ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

camel-stamp-du-t

Compiled by London swaminathan

Post No.2211

Date: 3rd   October 2015

Time uploaded in London: 13-29

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

கீழே சில அழகான சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் அவைகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளையும் கொடுத்துள்ளேன்.

1).அங்குலீ ப்ரவேசாத் பாஹு ப்ரவேசம்

விரல் அளவு இடமிருந்தால் உடலையே (தோள் மூல) நுழைத்துவிடுவர்.

ஒப்பிடுக: இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவர்

இந்தி பழமொழி: அங்குலீ பகங்கர் போங்சா பகட்னா

Xxx

2).அதி கஹனம் தமோ யௌவனப்ரபவம் – காதம்பரி

இளமையில் உண்டாகும் இருட்டு ஆழமானது.

ஒப்பிடுக: தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இளமையில் கல்

Xxx

3).அபராதானுரூபோ தண்ட: – சாணக்யநீதி

குற்றத்துக்கேற்ற தண்டணை

Xxx

4).அம்புகர்போ ஹி ஜீமூதஸ்சாதகைர் அபிவந்த்யதே – ரகுவம்சம்

நீர் நிறைந்த மேகத்தைத் தான் சாதக பட்சிகள் வழிபடும்.

ஒப்பிடுக: பழமரத்தை நாடும் பறவைகள்

பணக்காரனைச் சுற்றி பத்துப் பேர் பைத்தியக்காரனை சுற்றிப் பத்துப் பேர்

ஜப் லகி பைசா காண்ட் மேம், தப் லகி தாகோ யார்

Xxx

5).ஆகரே பத்மராகாணாம் ஜன்ம காச்மணே: குத:  — ஹிதோபதேசம்

புஷ்பராகம் இருக்குமிடத்தில் கண்ணாடி மணிகள் எங்கிருந்து வந்தன?

ஒப்பிடுக: இவன் எப்படி இங்க வந்தான்!!!

xxx

camel india   donkey-240x300

6).உஷ்ட்ராணாம் விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:

பரஸ்பரம் ப்ரஸம்சந்தி அஹோ ரூபமஹோ த்வனி: – சமயோசித பத்ய மாலிகா

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகள் பாடுகின்றன. ஒருவருக்கொருவர் புகழ்ந்து தள்ளினர். என்ன அழகு, என்ன குரல் வளம் என்று!

ஒப்பிடுக: ஜைசா கர், வைசா வர்

ஊண்டோம் கே விவாஹ் மேம் கதே கவையே

ஆபஸ் மேம் ஹீ ஏக் தூஸ்ரே கீ பரசம்ஸா கர்னா

Xxx

7).கஞ்சுகமேவ நிந்ததி பீனஸ்தனீ நாரீ

சிறிய மார்பகமுள்ள பெண், ரவிக்கையை வைதாளாம்!

ஒப்பிடுக: ஆடத் தெரியாத ………….ள் , தெருக்கோணல் என்றாளாம்

Xxx

8).கரீ ச சிம்ஹஸ்ய பலம் ந மூஷிகா

யானைக்குத்தான் சிங்கத்தின் பலம் தெரியும்; எலிக்குத் தெரியாது

ஒப்பிடுக: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!

Xxx

9).காக யாசகயோர் மத்யே வரம் காகோ ந யாசக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காகம், பிச்சைக்காரர் ஆகிய இருவரில் காக்கையே உயர்ந்தது; பிச்சைக்காரர் அல்ல.

(காகத்தினால் பயனுண்டு; அசுத்தங்களை அகற்றுகின்றன)

crow plate crow plate2

Xxx

10).காகோபி ஜீவதி சிராய பலிம் ச புங்க்தே – பஞ்சதந்திரம்

காகம் கூட பலிச் சோற்றை உண்டே நீண்ட காலம் வாழ்கின்றன.

(மனிதர்கள் வயிறு வளர்க்கவே வாழ்கின்றனர். காகமோ, பலிச் சோற்றை உண்டு நமக்கு நீத்தாரின் அருளைப் பெற்றுத் தரும். ஊரையும் சுத்தமாக வைக்க உதவும்)

Xxx

11).காணேன சக்ஷுசா கிம் வா சக்சு: பீடைவ கேவலம் – சாணக்யநீதி

தொடர்ந்து வலி இருந்தால் காதால் என்ன பயன்? கண்களால் என்ன பயன்?

Xxx

12).கிம் வா அபவிஷ்யத் அருண: தமசாம் விபேத்தா

தம் சேத் சஹஸ்ரகிரணோ துரி நாகரிஷ்யத்- சாகுந்தலம்

இருளைப் பிளப்பவனாகிய சூரியன், அருணனைச் சாரதியாகக் கொள்ளாவிடில் இருளிலா மூழ்கி விடுவான்?

Xxx

13).குகர்மாந்தம் யசோ ந்ருணாம் – பஞ்ச தந்திரம்

மனிதர்களின் புகழ் கெட்ட செயலால் முடிந்துவிடும்

Xxxx

14).க்ஷணே க்ஷணே யன்னவதாம் உபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம்

அழகின் லக்ஷணம், நொடிக்கு நொடி புதுமை அடைவதாகும்.(எது நொடிக்கு நொடி புதுமை அடைகிறதோ, அதுவே அழகு)

ஒப்பிடுக: பெண்களின் ‘பேஷன்’!!!!!!!!!!!!

Xxx

15).க்ஷதே ப்ரஹாரா நிபதந்தி அபீக்ஷணம் – பஞ்ச தந்திரம்

விழுந்த இடத்திலேயே அடி விழுகிறது

ஒப்பிடுக:- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.

Xxx

India-stamp5886asiatic-lion-lioness

16).க்ஷுதார்த்தோ ந த்ருணம் சரதி சிம்ஹ: — சாணக்ய சூத்திரம்

சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒப்பிடுக: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

-சுபம்–

Leave a comment

Leave a comment