Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யக்ஷ்ம
Yakṣma (यक्ष्म) ருக் வேத்தித்திலும் அதர்வண வேதத்திலும் நோய் என்பதைக் குறிக்க பல இடங்களில் யக்ஷ்ம என்ற சொல் வருகிறது ; உடல்நலக்குறைவு என்பது தெளிவாகத் தெரிந்தாலும் என்ன நோய் என்பது தெளிவாக இல்லை; சில இடங்களில் டி பி. TB என்னும் க்ஷய ரோகத்தைக்/காச நோயைக் குறிக்கிறது; யஜுர் வேதத்தின் வாஜசநேயி சம்ஹிதையில் நூற்றுக் கணக்கான யக்ஷ்மங்கள் என்ற வாக்கியம் வருவதால் பொதுவாக நோய் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும் மேலும் காடக சம்ஹிதையில் நோயற்ற என்ற அர்த்தத்தில் அயக்ஷ்ம என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். யஜுர் வேத சம்ஹிதைகளில் ராஜ யக்ஷ்ம , பாப யக்ஷ்ம என்றெல்லாம் பேசப்படுகிறது ; ஜாயேன யக்ஷ்ம என்பதை பாலியல் நோய் /காம சம்பந்தமான நோய் என்றும் கருத இடமுள்ளது.
தமிழ் மொழியிலும் பிணி என்ற சொல்லினை பிறவிப்பிணிக்கும் பயன்படுத்துகிறார்கள் ; அது போல வேதத்திலும் பொருள் கொள்ள முடியும்.
***
யம (யோக விஷயங்களில்)
Yama (यम, “forbearance”) யம என்றால் பொறுமை, சகிப்புத்தனமை , மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்தல் என்று சம்ஸ்க்ருத அகராதி கூறும்; அஷ்டாங்க யோகம் என்பதன் ஒரு பகுதி இது ; இதை அத்து வகையாகப் பிரிப்பர். அவையாவன :
அஹிம்சை -அஹிம்சை (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை);
சத்ய- உண்மை;
ஆஸ்ததேய – திருடாமை; ஆங்கிலத்தில் உள்ள ஸ்டீல் STEAL என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது .
ப்ரஹ்மசர்ய – காம விஷயங்களில் ஈடுபடாமை;
த்ருதி – உறுதி (தமிழ் மொழியில் உள்ள உறுதி என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது ).
தயா- தயை;
ஆர்ஜவ- கபடமின்மை;
மிதாகார – மித உணவு;
செளச – தூய்மை .
***
யமன் (यम):—வேதங்களில் கூறப்படும் மரண தேவன் ; ஒவ்வொருவரின் உயிரையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் எடுத்துச் சென்று, அவர்கள செய்த பாவ புண்ணியங்களை சித்திர குப்தன் என்னும் அதிபயங்கர வேக சூப்பர் கம்யூட்டர் மூலம் கணக்குப்போட்டு ஒரே நொடியில் தீர்ப்பு சொல்பவன் ; அவனுடைய வாஹனம் எருமை; கூட வருவது இரண்டு நாய்கள் என்று வேத கால இலக்கியங்கள் செப்பும்; புராணங்களின் படி சூரிய தேவனான வைவஸ்வத (Rig Veda 10.14.5) என்பவருக்குப் பிறந்தவன்; மனு,இவனுடைய சகோதரன்;யமி என்னும் சகோதரியுடன் இரட்டைக்குழந்தைகளாகப் பிறந்தவன் . யமன் செய்யக்கூடிய வேலைகளைக் குறிப்பாக அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான இடங்களில் காணலாம் ; இவனுடைய கணக்குப்பிள்ளையின் பெயர் சித்திர குப்தன்.
சித்திர குப்தன் என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தால் மறைவான / ரகசியமான படம் என்று அர்த்தம். அதாவது நம்முடைய எண்ணம் செயல்கள் அனைத்தையும் படம்பிடித்து நம்முடனே வரச்செய்யும் அதி வேக, உலகம் இது வரை கண்டுபிடிக்காத, சூப்பர் பாஸ்ட் கம்யூட்டர் ! நம்முடைய பாவ புண்ணிய மூட்டையை யமன் காண முடியும்.
சங்க கால நூல்களில் யமன், கூற்றுவன் காலன் என்ற பெயர்களில் வலம் வருகிறான் ; ச ம் ஸ்க்ருத நூல்களில் உள்ளதைப் போலவே இவன் தெற்குத் திசையில் இருப்பதத்தை தமிழ் நூல்களும் புகலும்; தென்புலம் என்றால் யமனுடைய திசை; திருக்குறளிலும் வருகிறது.
உபநிஷத்தில் வரும் நசிகேதன் கதையில்,மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் -சாவித்ரி கதையில்,யக்ஷப் ப்ரச்னம் என்னும் பேயின் கேள்வி-பதில் கதையில்,புராணங்களில் தேவார திருவாசகப்பாடல்களில் வரும் மார்க்கண்டேயன் கதையில் இவனுடைய அதிகாரத்தை அறியலாம்
உலக மஹா அதிசயம் பிராமணர்கள் இவனைத் தினமும் மூன்று வேளைகளில் வணங்குவதாகவும் ; இவருக்குத்தான் அதிகப்பெயர்கள்! தென் திசையை நோக்கி அவர்கள் இவனைப்புகழ்ந்து சொல்லும் பெயர்கள் :
yamāya namaḥ | yamāya dharma-rājāya mṛtyave cāntakāya ca |
vaivasvatāya kālāya sarva-bhūta-kṣayāya ca ||
audumbarāya dadhnāya nīlāya parameṣṭhine |
vṛkodarāya citrāya citra-guptāya vai namo namaḥ ||
citra-guptāya vai nama oṃ nama iti.
யம (यम): The Restrainer or Controller; he who keeps mankind in check.
தர்மராஜ (धर्मराज): The King of Righteousness or Justice.
ம்ருத்யு (मृत्यु): Death personified.
அந்தக (अन्तक): The Ender; he who brings life to a termination.
வைவஸ்வத (वैवस्वत): The son of Vivasvat (the Sun God).
கால (काल): Time, the ultimate devourer.
ஸர்வபூதக்ஷய (सर्वभूतक्षय): The destroyer or dissolver of all living beings.
ஒளதும்பரா (औदुम्बर): The one possessing immense strength (often symbolized by the glaucous fig tree).
தத்ன (दध्न): The sustainer. English word DEATH is derived from this Sanskrit word.
ஆங்கிலத்தில் உள்ள டெத் DEATH என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது .
நீல (नील): The dark or blue-black complexioned one.
பரமேஸ்டி (परमेष्ठी): The supreme lord or high official of cosmic order.
விருகோதர (वृकोदर): The one with a vast appetite or a powerful physical frame.
சித்ர (चित्र): The wonderful or multifaceted one.
சித்திரகுப்த (चित्रगुप्त): Frequently invoked alongside Yama; his cosmic scribe who records all human deeds.
***
யமுனை (ஜமுனா) சங்க காலத்தில் தமிழர்களுக்குத் தெரிந்த இரண்டு நதிகளில் ஒன்று யமுனை; இதைத் தவிர கங்கை நதியை 17 இடங்களில் குறிப்பிடுகிறார்கள் ; சிந்து நதி பற்றித் தமிழர்களுக்குத் தெரியாது;சிந்துவெளி நாகரீகம்பற்றியும் தெரியாது ; ஆனால் மெளரிய, நந்த வம்சங்களைக் குறிப்பிடுகின்றனர் ; இரண்டு அதிசய விஷயங்கள்:– யமுனைக்குத் தொழுனை என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்; இதனுடைய விளக்கத்தை எவரும் குறிப்பிடவில்லை ; இதைக் குறிப்பிடும் அகநானூற்றுப் பாடலில் கண்ணன் கோபியர்களின் ஆடையை எடுத்துக்கொண்டு மரத்தில் உட்கார்ந்த செய்தி வருகிறது ; இது 2000 ஆண்டுப் பழமையான் பாடல்; புராணங்களுக்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த குப்தர் காலத் தேதி தவறு என்பதையும் இது காட்டும்.
வேதத்தில் யமுனைநதியைக் குறிப்பிடுகிறார்கள்; இந்திரனுக்கு கிழக்கு திசையைக் கொடுத்துள்ளார்கள்; ஆகையால் கங்கை- யமுனை நதி தீரத்திலிருந்து பஞ்சாப் வழியாக இந்துக்கள் உலகம் முழுதும் குடியேறி நாகரீகத்தைப் பரப்பியதை அறிய முடிகிறது
யமி, யமுனா என்றால் இரட்டையர் என்றும் பொருள் ;இமயமலையில் யமுனோத்ரி சிகர பகுதியில் 10,849 அடி உயரத்தில் தோன்றி 860 மைல்களுக்குத் தனியாக , கங்கை நதிக்குச் சமமாக ஒடி, பிரயாகை என்னும் புண்ணிய தலத்தில் கங்கையுடன் கலக்கிறது ; வேத காலத்தில் ஒடி வற்றிப்போன சரஸ்வதி நதி இங்கு பாதாளம் வழியாக கலக்கிறது என்பதால் இதற்கு முக்கூடல் / திரிவேணி சங்கம் என்றும் பெயர். உலகத்தின் மிகப்பெரிய பண்டிகையான கும்ப மேளாவினால் பிரயாகை உலகப் புகழ் பெற்றது; துலுக்கர் ஆட்சிக் காலத்தில் இதற்கு அலஹாபாத் என்று பெயர் சூட்டினர்; இப்பொழுது அந்தப்பெயரை அழித்து, வெற்றி கண்டார்கள் இந்துக்கள்!
Yamunā (यमुना, ‘ட்வின்’) யமுனை நதிக்கரையில் நடந்த பெரும் யுத்தத்தை ரிக் வேதம் வருணிக்கிறது ; இதைக் காளிந்தி என்ற பெயரில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .The river Is mentioned also by the name Kālindī in Eran Stone inscription of Budhagupta. T
யமுனையின் நிறம் கருப்பு; கங்கையின் நிறம் வெள்ளை இவை இரண்டினையும் கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் ஒப்பிவிட்டு மகிழ்கிறான் காளிதாசன் ; கிருஷ்ணர் விளையாடியதும் யமுனை நதி தீரம்தான்.
****
யாதேயர்கள்
தமிழர்களின் முருக வழிபாட்டுக்கு முக்கியத் தடயத்தைப் பழங்காலத்தில் கொடுத்த வம்சம் யாதேய வம்சம் ஆகும் இவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட காசுகளில் ஆறு தலை அறுமுகனைக் காண முடிகிறது ; ஸ்கந்தன்/ விசாகன்/ ஷண்முகன் என்ற பெயர்களை கெளடில்ய அர்த்த சாத்திரம், பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தில் காண முடிந்தாலும் நக்கீரனின் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க கால நூலில் செப்பியது உண்மை என்பதை இவர்கள் வெளியிட்ட காசுகள் காட்டுகின்றன ; முருக பக்தர்களான இவர்கள் வேலுடன் நிற்கும் வேலாயுதனையும் காசுகளில் பொறித்துள்ளார்கள் .
இவர்கள் யுத்த ஜீவிகள் ; அதாவது எல்லோருக்கும் ஆயுத சப்ளை செய்தவர்கள் என்று 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி கூறியுள்ளான் ; போர் செய்வதும் ஆயுத உற்பத்தி செய்வதும் இவர்கள் தொழில் ; இன்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேலை நாடுகள் ஆயுத உற்பத்தி- விற்பனையில் வாழ்கின்றன ; அதற்கு முன்னுதாரணம் யாதேயர்கள்தான்!
அவர்களை ஏக ராஜ க்ஷத்ரிய என்பற்று பாணினி குறிப்பிடுவதால் ஒரே தலைவனுக்கு கட்டுப்பட்டு அவர்கள் வாழ்ந்ததையும் அறிகிறோம். மகாபாரதத்திலும் இவர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன; யுதிஷ்டிரரின் ராஜ சூய யாகத்தில் யாதேயர்களும் கலந்து கொண்டனராம்.
Yaudheya coins are ancient copper and silver currencies issued between the 2nd century BCE and the 4th century CE by the Yaudheyas.
• Design & Deities: Most coins feature Karttikeya (the Hindu war god also called Brahmanyadeva or Skanda) holding a spear or javelin on the obverse, often accompanied by a peacock. In coins he is shown with his six heads.
• Inscriptions: They commonly bear the Brahmi legend “Yaudheya Ganasya Jaya” (Victory of the Yaudheya tribe), celebrating military success.
• Symbols: Reverses often display a deer, an elephant, a bull, or an architectural temple structure.
• Denominations: Minted primarily in copper and bronze as punch-marked or cast coins, varying in weight from roughly 3 grams to over 11 grams.
தற்காலத்தில் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வாழும் ஜாட் வகுப்பினர் தங்களை யதேயர் வழிவந்தவர்கள் என்று கூ றிக்கொள்கிறார்கள்.
****
யயாதி
இரண்டு யயாதி மன்னர்கள் இருந்தனர்; இருவரின் தந்தை பெயரும் நஹுஷன் ! இதனால் பல கதைகளில் குழப்பம் ஏற்பட்டது . ஒருவர் சூரிய வம்சத்தையும் மற்றோருவர் சந்திர வம்சத்தையும் சேர்ந்தவர்கள் . ; கச்ச-தேவயானி கதையில் இவருடைய கதை கொடுக்கப்பட்டது அவர் சந்திர வம்சத்தவர் .
சூரிய வம்ச யயாதியின் கதை காலவ முனிவர் கதையில் வருகிறது .காலவ முனிவர் தனது குருவான விஸ்வாமித்திரருக்குக் குரு தட்சணையாக ஒரு காது மட்டும் கருப்பாக இருக்கும் 800 அசுவமேதக் குதிரைகளைத் தர விரும்பினார். குரு தட்சிணை என்ன வேண்டும் என்று காலவர் திரும்பத் திரும்பக் கேட்டதால் இப்படிப்பட்ட வினோதமான குதிரைகளை விசுவாமித்திரர் கேட்டார்; இதற்காக அவர் மன்னர் யயாதியிடம் உதவி கேட்க, யயாதி தனது மகள் மாதவியை காலவ முனிவரிடம் ஒப்படைத்தார்.
• காலவ முனிவர் மாதவியை ஹர்யஸ்வன், திவோதாசன், உசீனரன் மற்றும் விஸ்வாமித்திரர் ஆகியோருக்கு மணம் முடித்துக் கொடுத்து, அதன் மூலம் அந்த அதிசயக் குதிரைகளைப் பெற்றுத் தன் குரு தட்சணையை நிறைவேற்றினார்.
• மேலும், மகாபாரதத்தின் விசித்திரப் பறவைக் கதைகளில், காலவ முனிவர் தனது நண்பனான கருடனுடன் (பறவை இன மனிதர்) குதிரைகளைத் தேடிச் சென்ற போது சாண்டிலி என்ற கற்புடைய பெண்ணைச் சந்தித்த சம்பவத்தையும் எழுதியுள்ளேன் .
Mādhavī (माधवी).—மாதவியின் கதை மஹாபாரத உத்யோக பர்வத்தில் வருகிறது அவள் எப்போது பார்த்தாலும் மான் தோலை அணிந்துகொண்டு முனிவர் போலத் தவம் இயற்றி வந்தாள்; அவள் எத்தனை பேருடன் உடலுறவு கொண்டாலும் கன்னித் தன்மையை இழக்காத வரமும் அவளுக்கு இருந்தது. அயோத்தி மன்னன் ஹர்யஸ்வாவுடன் படுத்த போது வசுமனாஸ் என்ற பிள்ளையைப் பெற்றாள். காசி மன்னன் திவோதாசன் மூலம் பிரதர்தனன் என்பவனையும், உசிநார மன்னன் மூலம் சிபிச் சக்ரவர்த்தியையும் விசுவாமித்திரர் மூலம் அஷ்டக என்பவனையும் பெற்றாள் .
To be continued…………………..
Tags. யக்ஷ்ம, யாதேயர் , யயாதி , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-126; இந்து மத கலைச்சொல் அகராதி-126, யமுனை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
61
ஒரு முஸ்லீம் கொண்டுவந்த சாசனம் எப்படி வியப்பை உண்டாக்கியது ?
62
அவந்தி சுந்தரி கதை மூலம் நாம் அறியும் பல்லவர்கள் யார் ?
63
பல்லவ மன்னர்கள் விதித்த விசித்திர வரிகள் யாவை?
64
பல்லவர்களைக் குறிக்கும் போத்தரையன் பற்றிக் காஞ்சிப் பெரியவர் சங்காராச்சார்யார் கூறுவது என்ன ?
65
கிழமையைக் குறிப்பிடும் செப்பேடு எது ?
66
நிலைதாங்கி என்றால் என்ன ? நிலைதாங்கி = மார்த்தாண்டன்=சூரியன் ?
.
67
பல்லவ மஹாராணிகளில் ரங்க பதாகா (பறக்கும் வர்ணக் கொடி) , சாரு தேவி ஆகியோரை முன்னர் கண்டோம் ; அக்கள நிம்மடி, சங்கா தேவி , கோண தேவி பற்றி செப்பேடுகள் செப்புவது என்ன?
68
ஐந்து குடுமி வைத்து செம்புள்ளி கரும்புள்ளி வைக்கும் தண்டனை என்ன ?
69
எந்த நாலு பேருக்கு மட்டும் சிம்ம வர்மன் வணக்கம் செலுத்துவான் என்று ஆந்திர மாநில பீகிராச் செப்பேடுகள் விளம்புகின்றன ?
70
அஸ்வமேத யாகம்பற்றிச் செப்பேடுகள் தரும் செய்தி என்ன ?
***
விடைகள்
61.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முஸ்லீம் இதோ பாருங்கள் எனக்குதான் இந்த நிலம் சொந்தம் என்று அதற்கு ஆதாரமாக ஆந்திர பிரதேச குண்டூர் ஜில்லா உதவி கலெக்டரிடம் சில செப்புப்பட்டயங்களைக் கொடுத்தார் . அந்த முஸ்லீம் நர்ஸார்ப்பேட்டையில் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டயம் என்று நினைத்துக்கொண்டு அதைக் கொண்டு வந்திருக்கிறார் . அவர் அதை வாங்கி தென் இந்திய சாசன ஆராயச்சித் துறைக்கு அனுப்பி வைத்தார். அதில் முழுக்க முழுக்க பிராமணர்களு க்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பிரம்மதேயம் கொடுத்த — நிலத்தானம் — செய்திதான் இருந்தது!அவைகள் 1913 ஆம் ஆண்டில் சுரஞ்ச் செப்பேடுகள் என்ற பெயரில் வெளியிட்டனர் ; அது விஜய விஷ்ணு கோப வர்மன் என்ற பல்லவ மன்னர் அழைத்த செப்பேடு ;அதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரிகிறது ஆயினும் அதை யாரோ 200 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுத்துப் பிற பிழைகளுடன் நகல் எடுத்ததும் தெரிகிறது.
காண்க- பக்கம் 341 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
***
62.அவந்தி சுந்தரி கதை (Avantisundari Katha) என்பது வடமொழியில் தண்டி யென்ற புலவர் இயற்றிய ஒரு புகழ்பெற்ற உரைநடை காப்பியமாகும்.தண்டி (Dandin) காவ்யதர்சம் போன்ற நூல்களையும் எழுதியவர். இது ராஜவாஹனன் மற்றும் அவனது நண்பர்களான தசகுமாரர்களின் சாகசங்களைக் கூறும் ‘தசகுமாரசரிதம்’ போன்ற கதைகளின் தொடர்ச்சியாகவும், தண்டியின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுத் குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை; பல பகுதிகள் சிதைந்த நிலையில் ஒரு உரைநடைத் துண்டாகவும், பின்னர் கவிதை வடிவிலும் மீட்கப்பட்டுள்ளது. தமிழில் பிரேமா பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் இந்நூலை வெளியிட்டது.
மேலைக் கங்க வம்சத்தில் அவிநீதன், துர்விநீதன் , நிர்விநீதன் என்ற மூன்று மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அவர்களுள் அவிநீதன் என்பவன் ஆட்சியிலேதான் சிம்ம விஷ்ணுவின் தாயார் அருகக்கடவுளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அவிநீதன் மகன் துர்விநீதன் சம்ஸ்க்ருதத்தில் சிறந்த வித்வான் ; அவன் சப்தாவதாரம், வட்ட கதா நூல்களை ஆக்கியோன் ஆவான். அவந்திசுந்தரி கதையிலிருந்து பல்லவ விஷ்ணுவர்மன், சாளுக்கிய விஷ்ணுவர்த்தனன், கங்க வம்ச துர்விநீதன் சமகாலத்தர் என்று தெரிகிறது . அவந்தி சுந்தரி கதையை எழுதிய தண்டி யின் முப்பாட்டனான தாமோதரன், தீர்த்த யாத்திரையின்போது துர்விநீதன் சபையில் வந்து தங்கியிருந்தானாம் . அப்பால் அவன் பல்லவ மன்னனின் ஆதரவினைப்பெற்று காஞ்சீபுரத்துக்கு வந்து ஒரு பெண்ணை மணந்து அங்கேயே தங்கி விட்டானாம் . துர்விநீதன் ஆட்சிக் காலம் ஏழாம் நூற்றாண்டு ஆகும் . காண்க- பக்கம் 36 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
***
63.பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய விழாவெட்டிச் செப்பேடுகள் பல வகையான வினோத வரிகளைக் குறிப்பிட்டுள்ளது ; சாசனத்தைப் பதிப்பித்த சாசன இலாகா அதிகாரியான கிருஷ்ணமாசார்லு சொல்கிறார் :”உலோக வேலை செய்வோர், தோல் பதனிடுவோர், கடை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரி இறுக்கமில்லாத ஆடை அணிந்து சஞ்சரிக்கும் அதிகாரம் பெற்ற ஒற்றர்கள், கழைக் கூத்தாடிகள் , ஆஜீவகர்கள் ஆகியோர் செலுத்த வேண்டிய வரிகளும், புறம்பானவர்கள் , மிலேச்சர்கள் போன்றவர்கள் , வேஷம் அணிபவர்கள், கிணறு வெட்ட நீரோட்டம் காண்பவர்கள் , துணி நெய்பவர்கள், சூதாடுவோர், திருமணம் நடத்துவோர், நாவிதர் முதலியோர் செலுத்த வேண்டிய கடமைகளும் , எல்லா விலங்குகளையும் பெற்ற கைவினைஞர்கள் செலுத்த வேண்டியவைகளும் இன்னும் நமக்குச் சேரவேண்டிய மற்ற வரிகள் அனைத்தும் இவருக்கு பிரம்மதேயமாக அளிக்கப்பட்டன . இது விஷ்ணுசர்மன் என்ற பிராம்மணனுக்கு பல்லவ மன்னன் அளித்த கொடை
. காண்க- பக்கம் 317 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
(சாசனத்தின் வாசகங்களில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களும் உள்ளன; அவைகளை ஆராய்ந்து சரியான விளக்கம் பெறவேண்டும்)
பிரம்மதேயம்- பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தானம்;தேவதானம் – கோயில்களுக்கு வழங்கப்படும் தானம்.
***
64.பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப்படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் ‘பல்லவன்’ என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது. தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள ஸிம்ஹவர்ம பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதையை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாம்ர சாஸனத்திலும் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த ப்ராம்மணர். அவருடைய பிதாவான த்ரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்ரக்காரர்களாகவே சாஸனங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்லவ ராஜாக்களே சாஸனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள். நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது; அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை ஸமுத்ரத்தில் மிதக்க விட்டுவிட்டாள்; அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சீ மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர். தொண்டைக் கொடியை ஸம்ஸ்க்ருதத்தில் ‘துண்டீரம்’ என்பார்கள். அதனால் ஸம்ஸ்க்ருத நூல்களில் துண்டீர மண்டலம், துண்டீர சக்ரவர்த்தி என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.
குழந்தையை தேவ ஸ்த்ரீ படுக்கவிட்ட படுக்கையானாலும் ஸரி, நாக ஸ்த்ரீ அதன் இடுப்பில் சுற்றிய கொடியானாலும் ஸரி, இரண்டும் துளிர்களால் ஆனதுதான். துளிர்தான் பல்லவம். அதனால், எந்தக் கதைப்படி பார்த்தாலும் பல்லவர் என்ற பெயர் பொருத்தமானதாகிறது.
துளிருக்கேதான் இன்னொரு பேர் போதம், அல்லது, போத்ரம். தமிழிலும் சின்னஞ்சிறு கன்றாக உள்ள செடியைப் ‘போத்து’ என்றே சொல்கிறோம். ‘பல்லவ மஹாராஜா’ என்பதே இன்னொரு விதமான பத ப்ரயோகத்தில் ‘போத்ர அதிராஜன்’, ‘போத்ராதி ராஜன்’ என்றாயிற்று. அதனால்தான் ஸிம்ஹ விஷ்ணுப் பல்லவச் சக்ரவர்த்தி என்பது ‘சிம்ம விண்ண போத்ராதி ராஜன்’ என்றாயிற்று.
‘போத்ர ராஜன்’ என்பதைத் தமிழில் ‘போத்தராயன்’ என்று சொல்லியிருக்கும். ஒரு வேலையும் செய்யாமல் கொழுத்துப் போனவர்களை ‘போத் (த) ராசா’ என்று திட்டுகிற வழக்கம் இருக்கிறதே, இந்த ‘போத் (த) ராசா’ கூட ‘போத்ர ராஜா’ விலிருந்து வந்ததுதான்!
***
65.ஆடி மாத வெள்ளிக்கிழமையை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது; திருஞான சம்பந்தரின் கோளறு திருப்பதிகம் ‘ஞாயிறு திங்கள் செவ்வாய்’- என்று துவங்கி நவக்கிரகங்களையும் குறிப்பிடுகிறது ; பிராமணர்கள் தினமுமிதை மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் நவக்கிரக தர்ப்பணமாக சம்ஸ்க்ருதத்தில் சொல்லி வழிபடுகிறார்கள்; முதலாம் பரமேஸ்வர வர்மனின் உன்னக்குரவய பாளையம் செப்பேடுகள் ஞாயிற்றுக் கிழமையைக் குறிப்பிடுகிறது ; ஏனைய செப்பேடுகளில் பஞ்சாங்கத்தில் உள்ளதைப்போல மாதம்- பக்ஷம்- திதி ஆகியவற்றை மட்டும் காண்கிறோம். ஆந்திரத்தில் கிடைத்த இந்த செப்பேடு முதலாம் பரமேஸ்வர வர்மன், அவனுடைய ஆட்சியின் பத்தொன்பதாம் ஆண்டில் பெளஷ்ய மாதம் சுக்கில பக்ஷத் திரயோதசி கொண்ட ஞாயிற்றுக் கிழமை உத்தராயண நிமித்தம் குப்புநூறு என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவசர்மன் என்ற பிராமணனுக்கு தானம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இந்த தேதி கி பி 668 ஆம் ஆண்டினை ஒட்டி வருகிறது . வியப்பான விஷயம் ஏறத்தாழ ஞான சம்பந்தரின் காலம்!(கி.பி. 600 முதல் 630 வரை); ஆனால் சீர்காழிக்கும் ஆந்திரத்துக்கும் உள்ள தூரமோ நெடுந்தூரம்! (பெளஷ்ய மாதம்= தை மாதம்)
***
66.ந்ருப துங்க வர்மனின் பாகூர்ச் செப்பேடுகள் முப்பது ஸம்ஸ்க்ருதச் ஸ்லோகங்களை கொண்டுள்ளது; 18 ஆவது ஸ்லோகம் அரசனின் அதிகாரி அல்லது சிற்றரசன் மார்த்தாண்டனின் பெயரைக் குறிப்பிடுகிறது . 19 ஆவது ஸ்லோகம் சந்த்திர சூரியர்களைப்போல பாதுகாத்து அவன் உலகமக்களுக்கு இருப்பிடம் ( நிலையம்) ஆனான்
பின்னர் 20 ஆவது ஸ்லோகம் பின்வருமாறு உள்ளது :
“அதனால் நிலைதாங்கி என்ற பெயர் ஒரு தெய்வத்துக்கு ஏற்றது போல அந்த அரசனுக்கும் பொருத்தமாக அமைந்தது; அல்லது அவன் (அரசன்) இயற்பெயர் நேரிடையாக நன்கு தோற்றமளித்தது எனலாம்.”
இதில் நிலைதாங்கி என்பதன் பொருள் என்ன? சூரியனா ? அகராதியில் இல்லை . 18 ஆவது ஸ்லோகத்தில் வரும் மார்த்தாண்டன் என்பது சூரியனின் பெயர் . சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் பார்த்தால் விடை கிடைக்கலாம்
உரைநடை விளக்கப்பகுதியில் குறுநில மன்னனான மார்த்தாண்டனுக்கு நிலைதாங்கி என்ற பெயரும் உண்டு – பக்கம் 264- காணப்படுகிறது . அப்படியானால் நிலை தாங்கி சூரியன் தானோ !
நிருப துங்க வர்மன் யார்?
பல்லவ வம்சத்தின் பிற்கால மன்னர்களில் ஒருவர் (ஆட்சிக் காலம்: கி.பி. 850–880). இவன் புகழ்பெற்ற மூன்றாம் நந்திவர்மனின் மூத்த மகன் ஆவான். பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனுடன் இணைந்து அரிசிலாற்றங்கரையில் நடந்த போரில் பல்லவப் படை வெற்றி பெறக் காரணமானவன். இவனது ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற பாகூர்ப் பட்டயம் வெளியிடப்பட்டது.பல்லவ வம்சத்தின் இறுதி வாரிசுரிமைப் போரில் இவனுக்கும் இவனது தம்பி அபராசித வர்மனுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன
***
67.அக்கள நிம்மடி
பல்லவ அரசி: பல்லவ மன்னனான தந்திவர்மனின் (கி.பி. 796–846) பட்டத்தரசி ஆவார். இவர் கடம்ப மன்னர் குலத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். கூரம் கல்வெட்டுகளில் இவரைப் பற்றியும், இவர் ஆற்றிய நிலக்கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தந்திவர்மன் என்பவன் நந்திவர்மப் பல்லவமல்லன் மகன். கி. பி. 7231 மு தல்
கி. பி. 880 வரை ஆண்டவன். இவன் “ பாரத்துவாஜ கோத்திரத்
தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவன் தந்திவர்மன் ்
எனவும், * கோவிசைய தந்திவிக்கிரமபர்மன்” எனவும் கல்வெட்டுக் களில் குறிக்கப் பெற்றுள்ளான். இவனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும், வைரமேகன் என்னும் வேறுபெயரும் உண்டு. இவன் கதம்ப மன்னர் குலத்தில் பிறந்த அக்கள நிம்மடி என்னும் பெண்ணை மணந்து கொண்டவன்.
மூன்றாம் நந்திவர்மனின் வேளூர்ப் பாளையம் செப்பேடுகள் 31 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது அதில் 18 ஆவது ஸ்லோகம்-
“கதம்ப வம்சத்தின் திலகமாக பிரசித்தி பெற்ற அரசனுடைய மக்களும் , நற்குலத்தில் பிறந்தவளுமான அக்கள நிம்மடி என்பாள் முப்புரங்களை வெற்றிகொண்ட பரமசிவனின் தேவியான கெளரி- பார்வதி- யைப்போல , வீரர்களில் முதல்வனும் , ஒளி பொருந்தியவனும் , பூமியின் அரசனுமான , பல்லவ மகாராஜனுக்கு மனைவியானாள்” . அடுத்த ஸ்லோகம் அவளுக்கு நந்திவர்மன் பிறந்ததைக் கூறுகிறது.
(திருச்சிராப்பள்ளி தாலூகரவில் ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டியுள்ளான். இங்கே ஒரு ஏரி – ஓன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி என்று பெயர் வைத்துள்ளான்.)
கோஷ தேவி =கோண தேவி
பல்லவர்களில் தெள்ளாறெறிந்த நந்தி வர்மனை அங்க நாடன் என்று நந்திக்கலம்பகம் கூறுகிறது . இது பாகல்பூயூர் பிரதேசம். வங்காளத்தில் தேவகரில் கிடைத்த கல்வெட்டுக்கு தலையும் இல்லை; வாழும் இல்லை . இடைப்பட்ட பகுதியில் ஆதித்யசேனன் சோழநாட்டிலிருந்து திரும்பினான் என்றுள்ளது அவனுடைய மனைவி கோஷா தேவி என்றும் காணப்படுகிறது ; ஆனால் பாகல்பூரில் மந்தார கிரியிலுள்ள கல்வெட்டுகளில் ஆதித்யசேனன் மனைவி கோண தேவி என்றுள்ளது . அதுதான் சரியான பெயர் . கூ ரம் செப்பேட்டில் முதலாம் பரமேச்வரனைக் கர்ணனுடன் (அங்க நாட்டரசன்) ஒப்பிட்ட விளக்கத்தில் இந்தச் செய்தி கூறப்படுகிறது – பக்கம் 44- பல்லவர் செப்பேடுகள் முப்பது .
சங்கா தேவி
பாகூர்ச் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் தந்தி வர்மனுக்கு நந்தி வர்மன் பிறந்தான்; அவன் ராஷட்ரகூட வம்சத்தில் பிறந்த சங்கா என்ற தேவியை மணந்தான் . அவர்களுக்கு நிருபதுங்கன் என்ற மகன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது .பக்கம் 264
***
பாகூர்ச் செப்பேட்டில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் விளக்கப் பகுதியில் – பக்கம் 273- சுவையான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது
ஸ்லோகம் 11
யமனுடைய இருப்பிடத்தைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையோடு தன்னிடம் சிறைப்பட்டவர்களோடு கூடியவர்களாக — அவர்களுடைய– வழிநடைக் கட்டுச்சோறு போல பேடிகளான எதிரிகளை செய்து அவன் அனுப்பிவைத்தான்
அடிக்குறிப்பு
சிறைப்பட்டோரையும் எதிரிகளின் தூதுவர்களையும் முன்னாளில் நம் அரசர்கள் பெண் வேடம் போட்டோ , ஐங்க்குடுமி வைத்தோ முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியோ அனுப்புவது வழக்கம் ; சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் அது வழக்கில் இருந்திருக்கிறது ..
எனது கருத்து
பெண்களுக்கு ஐம்பால் கூந்தல் இருந்ததாக சங்க இலக்கியம் முழுதும் காணப்படுகிறது ; அதனால்தான் ஐங்க்குடுமி வைத்தனரோ! பதிற்றுப்பத்தில் சேர மன்னன், கடலில் சேட்டை செய்த யவனர்களைப் பிடித்து, மொட்டையடித்து, தலையில் எண்ணெய் ஊற்றி, பின்னால் கைகளைக் கட்டி தண்டித்த செய்தியுடன் இதை ஒப்பிடலாம் .
***
69. தெய்வம், இரு பிறப்பாளர் ( பிராமணர்), ஆசான், முதியோர் ஆகியவர்களை உபசரிப்பான்; அவன் யுவ மஹாராஜா விஷ்ணு கோபனின் மகன் ; பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன்; கலியுக தோஷத்தினால் கீழே விழுந்த தர்மத்தை உயர்த்தி நிறுத்துவதில் எப்போதும் தயாராக இருப்பவன் ராஜ ரிஷிகளின் கு ணங்கள் அனைத்தையும் உடையவன் .
(சமுத்திர குப்தன் கால பல்லவ மன்னன் விஷ்ணு கோபனை பிரயாகை பிரஸ்த்தி உறுதி செய்கிறது; அந்த விஷ்ணு கோபன் என்றால் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே கலி யுகம் பற்றிக் கவலைப்பட்டது தெரிகிறது!)
***
70.பல்லவர் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகப் பகுதிகளில் பொதுவாக பல்லவ மன்னர்கள் அஸ்வமேத யாகம் செய்பவர்கள் என்று வருகிறது; யுவராஜா விஷ்ணுகோப வர்மனின் செப்பேடுகளில் மன்னனின் சேனாபதியான விஷ்ணுவர்மன் எழுப்பிய விஷ்ணுவின் ஆலயத்துக்கு உருவப்பள்ளி கிராமத்தில் நில தானம் செய்த செய்தி வருகிறது ; கோயில் எழுப்பிய விஷ்ணு வர்மன் , கதம்ப வம்சத்து அரசனும் அச்வமேத யாகம் செய்தவனுமான முதலாம் கிருஷ்ண வர்மனின் மகன் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுவர் -பக்கம் 284 அவன் செய்த அஸ்வமேத யாகத்தை வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
Tags- பல்லவர் செப்பேடுகள், ஏழாவது 10 கேள்விகள் , பல்லவ மஹாராணிகள் , நிலைதாங்கி, போத்தரையன் , யாகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில அரிச்சுவடியின்படி வி V எழுத்தில் வரும் சொற்கள்
வாகனங்கள்
கடவுள் பவனி வரும் வாகனங்கள் உண்மையில் ஆழ்ந்த மறை பொருளை கொண்டுள்ளது; அவைகள் குணங்களின் அடையாள பூர்வ சின்னங்கள் ; இதனால்தான் எலி மீது பவனிவரும் யானை முகக்கடவுளைக் காண்கிறோம். முன் காலத்தில், உலகம் முழுதும் இந்துக்களைப்போல கடவுளரை வாக்கங்களில் காட்டியதை எகிப்து, இராக் துருக்கி ஆகிய இடங்களில் இன்றும் காணலாம் ; அனால் அந்தக் கடவுள்கள் எல்லாம் செத்துப் போய் மியூசியங்களில் முடங்கிக்கிடக்கின்றனர் . இந்துக்களின் கடவுள்களோ இன்றும் பல லட்சம் மக்கள் புடைசூழ பவனி வருகின்றனர் . முதலில் கொடியில் இருந்த சின்னங்களே பிற்காலத்தில் வாகனமாக பரிணாம வளர்ச்சி பெற்றன. இதை இலக்கியக் குறிப்புகளில் இருந்து தெளிவாகப் பெறலாம்.
காளிதாசனின் காலத்தைக் கணக்கிட சங்க இலக்கியம் எப்படி துணை செய்கிறது என்பதை ஏற்கனவே ஐந்தாறு கட்டுரைகளில் விளக்கினேன். அவன் சங்க காலத்துக்கு முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இப்போது அவன் அளித்த வாகனக் குறிப்புகள் தமிழ் இலக்கியத்திலும் வருவது அவன் காலத்தால் முந்தியவன் என்பதை மேலும் உறுதி செய்கிறது.
புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் சிவனின் வாகனமும் கொடியும் ரிஷபம் (ஏறு) என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் (மஹாதேவன்) பாடுகிறார்.
ரிஷபக் கொடி: காளிதாசனின் ரகு வம்சம்11-44;
விஷ்ணுவின் கருட வாகனம்: ரகு 10-13;10-61
இந்திரன் வாகனம் 4 மருப்புடைய யானை- திரு முருகாற்றுப்படை 155-159
நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் யமதர்ம ராஜனின் எருமை வாகனம் பாற்றிப் பாடுகிறார்- பாடல் 1- வரி 25/26
முருகப் பெருமானின் யானையை பிணிமுகம் என்று அழைப்பர்:
பிணிமுக ஊர்தி வெல்போர் இறைவன் (பரி.17-49)
பிணிமுக ஊர்தி ஒண்செய்யோன்-புறம் 56
மயில் வாகனம் : மேகதூதம் பாடல் 46 (காளிதாசன்); பாடல் 54ல் சிவ பெருமானின் விடை ஏறு (ரிஷபம்). மகாபாரதத்திலும் இதே குறிப்பு வருகிறது (8-24)
மணிமயில் உயரிய மாறாவென்றி (புறம் 56)
முருகன் மஞ்ஞையன் (முருகு 210)
விரைமயில் மேல் ஞாயிறு (பரி 18-26)
சேவலங்கொடியோன் (குறுந்தொகை கடவுள் வாழ்த்து)
சேவலங்கொடியன் (முருகு 210)
கலித்தொகையில் சிவபெருமானின் காளைவாகனம் வருகிறது (150-13; 26-5)
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரின் கொடி வாகனங்கள் பற்றிப் பாடிப் பரவுகிறார்.
காளிதாசனும் கொடியும் வாகனமும் சிவனுக்கு ஒன்றுதான் என்று சொல்லி வ்ருஷபத்வஜன், வ்ருஷாங்கன், வ்ருஷபாருடன் என்று ரகு வம்சம் ,குமார சம்பவம் ஆகியவற்றில் புகழ்கிறார். இதைத் தமிழ் புலவர்களும் பாடியதை மேலே கண்டோம்.
காளிதாசன் இந்திரனின் வஜ்ரக் கொடி, வாகனம் ஐராவதம் ஆகியன பற்றியும் பாடுகிறார் ( ரகு3-56; 1-36. ரகு வம்சத்தில் முருகனின் மயில் பற்றி ‘மயூரப் ப்ருஷ்ட ஆஸ்ரயினா குஹேன’ என்று சொல்கிறார்.
புறம் 58- பலராமனின் பனைக்கொடியைக் குறிக்கும், தொல்காப்பியமும் பனைக் கொடியைக் குறிப்பிடுகிறது.
ஆக கொடியையும் வாகனத்தையும் மாறி மாறி ஒரே கடவுளருக்கு தமிழ் ,சம்ஸ்கிருத இலக்கியங்கள் பகர்வதாலேயே கொடியிலிருந்து வாகனம் தோன்றியதாக நான் கூறினேன்.
பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் வாகனம் பற்றிய மேலும் பல சுவையான கதைகளைக் கூறுகின்றன. திரு ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் துர்க்கைக்கு மான் வாகனம் இருப்பதை ‘கலையதூர்தி’ என்ற சொல்லால் விளக்குகிறார்.
“திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும்”– (பதிகம் 921, இரண்டாம் திருமுறை)
xxx
வேதத்தில் பல மிருகங்கள் குறிப்பிடப்படுகின்றன. புராண இதிகாசங்களில் வாகனங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் ஒரு முத்திரையில் யானை மீது ஒரு ஆணோ பெண்ணோ நிற்கும் காட்சி இருக்கிறது. இந்து வாகனங்கள் உலகம் முழுதும் இருந்ததற்கான சான்றுகள் இதோ:
எகிப்தில் துதன்காமுன் (கி.மு. 1333) என்ற மன்னனை கருஞ்சிறுத்தை மீது நிற்பதாகக் காட்டியுள்ளனர். எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள்) இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவனுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்து இந்துப் பண்பாட்டில் இருந்த தொடர்பு இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். மிட்டன்னி (சிரியா/துருக்கி/இராக் பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள்) மன்னர் தசரதன், தன் பெண்களை எகிப்திய மன்னனுக்கு மணம் முத்துவிட்டு எழுதிய கடிதங்கள் இன்றும் எகிப்தில் உள்ளன. துதன்காமுனுக்குப் பின் சேதி என்ற மன்னர் ஓவியங்களிலும் வாகனத்தைப் பார்க்கலாம்.
இந்துக் கடவுள்களில் துர்க்கா தேவி, அய்யப்பன், புத்த மதத்தில் பத்மசம்பவர் ஆகியோர் புலி வாகனத்தில் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கின்றனர்.
சிம்ம வாகனம்
வாகனங்களில் மிகவும் பழைய வாகனம் சிம்ம வாகனம். இன்றும் துர்கா தேவியின் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தேவி, காளி வழிபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் சிம்ம வாகனம் இருக்கிறது.
கதேஸ் என்று சிரியா நாட்டிலும் ஹதோர் என்று எகிப்திலும் வழிபடப்பட்ட தேவியின் வாகனம் சிங்கம். நிர்வாணமாக நிற்கும் இந்தக் கடவுளின் ஒரு கையில் பாம்பு இருக்கும். இனவிருத்திக்கான தேவதை.ஹீப்ருக்கள் வணங்கிய லிலித் என்ற தேவதை இரண்டு சிங்கங்களின் மீது நிற்பதாகக் காட்டப்படுகிறது. லிலித், முதல் மனிதன் ஆன ஆதாமின் மற்றொரு மனைவி. ஜில்காமேஷ் கதையிலும் லிலித் வருகிறாள். அவர் தாக்கியவுடன் லிலித் பாலைவனத்துக்குள் ஓடியதாக கதை.
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று அசீரிய காதல்-போர் அதி தேவதையான இஷ்டாரையும் சிம்ம வாகினியாகக் காட்டுகிறது.
கி.மு 133 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழிலிகாயாவில் அரின்னா, சுர்ருமா ஆகிய தெய்வங்களும் சிம்ம வாகனத்தில் நிற்கின்றனர்.
காளை வாகனம்
காளையை இந்திரனுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் உவமையாகக் கூறுவதை வேதத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் காளையை சிவனுக்கு வாகனமாக்கினர்.5500 ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் ஒருகாளை மீது தெய்வம் உட்காரும் ஆசனம் போடப்பட்டிருக்கிறது
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று புயலுக்கு அதிபதியான பாபிலோனிய அதாத் என்னும் கடவுளை காளை வாகனத்தில் நிற்கும்படி செதுக்கியுள்ளது. அதாத் இந்திரன் போல கையில் வஜ்ராயுத்தை தாங்குகிறார்.
இந்திய வாகனங்களுக்கும் முற்கால வெளிநாட்டு வாகனங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அந்த கடவுள்கள் வாகனங்கள் மீது நிற்பார்கள். இந்துக் கடவுளோவெனில் வாகனத்தில் அமந்திருப்பார்கள்.
பாபா இயாகா என்ற ஸ்லாவ் இனக் கடவுள் பன்றியின் மீது பயணம் செய்கிறார்.
இதோ முக்கிய வாகனங்களின் பட்டியல் :
1.ஸ்ரீ மஹா கணபதி—மூஞ்சுறு Ganesh/Vinayaka=Mouse
2.வேல் முருகன் —மயில் Kartikeya/Skanda/Murugan–Peacock
3.சிவ பெருமான் காளை, நந்தி Shiva=Bull/ Nandhi
4.ராஜ ராஜேஸ்வரி—சிம்மம் Raja Rajeswari= Lion
5.மஹா விஷ்ணு— கருடன் Vishnu= Garuda/Eagle
6.பைரவர்— நாய் Bhairava=Dog
7.சாஸ்தா—குதிரை Sastha= Horse
8.அய்யப்பன்— புலி Ayyappa= Tiger
9.சனைச்சரன்–காகம் Sani/Saturn= Crow
10.கல்கி—- குதிரை Kalki Avatar=Horse
11.இந்திரன்—ஐராவதம் யானை Indra= Airavata/ Elephant
12.லெட்சுமி—செந்தாமரை, ஆந்தை Lakshmi= Red Lotus, Owl
அசிதாங்க பைரவர் – அன்ன வாகனம் (Swan)ருரு பைரவர் – காளை வாகனம் (Bull / Vrushabha)சண்ட பைரவர் – மயில் வாகனம் (Peacock)குரோத பைரவர் – கருட வாகனம் (Garuda)உன்மத்த பைரவர் – குதிரை வாகனம் (Horse)கபால பைரவர் – யானை வாகனம் (Elephant)பீஷண பைரவர் (Bitchana) – பேய் / பிரேத வாகனம் (Pretha) (சில குறிப்புகளில் சிம்ம வாகனம் என்றும் கூறacknowledgeப்படுகிறது) சம்ஹார பைரவர் – நாய் வாகனம் (Dog / Swana)
Please read my other articles on Vahanas in my blogs:
Iraq: 7 Gods Procession on Vahanas
Deer Chariot: Rig Veda to Santa Claus
Hindu Vahanas around the World
Vahanas in Kalidasa and Tamil Literature
உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்
வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?
எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?
Who Rides What Vahanas?
***
வாமன அவதாரம்
திருக்குறளிலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் 2000 ஆண்டுகளாகப் பாடப்பட்ட வாமன அவதாரம் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் ஆகும்; வாமன என்றால் குள்ளம் குட்டை; அவரே மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் தானம் கேட்டு ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரமன் ஆனார் . மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்க அவர் செய்த யாகத்தின்போது குள்ள பிராமணச் சிறுவனாக வந்து மூன்றே அடி மண் கேட்டபோது அந்த அசுர சக்கரவர்த்திக்கு ஆசிரியராக இருந்த பிராமண ஆசிரியர் சுக்ராச்சார்யார் அவரை எச்சகரித்தார்; அதையும் மீறி மஹாபலி தருகிறேன் என்று வாக்கு கொடுத்த போது, வானத்தையும் பூமியையும் இரண்டே அடிகளால் அளந்த வாமனன், முன்றாவது அடி எங்கே என்று கேட்டவுடன் , வந்தவர் விஷ்ணு என்றுஅறிந்து என் தலை மீது மூன்றாவது அடியை வையுங்கள் என்று காட்டினான் . அதன் மூலம் அவரை பாதாள உலகத்துக்கு அனுப்பிய விஷ்ணு , உனது பணிவு காரணமாக ஒவ்வொரு ஆண்டு ம் என்னுடைய திருவோண நட்சத்திரத்தன்று இந்த பூமிக்கு வா என்று ஆசீர்வதித்தார் . இப்பொழுது கேரளத்தில் மட்டும் அந்த ஓண விழாவைப் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள்.
வாமன (वामन).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற, உலகத்தின் முதல் இலக்கண நூலான அஷ்டாத்யாயிக்கு பதஞ்சலிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ப்பின்னர் வாமனர் என்பவரும் ஜயாதித்ய जयादित्य (jayāditya). என்பவரும் உரை எழுதினார்கள்; அதற்கு காசிகா என்று பெயர்; இருவர் எழுதிய இந்த பாஷ்யத்தில் வாமனர் எழுதிய பகுதி எது என்று சொல்ல முடியாது இவர்களைத் தவிர காஷ்மீரில் ஒரு வாமனர் பத்தாம் நூற்றாண்டில் சில நூல்களை எழுதினார்.
***
வாமாசாரம்
சிவனின் வாம / இடது பாகத்தில் இருப்பவள் சக்தி/ பார்வதி/ உமை; அவளை தாந்திர முறைகளில் வழிபடுவது வாமாசாரம் எனப்படும்; இதைப் பின்பற்றுவோர் மது, மாது, மாமிசம் என்பதையும் வழிபாட்டு முறைகளில் பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெறுவார்கள் இவையல்லாமல் யாக யக்ஞங்களை செய்தோ அல்லது பக்தி முறையில் பூஜைகளை செய்தோ வழிபடும் முறை பழைய சம்பிரதாய முறை ஆகும் ; அவர்களை வாமாசாரத்தை ஆதரிப்பதில்லை ; பிரிட்டிஷ் நீதிபதி Arthur Avalon (the pen name of British high court judge Sir John Woodroffe) ஆர்தர் ஆவலோன் இந்த முறை பற்றியும் இதன் பின்னுள்ள தத் துவங்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் பிரபலமான நூல்கள் ஆகும்.
***
வரருசி
Vararuci (वररुचि).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற இலக்கண நூலுக்கு வார்த்திகா என்னும் குறிப்புகளை எழுதியவர் வரருசி; இவரை காத்யாயனர் என்றும் சொல்லுவார்கள். இவர் சுமார் 4000 ‘அப்டேட்’களை செய்தார்; அதாவது பாணினி எழுதியதைத் திருத்தி, தனது காலத்தில் வழங்கிய மொழியைக் காட்டினார் . இவர் விக்ரமாதித்தன் அவையில் இருந்த நவரத்தினங்களில் ஒருவர்.
***
வார்த்திக
Vārtika (वार्तिक).—பாணினியின் அஷ்டாத்யாயீ நூலுக்கு வரருசி எழுதிய திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இவை ; பிரபல சம்ஸ்க்ருத அறிஞர் தியோடர் கோல்ட்ஸ்டாக்கர் prominent 19th-century German Sanskrit scholar Theodor Goldstücker, மொழியியல் வல்லுநர் ஆவார்; அவருடைய கணக்குப்படி பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்; அவருக்கு 200 ஆழ்ந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வரருசி வாழந்தார் என்பதாகும் . ஏனெனில் ஒரிஜினல் நூலில் 4000 மாற்றங்களை செய்வதானால் பாணினிக்கும் இவருக்கும் பல நூற்றாண்டு இடை வெளி இருக்க வேண்டும் தமிழிலும் தொல்காப்பியத்து க்கு அப்டேட் குறிப்புகள் எழுதிய பவணந்தி சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மாற்றங்களைச் செய்தார் .இவருக்குப்பின்னர் மஹாபாஷ்யம் எழுதியா பதஞ்சலி முனிவர் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை உறுதியான வரலாறு காட்டுகிறது; இந்த மூ வரையும் வணங்கும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதம் பயில்வோர் சொல்லும் ஸ்லோகம்
வாக்கியகாரஞ் வரருசிஞ் பாஷ்யகாரஞ் பதஞ்சலிம் |
பாணினிஞ் சூத்ரகாரஞ் ச ப்ரணதோஸ்மி முனித்ரயம் ||
சுலோகத்தின் பொருள்:வாக்யகாரம் வரருசிம்: பாணினியின் சூத்திரங்களுக்கு ‘வார்த்திகம்’ என்னும் விளக்க வாக்கியங்களை எழுதிய வரருசி (காத்யாயனர்).பாஷ்யகாரம் பதஞ்சலிம்: அந்த சூத்திரங்களுக்கும் வார்த்திகங்களுக்கும் ‘மஹாபாஷ்யம்’ என்னும் விரிவுரை எழுதிய பதஞ்சலி முனிவர்.பாணினிம் சூத்ரகாரம் ச: சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையான ‘அஷ்டாத்யாயி’ சூத்திரங்களை இயற்றிய பாணினி மகரிஷி.ப்ரணதோஸ்மி முனித்ரயம்: சமஸ்கிருத இலக்கணத்தை நமக்கு அருளிய இந்த மூன்று சிறந்த முனிவர்களையும் (முனித்ரயம்) நான் வணங்குகிறேன்.
***
வருணன்
வேதகால முக்கியக்கடவுளான வருணன் தமிழர்களின் நெய்தல் நிலக்கடவுள் என்று தொல்காப்பியம் கூறுகிறது பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா வர்ண பகவானை புகழ்கிறது. துருக்கி நாட்டில் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கியூனிபார்ம் களிமண் கல்வெட்டில் வருணன் புகழப்பட்டுள்ளான்; பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியா வந்தன கிரியைகளில் வருணனை பயபக்தியுடன் வணங்கித் துதிக்கின்றனர் .
ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.
மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.
வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்
தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.
தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)
‘’ மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’
தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.
பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:
‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலிந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும் பரதவர்
பனிதழை மா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா
துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)
பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.
வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.
மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.
வள்ளுவன் போற்றிய வருணன்
இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :
‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)
‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)
பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;
மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.
மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.
தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?
ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing) ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?
இதோ கணக்கு
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப் பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள் அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)
சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை
ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது
600x 16 மணி = 9600 முறை
உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..
7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700
இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.
உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .
நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை
9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)
இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!
இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .
பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று
துருக்கி- சிரியா எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!
இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–
1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்
2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!
3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.
நாலாவது மந்திரம்
4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )
ஐந்தாவது மந்திரம்
வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!
ஆறாவது மந்திரம்
6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக் கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே
ஏழாவது மந்திரம் 7.
ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய் சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்
எட்டாவது மந்திரம்
8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய் நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்
ஒன்பதா வது மந்திரம்
9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.
ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான் : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.
xxx
லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்
இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை
1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான். இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .
2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.
3. வருணன் இன்விஸிபிள் மேன் ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்; டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று
இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?
பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.
மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது
நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.
பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)
மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..
கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.
–சுபம்—–
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-116 ; இந்து மத கலைச்சொல் அகராதி-116, வசிஷ்டர், வாகனங்கள், வருணன் , வரருசி வார்த்திக , வாமன
பிராமணர்கள் ஆராய்ச்சிக்கு பல்லவர் செப்பேடுகளில் என்ன உள்ளது ?
46
வரலாற்று அறிஞர்கள் ஆராய பல்லவர் செப்பேடுகளில் இன்னும் என்ன இருக்கிறது ?
47
ஊர்ப்பெயர்களை ஆராய்வோருக்கு பல்லவர் செப்பேடுகளில் என்ன இருக்கிறது ?
48
கூரம் செப்பேடுகளில் பரமேச்வர வர்மனை எந்த நான்கு புராண இதிஹாச புருஷர்களுடன் ஒப்பிடுகிறார்கள்?
49
குதிரைகள் யானைகள் பெயர் பற்றிக் கிடைக்கும் விநோதத் துகள்கள் என்ன ?
50
பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை எவை ?
.****
விடைகள்
41.க்மேர்
சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்யன் பல்லவர்களை வென்று தென் இந்தியா முழுமைக்கும் தனி அரசனாக விளங்கினான். கி.பி. (CE) 692 ஆம் ஆண்டில் சீனாவுக்கும் தூதுவரை அனுப்பினான். அப்போது அவன் தென்னிந்திய ராஜ்யத்தின் அதிபதி என்று குறிக்கப்பெற்றிருக்கிறான் அந்த வெற்றியின் காரணமாக இந்தோ சீனாவிலுள்ள காம்போஜமும் அவன் ஆளுகைக்குட்பட்டது . பல்லவர்களை வென்று பிறரால் அடக்க முடியாதவர்களை வென்றதால் காம்போஜ நாட்டு பெண்கள் ஆடிப்பாடினர் என்ற செய்தி CE.693 ஆம் ஆண்டு கோலாப்பூர்ச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது. ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் கடல்கடந்து அடைந்த வெற்றிகளை இபோதுதான் கொண்டாடுகிறோம்; ஆயினும் அவர்களுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள் வியட்நாம் முதல் இந்தோனேஷியா வரை சென்ற தகவல்கள் பல்லவர் செப்பேடுகளில் உள்ளன. போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த மூல வர்மன், பூரண வர்மன் ஆகியோர் பெயர்கள் , பல்லவர் பெயர்களைப் போல உள்ளன . இவர்கள் நான்காம் நூற் றாண்டுகளைச் சேர்ந்தவர்கள் ; இரண்டு கேள்விகள் நம் மனதில் எழும் ; எதற்காக அவன் சீனாவுக்கு தூது அனுப்பினான் ; எதற்காக கமேர (இப்போதும் கம்போடியா மக்கள் தங்களை க்மே ர் இன மக்கள் என்றே சொல்கிறார்கள் ) நாட்டுப் பெண்கள் டான்ஸ் ஆடிக் கொண்டாடினார்கள் என்று.
கம்போடியாவில் சீனர்கள் செல்வாக்கும் இருந்தது. அதுவரை அந்த இடம் பல்லவர்கள் ஆட்சியில் இருந்தது! அவ்வளவு கம்போடிய மன்னர்களும் தன்னை வர்மன் என்றே அழைத்துக் கொண்டனர்; பல்லவர்களும் கம்போடியா மன்னர்களும் மட்டுமே வர்மன் பட்டத்தை கடைசி வரை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டனர் இதற்கெல்லாம் பின்னர்தான் உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் கட்டப்பட்டது .
அஸ்வத்தாமன் முதல் மஹேந்திர பல்லவன் வரையுள்ள இடைவெளியை சாளுக்கிய, கங்க, கம்போடிய , இந்தோ னேஷிய மன்னர்கள் மூலம் நிரப்ப முடியும். ஏனெனில் சம்பு என்ற மூதாதையரைக் பல்லவ சாசனங்கள் குறிப்பிடும் கின்றன இதை கம்பு என்று கம்போடிய சாசனங்கள் சொல்லி அவர்கள்தான் மூதாதையர் என்கின்றனர் . இதை வெள்ளைக்காரர்களும் ஆராய்ந்து எழுதியுள்ளனர். இந்தியாவுக்கு வெளியே சீனர் போன்ற முகமுள்ள யாரைக் கல்யாணம் செய்து கொண்டாலும் அவர்களை நாக கன்னிகை என்று குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும்; அவர்களுக்கு மங்கோலாய்ட்/MONGOLOID முகம் இருக்கும் . கடல்கடந்து செல்லும் பொழுது அதை பாதாள லோகம் என்று அழைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . அவர்கள் தமிழர்கள் அல்ல.
Missing Pallavas are in Cambodia?
Scholar George Coedes refers to a 10th century inscription of a Cambodian dynastic legend in which the hermit Kambu Swayambhuva and the celestial nymph Mera unite and establish the Cambodian Solar royal dynasty (Kambu-Mera), that begins with the Chenla ruler Srutavarman and his son Sreshthavarman. Coedes suggests that the Kambu Swayambhuva legend has its origins in southern India, as a version of the Kanchi Pallava dynasty creation myth.
Claimed to be the eponym of the Kambojas, Kambu Swayambhuva is characterized as a Brahmin chieftain, married to Mera, who was given to him by Lord Shiva.
The name Kambu is stated to be a corruption of the standard Sanskrit Kamboja.[6] English Scholars such as C. Lassen, S. Levi, Michael Witzel, J. Charpentier, A. Hoffman, A. B. Keith, A. A. Macdonell, H. W. Bailey and many others have traced the ethnic name Kamboja in the royal name Kambujadeshah (कम्बुजदेशः) in the Old Persian Inscriptions Parskar Gryhamsutram spells the usual Kamboja as Kambuja. The Markandeya Purana (8.1-6) as well as in Srimad Devi Bhagawatam (5.28.1-12) etc. refers to the Kambojas as Kambu clan. King Ashoka’s Rock Edicts V & XIII located at Peshawar write Kamboj as Kamboy or Kambo.
Numerous Muslim writings of medieval era spell the Kamboj clan name as Kambu as well as Kambo. Obviously, these Kambu/Kambo terms are the corrupted forms of Kambuj/Kamboj and relate to the Kamboja of ancient Sanskrit and Pali texts and Inscriptions.[original research?] This Sanskrit Kamboja appears as K.b.u.ji.i.y, Kabujiya or perhaps Kabaujiya/Kaboujiya and Kambujiya or perhaps Kambaujiya ( OR with -n- in place of -m- as Kanbujiya or Kanbaujiya) of Old Persian inscriptions, and Cambyses of Greek writings. The same name appears as C-n-b-n-z-y in Aramaic, Kambuzia in Assyrian, Kambythet in Egyptian, Kam-bu-zi-ya or Ka-am-bu-zi-ya in Akkadian, Kan-bu-zi-ia or Kan-bu-si-ya in Elamite, and Kanpuziya in the Susan language.[8]
***
42..பல்லவர் செப்பேடுகளில் உள்ள புராண மன்னர்களை மறந்துவிட்டு வரலாற்றுச் சான்று வேண்டுமானால் முதல் சான்று சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டில் (பிரயாகை பிரசஸ்தி) கிடைக்கிறது . அவன் காஞ்சீபுர விஷ்ணு கோபனைத் தோற்கடித்து சிறைப்பிடித்து , பின்னர் கிரஹண மோக்ஷ அனுக்ரஹா என்ற கொள்கையின் படி அவனை விடுதலை செய்து கப்பம் பெற்றான் என்று ஹரிசேனன் எழுதிய சாசனம் கூறுகிறது . சமுத்திர குப்தன் கி பி 335 CEல் அரியாசனம் ஏறினான் ; கேரளத்தில் மாந்தரஞ் சென்றால் இரும்பொறையையும் இவன் தோற்கடித்தான் ; சம்ஸ்க்ருதத்தில் மந்த ராஜா என்று எழுதப்பட்டுள்ளது .ஆக 1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவன் காஞ்சீபுரத்தில் ஆட்சி செய்ததை அறிகிறோம் ; கல்வெட்டு செய்திகளை யாரும் மறுப்பதில்லை.
***
43.உரகபுரம்- காளிதாசன் காவியமான ராகு வம்சத்தில் முதல் தடவையாக பாண்டியர்- அகஸ்தியர் தொடர்பு எழுதப்பட்டுள்ளது இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டது ; இதை விளக்கிய வட நாட்டு ஆசிரியர்கள் இதை உறையூரோ நாகப்பட்டினமோ என்றெல்லாம் எண்ணி கேள்விக்குறியுடன் முடித்து விட்டனர் அவர்களுக்கு புரா நானூற்றில் பேராளவாயர் என்று அப்புலவர் இருப்பது தெரியாது ஆலவாய் என்பது உரக்க புறம் ஆதாவது பாம்பு ஊர்.
(திருவிளையாடல் புராண செய்தி: உக்கிரகுமாரன் 96 அசுவமேதம் செய்ததாக பரஞ்சோதி சொல்வதால் இவனை முதுகுடுமிப்பெரு வழுதியுடன் ஒப்பிடலாம். ஏனெனில் காளிதாசனும் ரகுவம்சத்தில் சுயம்வர சபையில் பாண்டியமன்னனை அறிமுகப்படுத்தும்போது இவன் அகஸ்திய முனிவருடன் தொடர்புடையவன் என்றும் யாகத்தின் அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த துணியுடையவன் என்றும் கூறுகிறாள் தோழி.
இதிலிருந்தது சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனுக்கும் பாண்டியன் யாகம் செய்த செய்தி பிரபலமானது தெரிகிறது ;மேலும் ஆலவாய் (உரகபுரம்) என்பதையும் குறிப்பிடுகிறான் காளிதாசன் !)
இதே போல முதலாம் பரமேஸ்வர வர்மன் பற்றிய கூரம், உன்னகுரவய பாளையம் செப்பேடுகளில் உரகபுரம் வருகிறது ; உதயேந்திரம் செப்பேடுகளில் சாளுக்கிய விக்ரமாதித்தன் தோற்று கந்தைத் துணியுடன் ஒடிய தகவல் கிடை க்கிறது. சாளுக்கிய விக்ரமாதித்தன் கி பி 674 ஆம் ஆண்டில் உரகபுரத்தில் தங்கியிருந்தான் என்ற செய்தியை விளக்கிய உரைகள் இதை கும்பகோணம் அருகிலுள்ள பாம்பூர் என்னும் திருநாகேஸ்வர க்ஷேத்திரம் என்று உறுதிசெய்துள்ளது ; இதிலிருந்து பாம்புசம்பந்தப்பட்ட எந்த ஊரையும் உரகபுரம் என்று அழைக்கின்றனர் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது; உரகம் என்றால் பாம்பு; மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் வரக்காரணமும் ஒரு பாம்புதான் ; இனி காளிதாசர பற்றிய பழைய புஸ்தகங்களைத் திருத்தி எழுதுவது நமது கடமை; பாண்டியனுக்கும் பாம்புக்கும் சம்பந்தமுள்ள ஒரே இடம் மதுரைதான்
****
44.பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்கத் தமிழ் நூலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் சோழ அரசன் ஒருவன் நாகலோகம் சென்று நாக கன்னிகையை மணந்தான் என்றும் பின்னர் அந்தப்பெண்ணவர்களுக்குப் பிறந்த குழந்தையைக் கப்பலில் அனுப்பியபோது அடையாளத்துக்கு கழுத்தில் தொண்டைக்கொடியைக் கட்டி அனுப்பினாள் என்றும் எழுதியுள்ளார். தொண்டைக்கொடியுடன் வந்த வம்சம் தொண்டைமான் வம்சம் என்றும் திரைகடல் மூலம் வந்ததால் திரையன் என்றும் அவர்களை அழைக்கிறோம் . அவர்கள் ஆண்ட பூமி தொண்டை மண்டலம் ஆகும். இதை நச்சினார்க்கினியர் எழுதுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே மஹேந்திர வர்மன் தனது தளவானூர்க் குகைக் கல்வெட்டில் தொண்டை மாலை அணிந்தவன் என்று வருணி க்கப்பட்டுள்ளான் . ஆக நச்சினார்க்கினியர் சொல்வது உண்மையே. நாக கன்னிகையை மணந்த சோழன் யார் என்று தெரியாது; பிற்கால தமிழ்க் காப்பியமான மணி மேகலையும் இது போல் ஒரு செய்தியைக் கூறுகிறது .
***
45.பிராமணர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு பல்லவர் செப்பேடு களில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தண்டந்த் தோட்டம் சாசனத்தில் மட்டுமே 214 பிராமணர்களின் பெயர்கள், ஊர்கள், கோத்ரங்கள், சூத்திரங்கள் காணப்படுகின்றன. பல பெயர்களை இன்று யாரும் சூட்டுவதில்லை . துரோணர் பெயர் மட்டும் பலரிடத்தில் காணப்படுவதால் பல்லவ மன்னர்கள் அஸ்வத்தாமன்- நாககன்னிகை வழிவந்த பிராமணர்கள்தான் என்பது உறுதியாகிறது . புள்ளூர்ச் செப்பேடுகளில் மேலும் 204 பிராமணர்களின் முழு பட்டியல் வருகிறது .இவை தவிர ஒவ்வொரு செப்பேட்டிலும் பிராமணர் பற்றிய விஷயங்கள் உள்ளன . இவைகளை ஆராய்ந்து டாக்டர் பட்டமே பெறலாம்!
***
46.பல்லவர்கள் 600 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ததாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காட்டுகின்றன. ஆயினும் 12 பல்லவர்களின் ஆட்சிக்காலம்தான் பட்டியலில் உள்ளது. உலக வரலாற்று நிபுணர்கள் ஒப்புக்கொண்ட ஒரு மன்னனுக்கு 25 ஆண்டுதான் என்ற கணக்குப்படி பார்த்தால் இது 300 ஆண்டுஆட்சியை மட்டுமே காட்டும்! மீதி 300 ஆண்டுகளுக்கு முன்னோர்கள் பட்டியலில் பெயர்கள் உள்ளன . அவைகளை குப்தர் காலம் முதல் உள்ள கல்வெட்டு தாமிர பட்டயங்கள் மூலம் வரிசைப்படுத்தலாம் . பின்னர் ஆண்டுகளையும் யூகிக்கலாம் . அஸ்வத்தாமன் – நாக கன்னிகை மகன்தான் முதல் பல்லவன் என்பதை ஒப்புக்கொண்டால் மேலும் 3000 ஆண்டு வரலாற்றினை ஆராய வேண்டிவரும்! அவர்கள் இரானியர்களா அல்லது யானைத் தலை மகுடம் பூண்ட இந்தோ கிரேக்க மன்னர்களா என்றும் ஆராய வேண்டும் . ஒரு பல்லவ மன்னனுக்கு யானைத் தலைமுடி கிரீடம் வந்தவுடன் எல்லோரும் ஆசாரியப்பட்டு கேள்வி எழுப்பியது சாசனங்களில் உள்ளது இது தவிர வைகுண்டப்பெருமாள் கோவில் சிற்பங்களுக்கு சரியான விளக்கம் பெறவேண்டும் . சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ள, தமிழில் இல்லாத, விஷயங்களை சம்ஸ்க்ருத மொழி அறிஞர்கள் உதவியுடன் ஆராய வேண்டும். இந்த ஒரு ஆராய்ச்சியே பலருக்கு டாக்டர் பட்டம் கிடைக்க உதவும் . பல்லவர் செப்பேடுகள் என்னும் நூல் குறிப்பிடும் ஏராளமான பிற சாசனங்களை முதலில் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு பின்னர் ஆய்வினைத் துவங்க வேண்டும்.
***
47.பல்லவர் செப்பேடுகளில் சுமார் ஆயிரம் ஊர்களின் பெயர்கள் வருகின்றன . பல ஊர்ப்பெயர்கள் மீண்டும் மீண்டும் வந்திருக்கலாம் இவை தவிர நதிகள் தானம் செய்யப்பட்ட இடங்களும் வருகின்றன; பல ஊர்களின் பெயர்கள் இப்போது எப்படி மாறிவிட்டன என்பதை ஓரளவுக்கு பல்லவர் செப்பேடுகள் முப்பது நூல் விளக்குகிறது ஆயினும் நிறைய விஷயங்கள் கேள்விக்குறிகளாகவு ம் ஆச்சர்யக் குறிகளாகவுமே உள்ளன. தற்காலத் தலை முறை மறைந்துவிட்டால் விளக்கம் சொல்லக்கூட ஆட்கள் கிடைக்காது . தல புராணங்களிலிலும் பெரிய புராணத்திலும் திருமங்கை ஆழ்வார் பாடல்களும் வரும் விஷயங்கள் உதவி செய்யக்கூடும். அப்பர், சம்பந்தர் தரிசித்த தேவாரத் தலங்களும் மகேந்திரன் பல்லவர் கால ஊர்களே என்பதை நினைவிற்கொல வேண்டும்.
***
48.கூரம் செப்பேட்டில் பரமேஸ்வர வர்மனின் கழைப்பாடும் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் அவனை பரதன், சகரன் கர்ணன், யயாதி (உஷானஸ் கவி ) ஆகியோருடன் ஒப்பிடுகிறது
ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு
பரதன் போல எல்லாவற்றையும் அடக்கியவன் / ஸர்வ தமனன்; தன் பிள்ளையான அசமஞ்சசனைக் கைவிட்ட சகரன் போல அசமஞ்சசர்களைத் துறந்தவன்; அங்க தேசத்து அரசனான கர்ணன் போல அங்கங்களைக் கொண்டவன்; கவி குலத்தில் பிறந்த உஷனஸ் என்ற தன் மாமனாரான காவியனிடம் பிரியம் கொண்ட யயாதியைப்போல கவிகளிடம் பிரியம் கொண்டவன் .
(இதற்கு விளக்கம் சொல்லப்போனால் ஒரு புஸ்தகமே எழுதலாம் ! பிராமணர் வீடுகளில் மக்குப்பிள்ளைகளை தவறிழைப்பவர்களை அசமஞ்சன் என்றுதான் திட்டுவார்கள்; அங்க தேசம் என்ற சொல் கர்ணன் விஷயத்தில் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது அதாவது அங்க தேச மன்னன் கர்ணன் போல வாரி வழங்கும் கைகளைப் படைத்தவன்(அங்கம்); உஷனஸ் கவி ரிக்வேதத்திலும் பகவத் கீதையிலும் தொல்காப்பியர் பெயரிலும் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற சங்கப்புலவர் பெயரிலும் கவி, கவிதை, கவிஞர் காவியம் என்ற சொற் களில் இருப்பதையும் இதே பிளாக்கில் காணலாம்.)
***
49.ரிக்வேத சரமேயஸ் என்னும் நாய், மஹாபாரத அஸ்வத்தாமன் என்னும் யானை காரி, ஓரி என்னும் சங்க இலக்கிய குதிரைகளை இதே பிளாக் கட்டுரைகளில் கண்டோம்; இப்போது அந்தப் பட்டியலில் மேலும் மூன்று பெயர்களை சேர்க்கலாம் :-
.கூரம் செப்பேடுகளில் பரமேஸ்வர வர்மனின் யானை பெயர் மகிவாரணம் என்றும் குதிரையின் பெயர் அதிசயம் என்றும் வியப்பான செய்திகள் உள்ளன. சாளுக்கிய பூமியைப் பல்லவர்களிடமிருந்து மீட்ட விக்கிரமாதித்தனின் குதிரையின் பெயர் சித்ரகண்டம் (அழகிய கழுத்து) என்பதை அவனுடையய சாசனங்கள் கூறுகின்றன!
***
50.பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை :
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில அரிச்சுவடி வரிசையில் இப்பொழுது வி V என்னும் எழுத்தின் கீழுள்ள முக்கிய சொற்களைக் காண்போம் :
வாசஸ்பதி மிஸ்ரா (900-980 CE)
உலகத்தில் இலக்கிய அதிசயம் புரிந்தவர் வாசஸ்பதி மிஸ்ரா ஆவார் . தான் எழுதிய அத்தனை நூல்களையும் அவர் எழுதிய கால வரிசைக் கிராமத்தில் அவரே கொடுத்துள்ளார் ; எப்பொழுது ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! இந்திய தத்துவ முறைகளை பற்றி விளக்கியவர்களில் இவரே முதல்வர் ; இவர் ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர உரைக்கு உரை எழுதியவர் அந்த நூல் பாமதி என்ப்படும்; இவர் எழுதிய நூல்களில் இதுதான் புகழ்பெற்றது. இவர் பீஹார் மாநிலத்தின் மிதிலா பிராந்தியத்தைச் சேர்ந்தவர் ; அந்த பகுதியிலிருந்து வந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்றும் பெயர் .
வாசஸ்பதி மிஸ்ரா வாழ்ந்த நகரின் பெயர் வாசஸ்பதி; இவர் மனைவியின் பெயர் பாமதி . காலம் – பத்தாவது நூற்றாண்டு.
பாமதி பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)
மிதிலையைச் சேர்ந்த சிறந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு மிக விரிவானதொரு விளக்க உரையை (விவரணம்) எழுதத் தொடங்கினார்.அந்தத் தத்துவப் பணியில் அவர் தன்னை முற்றிலும் மறந்து, இரவும் பகலும் பல ஆண்டுகள் தீவிரமாக மூழ்கியிருந்தார். அவரது மனைவியான பாமதி, கணவரின் தியானத்திற்கும் எழுத்திற்கும் எந்தவித இடையூறும் நேராத வண்ணம், அவரிடமிருந்து எந்தவொரு உலகியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் பல வருடங்களாக அமைதியாகப் பணிவிடை செய்து வந்தார். அவளுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பதைக் கூட வாசஸ்பதி மிஸ்ரர் மறந்திருந்தார். நூல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட அன்று இரவு, விளக்கு வெளிச்சத்தில் தனக்கு எண்ணெய் ஊற்றி உதவிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து வியப்புடன், “நீ யார்?” என்று கேட்டார்.அவளோ எவ்வித வருத்தமும் இன்றி, “நான் உங்கள் மனைவி, என் பெயர் பாமதி” என்று கூறினாள். )தனது ஞானத் தேடலால் மனைவியின் வாழ்வையும் இளமையையும் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வாசஸ்பதி மிஸ்ரர் வருந்தினார். அவளது அசாத்தியமான தியாகத்திற்கும், எதிர்பார்ப்பற்ற சேவைக்கும் கைமாறாக, தான் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து எழுதிய அந்த உன்னத வேதாந்த நூலுக்கு ‘பாமதி’ என்றே பெயரிட்டார். இந்த நூல் உலகம் உள்ளவரை அவளது பெயரை நிலைநிறுத்தும் என்று ஆசீர்வதித்தார். தத்துவ விளக்கம் (அவச்சேத வாதம்)’தெய்வத்தின் குரல்’ ஐந்தாம் பகுதியில், மஹா பெரியவா அத்வைதக் கோட்பாட்டை விளக்கும் போது, அத்வைதத்தில் உள்ள இரு முக்கியப் பிரிவுகளான விவரண பிரஸ்தானம் (VivaraNa Prasthaanam) மற்றும் பாமதி பிரஸ்தானம் (Bhamati Prasthaanam) ஆகியவற்றின் தத்துவ வேறுபாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்: பிம்ப-பிரதிபிம்ப வாதம் (விவரண முறை): சூரியனின் ஒளி தண்ணீர்த் துளிகளில் பிரதிபலிப்பதைப் போல, ஒரே பரமாத்மா மாயையின் காரணமாகப் பல ஜீவாத்மாக்களாகத் தெரிகிறது என்பது விவரணப் பிரிவின் வாதம். [அவச்சேத வாதம் (பாமதி முறை): பாமதி பிரஸ்தானம் ‘அவச்சேத வாதம்’ (Avachchinna / Avachcheda Vaadam) எனப்படும் தத்துவத்தைக் கையாள்கிறது. ‘அவச்சேத’ என்றால் எல்லைகளுக்கு உட்பட்டது என்று பொருள். மஹா பெரியவா / காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)
இதற்கு ஒரு எளிய உதாரணம் தருவார்: ஆகாயம் (வெட்டவெளி) என்பது எங்கும் நிறைந்தது. நாம் ஒரு திறந்தவெளியில் பல வெற்றுப் பானைகளை வைத்தால், ஒவ்வொரு பானைக்குள்ளும் ஆகாயம் இருக்கிறது. பானைக்குள் இருக்கும் ஆகாயத்தை ‘கடா ஆகாயம்’ (பானை ஆகாயம்) என்றும், வெளியில் இருக்கும் எல்லையற்ற ஆகாயத்தை ‘மஹா ஆகாயம்’ என்றும் சொல்கிறோம்.உண்மையில் ஆகாயம் இரண்டாகப் பிரியவில்லை. பானை என்ற எல்லை (உபாதி) இருக்கும் வரைதான் உள்ளே, வெளியே என்ற பேதம் தெரிகிறது. பானை உடைந்ததும் உள்ளே இருந்த ஆகாயம் மஹா ஆகாயத்தோடு ஒன்றிவிடுகிறது.இதேபோல, மனித உடலும் மனமும் பானையைப் போன்ற எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுக் காணும் ஆன்மாவே ‘ஜீவாத்மா’. அறியாமை நீங்கி இந்த எல்லைகள் உடையும் போது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத உண்மை புலப்படும் என்று பாமதி பிரஸ்தானம் விளக்குவதாக மஹா பெரியவா /காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவ உலகிற்கு வாசஸ்பதி மிஸ்ரரின் ‘பாமதி’ உரை ஒரு மிகச்சிறந்த கொடை என்றும், இல்லறத்தில் இருந்துகொண்டே தியாக உணர்வோடு ஆன்மீகப் பணிக்குத் துணைநின்ற பாமதியின் பெருமைக்கு அது ஒரு சான்று என்றும் காஞ்சி ஆச்சார்யார் போற்றியுள்ளார்.
வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய நூல்கள்
1) நியாய கனிகா : This is a commentary on Vidhiviveka, a Bhāṭṭa Mīmāṃsā work of Maṇḍanamiśra.
2) நியாயசூத்ரோத்தாரா : This is a compilation of the Nyāyasūtra fixing the readings of the text of the sūtras.
3)நியாய சூஸிநிபந்த : This arranges the same Nyāyasūtra.
4) நியாயவார்த்திக்க தாத்பர்ய டீகா : This work also known by its shorter and more popular name, ‘tātparyaṭīkā’, is an extensive commentary on the Nyāyavārtikā of Uddyotakara Bhāradvāja.
5) தத்வஷமீக்க்ஷ : It is generally believed to be a commentary on the Brahmasiddhi of Maṇḍanamiśra. But it has been recently suggested that this is also an independent Mīmāṃsa treatise of Vācaspati Miśra. This work is lost.
6) தத்வ பிந்து : This is also an independent Bhāṭṭa Mīmāṃsa treatise of Vācaspati Miśra.
7) சாணக்யா தத்வ கெளமுதி : This work, known briefly as Tattvakaumudī, is a brilliant commentary on the famous Sāṅkhyakārikā of Īśvarakṛṣṇa.
8) யோக தத்வ வைசாரதி known also by its shorter title Tattvavaiśāradī: This work is a commentary on the Pātañjalayogasūtrabhāṣya of Vyāsa.
9) பாமதி: The full title of this work is perhaps Śārīrakabhāṣya bhāmatī. This is the earliest known exhaustive and complete commentary on the Brahmasūtraśāṅkara-bhāṣya.
It is interesting to note that in a verse in the epilogue of the Bhāmatī Vācaspati Miśra gives a full list of his own works arranged exactly in the above order suggested by the modern researchers. In the Indian tradition Vācaspati Miśra is again perhaps the first writer to give a complete list of his works, that too in a chronological order.
***
வைதேஹி – சீதாதேவியின் பெயர்; ஜனகர் ஆண்ட விதேஹ நாட்டிலிருந்து வந்தவள் என்று பொருள்; விதேஹ என்றால் தேகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆத்ம விடுதலையைப் பற்றி தியானம் செய்பவர் என்று பொருள் . மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் மதி ஜனகன் மதி என்று பாரதியார் புகழந்ததிலிருந்து இதை அறியலாம்.
***
வைகுண்டம்
விஷ்ணுவின் இருப்பிடம் ; லெட்சுமி தேவியுடன் வாசம் செய்யும் இடம் ; வானவியல் ரீதியில் இது மகர ராசியில் உள்ளது . சம்ஸ்க்ருத மொழியில் இதற்கு கவலை இல்லாத இடம் என்று பொருள்; வைகுண்டத்தை அடைவோருக்கு நித்திய ஆநந்தம், பேரானந்தம் இருக்கும்; பிறப்பு இறப்பு என்ற கவலையே இல்லை
இந்து சமய நூல்களில் பரமபதம், விஷ்ணு லோகம் என்றும் சொல்லுவார்கள் ;அங்கே தங்க மயமான கட்டிடங்களும் ரத்தின கற்களாளான கட்டிடங்களும் தொங்கும் தோட்டங்களும் இருப்பதாக புராணங்கள் வருணிக்கின்றன .
வைகுண்ட ஏகாதசி
மாதம் தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி உண்ணாவிரத நாட்களில் மிகவும் சிறப்புடையது டிசம்பர் மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகும்; இதற்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இது வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசியில் நாள் முழுதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் விஷ்ணுவைப் பற்றி கதைகளை அல்லது பாடல்களைக் கேட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறந்தவுடன் உள்ளே சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம்; அவ்வாறு செய்தால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை (மோக்ஷம்/ முக்தி) பெற்று வைகுண்டத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
***
வாஜசநேயி
வாஜசநேயி சம்ஹிதை , நான்கு வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தின் (சுக்ல யஜுர் வேதம்) மந்திரத் தொகுப்பாகும். சூரிய பகவான் குதிரை (வாஜி) வடிவம் எடுத்து யக்ஞவல்கிய முனிவருக்கு இந்த வேதத்தை உபதேசித்ததால், இதற்கு ‘வாஜசநேயி சம்ஹிதை’ என்ற பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் ‘வாஜி’ என்றால் அன்னம் (உணவு) அல்லது குதிரை என்று பொருள். யக்ஞவல்கியர்: சூரிய தேவனை நோக்கித் தவம் புரிந்து, அவரிடமிருந்து நேரடியாகப் பெற்ற தூய்மையான வேதம் என்பதால் இது சுக்ல யஜுர் வேதம் (வெள்ளை யஜுர் வேதம்) என்றும் அழைக்கப்படுகிறது. வாஜசநேயி சம்ஹிதை இரண்டு முக்கிய கிளைகளாகப் (சாகாக்கள்) பிரிக்கப்பட்டுள்ளது: மத்யந்தின சாகா (Madhyandina Recension): வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதில் 40 அத்தியாயங்கள், 303 அனுவாகங்கள் மற்றும் 1975 மந்திரங்கள் உள்ளன.
காண்வ சாகா (Kanva Recension): தென்னிந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதிலும் 40 அத்தியாயங்கள் இருந்தாலும், 2086 மந்திரங்கள் உள்ளன. யாகங்கள் மற்றும் சடங்குகள்: தர்சபூர்ணமாஸம் (அமாவாசை, பௌர்ணமி யாகங்கள்), அக்னிஹோத்திரம், சோமயாகம், வாஜபேயம், அஸ்வமேதம் மற்றும் புருஷமேதம் போன்ற பல்வேறு வேத கால யாகங்களை நடத்துவதற்கான மந்திரங்கள் இதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஈசாவாஸ்ய உபநிடதம்: இந்த சம்ஹிதையின் இறுதி அத்தியாயமான 40-வது அத்தியாயம் உலகப் புகழ்பெற்ற ஈசாவாஸ்ய உபநிடதம் ஆகும். இது ஆன்மா, தியாகம் மற்றும் பிரம்ம ஞானத்தைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான வேதாந்தப் பகுதியாகும்.
ருத்ராஷ்டாத்யாயி: சிவபெருமானை வழிபடும் புகழ்பெற்ற ‘ஸ்ரீ ருத்ரம்’ (நமகம், சமகம்) மந்திரங்கள் இந்த சம்ஹிதையின் 16 மற்றும் 18-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளன.
***
வஜ்ர
கடினமான என்பது இதன் பொருள்; இந்திரனின் ஆயுதம் இதுதான் ; தீய சக்திகளை அழிப்பதற்காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார்; விஷ்வகர்மா அதிலிருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கி இந்திரனிடம் கொடுத்தார்
வைரம் என்னும் ரத்தினைக் கல்லுக்கும் இதே பெயர்; அது வஜ்ரம் என்னும் சொல்லின் மருவு ஆகும் ; பிராமணப் பெண்கள் பேசிய பிராகிருத மொழியிலிருந்து வந்தது ; வீட்டிலுள்ள பெண்களும் கீழ்மட்ட ஊழியர்களும் கொச்சையான சம்ஸ்க்ருதம் பேசுவர் ; இந்தப் பேச்சு வழக்கினை பிராகிருதம் என்பார்கள் ; காளிதாசன் நாடகங்களிலும் பெண்களும் வேலைக்காரர்களும் மீனவர்களும் பேசிய பிராகிருத வசனங்களைக் காணலாம் .
***
வாக்கியபதீயம்
வாக்கியபதீயம் (Vakyapadiya) என்பது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய இலக்கண அறிஞரும் தத்துவஞானியுமான பர்த்ருஹரியால் (Bhartrihari) சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது மொழியியல் தத்துவம் (Philosophy of Language) மற்றும் சமஸ்கிருத இலக்கணத்தின் (Vyakarana) அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் மிக முக்கியமானதொரு நூல் [இந்த நூலின் முக்கிய அம்சங்கள் :1. மூன்று பிரிவுகள் (திரிகாண்டீ – Trikandi)இந்நூல் மூன்று முக்கிய காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம காண்டம் (Brahma-kanda): இது மொழியின் ஆன்மீக மற்றும் பிரபஞ்சத் தன்மையை விளக்குகிறது. பிரம்மமும் மொழியும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இது ஆராய்கிறது. 2.வாக்கிய காண்டம் (Vakya-kanda): இது வாக்கியங்களின் அமைப்பு, அதன் அர்த்தம் மற்றும் ஒரு வாக்கியம் எவ்வாறு முழுமையான பொருளைத் தருகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. 3.பத காண்டம் (Pada-kanda): இது சொற்கள், அவற்றின் இலக்கணக் கூறுகள், பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களின் பகுப்பாய்வு போன்றவற்றை விரிவாகக் கூறுகிறது.
ஸ்போட வாதம் (Sphota Theory)
பர்த்ருஹரியின் மிக முக்கியமான பங்களிப்பு ஸ்போட (Sphota) என்ற கோட்பாடு ஆகும். இதன்படி, நாம் கேட்கும் ஒலிகள் தனித்தனியாக இருந்தாலும், அவை நம் மனதில் ஒரு முழுமையான கருத்தையோ அல்லது அர்த்தத்தையோ திடீரெனத் தோற்றுவிக்கின்றன (Bursts of sound conveying meaning). ஒரு வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் அதன் தனித்தனி சொற்களைக் கூட்டுவதால் வருவதில்லை, மாறாக அது ஒட்டுமொத்தமாகவே மனதில் புலப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார். மொழியும் அறிவும் பர்த்ருஹரியின் கூற்றுப்படி, “உலகில் மொழி வடிவம் இல்லாத அறிவு என்று எதுவுமே இல்லை”. மனிதர்களின் அனைத்து எண்ணங்களும், உலகத்தைப் பற்றிய புரிதல்களும் மொழியின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது.
***
வலன் (वल).—(பலன் ) அசுரர்.
ரிக்வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர்களில் ஒருவன் . தேவர்களின் பசுக்களைத் திருடி குகைகளில் அடைத்துவைத்த இவனை இந்திரன் வஜ்ராயுதத்தால் கொன்றான் . இதற்கு தத்துவ விளக்கமும் உண்டு. உஷஸ் என்னும் ஒளி தேவதையை அசுரர் வலன் ஒளித்து வைக்கவே இந்திரன் அதை நீக்கினான்; வலன் பற்றி அரவிந்தர் கூறியதாவது- இறைவனை அடைய முடியாது மனிதர்களை தடுக்கும் இருள் என்னும் அறியாமைதான் வலன்.
வேதங்களை மொழி பெயர்த்த வெளிநாட்டினர் இதை இயற்கை நிகழ்ச்சி என்றே கருதுகின்றனர் ; பசுக்களை குகையில் ஒளித்துவைத்தான் வலன், என்று எண்ணற்ற இடங்களில் ரிக் வேதம் சொல்கிறது ; இதை பசுக்கள் என்று எடுத்துக்கொள்ளாமல், திருமூலர் பசுக்களை எப்படிக் கையாள்கிறாரோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து; பார்ப்பான் அகத்திலே பாற் பசு ஐந்துண்டு என்பது ஐந்து புலன்கள் என்று திரு மூலர் உவமிக்கிறார் . பத்ம புராண பூமி காண்டத்தில் இவனைப்பற்றிய கதை வருகிறது – வலன் , ஒரு நாள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட இந்திரன் அவன் மீது வஜ்ராயுதம் என்னும் இடி மின்னலைப் பாய்ச்சி அவனை வீழ்த்தினான் .
***
வால்மீகி கதை राम से बड़ा राम का नाम .
ராம் சே படா ராம் கா நாம்
“ராம் சே படா ராம் கா நாம்” (राम से बड़ा राम का नाम) என்பது புகழ்பெற்ற ஒரு இந்திப் பழமொழி ;. இதற்கு “ராமனை விட ராமனின் நாமமே (பெயரே) பெரியது” என்று பொருள்.இந்து மதக் கதைகளின்படி, இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது:கடலைக் கடந்த அனுமன்: ராமபிரான் சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் கட்ட வேண்டியிருந்தது. அப்போது வானரங்கள் ‘ராம்’ என்ற திருநாமத்தை கல்லில் எழுதி தண்ணீரில் போட்டபோது, அந்தப் பாறைகள் நீரில் மிதந்தன. ஆனால், ராமரே ஒரு கல்லை எடுத்துப் போட்டபோது அது நீரில் மூழ்கியது. இதன் மூலம் ராமரின் சக்தியை விட அவரது பெயருக்கு அதிக சக்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்பட்டது. ராமபிரானால் நேரடியாக சிலருக்கு மட்டுமே உதவ முடிந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகும் இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்கள் “ராம” நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தங்களின் இன்னல்களிலிருந்து விடுபட்டு அமைதி பெறுகிறார்கள்.
மிக முக்கியமான ஒரு விஷயம் ராமாயணத்திலேயே வருகிறது ;அதாவது வேடனாக வாழ்க்கை நடத்திய வால்மீகிக்கு ராம என்ற நாமத்தைச் சொல்ல தெரியவில்லை. மரா, மரா என்று நாரதர் உபதேசிக்கிறார் . அவன் முனிவர் ஆகி நமக்கு உலகப் புகழ்பெற்ற , காலத்தால் அழிக்க முடியாத ராமாயணத்தைக் கொடுத்தார் ; இதிலுள்ள மிகப்பெரிய உண்மை, ராமன் பிறப்பதற்கு முன்னரே ராம நாமம் துவங்கிவிட்டது பின்னர்தான் நமக்கு ராமாயணம் என்னும் நூல் கிடைத்தது ; இந்த சொல்லுக்கு உள்ள மந்திர சக்தியை வைத்தே வசிஷ்ட முனிவர் கெளசல்யா தேவியின் குழந்தைக்கு ராம என்ற நாமத்தைச் சூட்டினார்.
வால்மீகி மர்மம்
சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.
வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில் இருப்பது அவருடைய வாசகம்:
The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London):
Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’
ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.
பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சோகம் மாறி ஸ்லோகம் பிறந்தது
வால்மீகி தன் இளமைப் பருவத்தில் ரத்னாகரர் என்ற பெயருடன் காடுகளில் வழிப்பறிக் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை வாழ்ந்தார்.
நாரதரின் கேள்வி: ஒருமுறை நாரத முனிவர் அங்கு வந்தார். அவரிடம் ரத்னாகரர் சிக்கினார். நாரதர் அவரிடம், “நீ செய்யும் பாவங்களுக்காக உன்னுடைய குடும்பத்தினர் உன்னுடன் பங்கு பெற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டார்.ரத்னாகரர் தன் மனைவியையும் குடும்பத்தினரையும் கேட்டபோது, “உன் பாவத்திற்கு நாங்க பொறுப்பல்ல” என்று அவர்கள் கூறினர். இதனால் மனம் மாறிய ரத்னாகரர் நாரதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நாரதர் அவருக்கு ‘ராம’ நாமத்தை உச்சரிக்க உபதேசித்தார். ரத்னாகரர் முழுமையான தியானத்தில் ஆழ்ந்து பல ஆண்டுகள் ராம நாமத்தை জபித்தார். அவரைச் சுற்றிலும் கறையான்கள் புற்று மூடிக்கொண்டன.மறுபிறப்பு: புற்றிலிருந்து (வால்மீகம் என்றால் புற்று) வெளிப்பட்டதால் அவர் ‘வால்மீகி’ என்று அழைக்கப்பட்டார்.
ஒருநாள் தமஸா நதிக்கரையில் குளிக்கச் சென்றபோது, வேடன் ஒருவன் அம்பால் வீழ்த்திய இணைப் பறவைகளில் ஒன்று வீழ்ந்து இறக்க, மற்றொரு பறவை துயரத்தால் அலறியதைக் கண்டார்.அந்தத் துயரம் வால்மீகியின் நாவில் ஒரு சாபக் கவிதையாக இசை வடிவில் வெளிப்பட்டது. அங்கு தோன்றிய பிரம்ம தேவன், ஸ்ரீராமரின் வரலாற்றை இராமாயணம் என்ற காவியமாக எழுதும்படியும் வால்மீகியை ஆசீர்வதித்தார்.உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.
யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I
தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்
பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!
ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!
இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்
நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்
இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I
யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்
ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!
சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!
பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I
ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்
சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை.
தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!
Tags- வாசஸ்பதி மிஸ்ரா, பாமதி, .HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL , இந்து மத கலைச்சொல் அகராதி-114,வால்மீகி கதை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பாஷா அல்லது பாஸா என்பவர் யார்? அவர் எத்தனை நாடகங்களை எழுதியுள்ளார் ?
2
அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது எது? அது யாரைப்பற்றியது ?
3
அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள் என்ன?
4
பாஸா வின் காலத்தை அறிய உதவும் முக்கிய விஷயம் எது ?
5
கிரேக்க நாடகங்களைக் காப்பி அடித்துதான் நாடகம் என்பதே இந்தியாவுக்கு வந்ததா ?
6
இவருடைய நாடகங்களில் நாம் காணும் சிறப்பு அம்ஸங்கள் என்ன ?
7
இவருக்குப்பின்னர் நாடகம் எழுதிய காளிதாசன் உவமைகளால் சிறப்பு அடைந்தார் ; இவர் பெயர் அந்த அளவுக்குப் பரவாதது ஏன் ?
8
காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களை தமிழ் உபாதா எல்லா மொழிகளிலும் காணலாம் பாஸா நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்களா?
9
இவர் வாழ்ந்த காலம் பற்றி சம்ஸ்க்ருத அறிஞர்கள் கூறுவது என்ன ?
10
பாஸா நாடகங்களில் காணப்படும் பொன்மொழிகள் என்ன ?
**********************
விடைகள்
1.பாஷா அல்லது பாஸா அல்லது பாசர் என்று குறிப்பிடப்படும் இவர் காளிதாசனுக்கும் முன்னால் வாழ்ந்த இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் ஆவார்; இவர் 13 நாடகங்களை எழுதியுள்ளார் .பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.
ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.
***
அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது “ஸ்வப்னவாசவாதத்தா“.இது உதயணன் – வாசவாதத்தா ஆகிய இருவரின் காதல் கதை ; இதில் அரசியல் செய்திகளும் உள்ளான
பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறது.
***
3. அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள்:
மகாபாரதம், ராமாயணம் மற்றும் மக்கள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பாஷா இந்த நாடகங்களை இயற்றியுள்ளார்.ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:
1.பிரதிமா நாடகம் (Pratima Nataka): ராமாயணத்தின் ஆரண்ய காண்டம், அயோத்தியா காண்டப் பின்னணியில், கைகேயி போன்ற பாத்திரங்களின் நற்பண்புகளையும் விளக்கும் தனித்துவமான நாடகம்.
2.அபிஷேக நாடகம் (Abhiseka Nataka): ராமரின் பட்டாபிஷேகத்தை மையமாகக் கொண்ட நாடகம்.
4. கர்ணபாரம் (Karnabhara): கர்ணனின் அஸ்திரக் கொடை மற்றும் அவனது மனபாரத்தை விவரிக்கும் ஒரு அங்கம் கொண்ட நாடகம்.
5. தூதவாக்யம் (Duta Vakya): கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது செல்லும் கதை.
6. தூதகடோத்கஜம் (Duta Ghatotkaca): கடோத்கஜனின் தூது பற்றிய நாடகம்.
7. மத்யமவ்யாயோகம் (Madhyama Vyayoga): பீமனுக்கும் இடும்பனைக்கும் இடையிலான கதையை அடிப்படையாகக் கொண்டது.
8. பஞ்சராத்ரம் (Panca Ratra): பாண்டவர்களின் ஐந்து இரவு கால மறைமுக வாழ்வை மையமாகக் கொண்டது.கிருஷ்ணரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது:
9. பாலசரிதம் (Bala Carita): கிருஷ்ணரின் இளமைக்கால லீலைகள் மற்றும் கம்ச வதத்தைப் பாடும் நாடகம்.உதயணன் மற்றும் கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை:
10. ஸ்வப்ன வாசவதத்தா (Svapna Vasavadatta): பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படும் அரசியல் மற்றும் காதல் கலந்த நாடகம்.
11. பிரதிஞ்ஞா யுகந்தராயணம் (Pratijna Yugandharayana): வாசவதத்தையின் தந்தை பிரத்யோதனின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் மந்திரி யுகந்தராயணனின் கதை.
12. சாருதத்தம் (Carudatta): ஏழை வணிகன் சாருதத்தன் மற்றும் வசந்தசேனையின் காதலைப் பேசும் சமூக நாடகம்.
13. அவிமாரகம் (Avi maraca): இளவரசன் அவிமாரகன் மற்றும் குந்தீபோஜனின் மகள் குரங்கியின் காதல் கதை
***
4. இவர் நந்த வம்ச மன்னர்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்; ஆகையால் மெளரியர்களுக்கும் முன்னால் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். உதயணன் என்ற புகழ்பெற்ற மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அவருடைய காதல் கதையே இவருடைய புகழ்மிகு படைப்பின் கரு ஆக அமைந்துள்ளது . சமஸ்கிருதத்தின் மகாக்கவியான காளிதாசரே தனது மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் முன்னுரையில், தனக்கு முந்தைய சிறந்த நாடக ஆசிரியராகப் பாஷாவைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
ஆகையால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாஸருக்கும் முன்னால் இவர் இருந்தது உறுதியாகிறது . இருவருடைய கதை களுக்கும் அணுகுமுறைக்கும் இடையே நல்ல வித்தியாசம் இருப்பதால் 100, 200 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். பரத முனியின் நாட்டிய சாஸ்திர விதிகள் முழுமையாக பின்பற்றப்படும் காலத்துக்கு முன்பே பாஷா வாழ்ந்ததும் காலத்தைக் கணைக்கப்பயன்படுகிறது
***
5.கிரேக்க நாடகங்கள் கிண்டல், கேலி, கீழ்த்தரமானசெக்ஸ் ஜோக்குகள் உடையவை ; இந்துக்களின் நாடகங்கள் எல்லாம் புனிதக் கதைகள் அல்லது தர்ம விஷயங்கள் கொ ண்டவை. மேலும் கிரேக்கர்கள் நாடக ம் எழுதுவதற்கு 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தில் சுமார் 20 நாடக உரையாடல்கள் உள்ளன. இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .
கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.
1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .
2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன
3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.
4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .
5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர். கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம்
****
6.பாஸா நாடகங்கள் ஒவ்வொன்றிலும் நந்த வம்சத்தைக் குறிப்பிடுகிறார். அவருடைய நாடகங்களில் 230 கதா பாத்திரங்கள் வருகின்றனர் . அவர் நட்சத்திரங்களை மட்டும் குறிப்பிடுகிறர்; 12 ராசி மண்டலம் பற்றிக் குறிப்பிடவில்லை. 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்தில் கூட ராசி மண்டலம் வருணிக்கப்பட்டுள்ளது . காசு என்று குறிப்பிடும் போதெல்லாம் சுவர்ண மாசக என்கிறார் கனிஷ்கர் காலம் முதல் நாணயம்/ நானக என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது . மெளரியர்களின் தென் இந்தியப் படையெடுப்பு குறித்து சங்கப் புலவர் மாமூலரும், மைசூர் கல்வெட்டுகளும் பேசுகின்றன. அதற்கு முன் வாழ்ந்த பாஸா, நர்மதைக்கு வடக்கேயுள்ள நிலப்பரப்பையே குறிப்பிடுகிறார் . பரத வாக்கியம் என்னும் தேசீய கீதம், நாந்தி என்னும் துவக்க அறிமுகங்களும் உள்ளன . பிற்கால நாடக ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது, இவரது நாடகங்கள் தேவையற்ற வர்ணனைகள் இன்றி, மிகச் சுருக்கமான மற்றும் வேகமான உரையாடல்களைக் கொண்டவை.நாடகத் தொடக்கம்: வழக்கமான சமஸ்கிருத நாடகங்கள் போலன்றி, ‘நாந்தி’ (மங்கள வாழ்த்துப் பாடல்) முடிந்தவுடனேயே சூத்திரதாரன் (நாடகப் இயக்குனர்) மேடைக்கு வந்து கதையைத் தொடங்கிவிடுவார்
***
7.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1912 ஆம் ஆண்டு) தி. கணபதி சாஸ்திரிகள் என்பவரால் திருவிதாங்கூர் பகுதியில் 13 நாடகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கண்டு பிடிக்கப்கப்பட்து மிகவும் பிந்தியகாலம்; மேலும் பிறமொழிகளிலோ இந்திய மொழிகளிலோ உடனே மொழிபெயர்க்கப் படவில்லை; இவை உண்மையிலேயே பழைய நாடகங்கள்தானா? ஏன் கேரளத்தில் மட்டும் கிடைத்தது? என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன; ஆகையால் காளிதாசன் எழுதிய சாகுந்தலம் நாடகத்துக்கு கிடைத்த பப்ளிசிட்டி இவரது நாடகங்களுக்குக் கிடைக்கவில்லை ; உண்மையில் ஸ்வப்னவாசவதத்தம் மிகவும் சிறப்புடையது.
***
8. ஸ்வப்னவாசவதத்தம் முதலிய சில நாடகங்கள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டன எல்லா நாடகங்களும் மொழிபெயர்க்கப்படவில்லை ; மொழிபெயர்ப்போரும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கின்றனர் ; ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து மொழிபெயர்க்கவில்லை
***
பாஸாவின் காலம் குறித்துப் பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லும் காலம்:
பிடே, தீட்சிதர், கணபதி சாஸ்திரி, ஹரிப்பிரசாத் சாஸ்திரி – BCE கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றா ண்டு வரை ;
ஜஹாங்கிர்த்தார், குல்கர்னி, செம்பவனேகர்- BCE கி.மு. மூன்றாம் நூற்றாண்டு ;
செளத்ரி , ஜெயஸ் வால், துருவ – BCE கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு;
10. நாடகமே உலகம் என்று பலரும் பிற்காலத்தில் சொன்ன பொன்மொழி, கடவுள் ஒரு குழந்தை, காதலன், நண்பன் என்ற பொன்மொழி. நீதி நெறியுடன் மன்னன் ஆண்டால் புலிப்போத்தும் புல்வாயும் ஒருதுறையில் நீருண்ணும் என்னும் பொன்மொழி முதலியன 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாஷா நாடகங்களில் காணக்கிடக்கின்றன :
பாஸா133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1133 Beautiful Quotations (Subhashitas) of Playwright Bhasa – Part 1
Post No. 1050; Dated 18th May 2014
(Earlier on 18th April 2014, I posted under the title “Beautiful quotations from a Great Playwright”; Post No. 987. Following post is more comprehensive and 133 quotations are arranged subject wise.)
18 May 2014 — GOD 1.God owns everything in the universe, but keeps nothing for himself; He is the supreme renouncer. 2.God is our soul refuge, there is no …
19 May 2014 — 133 Beautiful Quotations of Bhasa. DHARMA 76.Dharma is the foundation of universe. 77.Who in this world can ultimately survive his own misdeeds …
Missing: Playwright | Show results with: Playwright
18 Apr 2014 — Compiled by By London Swaminathan Bhasa is one of the greatest playwrights of the world. Beautiful Quotations from a Great Playwright | Tamil …
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?
2
மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?
3
இவர் எழுதிய நூல்கள் யாவை ?
4
மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?
5
நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?
6
காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர் யார்?
7
மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?
8
சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?
9
தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?
10
எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை — என்ற பாடலின் வரிகள் என்ன ?
***
விடைகள்
1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும்தியாகராஜர்,முத்துசுவாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரிகள்ஆகிய மூவருக்கும் முன்னிருந்தஆதி மும்மூர்த்திகளில்ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள்அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை,முத்துத் தாண்டவர்(1525-1625)”..
XXX
இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று, தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.
மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்
அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார் போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள்.
***
2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.
***
4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.
***
5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :
1. மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா மத்திலே தொழுதேத்தித் (தெரிசி)
2. நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண் மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று (தெரிசி)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணாசலக் கவிராயர் (Arunachala Kavi) (1711–1779) சீர்காழியிலே வாழ்ந்து பல பாட்டுகள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பினார். தில்லையாடி என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் நல்ல தம்பி – வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.] தருமபுர ஆதீனத் தலைவர் கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்துக் குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது.
1
அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடல்களில் பத்து மாத பந்தம் திரைப்படம் மூலம் பிரபலமான பாடல் எது?
2
இவருடைய நூல்களை யாவை?
3
இவருடைய நூல் திருவரங்கத்தில் அரங்கேறியது ; அந்தக் கடவுள் மீது அவர் இயற்றிய பாடல் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகளில் மிகவும் விரும்பிக் கேட்கப்படுகிறது; அது என்ன பாடல்?
4
இவருடைய நூல்களில் “இராம நாடகக் கீர்த்தனை” என்ற நூல் சிறப்படையாக் காரணம் என்ன ?
5
கச்சேரிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு இவர் இயற்றிய பாடல் என்ன?
6
பொதுவாகப் பிரபல பாடகர், பாடகிகளால் பாடப்படும் பாடல்கள் எவை ? என்ன ராகத்தில் அவை உள்ளன ?
7
தஞ்சசைக் கோட்டையை ஆற்காட்டு நவாபின் படைகள் முற்றுகையிட்டபோது இவரை உபன்யாசத்துக்கு அழைக்க, படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்கு இவர் பாடியது என்ன பாடல் ?
8
ராமசாமி தூதன் நான்அடா-அடட ராவணா- என்ற பிரபல பாடலின் முழு வரிகள் என்ன ?
9
அனுமன் இலங்கைக்கு வைத்த தீ என்ன செய்தது ?
10
கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்- என்ற பாடல் கம்ப ராமாயணத்தில் மிகவும் முக்கியப்பாடல்; அதை அருணாசலக் கவிராயர் எப்படிப்பாடினார்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
விடைகள்
1. “இராமனுக்கு மன்னன்” என்ற கீர்த்தனை திரைநடிகையும் பாடகியுமான பானுமதியால் பிரபலமடைந்தது.
சம்பந்தர்பிள்ளைத் தமிழ், அநுமார் பிள்ளைத் தமிழ், இராம நாடகக் கீர்த்தனை, ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் ஓர் இசை நாடக நூலாக, “இராம நாடகக் கீர்த்தனை” உள்ளது. கைவல்ய நவநீதம் – தாண்டவராய சுவாமிகள் இயற்றியது இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார்.
***
3.ஏன் பள்ளி கொண்டீர் ஐயா – ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
இராகம் : மோகனம், தாளம் : ஆதி
பல்லவி
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
(ஏன்)
அனுபல்லவி
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
(ஏன்)
சரணம் 1
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே
வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே
கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்
மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி
தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி
இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
இலங்கை என்னும் காவல் மாநகரை
இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(ஏன்)
சரணம் 2
மதுரையிலே வரும் களையோ?
முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ?
கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின்
உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை
இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி
மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி
தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?
(ஏன்)
சரணம் 3
படி தனிலே மெத்தவும் நானே உம்மை
பரம் எனவே அடுத்தேனே
அடிமை கொள்வீர் என்னைத்தானே
செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!
ததம் உரைந்த கரும் பாறை சாபமது
தடுத்து ரக்ஷித்தீரே!
விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு
கண் விடுத்து ரக்ஷித்தீரே!
கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத்
துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!
மடுவில் ஆனை முன் ஓடி முதலையை
மடித்து ரக்ஷித்தீரே
அதுபோல்
வாரும் க்ருபை கண்ணாலே
பாரும் மனக்கவலை தீரும்
நினைத்த வரம் தாரும்
தாரும் என் சாமி
வக்ஷமேவும் மஹாலஷ்மியுடன்
பெரும் பக்ஷமாக என்னை
ரஷிக்க எழுந்திரும்
(ஏன்)
***
4.அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார். இது “சங்கீத இராமாயணம்” ஆக அமைந்ததால் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் ஒவ்வொன்றும் ஒரு புதிய ராகத்தில் அமைந்தது. அருணாசலக் கவிராயருக்கு “இராமாயணக் கவிஞன்” என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். “இராம நாடகக் கீர்த்தனை” என்னும் நூல் பின்னர் “இராம நாடகம்” என்றும், தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகளை பிரபல பாடகர்கள் பாடி வருகின்றனர்.
***
5.பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக ‘நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்’ அல்லது ‘பவமான சுதடு படு பாதார விந்த முலகு’ பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
***
6 சில பாடல்கள்
1. யாரோ என்றெண்ணாமலே சங்கராபரணம் ஆதி தாளம்
2. யாரோ இவர் யாரோ பைரவி, சாவேரி ஆதி தாளம்
3. ராமனுக்கு மன்னன் இந்தோளம் ஆதி தாளம்
4. யாரென்று ராகவனை யதுகுலகாம்போதி ஆதி தாளம்
5. ஸ்ரீராம சந்திரனுக்கு மத்தியமாவதி ஆதி தாளம்
6. எனக்குன்இரு இராகமாலிகை ஆதி தாளம்
7. ஏன் பள்ளி கொண்டீர் மோகனம் ஆதி தாளம்
8. தில்லைத் தலம் போல சௌராஷ்டிரம் ஆதி தாளம்
9. துணை வந்தருள் புரிகுவாய் மேசகல்யாணி மிஸ்ரசாப்பு தாளம்
10. வந்தனர் எங்கள் கலியாண மத்தியமாவதி அடசாப்பு தாளம்
***
7. தஞ்சைப் படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, ‘அனுமன் விஜயம்’ என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, ‘அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?’ என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
‘அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?’
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
“ராமசாமியின் தூதன் நானடா ராவணா!”, என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், ‘பாய்ந்தானே அனுமான்’, என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.
***
8.மோகனராகம் அடதாளசாப்பு
பல்லவி
ராமசாமி தூதன் நான்அடா-அடடராவணா
நானடா என்பேர் அனு மானடா (ராமா)
அநுபல்லவி
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும்
மறைந்துநின்று தந்தநான் அல்லடா
புறம்பே நின்று வந்தநான் அல்லடா (ராமா)
சரணங்கள்
1. கொடுத்த வரமும் தனமும் கனகமும் வீணிலே ஏன் போக்கிறாய்
தைத்திரீய சம்ஹிதா என்னும் வேதம் கிருஷ்ண யஜுர்வேத.த்தின் ஒரு பிரிவு. அதில் ஏழு பகுதிகளில் யாக யக்ஞங்கள் குறித்த மந்திரங்களைக் காணலாம். தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும், ஆத்மாவின் இயல்பு மற்றும் பிரம்மன் என்னும் இறைவனை உணர்வது, அடைவது எப்படி என்று விளக்குகிறது. இதற்கு ஆதி சங்கரர் பாஷ்யம்/ விரிவுரை வழங்கியுள்ளார். பஞ்ச கோஷங்கள் என்னும் உடலை மூடியுள்ள திரைகளை விளக்கும் உபநிஷத் இது . “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா” (பிரம்மன் என்பதே சத்தியமானது, அறிவு , எல்லையில்லாதது ) என்ற இதன் வாசகம் மிகவும் பிரபலமானது . சத்ய சாய் பாபா பஜனைகளில் இது மிகவும் விரும்பிக் கேட்கும் பஜனை. அவரே பாடியுள்ளார் . இந்த உபநிஷதத்தை மூன்றாக பிரித்து வழங்கியுள்ளார்கள் ரிஷி முனிவர்கள்; அவையாவன —
• சிக்ஷா வல்லி: உச்சரிப்பு, உச்சரிப்புவியல் மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உரை அடங்கிய பகுதி.
• ப்ரஹ்மானந்த வல்லி: பிரம்மனின் இயல்பு, பஞ்ச கோஷங்கள் எனப்படும் உடலை மூடியுள்ள ஐந்து திரைகளின் விளக்கம்.
• பிருகு வல்லி: பிருகு’என்ற ரிஷி முனிவர் தியானத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் எவ்வாறு பிரம்மனை அறிந்தார் என்பதை விளக்கும் பகுதி இது பிருகு’என்ற ரிஷி முனிவர் தியாகத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் இவ்வரசு பிரம்மனை அறைந்தார் என்பதை விளக்கும் பகுதி இது
***
தாள துவஜம் – கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் ஆன பலராமனின் கொடி. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது புறநானூற்றில் உள்ளது; தமிழர்கள் அதி தீவிர இந்துக்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
தாடங்கம், தோடு முதலிய சொற்கள் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தவை ; காஞ்சி சுவாமிகள் (1894-1994) அழகாக விளக்கியுள்ளார்
***.
தக்ஷக
நாகர் என்னும் பழங்குடி மக்களின் தலைவன் தக்ஷகன்.. காடு திருத்தி நாடாக்குவது அரசர்களின் கடமை ; கரிகால் சோழனும் இதைச் செய்தான்; இதற்கு முன்னுதாரணமாக கிருஷ்ணனும் அர்ஜுனனும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, காண்டவ வனத்தை தகனம் செய்தார்கள் ; அப்போது தஷகன் வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தான் . யாதவர்களுக்கும் நாகர்களுக்கும் நீண்ட கால பகைமை இருக்கையில் இது ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது ; இதற்குமுன்னர் சமீக மஹரிஷியின் மீது பரீக்ஷித் என்னும் மன்னன் ஒரு பாம்பினை விளையாட்டாகத் தூக்கி எறிந்தான் ; அவனுடைய மகன் ஸ்ருங்கி , அப்பாவை அவமதித்தவனை ஏழே நாட்களில் கொல்வேன் என்று சபதம் எடுத்தான் . உடனே அரண்மனையில் செக்யூரிட்டியை அதிகப்படுத்தினார்கள் ஆனால் ஸ்ருங்கி, அரண்மனைக்குள் நாள் தோறும் செல்லும் பழக்கூடையில் ஒளிந்து கொண்டுசென்று பரீட்சித் மன்னனை வெட்டிச் சாய்த்தான். அந்த மன்னின் மகன் ஜனமேஜயன் ஆவான் ; அவன் சர்ப்ப யாகம் என்ற பெயரில் நாகா இன மக்களை வெட்டி வீழ்த்தினான் ; அப்போது ஜரத்காரு, ஆஸ்தீகர் என்ற இரண்டு ரிஷிகள் தலையிட்டு நாகா- யாதவ சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள வைத்தனர் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தையும், உடன்படிக்கையையும் பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில்நர்மதாயை நமஹ என்னும் மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் . அதே காலத்தில் மயன் என்ற நாகன் மட்டும் கிருஷ்ணனுடன் நண்பனாக இருந்தான் ; அவன் காணடவ வன எரியூட்டலுக்குப் பின்னர், தனது குழுவை அழைத்துக்கொண்டு பாதாள லோகததுக்குச் சென்றான் ; பாதாள லோகம் என்பது அமெரிக்கா ஆகும்; தென் அமெரிக்காவில் இவர்கள் குடியேறி மாயா நாகரீகத்தைத் தோற்றுவித்தனர் . பழக்க கூடைக்குள் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் தந்திரத்தைப் பிற் காலத்தில் வீர சிவாஜியும் பின்பற்றி ஒளரங்கசீப் என்ற வெறியனின் கண்ணில் மண்ணைத் தூவினான்.
***
தமஸ், தமோ குணம்
தமஸ் என்றால் இருள், அறியாமை .
மனிதனின் மன நிலையை இந்துக்கள் மூன்றாகப் பிரித்தார்கள் ; சத்வ குணம், ராஜஸ குணம், தமோ குணம் என்று ; மன அமைதியுடன் சாந்தமாக நல்லதையே மட்டும் நினைக்கும் பாசிட்டிவ் குணம் உயர்ந்த சத்வ குணம் ஆகும்; செயல் வேகம் நிறைந்த , ஆனால் நல்லதையும் கெட்டதையும் செய்யும் மன நிலை ராஜஸ குணம் ஆகும் . ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் ; சுடு என்றால் சுடுவார்கள் ; நல்லது- கெட்டது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ; வெறித்தனமாக வேலை செய்து இன்பத்தை மட்டும் அனுபவிக்க காலத்தை விரயம் செய்வோரும் இவ்வகையே; மூன்றாவது வகைதமோ குணம்– மஹா சோம்பேறிகள் ; தூங்கித் தூங்கி காலத்தை நாசம் செய்யும் வகை; குடி, கூத்து, மாயை, மயக்கம் , வெட்டிப்பொழுது, எந்தக் காரியத்தையும் ஒத்திப்போடுவது என்பது இவர்களின் கொள்கை ; இந்த மூன்று குணங்களையும் பகவத் கீதையின் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் .
***
தாம்ரபரணி
பொதிகை மலையில் உற்பத்தியாகி , திருநெல்வேலி வட்டாரத்தில் ஒடி, மன்னார் வளைகுடாவில் கலக்கும் ஜீவ நதி; அதாவது ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் ஆறு; பொருநை நதி என்ற பெயரில் இலக்கியங்களில் இந்த ஆற்றினைக் காணலாம். இதன் நீளம்
128 கிலோமீட்டர், (80 மைல்கள் ) மணிமுத்தாறு, சித்ரா நதி முதலிய ஏழு உபநதிகள் இந்த ஆற்றில் நீரைக் கொட்டுகின்றன ; ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி முதலிய புகழோங்கிய வைணவ தலங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன ; நவ திருப்பதி என்னும் நவக்கிரக தலங்கள், நவ கைலாசம் என்னும் சிவன் கோவில்கள் ஆகியனவும் இந்த நதி பாயும் வட்டாரத்தில் அமைந்துள்ளன. காவிரி, வைகை போனற நதிகளின் குறுக்கேயும் அவற்றுக்கு நீராய்க் கொண்டுவரும் உபநதிகளின் குறுக்கேயும் அணைகளைக் கட்டுவதற்கு முன்னர் எல்லா தமிழ் நாட்டு நதிகளும் ஜீவ நதிகளாகவே இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .
***
தாண்டவம்
சிவ பெருமானின் கட்டளைகளுக்கு இணங்க தண்டு என்ற முனிவர் உருவாக்கிய நாட்டிய வகை இது என்று பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திர புஸ்த்தகத்தில் 14 ஆவது அத்யாயத்தில் உள்ளது.
ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தவுடன் சிவ பெருமான் ஆடும் தாண்டவத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும்; பின்னர் புதிய பிரம்மாவுடன் க்ரியேஷன் என்னும் படைப்புத் தொழில் ஆரமபாகும்; இவ்வகை நடனம், ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது பூமி, தண்ணீர், அக்கினி, வாயு, ஆகாசம் என்பன மீண்டும் உருவாகும் இந்த வரிசைக்கிரமம் புறநானூறு பாடல்களிலும் தேவாரத்திலும் அப்படியே உள்ளன .
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் , சம்ஸ்க்ருத மொழியில் உள்ள ஒரு அருமையான துதி; தாள நயம் மிக்கது ; இது தாண்டவ நடனத்தை மனக் கண்ணுக்கு முன்னே கொண்டுவரும்; சிவ பெருமான் வசிக்கும் கயிலாய மலையை ராவணன் ,அகந்தையால் அசைக்க முயன்றவுடன் சிவன் ஒரு அமுக்கு, அமுக்கினார் ; ராவணன் கதறி, சிவ பெருமானைப் போற்றி, இதைப் பாடியவுடன் சிவன் மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, ராவணன் மீது கருணை மழை பொழிந்து, ஒரு வரமும் கொடுத்து, இலங்கைக்கு அனுப்பினார் . ராவணன் நலல சிவ பக்தன்; ஆனால் அஹம்காரத்தின் மொத்த உரு ; ஆகையால் சிவன் பாடம் கற்பித்தார்.
***
தாரக அசுரன்
தேவர்களை எதிர்த்துப் போரிட்ட தைத்ய குல தலைவன்; இவனை ஒழிக்க முருகப்பெருமான் அவதரித்தார்; அவன் இறந்த பின்னர் அவனுடைய மூன்று புதல்வர்களான தாரகாக்ஷ , கமலாக்ஷ, வித்யுன்மாலி ஆகியோர் பழிவாங்கத் துடித்தனர்; விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் அமைத்து தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் ; தேவர்கள் சிவனை வேண்டவே, அவர் இவர்களை பார்த்து சிரித்தார்; முன்று விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் பூமியில் சாம்பலாய் விழுந்தன . சிவனின் நெற்றிக் கண் என்பது லேசர் ஆயுதம் . இந்த சம்பவத்தைத் தேவாரப்பாடல்களிலும் திருப்புகழ் பாடல்களிலும் படிக்கலாம்.
***
தாரா
(கற்பழிக்கப்பட்ட கதை)
Planet Jupiter and its four large moons.
தாரா என்பது மூவரைக் குறிக்கும் ; வாலியின் மனைவி; திபெத்திய புத்த மத தேவதை; பிருஹஸ்பதி என்றும் வியாழன் என்றும், குரு பகவான் என்றும் இந்துக்கள் போற்றும் ஜூப்பிட்டர் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் தாரா தான் . கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த காஸ்மாலாஜிக்கல் விஷயத்தை– அதாவது சூரிய மணடலம் என்னும் சோலார் சிஸ்டம் உருவான கதையின் ஒரு பகுதி இது .
பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்) அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !
“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .
இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .
அதாவது ஒரு குட்டி கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.
குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப் பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது ! சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.
சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 .
To be continued……………….
Tags- தாரா ,
இந்து மத கலைச்சொல் அகராதி-103 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103, தைத்திரீய உபநிஷத்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நவக்கிரக துதியில் 8 விஞ்ஞான உண்மைகள்
ஜபா குஸும ஸங்காசம் என்னும் சம்ஸ்க்ருத நவக்கிரஹ துதியைத் தினமும் படிப்போர் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனமான நாசாவும் (NASA= National Aeronautics and Space Administration) அறியாத மிகப்பெரிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றனர் ! பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் நர்மதாயை நமஹ மந்திரத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் செய்தியை தினமும் நினைவுபடுத்துகின்றனர் (சில பிராமணர்கள் இந்த மந்திரத்தைச் சொல்வதில்லை) . அந்தக்காலத்தில் நாகா பழங்குடி மக்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே குறைந்தது நான்கு தலைமுறைகளுக்கு மோதல் நடந்தது; இறுதியில் ஜனமேஜயன் என்ற மன்னன் நாகர்களை படுகொலை செய்யத் துவங்கியவுடன் ஆஸ்தீக மகரிஷி தலையிட்டு நாகா– யாதவ சமாதான உடன்படிக்கையைச் செய்வித்தார்; இதன் விளைவாக தென் அமெரிக்காவில் மாயா நாகரீகம் உருவானது (இதுபற்றி மாயா நாகரீகம் பற்றிய எனது கட்டுரைகளிலும் அவைகளைக் கொண்ட எனது புஸ்தகத்திலும் உள்ளது) . புறநானூற்றிலும் புராணங்ககளிலும் கூறப்படும் கட்டை விரல் அளவிலான வாலகில்ய முனிவர்கள் சூரியனை நாள்தோறும் வலம் வருவது பற்றி மட்டும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுக்கும் கேடயம்/ ஷீல்ட் என்று ஊகித்து எழுதியுள்ளேன் (பழைய கட்டுரைகளைக் காண்க) .
NASA stands for the National Aeronautics and Space Administration. It is an official agency of the United States government. This group is in charge of the country’s space program, space travel, and scientific research on airplanes and flight.
***
இப்போது கடவுளின் கற்பழிப்பைக் கண்டு மகிழ்வோம்
இந்து மதத்தில் ஏதேனும் செக்ஸ் SEX விஷயங்கள் வந்தால் வெள்ளைக்காரர்களுக்கு ஒரே குஷி ! கிளுகிளுப்பு ! உடனே அதை வெளியிட்டு அவர்களுடைய பொன்மொழிகளையும் திருவாய் மலர்ந்து கொட்டியிருப்பதைக் காணலாம் . பிரம்மா, ஒரு பேரழகியைப் படைத்தார் அவள் பெயர் சதரூபா; அவள் படைத்த மகள் மீதே அவர் காதல் கொண்டார் . அவள் போன பக்கம் எல்லாம் அவருடைய தலை திரும்பியது ; அதனால் அவருக்குப் பல தலைகள். இப்படி ஒரு கதை ! ரிக் வேதத்தில் பல SEXY செக்சி (இந்திராணி – வ்ருஷாகபி) உரையாடல்கள் உள்ளன . இவைகள் எல்லாம் நம்முடைய காமன் பண்டிகை தெருக்கூத்து போன்ற நாடக வசனங்கள் ; அவை நாடகம் என்று அறியாத வெள்ளைத் தோல்கள், அதை செக்ஸ் SEX என்று எழுதி மகிழ்கின்றன ! வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலைப் படங்களுடன் வெளியிட்டு மகிழ்கின்றன; அதே காலத்தில் எழுந்த பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைக் கண்டு மகிழ்வதில்லை ; இது வெள்ளைக்காரன் அணுகுமுறை!
பல விஷயங்களை பாமர மக்களுக்காக இந்துக்கள், சிம்பாலிக் SYMBOLICகாகக், கதைகளாகச் சொல்லுவார்கள் ! கிரஹணம் பற்றிச் சொன்னால் புரியாது என்பதற்காகப் பாம்பு விழுங்குகிறது என்பார்கள்; இது 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது .
இப்போது ஒரு கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம்.
பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்) அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !
“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .
இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த செயல் ! புதன் கிரஹம்MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .
அதாவது ஒரு குட்டி கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.
குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப் பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது ! சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.
சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள்ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 MOONS FOR JUPITER.
நிலவு எப்படி உருவானது என்பதையும் நம் புராணங்கள் எழுதி வைத்துள்ளன .
பாற்கடலைக் கடைந்த போது, நிலவு உருவானது ; இப்போது பசிபிக் மஹா சமுத்திரத்தில் நிலவை வைக்கும் அளவுக்கு அதன் விட்டம் உள்ளதைக் கண்டு அது பூமியிலிருந்து பிய்த்து எறியப்பட்ட துண்டு துன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவை எல்லாம் பில்லியன்– கோடி கோடி ஆண்டுகளில் நடந்தவை. இதை நாம் பாற்கடலைக் கடைந்த போது நிலவும் வெளியே வந்தது என்று சொல்கிறோம் .
பாற்கடல் என்பதை மில்கி வே காலக்சி MILKY WAY= MILKY OCEAN என்று பொருள்கொள்ள வேண்டும்
சுருங்கச் சொன்னால், சோலார் சிஸ்டம் ஆரிஜினைORIGIN OF SOLAR SYSTEM விளக்குவதே இந்துக் குழந்தைகள் நாள்தோறும் சொல்லும் நவக்கிரஹ ஸ்தோத்திரம்!
***
எட்டு மிகப் பெரிய உண்மைகள்
இந்துக்கள் உலக மக்களுக்கு எட்டு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–
1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்
2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்
3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்
4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு
5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.
எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.
இவைகளின் பொருள் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.
இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!
இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!