மலர் – பூ – க்விஸ் (கேள்வி-பதில்)
தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1234; தேதி: 15 ஆகஸ்ட் 2014
பூ…… இவ்வளவுதானா? என்று சொல்லி ‘’பூ’’–வை அவமதிக்கிறோம்! எங்கே இந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுங்கள், பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் சரியான விடை சொன்னால் என்னைப் பார்த்து, பூ….. இவ்வளவுதானா? என்று சொல்ல உங்களுக்கு மீண்டும் ஒரு ‘சான்ஸ்’ தருகிறேன்:–
1.இந்தியாவின் தேசிய மலர் எது?
2.பீம சேனனிடம் திரௌபதி கேட்ட மலரின் பெயர் என்ன?
3.பிள்ளையார் சதுர்த்தி அன்று அவருக்கு தமிழர்கள் சாத்தும் பூ, என்ன பூ?
4.சரஸ்வதியும், லெட்சுமியும் அமர்ந்திருக்கும் மலர்கள் யாவை?
5.எந்தப் பூவை பானையில் போட்டால், தண்ணீர் வாசனை பெறும் என்று நாலடியார் செய்யுள் சொல்கிறது?
6.எந்தக் கட்சிக்கு தாமரை தேர்தல் சின்னம்?
7.திருவள்ளுவர் நான்கு குறட் பாக்களில் பயன்படுத்தும் மலர் எது?
8.கடலைக் கடைந்த போது வெளியான மலர் (மரம்) எது?
9.’ஜபாகுசும’ சம்காசம் என்று துவங்கும் நவக்ரஹ ஸ்தோத்திரத்தில் வரும் பூ என்ன?
10.சூரியனைக் கண்டால் மலரும் தாமரை, நிலவைக் கண்டால் மலரும் மலர் என்ன?
11.சிவன் அணியும் மலர் எது என்று நால்வர் பாடுகின்றனர்?
12.சத்யபாமா கேட்ட மலர் எது?
13.போருக்குச் செல்லும்போது தமிழர்கள் அணியும் பூக்கள் எவை?
14. எந்தப் பூ 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும்? அந்தப் பூ முருகனுக்கும் பிடித்தது.
15.நவக்ரஹ ஸ்தோத்திரத்தில் கேது கிரஹத்தை வர்ணிக்கும் பூ எது?
16.செவ்வாய்க் கிழமைதோறும் அரளி மாலை பெறும் தேவி யார்?
17.அபிராமி பட்டர் …………………. பூ நிறத்தாளை என்று தேவியை வழிபடுகிறார். கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்
18. சிவ பெருமானுடைய அடி முடி தேடிய கதையில், பொய்ச் சாட்சி சொல்லிய பூ எது?
19. கைலாஷ் மானசரோவர் ஏரியில் பூக்கும் தெய்வீக மலரின் பெயர் என்ன?
20.எந்தப் பூங்கொடிக்கு பாரி மன்னன் தேர் ஈந்தான்?
விடைகள்:
1.தாமரை 2.சௌகந்திக மலர் 3. எருக்கம் பூ 4.சரஸ்வதி=வெண்தாமரை, லக்ஷ்மி=செந்தாமரை 5. பாதிரிப் பூ 6. பாரதீய ஜனதா கட்சி 7. அனிச்சம் 8 பாரிஜாத மரம்/மலர் 9.ஜபா குசும= செம்பருத்தி 10. குமுதம், அல்லி 11. கொன்றை (அணிந்தவனே) 12. பாரிஜாத மலர் 13.வெட்சி, கரந்தை, காஞ்சி, வஞ்சி,உழிஞை, நொச்சி, தும்பை, வாகை 14. குறிஞ்சி/ குறிஞ்சி ஆண்டவர் 15.பலாச புஷ்பம் 16.துர்கை 17.மாதுளம் பூ நிறத்தாளை 18. தாழம்பூ 19. பிரம்ம கமலம் 20. முல்லைக் கொடி

National flower of North Korea
தமிழிலும் ஆங்கிலத்திலும் மேலும் 25 கேள்வி பதில் பதிவுகள் இங்கே உள்ளன. படித்துப் பயன் அடைக!! பதில் கண்டுபிடித்து இன்புறுக!!






You must be logged in to post a comment.