ரிக் வேதத்தில் குழப்பத்தை உண்டாக்கும் ‘மனு’க்கள்!

origin

கட்டுரையாளர்: லண்டன் சுவாமினாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1590; தேதி 20 ஜனவரி 2015

 

மனு என்பவரை அறியாதோர் இலர்: மனித இனத்தைத் தோற்றுவித்தவர்.— முதல் மனிதன் — பிரளய காலத்தில் கப்பலில் ஏற்றிக் கொண்டு சென்று எல்லா உயிரினங்களையும் காப்பற்றியவர். உலகில் முதல் சட்டப் புத்தகத்தை எழுதியவர். ஒரு சோழ மன்னன் தன் மகனையே தேர்க் காலில் இட்டு மனு நீதிச் சோழன் என்று புகழ் அடைந்தான். அப்படிப்பட்ட மனு பற்றி புராணங்களில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆனால் புராண மனு — க்களுக்கும் ரிக் வேத மனு — க்களுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த்க் குழப்பத்தை அகற்ற கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோம்.

 

ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்களைக் கொண்ட காலம்..நமது ஆண்டுக்கணக்கில் 306,720, 000 ஆண்டுகள். இது போல 14 மனுக்கள் ஆளும்காலம் பிரம்மாவின் ஒரு நாள். அவர் 100 ஆண்டுகள் உயிருடன் இருப்பார். இதை ஒரு தாளில் எழுத முடியாது. எழுதினாலும் படிக்க முடியாது. அவ்வளவு பூஜ்யங்கள் இருக்கும். ஏனெனில் ஒரு சதுர் யுகத்தில் 4 யுகங்கள் உள. அதாவது 12,000 தேவ ஆண்டுகள்.தேவ ஆண்டு என்பது நமது ஆண்டை விடப் பெரியது.

ஆனால் வேதத்தில் ஐந்தாறு மனுக்கள் பெயர்கள் உள்ளன. அவர்கள் நெருங்கிய சொந்தக்காரர்கள்! ஆக புராணங்களில் சொன்ன பெரிய இடைவெளி இருக்க முடியாது. மொத்தமுள்ள 14 மனுக்களில் ஆறு பேர் காலம் முடிந்து இப்பொழுது ஏழாவது மநுவின்– அதாவது — வைவஸ்வத மனுவின் காலம் —- நடக்கிறது. அவருக்கு முந்தைய ஆறு மனுக்களின் பெயர்கள்:

Manu-firsh

ஸ்வயம்புவ

ஸ்வரோசிஷ

உத்தம

தாமச

ரைவத

சக்ஷுச

 

இவர்களுக்குப் பின்  வந்த வைவஸ்வத மனுவின் காலம் இப்போது நடப்பதால் இந்துக்கள் பூஜைகள் துவக்கும் போது செய்யும் சங்கல்பத்தில் வைவச்வத மன்வந்தரத்தில் இன்ன ஆண்டில் இந்த நாளில் இந்த பூஜையை இன்ன காரணத்திற்காகச் செய்கிறேன் என்று சொல்லி சங்கல்பம் செய்து துவக்குவர்.

 

உலகிலேயயே    அற்புதமான ஒரு சங்கல்ப முறையை இந்துக்கள் பின்பற்றுகின்றனர். புரோகிதர் இதைச் சொல்ல சொல்ல, நாம் திருப்பிச் சொல்கிறோம் . இதில் பிரபஞ்சம் துவங்கி தற்போது நடை பெறும் காலம் வரை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. பிறகு பூகோள விஷயங்களும் வரும். உலகில் மேரு மலைக்கு எந்த திசையில், எந்த கண்டத்தில், எந்த நதியின் கரையில் உள்ள, எந்த நகரத்தில் இந்த பூஜை அல்லது சடங்கு என்ன காரணத்துக்காக செய்யப்படுகிறது என்று சம்ஸ்கிருதத்தில் புரோகிதர் சொல்கிறார்.

இப்படிப்பட்ட உலக மகா பூகோள, பிரபஞ்ச வானியல் அறிவை எங்கும் காணமுடியாது. அதைவிட இதை அன்றாட பூஜைகளில் சொல்லவேண்டும் என்றால் இந்துக்கள் அந்தக் காலத்தில் எந்த அளவுக்கு அறிவியலில்  முன்னேறி இருந்தனர் என்றும் தெரிகிறது.   பின்னர் வெளி நாட்டுப் படை எடுப்புகளாலும் உள் நாட்டுச் சண்டை சச்சரவுகளாலும் அறிவு மழுங்கி “ஆயிரம் ஆண்டு அன்பிலா அன்னியர் ஆட்சியில்” (பாரதியின் வாக்கியம்) உழன்றோம்.

Manou-Vishnou-poisso

ரிக்வேதத்தில் கீழ்கண்ட இடங்களில் மனு பற்றிய குறிப்புகள் வருகின்றன. எப்படி இவ்வாறு ஒரே  நேரத்தில் மனுக்கள் பெயர்கள் — ரிஷிகள் பெயர்களிலேயோ மன்னர்கள் பெயர்களிலேயோ —வந்தது? அப்படியானால் புராணங்க்கள் சொல்லும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் என்பதெல்லாம் பிழையா? பொய்யா?

மேலும் புராணங்களிலும் மனுக்கள் பற்றி  வித்தியாசமான செய்திகள் உள்ளன். லிங்க புராணம்,  மனுக்களுக்கு நிறங்களின் — வர்ணங்களின் பெயர்களை அளிக்கிறது: ஸ்வேத (வெள்ளை) , கிருஷ்ண (கறுப்பு) என்று.

மற்ற சில புராணங்களில் ஸ்வயம்புவ மனுவின் புதவர்கள் ஸ்வரோசிஷ, உத்தம, தாமச, ரைவத மனுக்கள் என்கின்றன.

இவை எல்லாம் சரியா?

 

சரி என்று சொல்ல நமக்கு நிறைய சான்றுகள் உள்ளன. முதலில் மனு என்றால் ராஜா, மன்னன் என்று பொருள். எப்படி இந்திரன் என்பதை ராஜா என்ற பொருளிலும், மழை/இடி/மின்னல் ஆகிய இயற்கைச் சக்திகளுக்கும் பயன்படுத்தினரோ, கடவுளுக்கும் பயன்படுத்தினரோ, வேத காலத்தில் வாழ்ந்த பெரிய ஒரு வீரனுக்கும்  பயன் படுத்தினரோ அதைப் போலவே மனு என்ற சொல்லையும் கையாண்டனர். மிருகங்களில் கூட இந்திரன் உண்டு: ம்ருகேந்திர என்றால் சிங்கம், ககேந்திர என்றால் கருடன். மனிதர்களில் சிறந்தவர் நரேந்திரன்!


i-learned-from-noahs-ark

இதைப் போலவே மனு என்பதை மனிதர்களில் சிறந்த உத்தமனுக்கும் மன்னனுக்கும் பயன்படுத்தினர். கிரீட் தீவில் உள்ள மினோவன் நாகரீகத்தில் மினொஸ் என்றால் மன்னன் என்று பொருள். இது மனு என்பதன் மரூஉ. எகிப்தில் முதல் மன்னன் பெயர் மெனஸ் நர்மேர்– அதாவது மனு நர மேரு! பாரசீக மொழியில் வேதங்களுக்குப் போட்டியாக எழுந்த செண்ட் அவஸ்தாவும் மனுவின் பிரளயக் கதையை அப்படியே எழுதியுள்ளது. பைபிளில் உள்ள நோவா என்பதும் மனுவின் மகன் நபேனதிஷ்டா என்பதில் இடருந்து வந்ததாக

ஆரிய தரங்க்கிணி நூல் எழுதிய திரு. கல்யயாண ராமன் கூறுகிறார்.

 

அதாவது புராணகளில் மனுவின் பெயர் நபெனதிஷ்டா என்று உள்ளது. நப நுக்கு பக்கத்தில் உள்ளவன் என்பது இதன் பொருள்–அதாவது நபன் மகன். இந்த நப என்பது நோவா என்று மருவியது. இதற்குச் சான்று சுமேரிய கதைகளில் உளது அங்கே நபிஷ்டிம் என்பவரை பிரளயக் கதைகளுடன் தொடர்புபடுத்துவர். ஆக இந்தியாவில் சென்ற தலைவன் (மனு) என்ற சொல் லும் மனு பற்றிய பிரளயம் — கப்பல் கதையும் உலகம் முழுதும் உள்ளது. இது நாம் உலகிற்கு அளித்த கொடை. மேலும் எகிப்து, மாயா நாகரீகஙகள் எல்லாம் கலியுக முதல் ஆண்டை ஒட்டியே (கி.மு 3100) தங்கள் வரலாற்றைத்  துவக்கியுள்ளன.

வேதத்தில் பலவேறு மனுக்கள் அடுத்தடுத்து வருவது எப்படி?

சார்யாத மானவ (ரி.வே-10-92)

சக்ஷு மானவ (9-52, 9-104)

நாபானேதிஷ்ட மானவ (10-59, 10–61)

மனு ஆபச (9-5, 9-106)

மனு வைவஸ்வத (8-6, 824)

மன்யூ ஆபச (10-67, 10-83)

மன்யூ வசிஷட் (9-29, 9-97)

மன்யூ மைத்ராவருண (8-67)

 

அக்னி தாபச, அக்னி சக்ஷுச என்ற ரிஷிகள் பெயர்களும் வேத அனுக்ரமணியில் உள்ளன.

சுதந்திரப் போராட்ட காலத்திலோ,  நாடு சுதந்திரம் அடைந்தபோதோ ஒருவர் வீட்டில் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தால் நேரு, காந்தி, பாரதி, திலகர் என்று பெயர் சூட்டுவதில் வியப்பில்லை. இதே போல மனுவின் பெயரை ஒரே குடும்பத்தினர் மகனுக்குச் சூட்டி இருக்கலாம். இந்து மதம் என்பது பல்லாயிரக் கணக்கான வருடப் பழமை உடையதால் வெவ்வேறு கால  கட்டங்களில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தி இருக்கலாம். நாம் வரலாற்று நாயகர்களான ரிக் வேத மனுக்களையும் புராண மனுக்களையும் சேர்த்துக் குழம்பக்கூடாது.

 

இதற்கும்  பாகவத புராணத்திலும் மகாபாரதத்திலும் சான்றுகள் உள. அவைகளில் ப்ரியவ்ரத, ப்ராசேத என்பவர்கள் மனு என்று அழைக்கப்படுன்றனர்.

noah_ark_people_drowing

வேத காலத்தில் ஒரு யயாதியும்,  நகுஷநும் இருந்தனர். பிற்காலத்தில் ஒரு நகுஷன்.  யயாதி இருந்தனர். இவர்களில் ரிக் வேத யயாதி,  மனு குலத்தில் வந்தவர். சம்வரண- மனு-நகுஷ-யயாதி -மாதவி-விஸ்வாமித்ர என்று வம்ச பரம்பரை சொல்லப்பட்டுள்ளது. புரு வம்சத்தில் வந்த யயாதி வேறு.

 

36 மனுக்கள் இருப்பதாக வாயுபுராணம்  கூறுகிறது.

சம்வரண, சாவர்ணி என்ற வருங்கால மனுக்கள் பெயர்களும் உள. இந்துக்கள்  காலம் என்பதை ஒரு வட்டச் சுழல் போலக் காண்பதால் எல்லாம் திரும்பதிரும்ப வரும் என்ற கொள்கை உடைத்தால் இது சாத்தியமே. நான் எனது பேரக் குழந்தைக்கு கல்கி என்று,  வரப் போகும் அவதாரத்தின் பெயரைக் கூட வைக்கலாம்.

 

முடிவுரை:

 

மனுக்களின் – மன்வந்தரத்தின் — நீண்ட காலங்கள் முரண்பாடுகள் அல்ல. வேதகாலப் பெயர்களும் புராணங்க்களில் சொல்லப்படுவோரும் வேறு

 

மனு என்பது ஒரு பட்டம். ராஜா, பெரியவர், சிறந்தவர், மனிதருள் மாணிக்கம் என்று பொருள்

 

பிரளயம் வந்த காலத்தில் எல்லோரையும் ஏற்றிச் சென்று காப்பாற்றிய கதை சுமேரிய வணிகர் மூலம் நம்மிடம் இருந்து  உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

கிரீட், சுமேர், எகிப்து, மாயா, ஈரானிய நாகரீகங்களில் மனு நீடித்து நிலைத்து நிற்கிறர்.

1327496107_manu1-205x300
contact swami_48@yahoo.com 

Leave a comment

Leave a comment