
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9951
Date uploaded in London – 8 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 8 – — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX


2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’ என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் அயோத்தியில், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.மத்திய அரசு அமைத்த, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, கோவிலை கட்டி வருகிறது.
அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மூன்று மாடிகள், ஐந்து மாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசினத்துக்காக கோவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டுக்குள் முடியும் என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறினார்.
XXX
இந்து கோவில் தாக்குதல்; பாகிஸ்தான் பார்லிமெண்ட் கண்டனம்

பாகிஸ்தானில் ஹிந்து கோவில் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு பார்லிமென்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
பாகிஸ்தான் பார்லிமெண்டில் இந்த பிரச்னை பற்றி பாக்., ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் வங்வானி பேசுகையில், ”கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது; இது நாட்டுக்கே அவமானம். இதை கண்டிக்க வேண்டும்,” என்றார்.இதையடுத்து கண்டனம் தெரிவித்து, பார்லிமெண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, தானாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறிய நீதிபதி, நடந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவிலை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.
இதோ வங்க தேசத்திலிருந்து ஒரு செய்தி
நமது பக்கத்து நாடான வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் 1,000 ஆண்டு பழமையான விஷ்ணுவின் கருங்கல் சிலை மீட்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்து இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. கிராமத்தில் குளம் தோண்டும்போது இந்த சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டில் வைத்திருந்ததாக அந்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


XXXX
பாரத மாதாவுக்கு ‘நினைவாலயமா? நினைவாலயம் என்பதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு
DINAMALAR NEWS
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் உள்ளது. இங்கு, பாரத மாதா சிலை வைக்க வேண்டும் என்பது, சுப்ரமணிய சிவாவின் கனவு. இதற்காக, தர்மபுரி பாப்பாரப்பட்டி, பாரத புரத்தில், 6 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, பாரத மாதா ஆலயம் கட்ட பாடுபட்டார்.
போதுமான நிதி திரட்ட, ஊர் ஊராக நடை பயணம் சென்றார். 1923ல், சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து, பாரத மாதா ஆலயத்துக்கு, அடிக்கல் நாட்டினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், சிவா இறந்து விட்டார். இதனால், அவரது கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், 1.5 கோடி ரூபாயில், அதே பாரத புரத்தில், பாரத மாதாவுக்கு, தமிழக அரசு சார்பில், நினைவாலயமும் அருகில் நுாலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்தார், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன்.
இதற்கிடையில், பாரத மாதாவுக்கு எப்படி “நினைவாலயம்” எழுப்பலாம் என பா.ஜ.,வினர் கேட் கின்றனர்.
இது குறித்து, அக்கட்சியின் மாநில பொருளாளர் சேகர் கூறியதாவது:சுப்ரமணிய சிவாவின் கனவு நிறைவேற, நிறைய பேர் முயற்சி எடுத்தனர். தமிழக காங்., தலைவராக இருந்த குமரி அனந்தனும் முயற்சித்தார். அங்கிருக்கும் மக்களும், பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு ஆலயமும், பக்கத்தில் நுாலகமும் கட்டி முடிக்கப்பட்டது. அதை திறந்து வைப்பதற்குள், இ.பி.எஸ்., ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.
ஆனால், பாரத மாதா “நினைவாலயம்” என, அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு தான் “நினைவாலயம்” கட்டப்படும். கோடிக்கணக்கானவர் மனங்களில் வாழும் தெய்வம் பாரத மாதாவை சாகடித்துள்ளனர். இது, பாரத மாதாவை நேசிக்கும் இந்தியர்களுக்கு தலைக்குனிவு என்று B J P மாநில பொருளாளர் சேகர் கூறினார்.


XXXXX
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடக்கம்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செடி, கொடிகள் முளைத்திருந்த ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தினகரன் செய்தி எதிரொலியாக ெதாடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் தரைக்கோட்டைகளில் வலுவானதாக தற்போதும் விளங்கி வருவது வேலூர் கோட்டை. வேலூர் கோட்டைக்கு முன்னதாகவே அங்கு சம்புவராயர்களால் ஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு, கோட்டையை கட்டமைத்த விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மத்திய அரசின் தொல்லியல் துறையினர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். என்று தினகரன் நாளிதழில் கடந்த 2ம் தேதி படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.
தினகரன் செய்தி எதிரொலியாக, வேலூர் கோட்டை ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும், ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து இந்திய தொல்லியல்துறை வேலூர் முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ் கூறுகையில், ‘வேலூர் கோட்டை ஜலகண்ேடஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் ரசாயன கலவை பூசி சீரமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பறவைகள் எச்சத்தினால் செடி, கொடிகள் முளைப்பது தடுக்கப்படும். மழைநீரும் கோபுரத்தில் ஊறி பாசி படர்வது, பூஞ்சைகள் படர்வது இருக்காது. இப்பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும், என்றார்.

XXX
திருத்தணி முருகனுக்கு திருப்பதி பாலாஜி கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடந்தது. திருத்தணி முருகனுக்கு, திருப்பதி பெருமாள் சீர் கொடுக்கும் சிறப்பு வைபவம் அப்போது நடந்தது. இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் திருததணிக்குச் சென்றனர்.
அவர்கள், பெருமாள் சார்பில் பட்டு வஸ்திரம் மற்றும் தட்டுகளில் பல விதமான பழங்கள், மங்கள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களுக்கு, திருத்தணி முருகன் கோவில் தேர் வீதியில் மேள தாளம் முழங்க சிறப்பு மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெருமாளின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தார்.
XXXX
ஆகஸ்ட் 11ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா


108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின், பாமாலை பாடி, இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.
இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.
சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆடிப்பூரத் திருவிழாவின் 2-ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம்தேதியும், கருட சேவை 9-ம்தேதியும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.
MALAI MALAR NEWS
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
நன்றி, வணக்கம்

TAGS- TAMILHINDU, NEWS ROUNDUP, 882021, RANI