
Written by London swaminathan
Date: 22 January 2017
Time uploaded in London:- 19-02
Post No.3567
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com

உலகில் முதல் முதலில் குதிரைகளை வசப்படுத்தி பழக்கி ரதத்தில் பூட்டி, உலகப் போக்குவரத்தை விரைவு படுத்தியது இந்துக்களே. இதற்கு ரிக் வேதத்திலும் துருக்கியிலும் ஆதாரங்கள் உள்ளன. துருக்கி என்ற நாட்டின் பெயரே துரக பூமி — துரக ஸ்தான் — என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது. கிக்குலி என்பவன் குதிரைகளைப் பழக்க உதவிய குதிரை சாஸ்திரம் பற்றிய தகவல் துருக்கியில் கிடைத்தது (கி,மு.1300). இன்று வரை கார்கள், எஞ்சின்களின் சக்தியை ஹார்ஸ் பவர் Horse Power (குதிரைச் சக்தி) என்று சொல்லும் வழக்கமும் உள்ளது
குதிரை சாத்திரம் (அஸ்வ) மிகவும் வளர்ச்சி அடைந்த கலை ஆகும். அஸ்வ – ஹ்ரஸ்வ – ஹார்ஸ் என்று ஆங்கிலத்தில் மருவியது
காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் ஒன்பதாவது சர்கத்தில் 51ஆவது பாடலுக்கு உரை எழுதியோர் சில தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
குதிரை நடையை இந்துக்கள் ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர்:
ஆஸ்கந்திகம்
தோரிதகம்
ரேசிதம்
வல்கிதம்
ப்லுதம்

காளிதாசன் சொல்லும் அதிசயத் தகவல்:
தசரதர், காட்டிலுள்ள புஷ்பங்களையும் துளிர்களையும் கொண்டு கட்டிய மாலையால் தலை முடியை இறுகக் கட்டிக் கொண்டான். பின்னர் மரத்தின் இலைகளால் ஆன கவசத்தை அணிந்து கொண்டான்.. பிறகு குதிரை மீதேறி மான்கள் திரியும் காட்டிற்குள் நுழைந்தான்..
இதில் இரண்டு அதிசய விஷயங்கள் உள்ளன:
முதல் அதிசயம்: ராணுவத்தினர் யுத்த களத்துக்குப் போகையில் அந்த நிறமுள்ள உடைகளை அணிவர். அப்படி அணிந்தால் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாது. இதை CAMOUFLAGE கமப்ளாஜ் என்பர். அந்தக் காலத்திலேயே தசரதன் காட்டின் சூழ்நிலைக்கேற்ற பச்சை உடைகளை அணிந்து காட்டுக்குப் போனான். நாம் தான் உலக ராணுவத்துக்கு காமாப்ளெஜ் CAMOUFLAGE டெக்னிக்கைச் சொல்லிக் கொடுத்தோம்.
இரண்டாவது அதிசயம் அந்த குதிரை எப்படி காட்டுக்குள் அசைந்து சென்றது என்பதை சம்ஸ்கிருதத்தில் துரக (குதிரை) வல்கன சஞ்சல குண்டலம் (குதிரைகளின் நடையால் அசைகின்ற காதணி) உடையவரான என்று கூறுகிறான். குதிரையின் ஐந்து வகை நடைகளில் ஒன்று வல்கிதம். அதாவது உடலை நீட்டிக் கழுத்தையும் தலையையும் தாழ்த்திக் கொண்டு மிடுக்குடன் குதிரை போகுமாயின் அதை வல்கிதம் என்பர். ஸ்லோகத்தைச் சொல்லுகையில் குதிரயின் நடையும் குண்டலத்தின் அசைவும் நம் மனக் கண் முன் வருமாறு துரக வல்கன சஞ்சல குண்டலம் என்கிறான்.

சில குதிரை சாஸ்திரப் பாடல்கள்
மகாபாரதத்தில் குதிரையின் வகைகள்:
சைப்ய, சுக்ரீவ, மேகபுஷ்ப, பலாஹக
வாஜிபிஹி சைப்ய சுக்ரீவ மேக புஷ்ப பலாஹகைஹி
ஸ்நாதஹை சம்பாதயாமாசுஹு சம்பன்னைஹை சர்வசம்பதா
–உத்யோக பர்வம் 83-19
குதிரைகளின் பயிற்சி
மண்டல – வட்டமாக ஓடச் செய்தல்
சதுரஸ்ர – சதுர வடிவில் ஓடச் செய்தல்
கோமூத்ர – பசு மூத்திரம் விடுவது போல விட்டு விட்டு நடக்க வைத்தல்
அர்த சந்திர – பிறை வடிவில் செல்லல்
நாகபாஸ – பாம்பு வடிவில் வலைந்து செல்லல்
— வசிஷ்ட தனுர்வேத சம்ஹிதா
அஸ்வகதி
ஆஸ்கந்திதம் – தாவி ஓடுதல்
தோரிதகம் -நடப்பதை விட சற்று வேகம்
ரேசிதம் – தோரிதகத்தை விட கூடுதல் வேகம்
வல்கிதம் -குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு முறை
உள்ள கம்புகளை நோக்கி ஓடுதல்
ப்லுதம் -பின் புறம் உதைத்துச் செல்லல்
அமரகோஷம் 2-8-48

find the soldier in this picture!
–SUBHAM–