ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1935
எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
தேதி:- 16 ஜூன் 2015
லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 17-06
Part 1 was posted yesterday.
(படங்கள் பேஸ் புக் முதலிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி)
ஊர் பேர் தெரியாத கொட்டாம்பட்டி, அரிட்டாபட்டி தமிழ் எழுத்தாளனின் இந்து மத விரோதக் கதைகளை பெரிதுபடுத்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களில் அதைப் படமாக வைத்து அந்த எழுத்தாளனின் வங்கிக் கணக்கில் பல லட்சம் பவுன்கள் அல்லது டாலர்களை “பம்ப்” செய்யும் சர்வதேச வெளியீட்டு நிறுவனங்களின் சதி—– இந்துமதத்தை மட்டும் தாக்கும் வெண்டி டோனெகர் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு பப்ளிசிட்டி, பணக் குவிப்பு– இதுவரை வேதத்தை அலசி ஆராய்ந்த எந்த “அறிஞ”னும் வேறு எந்த மத நூலையும் ஆராயாத மர்மம் —- அவர்களுக்குத் துணைபோகும் தேச விரோத, தர்ம விரோத திராவிட–மார்க்சிஸ்ட் கும்பல்கள், பத்திரிக்கைகளின் சதி — பற்றி முதல் பகுதியில் குறிப்பிட்டேன்.
இந்த இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு “அறிஞரும்” செய்த வேலை குறித்துக் கண்போம்:–
முதலில் மூன்று முக்கியமான விஷயங்களை எல்லா இந்துக்களும் அறிய வேண்டும். இதில் சில அறிஞர்கள் ஏசு சபையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எடுக்கும் சத்தியப் பிரமாணத்தை ஒவ்வொரு இந்துவும் படித்தால் இவர்கள் கொலைபாதகச் செயலுக்கு அஞ்சாதவர்கள் என்பது தெளிவாகும்.
இரண்டாவது இந்த “அறிஞர்களில் பெரும்பாலோர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக போடிலியன் பேராசிரியர் பதவி வகித்தோர் அல்லது அதற்கு ஆசைப்பட்டோர். அதில் சம்ஸ்கிருதம் ஏன் கற்க வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்துமதத்தை எள்ளி நகையாட இந்த பதவியை ஏற்படுத்துவதாக அந்த அறக் கட்டளையை ஏற்படுத்தியவர் எழுதி, பணம் கொடுத்துள்ளார்.. ஆக இந்த அறிஞர் கும்பல் எல்லாம் மோசடி செய்ய வந்த கும்பல்!
மூன்றாவதாக இவர்கள் அவ்வளவு பேரும்—தமிழர்கள் தலை மேல் வைத்து கூத்தாடும் கால்டுவெல் பாதிரியார் உள்பட—மாக்ஸ்முல்லர் உள்பட – எல்லோரும் “இந்தியர்கள் அனைவரும் வந்தேறு குடிகள்” என்று எழுதி வைத்துள்ளனர்.
ஆனால் இதில் ஒரு அதிசயம் நடந்தது. கங்கை நதியில் கலக்கும் சாக்கடை எல்லாம் புனிதம் அடைவது போல, சில அசத்துக்கள், சத்துக்களாகவும் மாறிவிட்டன. அதில் ஒரு அசத்து மாக்ஸ்முல்லர்.
1651ல் ஆப்ரஹாம் ரோஜர் என்ற பாதிரியார் பர்த்ருஹரியின் சுபாஷித த்ரிசதியை போர்ச்சுகீசிய மொழியில் வெளியிட்டார். பின்னர் அதை டச்சு மொழியிலும் வெளியிட்டார். இந்த 300 நீதிநெறிப்பாடல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தின் பெருமையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தன.
தத்துவ போத சுவாமிகள் செய்த திகிடுதத்தம்
ராபர்ட் டி நொபிலி/ தத்துவ போத சுவாமிகள் (Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda:) இவர் கோவாவில் வந்து இறங்கி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்தார். பின்னர் மலையாளம் தமிழ் வழங்கும் பிரதேசங்களில் பிரசாரம் செய்தார். மதுரையில் தங்கி ஐயர் போல குடுமி, பூணூல் தரித்து மேலை வகுப்பினரை மத மாற்றம் செய்ய முயன்றார். ஆனால் அவரது வேஷம் பலிக்கவில்லை. யஜூர்வேதத்தை கண்டுபிடித்துக் கொண்டுவந்தததாகச் சொல்லி ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அது யஜூர் வேதம் இல்லை. அது அப்பட்டமான மோசடி. இதை வால்டேர், கோல்ப்ரூக் போன்றவர்களும் நம்பி ஏமாந்தனர். வால்டேர் அதைப் படித்துவிட்டு (மொழிபெயர்ப்பு) உண்மையென்று நம்பி, அதை பிரான்ஸ் தேசிய நூலகத்தில் சேர்த்தார். இவர் மோசடி செய்யவில்லை என்றும் இவரது கும்பலில் இருந்த வேறு சிலர் மோசடி செய்ததாகவும் இப்பொழுது பிரசாரம் கிளம்பி இருக்கிறது.
இது வழக்கமாக திருடர்கள் கையாளும் தந்திரம். பிடிபட்டுவிட்டால் மற்றவன் பெயரில் பழிபோடுவார்கள். பிடிபடாவிட்டால் தான் சாதித்ததாகக் கூறுவர். எப்படியாகிலும் வேதத்தின் பெயரில் கிறிஸ்தவ பாதிரிக் கும்பல் மோசடி செய்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.
இவர் சேர்ந்துள்ள ஜீசைட் கிளப்பின் உறுதி மொழிப் பிரமாணம் பயங்கர வன்முறைப் பிரமாணம். அதாவது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். ஆகையால் அவர் மோசடி செய்ததில் வியப்பொன்றுமில்லை.
இதே போல திருக்குறள் கிறிஸ்த நூல் என்று மெய்ப்பிப்பதாக ஒரு ஐயர் பல லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கை நாம் எல்லோரும் அறிவோம். இப்பொழுதும் கூட வெப்சைட், பேஸ்புக்கில் ஒரு பெரிய கும்பல் வேதத்தில் ஏசு இருக்கிறார், அல்லா இருக்கிறார் என்று பலரைக் குழப்பி மோசடி செய்துவருகிறது. இந்துக்கள் முதலில் தங்களிடம் உள்ள உண்மைச் செல்வத்தை அறிந்தால் இந்த மோசடிக் கும்பல்கள் தானாக கடை கட்டி விடுவர்.
ராபர்ட் டி நொபிளி செய்த மோசடியால், ஐரோப்பாவில் வேதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் பத்திரிக்கைகள் எழுதத் துவங்கின. அப்பொழுது கர்னல் போலியர் என்பவர் ஜெய்ப்பூரி லிருந்து மிகவும் கஷ்டப்பட்டு நான்கு வேதங்களையும் திரட்டி பிரிட்டிஷ் மியூசியத்தில் சமர்ப்பித்தார். இது நடந்தது 1798ல். பின்னர் சர்ச்சை அடங்கியது.
மாக்ஸ் முல்லர் அந்தர் பல்டி
மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900):
ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வசித்தவர்.
வேதத்திற்கு சாயணர் எழுதிய உரையுடன் அதை வெளியிட்டவர் மாக்ஸ்முல்லர். 1856-59- ஜெர்மன் பாஷையில் ரிக் வேதத்தை வெளியிட்டார். நிறைய நூலகள் எழுதியுள்ளார். கீழ்திசை இலக்கியங்கள் என்று எல்லா நூல்களையும் மொழி பெயர்க்கச் செய்து ஐம்பதுக்கும் அதிகமான வால்யூம்களாக வெளியிட்டார். ஆனால் முதலில் உள்நோக்கத்துடன் மொழிபெயர்க்கத் தொடங்கினார். வேதங்களை வேரறுத்து கிறிஸ்தவ மதத்தை நிலை நாட்டுவேன் என்று சூளுரைத்தார். கொக்கரித்தார். இதோ விக்கி பீடியா வாசகம்:
Muller once wrote that;-
The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.[20][21]
As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of, nay, much of the work which is theirs they would probably disclaim. The Christianity of our nineteenth century will hardly be the Christianity of India. But the ancient religion of India is doomed—and if Christianity does not step in, whose fault will it be?
—Max Müller, (1868)[22]
அதி பயங்கர நோக்கத்தோடு மொழிபெயர்ப்பைத் துவங்கிய அவர் அப்படியே மாறிப் போனார் ஜி.யூ. போப் பாதிரியார் போல. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் கி. 1200க்கு முந்தையது என்றார். அது மிகவும் தவறு- இன்னும் மிகப் பழமையானது என்று பல மேலை நாட்டினர் எதிர்த்தவுடன். வேதத்தின் காலத்தை எந்த ஒரு மனிதனாலும் கணிக்க முடியாது. அவ்வளவு பழமையானது என்று பல்டி அடித்தார்.
ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),1826-1906
கிரிப்பித் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வசித்து தமிழ்நாட்டில் கோத்தகிரியில் இறந்தார். ஒரு பாதிரியாருக்குப் பிறந்தவர். அவருக்கு முன் வெளியான ரிக் வேத மொழி பெயர்ப்புகளை எல்லாம் கலந்து இவர் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தார். ஆனால் பெரும்பாலும் சாயணர் வாதத்தை ஏற்றார் (இவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புதான் என் மேஜையில் எப்போதும் இருக்கும்). பக்கத்துக்குப் பக்கம் விளங்க வில்லை, பொருள் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார் .நான்கு வேதங்களையும் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் வேலைபார்த்த பின்னர் காசியிலும் கல்லூரி முதல்வராக வேலை பார்த்தார். ராமாயணத்தை ஆங்கிலப் பாடலாக மொழி பெயர்த்தார். காளிதாசனின் குமார சம்பவம் உள்பட பல நூல்களை மொழி பெயர்த்து இருக்கிறார்.
தியோடர் ஔபிரெட் 1822-1907(Theodor Aufrecht) இவர் மாக்ஸ்முல்லர், பென்வே ஆகியோருடன் பயின்றார். எடின்பரோ, பான் பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.மாக்ஸ்முல்லர், ரிக்வேத மொழிபெயர்ப்பை வெளியிட உதவி செய்தார். அவரைப் போலவே இவரும் 40 ஆண்டுக் காலம் வேத மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபாட்டார். அதே நேரத்தில்(1849-75) ரிக் வேதத்தின் மூலத்தையும் வெளியிட்டார். சம்ஸ்கிருத மொழியில் அச்சிட்ட நூல்கள், இன்னும் அச்சேறாத நூல்கள் என்று மூன்று கேடலாக் (நூல் பட்டியல்) வெளியிட்டார் (இதைப் பார்க்கையில் சம்ஸ்கிருத இலக்கியம் எவ்வளவு விரிவானது என்று விளங்கும்.உலகில் சம்ஸ்கிருத நூல்கள் உருவான காலத்தில் கிரேக்க, எபிரேய, தமிழ், லத்தீன் மொழி நூல்கள் பிறக்கவே இல்லை.அதாவது கி.மு1700 முதல் கி.மு.1000 வரை).
ரோஸனின் பணி
1830-ல் பேராசிரியர் ரோஸன் என்பவர் சில ரிக்வேத சூத்திரங்களைப் பிரசுரித்தார். 1838ல் ரிக் வேத முதல் அஷ்டகத்தைப் பிரசுரித்தவுடன் இந்திய தத்துவம் பற்றிய ஆர்வம் பிறந்தது (ரிக் வேதத்தை எட்டு அஷ்டகமாகவோ பத்து மண்டலங்களாகவோ– இரண்டு முறையில் பிரிப்பது வழக்கம்).
மேனாட்டு வேத பண்டிதர்களில் பேராசிரியர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் என்பவருக்கு பழைய வேத பாஷ்யக்காரர்களான யாஸ்கர், மஹீதரர், சாயணர் முதலியவர்களிடத்து அளவற்ற மதிப்பு உண்டு.பழைய பாஷ்யக்காரர்களில் கருத்து வேறுபாடு இருந்தால் யாஸ்கரையே பின்பற்ற வேண்டும் என்பது இவர் கொள்கை. ராத், இதற்கு நேர் மாறாக அபிப்ராயம் உள்ளவர்.
போட்லிங், ராத், கிராஸ்மேன் ஆகியோர் பாரதீய விற்பன்னர்களை மதிக்கவில்லை. வேத கால அறிஞர்களை விட தங்களுக்கு கூடுதல் அறிவு என்று கருதினர். இது இந்து மத எதிரிக் கும்பல்.
பிஷெல், கெல்ட்னர் ஆகியோர் சாயண பாஷ்யத்தை அடியொற்றிச் சென்றனர்.
பகவத் கீதை மொழி பெயர்ப்பு
வாரன் ஹேஸ்டிங்ஸ் கொடுத்த உற்சாகத்தால் சார்ல்ஸ் வில்கின்ஸ் என்பார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கும். ஆனால் பகவத் கீதை அழியாது என்று எழுதி இருக்கிறார்.
சர் வில்லியம் ஜோன்ஸ் (1746-94), சம்ஸ்கிருதம்—ஐரோப்பிய மொழிகளை ஆராய்ந்து வியத்தகு ஒற்றுமை இருப்பதை அறிவித்தார். அவர் கல்கத்தாவில் ஆசிய சங்கத்தை தாபித்து மொழி ஆராய்ச்சிக்கு அடிக்கோல் நாட்டினார். சாகுந்தலம், மனுஸ்மிருதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தை வானளாவஒப் புகழ்ந்தார். பின்னர் ஒரு குடப் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தார். அதாவது, ஆரியர்கள் எல்லாம் வந்தேறு குடிகள் என்று!
ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்(1765-1837), வில்லியம் ஜோன்சுக்கு உறுதுணையாக நின்றார். நிறைய கட்டுரைகள் எழுதி வேதங்களின் பெருமையைப் பரப்பினார்.
பிரெடெரிக் ஷ்லெகல் (1772-1829) என்பார் 1808ல் On the Language and Wisdom of the Indians என்ற நூல் எழுதினார். அவருடைய சகோதரர் ஏ.டபிள்யூ. வான் ஷ்லெகலும் சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்தார்.
ஷேஜி (1773-1832) என்பவர், பிரான்ஸ் தேசீய கழகத்தில் முதல் சம்ஸ்கிருத பேராசிரியர் ஆனார்
பிரான்ஸ் பாப் (1791-1867), ஷேஜியிடம் சம்ஸ்கிருதம் கற்று வினைச் சொற்களை ஒப்பிட்டு ஒரு நூலும், சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டார். லாசன் என்பவர், ஷ்லெகலின் சீடர்.வேதங்கள் பற்றிக் கட்டுரை எழுதினார்
நிறைய பனை ஓலைச் சுவடிகளைச் சோதித்து ரிக்வேத முதல் அஷ்டகத்தை வெளியிட்டார்.
தியோடர் பென்வே (1809-1881)சாம வேதத்தையும் சம்ஸ்கிருத-ஆங்கில நிகண்டையும் அச்சிட்டார்.
ஆட்டோ மற்றும் போட்லிங்க் ஆகிய இருவரும் பிருஹத் சம்ஸ்கிருத நிகண்டு உருவாக்கினர்
விட்னி 1905ல் அதர்வ வேத மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.
வெபர் 1858ல் பாணீணிய சிட்சை மற்றும் பிங்களனது சந்தஸ் சூத்திரத்தை வெளியிட்டார்.
1877ல் ருடால்ப் மேயர், ரிக் விதானம், பிருஹத் தேவதை ஆகியவற்றை வெளியிட்டார்
1862ல் டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் என்பவர் ரிக் வேதம் மீதான ராவண பாஷ்யத்தை அச்சிட்டார்.
1877லௌப்ரெக்ட் ரிக்வேதம் முழுதையும் அச்சிட்டார்.
1876ல் லுட்விக்கும், 1876ல் கிராஸ்மேன் ஜெர்மானிய பாஷையிலும் வெளியிட்டனர்.
போட்லிங்கும் பேராசிரியர் ராத்தும் அப்போதைய ரஷியத் தலைநகரான செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து சம்ஸ்கிருத- ஜெர்மானிய அகராதியை வெளியிட்டனர்.
186ல் பேராசிரியர் மார்ட்டின் ஹாக், ஐதரேய பிராமணத்தை வெளியிட்டார்.
1864-65ல் பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் ஆஸ்வலாயன க்ருஹ்ய சூத்திரத்தை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார்.
அதே சமயத்தில் ஹெர்மன் ஓல்டன்பர்க், சாங்க்யாயன க்ருஹ்ய சூத்திரத்தை அச்சிட்டார். இது வீபர் வெளியிட்ட பத்திரிகை மூலம் வெளியானது
1857-58 ல், பேராசிரியர் ரேநீர். பிரெஞ்சு மொழியில் ரிக்வேதத்தை வெளியிட்டார்
பேராசிரியர் கீத் (Prof.Arthur Berriedale Keith): இவர் மக்டொனலின் சீடர். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தவர். தைத்ரீய சம்ஹிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் .சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, நாடக இலக்கிய வரலாறு கர்ம மீமாம்ஸை முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.
ஏ.ஏ.மக் டொனல் Prof Arthur Anthony MacDonnell (1854-1931): இவர் பென்வேயிடம் பயின்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். Vedic Index of Names and Subjects என்ற புத்தகம் எழுதினார். 1927ஆம் ஆண்டில் India’s Past என்ற நூல் வெளியிட்டார்.. ஆங்கில- சம்ஸ்கிருத அகராதி, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.
(கீத்தும் மக்டொனலும் தயாரித்த வேதப் பெயர், பொருள் அகராதியும் என் மேஜையில் எப்போதும் இருக்கிறது)
கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner(1853-1929):- இவர் ஒரு ஜெர்மானியர். ராத் என்பவரின் மாணாக்கர். ஜெர்மனியில் பெர்லின், மார்பரி பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார். ராத் கொடுத்த விளக்கங்களை இவர் ஏற்கவில்லை.சாயண பாஷ்யத்தை ராத் புறக்கணிப்பது தவறு என்றும் சாயண பாஷ்யமே சரி என்றும் எழுதினார். சாயண பாஷ்யம் இன்றி வேதத்தில் ஒரு சொல்லுக்குகூட பொருள் சொல்ல முடியாதென்றும் எழுதினார்.
டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler: இவர் பென்வேயிடம் கற்றவர்.பிராக் பலகலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார். சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதினார். பம்பாய், வியன்னா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணி புரிந்தார். சம்ஸ்கிருத நூல்கள் பற்றி கலைக் களஞ்சியம் ஒன்றை தயரித்தார்.
சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams: இவர் தற்கால இந்து தேசம் என்ற நூலில் சம்ஸ்கிருதத்தின் சிறப்பை எழுதியுள்ளார். சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பதவிக்கான போட்டியில் மாக்ஸ் முல்லரைத் தோற்கடித்தவர். அந்தப் பதவியே கிறிஸ்தவ மதத்தை நிலநாட்டுவதற்கான பதவியாகும்.
பேராசிரியர் லான்மென் ( Prof. Charles Rockwell Lanman) இவர் விட்னியிடம் பயின்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.இவருக்கு முன் பலர் வேறு மொழிகளில் எழுதிய வேத இலக்கியப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
ஹெர்மன் ஜாகோபியும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் தனித்தனியே நடத்திய ஆரய்ச்சியில் ரிக் வேதத்தின் காலம் கி.மு.4000 என்று கணித்துள்ளனர். இது வான சாத்திர ஆராய்ச்சி என்பதால் தனிக்கட்டுரையாக தருகிறேன்.





Raghavan Narayanasamy
/ June 16, 2015Dear sir, past two articles vedathin meedhu extremely good and exposing
many unknown things. Pictures are also fantastic. Now these missionaries
targetting hindu nepal and converting poor nepalis, under joshua something.
Please do something to prevent this. Recently i met one nepali driver in
abudhabi who said got converted seven years back and happy. Please do
something about this. My prayers are always with you.
Tamil and Vedas
/ June 16, 2015Thanks Narayanaswamy. Conversion is happening even in London. Most of the times we come to know about it after it happened.
Only two things we can do about it:
1. Streghten Hindu belief. As long as we are weak, we cant avoid it.
I am doing it by attending even Hindu prisoners in the UK prisons and Hindu patients in London Hospitals
2.The second thing we have to do is to support organisations like Vishva Hindu Parishad, Vanavasi Kalyan Kshetra
Seva International — all RSS run organisations. They are very effective in tackling this issue.
3.Modi Government has banned foreign donations for over 4000 organisations.
It will choke all the Anti Hindu and Anti national organisations.
Regarding Nepal, VHP and Seva International are doing something about it.