ஊரோடு ஒத்து வாழ்!

Sentinelese tribe

Compiled  by  லண்டன் சுவாமிநாதன்

Date: 1 October 2015

Post No: 2205

Time uploaded in London :– -11-09 am

(Thanks  for the pictures)

1.யத்ர யாத்ருச ஆசார: தத்ர வர்தேத தாத்ருசம்

எங்கு என்ன ஆசாரமோ அங்கு அதைப் பின்பற்று

(ஊரோடு ஒத்து வாழ்)

2.எவ்வதுறைவது உலகம்    உலகத்தோடு

அவ்வதுறைவது      அறிவு (குறள் 426)

3.ஆடையில்லாதவன் ஊரில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

Do in Rome in as Romans do

4.யதா தேசஸ்ததா பாஷா – சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

எந்த நாடோ அந்த பாஷை

5.யதா தேசஸ்ததா வேஷ:

தேசத்துக்கு ஏற்ற உடை

6.காக: கிருஷ்ண: பிக: கிருஷ்ண: வசந்தகாலே சமயாதே காக: காக:, பிக: பிக:

காக்கையும் கறுப்பு, குயிலும் கறுப்பு; வசந்தகாலம் வந்தால் தெரியும்! காகம் காகமே! குயில் குயிலே!

ஒப்பிடுக: கறுப்பு நாயைக் குளிப்பாட்டினாலும் வெளுக்காது.

7.காமார்த்தா ஹி ப்ரக்ருதி க்ருபணா சேதனா சேதனேஷு – மேகதூதம்

காம இச்சை உடையவனுக்கு, உயிருள்ள பொருள் எது, உயிரற்ற பொருள் எது என்று கூடத் தெரியாது.

8.ப்ரக்ருதி கலு சா மஹீயச: சஹதே நான்யசமுன்னதிம் யயா- கிராதர்ஜுனீயம்

பெரியோர்கள் மற்றவர்களின் உயர்வை பொறுக்க மாட்டார்கள் (பெரிய மரத்தின் கீழ் சிறு செடிகள் வளராது)

9.பூயோபி சிக்த:பயசா க்ருதேன ந நிம்பவ்ருக்ஷோ மதுரத்வமேதி – சாணக்யநீதி

எலுமிச்சையை பாலிலும் நெய்யிலும் நனைத்துவைத்தாலும் அது இனிக்காது.

lemon tree on terrace

10.ஸ்த்ரீ  ஸ்வபாவஸ்து காதர: – ஸ்வப்னவாசவதத்தா

பெண்கள் பலவீனமானவர்கள்.

11.மஹான் மஹத்ஸ்யேவ கரோதி விக்ரம் – பஞ்சதந்திரம்

வலியோர் வலியோரிடத்தில்தான் வலிமையைக் காட்டுவர்

12.மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண: – சிசுபாலவதம்

பெரியோர்கள் இயல்பாகவே குறைவாகவே பேசுவர்

ஒப்பிடுக: சொல்லுக சொல்லிற் பயனுடைய – குறள்

13.சரித்பதிர்நஹி சமுபைதி ரிக்ததாம் – சிசுபாலவதம்

கடல் எப்போதும் வற்றாது.

14.மண்டூகா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி பூஷணம்

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே அணிகலன்.

(குரங்குக்கு உபதேசம் செய்த தூக்கணங் குருவியின் கூட்டை, குரங்கு பிய்த்தெறிந்த பஞ்ச தந்திரக் கதையை ஒப்பிடுக)

 

15.ம்ருதங்கோ முகலேபேன கரோதி மதுரத்வனீம்

மிருதங்கம் கூட மாவு பூசுவதை வைத்தே நல்ல சப்தத்தைக் கொடுக்கும் (தட்டிக் கொடுத்து வேலை வாங்கு)

ஒப்பிடுக:–ஆடுற மாட்டை ஆடிக்கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

21THTHAVIL_2555245f.jpg,hindu

16.ய: ஜீவதி ச: பஸ்யதி

யார் உயிரோடு இருக்கிறானோ, அவனே பார்க்கிறான்

(சுவர் இருந்தால்தானே சித்திரம்?)

17.யத்ர சௌரா ந வித்யந்தே தத்ர கிம் ஸ்யாத் நிரீக்ஷகை:

எங்கு திருடர்கள் இல்லையோ அங்கு மேற்பார்வையாளர் எதற்கு?

18.யத்ர தூமஸ்தத்ர வஹ்னி:

நெருப்பு இருந்தால்தானே புகையும்?

19..உத்சவப்ரியா: கலு மனுஷ்யா: (சாகுந்தலம்)

மனிதர்கள் விழாக்களை விரும்புவோர் அல்லவா?

20.ஏகோதர சமுத்பவதா ஏக நக்ஷத்ர ஜாதகா:

ந பவந்தி சமா: சீலைர்யதா பதரிகண்டகா: – சாணக்ய நீதி

ஒரே வயிற்றில், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தில் சமமாக இல்லை. எப்படியென்றால் இலந்தை மரம் பழத்தையும் முள்ளையும் கொடுக்கிறதல்லவா?

(ஒப்பிடு:  ரோஜாச் செடியிலும் முட்கள் உண்டு)

21.யதா  பீஜம் ததா நிஷ்பத்தி:  – சாணக்ய சூத்ரம்

போட்ட விதைதான் முளைக்கும்

22.யதா வ்ருக்ஷஸ் ததா பலம் —-சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

மரத்துக்கேற்ற பழம்தான் கிடைக்கும்

23.யதா ஹி குருதே ராஜா ப்ரஜாஸ்தமனுவர்ததே – ராமாயணம்

ராஜா எப்படிச் செய்கிறாரோ மக்களும் அப்படியே செய்வர்

(யதா ராஜா ததா ப்ரஜாJ

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

24.எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (ஔவையார், புறம் 187)

(பொருள்: மக்கள் நல்லவராக இருந்தால் நிலமும் நல்லதாக இருக்கும்!!)

–சுபம்—

Previous Post
Leave a comment

Leave a comment