் போப்பினால் உடனடியாகக் கண்டிக்கப்படுவது வாடிக்கையான ஒரு விஷயம்.
இதையும் மீறி அறிவியல் உலகம் இன்று முன்னேறி வருகிறது.
7

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயம் இது.
கிழக்கு ஐரோப்பிய பால்கன் நாடுகள் யூகோஸ்லேவியாவிடமிருந்து பிரிந்தன. செர்பியா, போஸ்னியா, க்ரோஷியா, ஹெர்சகோவினா (Serbia, Bosnia,Croatia and Herzegovina) ஆகிய நாடுகள் பிரிந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு ஆதிக்கப் போட்டியும் எந்த பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்ற நில ஆக்கிரமிப்புப் போட்டியும் தொடங்கியது. இரத்தம் சிந்தும் அந்தப் போர் பயங்கரமாக உருவெடுத்தது.
இதைக் கண்ட போப் திடுக்கிட்டார். அமெரிக்க அரசை நாடிய போப் ஏதேனும் செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறினார். இந்த பிரச்சினைக்கு அவர் கூறிய தீர்வு ஒரு நிபந்தனையுடன் கூடியது.
என்ன அந்த ஒரு நிபந்தனை?
முஸ்லீம் மற்றும் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் முழு ஜனத்தொகையுடன் மொத்தமாக ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் என்பது தான் அந்த ஒரே ஒரு நிபந்தனை!!
அட, கிறிஸ்தவத்தின் கத்தோலிக்க பிரிவு தானே இப்படிச் செய்கிறது என்று சொல்லி விட்டு விட முடியாது. இதே அளவுக்கோ அல்லது இதை விட மோசமான அளவுக்கோ கிறிஸ்தவத்தின் இதர பிரிவுகளும் தங்கள் இப்படி செய்ததைச் சுட்டிக் காட்டும் சம்பவங்கள் ஏராளம் உள்ளன.
எடுத்துக் காட்டாக …….
தொடரும்
***