ஏசு கிறிஸ்து செய்த பாத பூஜை!

1-jesus_washing_peter's_feet

பீட்டரின் பாதங்களை ஏசு கழுவுமோவியம்

ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 3

ஆய்வுக் கட்டுரை எண்: 1638; தேதி : 10 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன் என்ற முதல் இரண்டு பகுதி கட்டுரைகளில் அவர் பிறந்தது ஈசன்னியர் எனப்படும் யோகியர் (சந்யாசிகள்) ஜாதியில் என்பதையும், அவரது 18 ஆண்டு இளமைப் பருவம் குறித்து பைபிள் மவுனம் சாதிப்பது மர்மமாக உள்ளது என்றும், விவேகாநந்தர் கண்ட அதிசயக் கனவில் ஏசு என்று ஒருவர் இல்லை என்றும், அசோகர் பரப்பிய புத்தமத பழக்க வழக்கங்களை “சர்ச்” இன்று வரை பின்பற்றி வருகிறது என்றும் கண்டோம். அவ்விரு பகுதிகளையும் படித்துவிட்டு இந்த கடைசி பகுதியைப் படிப்பது பொருள் உடைத்தாம்.

பாத பூஜை

உலகம் முழுதும் முதலில் இருந்த மதம்- இந்து மதம்தான் என்றும் அதனால்தான் இந்த மதத்துக்கு சநாதன தர்மமென்று பெயர் என்றும் காஞ்சி மஹா ஸ்வாமிகள் போன்ற பெரியோர் சொல்லியதைப் படித்திருக்கிறோம். இதே போல இந்தியாவில் தோன்றி உலகம் முழுதும் பரவிய சம்ஸ்கிருத — தமிழ் மொழிச் சொற்களை உலகம் முழுதும் காண முடியும். எந்த வீடுகளுக்கு சங்கராச்சார்யார் போன்ற பெரியோர்கள் வந்தாலும் பாத பூஜை செய்வது வழக்கம். இதை இமயமலையில் ஆஸ்ரமத்தில் கற்றதனால் ஏசுவும் செய்கிறார். இதே போல 500 ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியங்களில் ஏசு அஞ்சலி ஹஸ்தத்தில் கும்பிடுவதையும், பக்தர்கள் அதே போல அஞ்சலி ஹஸ்தமாக (கூப்பிய கைகள்) வணங்குவதையும் படங்களில் காணலாம். எனது இத்தாலிய, பிரெஞ்சு பயணங்களில் பல மியூசியங்களில் இத்தகைய சித்திரங்களைக் கண்டு இருக்கிறேன். இந்த பிளாக்-கில் வெளியிட்டும் இருக்கிறேன்.

பலர் அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதையும், அவரே ஸ்பர்ச தீக்ஷை — (குருநாதர் தலையைத் தொட்டு தனது சக்தியை பக்தனுக்கு ஏற்றுதல்) — பெறுவதையும், ஞான ஸ்னாநம் என்ற பெயரில் தீர்த்தம் வாங்கிச் சாப்பிடுவதும், ஆஷ் வெட்னெஸ்டே என்ற பெயரில் விபூதியின் மகிமையைப் பறை சாற்றுவதும் கிறிஸ்தவ மதத்தில் எஞ்சி நிற்கும் இந்து வழக்கங்களாம்.

padapuja

நாம் சொன்னதையே அவர்கள் செய்துவந்ததால் படித்த இந்து மக்களை பாதிரிமார்கள் மதம் மாற்ற முடியவில்லை. மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா கண்டம் முழுவதையும் மதம் மாற்றிய கிறிஸ்தவர்களும், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு முழுவதும் முஸ்லீம்கள் ஆக்கிய இஸ்லாமிய ராஜாக்களும் இந்தியாவில் எட்டு சதவிதமே மதமாற்றம் செய்ய முடிந்தது. ஏனெனில் அவர்களிடம் இந்துவுக்குக் கற்பிக்கும் விஷயங்கள் எதுவுமே இல்லை. எதைச் சொன்னாலும் இதோ இந்து மதத்தில் சொல்லியதைத்தானே நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆனால் இந்துக்களுக்கு உள்ள பரிபக்குவமும், உயர்ந்த மன நிலையும் அவர்களுக்கு இல்லாததாலும், ஏராளமாக – ஏ……. ர்ரா …..ரா…. ளள…. மா…. மாக (இன்னும் 100 தடவை ஏராளம் என்ற சொல்லைப் போட்டுக் கொள்ளுங்கள்) பணம் விளையாடுவதாலும் மத மாற்றம் ஒரு பிஸினஸ் ஆகிவிட்டது.

எங்கள் லண்டனில் மதம் ‘’மாற்றி’’னாலும், மதம் ‘’மாறி’’னாலும் காசு கிடைக்கும். வாரத்துக்கு ஒரு மசூதி உருவாகி வருகிறது. இந்தியாவின் எல்லைப் பகுதி முழுதும் வரிசையாக இப்படி மசூதிகள் உருவாகி வருவது குறித்தும் ஒரு கட்டுரை படித்தேன்.

KrishnaJesusAllahBuddhaareallsame

பாதி — ரியும், சாஸ்தி —- ரியும்!!

(நாங்கள் சின்னப் பையன்களாக இருந்தபோது என் தந்தை எங்களை மதுரை ஆதீனகர்த்தரிடம் அழைத்துச் செல்வார். அவர் யாழ்ப்பாணக்காரர். மிகவும் கற்றவர். இப்போது அவரில்லை. நிறைய கிறிஸ்தர்கள் மீண்டும் தாய் மதம் திரும்புவதை வாரம் தோறும் நடத்தி வந்தார். என் தந்தையும் தினமணியில் வாரம் தோறும் அதை வெளியிட்டு உதவுவார். ‘’இறந்தவர்கள் வாழும் நிலையும் அவர்களுடன் பேசும் முறையும்’’ என்ற புத்தகம் எழுதி ஆவி உலக ஆராய்ச்சி, ஆவிகளுடன் பேசுவது மூலம் அவர் பிரபலம் அடைந்தார். அவர் எங்களிடம் ஜோக் அடிப்பார். தம்பி! அவங்களையெல்லாம் கூட்டிட்டு வாங்க. அவங்க எல்லாம் பாதி+ரி. நாம எல்லாம், ஜாஸ்தி+ரி (கிறிஸ்தவ பாதிரிகளையும் பிராமண சாஸ்திரிகளயும் அவர் குறிப்பிடுகிறார்) அவர்கள் பாதி, நாம் முழுசு என்பார். காசு விஷயத்தில் மகா சிக்கனம். தம்பி! நம்மிடம் அருட் பிரசாதம் மட்டுமே உண்டு; பொருட் பிரசாதம் கிடையாது என்று சொல்லி ஒரு ‘’சிட்டிகை அளவு’’க்கு மட்டும் விபூதி தருவார். அந்த விபூதியோ தேவலோக விபூதி. பத்து நாட்களுக்கவது சுகந்த மணம் வீசும். அவர் இருந்த மடம் திருஞான சம்பந்தர் தங்கிய போது சமணர்கள் தீ வைத்த மடம். 1500 ஆண்டு பழமை உடைத்து!)

மண்டல கால விரதம்

பைபிள் முழுதும் 40 என்ற எண் சிறப்பிடத்தைப் பெறுகிறது. இந்துக்கள் ஒரு மண்டலம் என்பதை 40 அல்லது 45 என்று கணக்கிற்கொண்டு விரதங்கள் இருப்பர். மூன்று 40 ஆண்டுகள் = 120 ஆண்டுகள் —ஒரு மனிதனின் பூரண ஆயுள் என்று இந்து மத நூல்கள் விளம்பும். இந்த 40, 120 என்பன மோசஸ், ஜீசஸ் வாழ்க்கையிலும் பல இடங்களில் வருவதைக் காணலாம். இது மிச்சம் சொச்சம் என எஞ்சி நின்ற இந்து மத வழக்கங்களே. ஈஸ்டர் பண்டிகைக்கு முன் 40 நாள் விரதம் இருப்பதை இன்று கூட ஆர்த்தடாக்ஸ் சர்ச் பின்பற்றி வருகிறது.

namste jusus

பக்தர்கள் காலில் விழ, இந்து சந்யாசி போல, ஏசு வலது கையால்  ஆசி வழங்குகிறார்!

ஏசுத் தச்சன்

ஏசுவின் குலத் தொழில் தச்சுத் தொழில். அவரது தந்தையும் இதே வேலை செய்து வந்தார். 18 ஆண்டுக்காலம் இந்தியாவில் ரிஷி முனிவர்களிடம் உபதேசம் பெற்றுவிட்டு பாலஸ்தீனத்தில் உபதேசம் செய்வதைக் கண்ட மக்கள், ‘’அட! நம்ம தச்சன் மகனா இவன்?’’ என்று வியந்ததாக பைபிள் பகரும். கிரேக்க மொழி பைபிளில் ‘’டெக்டன்’’ என்ற சொல் இருக்கிறது. தக்ஷ என்ற சம்ஸ்கிருத சொல் கிரேக்க மொழியில் டெக்டன் என்றும் தமிழில் தச்சன் என்றும் மருவி நிற்கிறது. இன்று வரை நாம், மர வேலைகள் செய்பவரை தச்சன் என்ற சம்ஸ்கிருத சொல் மூலமே அழைக்கிறோம். பைபிளில் சம்ஸ்கிருதம் என்ற எனது இரண்டு பகுதி ஆங்கிலக் கட்டுரையில் கிதார் முதலிய இசைக்கருவிகள் எப்படி சம்ஸ்கிருதத்தில் இருந்து பைபிளில் குடியேறி உள்ளன என்று விரிவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளேன் (ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க)

pada puja

பகவத் கீதையும் பைபிளும்

பகவத் கீதையில் உள்ள பல வசனங்கள் பைபிளில் அப்படியே உள்ளன. பாவ மன்னிப்பு – என்ற இந்து மதக் கொள்கையை பைபிள் அப்படியே ஸ்வீகரித்துக் கொண்டது. பிராமணர்கள் தினமும் மூன்றுதடவை செய்யும் சந்தியா வந்தனத்தில் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் வாயிலாக நான் செய்த பாவங்கள் எல்லாம் சூரிய ஒளியிலும், தீயிலும் எரிந்து அழியட்டும் என்று வேண்டி நீர் அருந்துவர். பிராமணர் அல்லாதார், புரோகிதர்களைக் கூப்பிட்டு பூஜை நடத்தும்போதோ, கோவில் பூஜைகளில் கலந்து கொள்ளும்போதோ புரோகிதர்கள் ‘’யானி கானி ச பாபானி’’ என்ற மந்திரத்தைச் சொல்லி ஈரேழு ஜன்மங்களில் செய்த பாபங்களையும் அழியச் செய்வர். இந்துக்கள் தினமும் செய்யும் பாவ மன்னிப்பு சடங்குகளை ‘சர்ச்’ எபோதோ ஒரு முறை மட்டும் செய்யும். இதுவும் எஞ்சி நிற்கும் இந்துமதப் பழக்கங்களில் ஒன்றே!

எல்லாம் எனக்கே (கடவுளுக்கே) அர்ப்பணம்

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார்:

யத் கரோஷி யதஸ்னாசி யஜ்ஜுஹோஷி ததாமி யதி

யத் தபஸ்யஸி கௌந்தேய த குருஷ்வ மதர்ப்பணம் – 9-27

பொருள்:–குந்தீ புத்ரனே! நீ எதைச் செய்தாலும், சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், என்ன தவம் செய்தாலும் – அவற்றை எல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்து விடு -9-27

இப்பொழுதும் கூட இந்துக்கள் எல்லா பூஜைகளையும் செய்துவிட்டு அதன் பலன்களை ‘’கிருஷ்ணார்ப்பணம் அஸ்து’’ என்று அவனுக்குக் கொடுத்து விடுவார்கள். இது பைபிளில் அப்படியே உள்ளது:

(I.Cor.x.31)’whether therefore ye eat or drink, whatever ye do, do all to the glory of God.’

asirvatha jesus

இந்துக்கள் போல தலையைத் தொட்டு ஆசீர்வாதம்! குருநாதர் கையில் தண்டம்.

கீதையில் உள்ள—

“சர்வ தர்மான் பரித்ஜ்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி, மா சுச: -18-66

பொருள்:— எல்லா அறங்களையும் பற்று இல்லாமல் ஒழித்து விட்டு என்னையே சரண் அடை. நான் உன்னை எல்லா பாபங்களில் இருந்தும் விடுவிக்கிறேன், வருந்தாதே! -18-66

இதுவும் பைபிளில் அப்படியே இருக்கிறது:

in Mathew ix.2. We read, Be of good cheer; thy sins be forgiven thee.’

வள்ளுவன் சொன்னது, விதுரன் சொன்னது!

மற்றவர்கள் தீயது செய்தால் அவர்களே வெட்கப்படும்படி நல்லதைச் செய். மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக் கூடாது என்று நீ நினைக்கிறாயோ அதை நீயும் பிறருக்குச் செய்யாதே என்று முதலில் சொன்னவர்— 5000 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் – விதுரர்:

தம்மபதம், விதுரநீதி முதலிய நூல்களில் உள்ள கருத்தை பைபிளும் திருக்குறளும் பிற்காலத்தில் கையாண்டன.

ந தத் பரஸ்ய சந்தத்யாத் ப்ரதிகூலம் யதாத்மன: — 7-17, விதுர நீதி

தஸ்மாத் தர்ம ப்ராதீனேன பவிதவ்யம் யதாத்மனா

ததா ச சர்வபூதேஷு வர்திதவ்யம் யதாத்மனீ

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 167-9

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் – குறள் 314

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல் – குறள் 318

Última_Cena_-_Juan_de_Juanes

படத்திலலிருவர் கைகூப்பி வணக்கம் செய்வதைக் காணலாம்.

இதுவும் பைபிளில் அப்படியே இருக்கிறது:

Jesus Christ also said :

Therefore all things whatsoever ye would that men should do unto you, do ye even so unto them (Matt.7,12)

கம்சனும் ஹெராட் மன்னனும்

கம்சன் குழந்தைகளைக் கொன்ற கதை ஹெராட் மன்னன் கதையிலும், கிருஷ்ணர் செய்த அற்புதங்கள் ஏசுவின் வாழ்விலும் இருப்பதை கடந்த 200 ஆண்டுகளில் பலரும் சுட்டிக்காட்டி இவை அனைத்தும் இந்தியாவில் இருந்து சென்ற கதைகளை கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டனர் என்றும் எழுதியுள்ளனர்

சூரியனும் சந்திரனும் அக்னியும் பிரகாசிக்காத இடம் ஒன்று உண்டு. அங்கு எல்லோரும் அவரவர் பிரகாசத்திலேயே ஜொலிப்பார்கள். சொர்க்கலோகம் இப்படிப்பட்ட ஒரு இடம் என்று இந்துமத நூல்கள் நூற்றுக் கணக்கான இடங்களில் செப்புவதை பைபிளும் பயன்படுத்துகிறது

The Heaven described in Revelation xxi.23 is a city which had no need of the sun, neither of the moon to shine in it, for the glory of god did lighten it.’

கீழ்கண்ட இரண்டு ஆங்கிலப் புத்தகங்களில் இதுபோன்ற நூற்றுக் கணக்கான விஷயங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர்கள் அனைவரும், இவை அனைத்தும் இந்துக்களிடமிருந்தும் பௌத்தர்க ளிடமிருந்தும் கிறிஸ்தவர்களால் கடன்வாங்கப்பட்டவை என்றும் இயம்புவர்.

Indian Philosophy,  J.F.Kennedy

‘The Original Jesus’ written by E R Gruber and G Kersten

இந்த மூன்று பகுதிக் கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது.

Jesu Krishna

Leave a comment

2 Comments

  1. Raghavan Narayanasamy's avatar

    Raghavan Narayanasamy

     /  February 10, 2015

    Timely article.very happy for spreading truth about our sanadana
    dharma.very touching part is about our madurai adheenam who did
    “rc”silently. Our dharma will never die. Krishna will send people like you
    to the earth whenerver there is a decline in dharmic activities

  2. Tamil and Vedas's avatar

    Thanks for your comment.
    swaminathan

Leave a comment