கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்! இரண்டு பையன்கள் கதை!

bharat mata viveka

Article No.1969

Date: 3 July 2015

Written by London swaminathan

Uploaded from London at 8-01 காலை

ஒரு பிராமணனுக்கு இரண்டு மகன்கள். தகுந்த வயது வந்தவுடன் இருவருக்கும் பூணுல் போட்டு, வேத அத்தியயனம் செய்ய குருவிடம் அனுப்பினான்.  நெடுநாள் கழித்து இருவரும் வேதக் கல்வியை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினர். தந்தை, அவ்விருவரையும் நோக்கி வேதாந்தம் கற்றிருக்கிறீர்களா? என்று கேட்டார்.

(வேத+ அந்தம்= வேதத்தின் இறுதிப் பகுதி =உபநிஷத்து = பிரம்மத்தை அறிதல்; பிரம்மம்=கடவுள்)

இருவரும் படித்திருக்கிறோம் என்றார்கள். அப்படியானால் பிரம்மம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுங்கள் என்றார் தந்தை.

மூத்த மகன், தான் படித்த வேதங்கள், உபநிஷத்துக்கள் எல்லாவற்றிலிருந்தும் ஏராளமான மேற்கோள்களைக் காட்டி தனது மேதாவிலாசத்தை வெளிப்படுத்தினான். அப்பா! இது மனதுக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டது. அதெல்லாம் எனக்குத் தெரியும் என்று சொல்லி முடித்தான். மகனே! நீ பிரம்மத்தை நன்றாகத் தெரிந்து கொண்டவன் போலத்தான் இருக்கிறாய். நீ போய் உன் காரியங்களைக் கவனி என்றார்.

இரண்டாவது மகனை நோக்கி அதே கேள்வியைக் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை. பதில் சொல்ல முயற்சிக்கவுமில்லை.உடனே அவன் தந்தை, “மகனே! நீதான் உண்மையில் அறிந்தவன். கடவுளின் பெருமை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அப்படி யாராவது வருணிக்க முயன்றால் சம்பந்தா சம்ப்ந்தமில்லாத விஷயங்களை உவமை காட்டி முடிச்சுப் போட வேண்டியிருக்கும். அளவற்ற ஒன்றை, நித்யமான ஒன்றை – அளவுடைய பொருள்களுடனும், அநித்தியமான பொருள்களுடனும்   ஒப்பிட வேண்டி வரும். உனது மௌனம் அநேக ஆயிரம் ஆதாரங்களை காட்டிவிட்டது என்றார்.

ஆதாரம்: ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மொழிகள்.

IMG_3259

தமிழர்கள் இதை ஒரே வரியில் சொல்லிவிட்டார்கள்: கண்டவர் விண்டிலை; விண்டவர் கண்டிலை.

யார் ஒருவன் கடவுளைக் கண்டுவிட்டதாகச் சொல்கிறானோ அவன் இன்னும் முழு சொரூபத்தைக் காணவில்லை. கண்டுவிட்டால் பேசா அனுபூதி பிறந்து விடும். பின்னர் அருணகிரிநாதர் போல “சும்மா இரு! சொல் அற!” — என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

இப்படித் திடீரென்று பிரம்ம ஞானம் தோன்றியவுடன் ஆதி சங்கரர், விவேகாநந்தர், பாரதியார் போல 40 வயதுக்குள் உடலைத் துறந்துவிடுவர்.

“உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்” – எனும் யஜுர் வேத ருத்ர மந்திரமும் இதையே செப்பும். வெள்ளரிப் பழத்தின் காம்பு, அது பழுத்தவுடன், எப்படித் தானாக விலகிவிடுகிறதோ, அப்படி எனக்கும் மரணத்திலிருந்து விடுதலை தருவாயாக – என்பதே இதன் பொருள்.

முழு மந்திரம்: “ஓம் த்ரயம்பகம் யஜாமஹே, சுகந்திம் புஷ்டிவர்தனம். உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”—அனைவரும் அனுதினமும் சொல்லலாம்.அநாயாச மரணம் கிட்டும். அதாவது நாமும் கஷ்டப்படாமல், மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாமல் இறைவனடி எய்துவோம்.

இதே பிளாக்கில் லண்டன்  சுவாமிநாதன் எழுதிய கீழ்கண்ட  திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–

சலாம் முருகாசலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்—  வெளியிட்ட தேதி  ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட     தேதி ஜனவரி 15, 2013

தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி  ஜனவரி 22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமாவசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013

Leave a comment

2 Comments

  1. Murugan Sekaran's avatar

    இராமகிருட்டினர் கண்ட காளி பொய்யா?

    திருஞானசம்பந்தன் உண்ணாமுலை அம்மையிடம் பால் குடித்தது பொய்யா?

    63 நாயன்மார்களும் கண்ட சிவன் பொய்யா?

    குருடர்கள் பேசும் போது சொல்லலாம் தாங்கள் தொட்ட யானையை விவரிக்க முடியாதென்று ஆனால் கண் பார்வை உள்ளவன் சொல்ல மாட்டான்

  2. Tamil and Vedas's avatar

    உங்கள் கேள்விக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரே விடை சொல்லியிருக்கிறார். சில மஹான்கள் மட்டும் மனிதர்கள் மீதுள்ள பற்றால்
    ஓடிவந்து, சேரவாரும் ஜகத்தீரரே – என்றும், தொண்டிரெல்லோரும் வாரீர் – என்றும், கடை விரித்தேன் கொள்வாரிலை — என்றும்
    கதறுவர் என்கிறார். ஆனாலந்த ஞானம் வந்த அன்று ஜோதியில் திடீரெனக் கலந்து விடுவர். ஆண்டாள், சம்பந்தர், வள்ளலார், நந்தனார்,
    விவேகாநந்தர், பாரதி, ஆதிசங்கரர் முதலிய பலரிளம் வயதில் ஜோதியில் கலந்தனர, அல்லது சமாதி அடைந்தனர்- அல்லது உயிர் நீத்தனர்.
    திடீரெனப் பேசா அனுபூதி பிறந்து விடும்.

    தமிழிலக்கியத்தில் பிராமணர் பங்கு பற்றி மற்றொரு கடிதத்தில் கேள்வி எழுப்பி – இருந்தீர்கள். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களுக்கு, உ.வே.சா. வெளியிட்ட உரைகளைப் படியுங்கள். அதிலேயே உங்கள் கேள்விகளுக்கு விடை இருக்கிறது. கடைசியாக வால்மீகி பலருண்டு. நான் குறிப்பிட்டது புற நானூறுப் புலவர் வால்மீகி. ராமாயணத்தை எழுதிய வால்மீகி பெயரில் தலித்துகளுண்டு. அவர்கள், இந்துமதத்தின், இணைபிரியா- அங்கத்தினர்கள்- எம்முடைய சகோதரர்கள்– அதே போல வியாசரும் மீனவ சமூகத்தின், தலைவர். உலகிற்கே குரு. இந்துமதத்தினர் – எல்லோருக்கும் — இவ்விருவரே முக்கியமானவர்கள். பிராமணர்களளெல்லோரும் சொல்லும் காயத்ரீ மந்திரம் , மூன்று வேதங்களிலலிருக்கிறது– அது பிராமணர் கண்ட மந்திரமன்று. க்ஷத்ரிய ராஜா செய்தது.கட்டுரைகளைப் படித்தமைக்கு நன்றி.

Leave a comment