உலக இந்து சமய செய்தி மடல் 2-1-2022 (Post No.10,517)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,517

Date uploaded in London – –    2 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை JANUARY 2-ஆ ம் தேதி 2022 ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

xxxx

சபரிமலையில் மகரவிளக்கு காலம் துவக்கம்

சபரிமலையில் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம்  துவங்கியது. நான்கு நாள் இடைவெளிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் மண்டலபூஜை முடிந்து டிச.26 ல் அடைக்கப்பட்ட நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறக்க, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை துவக்கி வைத்தார். பின்னர் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.

நெய்யபிஷேகம் ஜன.18 வரை நடைபெறும். பக்தர்கள் நிலக்கல், பம்பை வழி மட்டுமல்லாமல் எருமேலி, அழுதை, கரிமலை வழியாகவும் வரத்துவங்கி உள்ளனர்.பெருவழிப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யானை உள்ளிட்ட வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக ‘ஸ்பாட் புக்கிங்’ வசதி எருமேலி மற்றும் பம்பையில் தொடர்ந்து செயல்படுகிறது.

XXXXX

தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறியதாவது: தஞ்சை அருளானந்தநகர் சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இல்லாததால் பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு, ரூ.500 கோடியாகும்.

மீட்கப்பட்ட சிலை 2016ல் நாகை திருக்குவளையில் உள்ள கோயிலில் காணாமல் போனது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியப்பனுக்கு எப்படி மரகத லிங்கம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Xxxx

திருத்தணி கோவிலில் நடைபெறும் படித்திருவிழாவில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் டிச., 31-ம் தேதி திருப்படித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த படிக்கட்டுகள் ஒரு வருடத்திற்கான நாட்களை குறிப்பதால் ஆங்கில புத்தாண்டு வழிபாடு இங்கு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். படிகளில் மஞ்சள், குங்குமம் பூசி கற்பூரம் ஏற்றி வழிபடுவர்.

அதன்படி டிசம்பர் 31-ம் தேதி  திருத்தணி கோவிலில் படித்திருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணி அளவில் திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் எம்.எல்.ஏக்கள். ,அதிகாரிகள் கலந்து கொண்டு படித்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், ஒவ்வொரு திருபடிகள் வழியாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனர்.


பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர். புத்தாண்டு தினமான நேற்று சிறப்பு தரிசனமும் நடைபெற் றது.

Xxxxx

காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோயிலில்  மீண்டும் தரிசனம் துவக்கம்

காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் வழக்கமான தரிசனம் துவங்கிவிட்டது. என்றும் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட சலசலப்பால் நிகழ்ந்த ஜன நெரிசலை அதிகாரிகள் ஐந்தே நிமிடத்தில் கட்டுப்படுத்தினர் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று 27000 பேர் மாதா வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்தனர்.

 இரண்டு நாட்களுக்கு முன்னால் வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

காஷ்மீரின் கட்ரா என்ற பகுதியில் வைஷ்ணவ தேவி கோயில் உள்ளது. புத்தாண்டு என்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்ய வந்திருந்தனர். கூட்டம் அதிகம் வர பக்தர்கள் முண்டியடித்தனர். வரிசையில் இருந்தவர்கள் பலர் அம்மனை வணங்க வேகமாக செல்ல முற்பட்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது.

விபத்து குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.  மாநில  அரசும் பெரும் உதவித்தொகையை அறிவித்தது

பக்தர்களில் இளம் வயதினரும்  இருந்தனர். அதிலுள்ள இரண்டு குழுக்களிடம் ஏற்பட்ட மோதலே  ஜன நெரிசலை உண்டாக்கியது என்று பெரிய போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த விபத்து பற்றி விசாரித்து எதிர்காலத்தில் இப்படி நடக்காமல்  தடுக்க மூன்று பேர் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது

xxx

பாலாஜி வெங்கடேச பெருமாள் உண்டியல் வருவாய் ரூ.833 கோடி

திருப்பதி திருமலையில் உள்ள பாலாஜி வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்தாண்டு உண்டியல் காணிக்கை 833 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் உண்டியல் வருவாயும் குறைந்துள்ளது. உண்டியல் வருமானம் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் பெரிய வருமானமாக கருதப்படுகிறது.

கடந்தாண்டு உண்டியல் வருவாய் பெருமளவில் குறைந்து உள்ளது.வழக்கமாக 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்து வந்த ஆண்டு உண்டியல் வருவாய், இந்தாண்டு 833 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. மேலும் 1.04 கோடி பக்தர்கள் மட்டுமே இந்தாண்டு ஏழுமலையானை தரிசனம் செய்துஉள்ளனர்; 48.75 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்; 5.96 கோடி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசிப்பர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களில் மட்டும் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஏழுமலையானுக்கு கார் நன்கொடை

ஏழுமலையானுக்கு ‘இன்னோவா’ கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் விஸ்வநாத் என்பவர் 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கிரஸ்டா காரை, நேற்று காலை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டியிடம் காருக்கான சாவி மற்றும் ஆவணங்களை விஸ்வநாத் அளித்தார்.


Xxx

திருப்பதியில் புத்தாண்டு விசே‌ஷ பூஜைகள் ரத்து

திருப்பதி கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி விசே‌ஷ பூஜைகள் பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக விசே‌ஷ பூஜைகள், கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது ரத்து செய்யப்பட்டன.


வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.



கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோவிலில் ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.


பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.
ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Xxxx

அனைவருக்கும்   ஞான மயம் குழுவினர்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றனர் .

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

 tags- tamilhindu, newsroundup, 212022