பாரதியார் கவிநயம்

bharathi9-150x150

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 9

Compiled by ச.நாகராஜன்

Post No.2213

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 11-47

Don’t use pictures. Don’t reblog for at least a week.

ச.நாகராஜன்

பாரதியார் கவிநயம்

ரா.அ.பத்மநாபன் தொகுத்துள்ள அருமையான இந்த நூல் பாரதி நூற்றாண்டு வெளியீடாக 1982 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 248 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் அன்றைய விலை ரூ12.50

 

ரா..பத்மநாபன் பற்றிய அறிமுகம் பாரதி அன்பர்களுக்குத் தேவையில்லை. பாரதி பணியில் தன் வாழ்நாளை ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து ஏராளமான பாரதியார் படைப்புகளைக் கண்டெடுத்து தமிழுலகிற்கு நல்கியவர்.

பாரதியார் கவிநயம் என்ற இந்த நூலில் 34 அரிய கட்டுரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்

 

பழைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பத்இல், தற்சமயம் ஜீவியர்களாக இராதவர்களது கட்டுரைகளைத் தேர்ந்து பாதுகாத்தல் எனது முதல் நோக்கமாக இருந்ததுஎன்கிறார் அவர் தனது முகவுரையில்

 

 

அறிஞர்களின் கட்டுரைகள்

சுவாமி விபுலானந்தா,நாவலர் எஸ்.சோமசுந்தர பாரதியார், பரலி சு.நெல்லையப்பர், .ரா., சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பி.ஶ்ரீ., பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, கு..ராஜகோபாலன், டாக்டர் மு.வரதராசன், மா.அனந்த நாராயணன், திருலோக சீதாராம், பெ.நா.அப்புஸ்வாமி, .ஜீவானந்தம், டி.கே.சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் .சீனிவாசராகவன், கி.சந்திரசேகரன், ‘குகப்ரியை’, ரா.ஶ்ரீ. தேசிகன், அமுதன், டாக்டர் தி.சௌ.ராஜன், சங்கு சுப்ரஹ்மண்யன், ரா.நாராயணன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், டர்பன் எஸ்.முனுசாமிப் பிள்ளை, .சிதம்பர சுப்ரமண்யன், வை.மு.கோதைநாயகி அம்மாள், .சுப்பு ரெட்டியார், ..மகரபூஷணம், பேராசிரியர் கே.ஸ்வாமி நாதன், ‘மாரார்’, மணிக்கொடி கு.ஶ்ரீநிவாஸன் ஆகிய 31 அறிஞர்களின் கட்டுரைகள் என்றால் அதன் சுவை பற்றிச் சொல்லவா வேண்டும்.

 

 

அறிஞர்களின் கருத்துக்கள்

சுவாமி விபுலானந்தர்:- கண்ணனின் குழலிசையை அநேக கவிகள் வருணித்திருக்கிறார்கள். ஆனால் பாரதியாரைப் போல் ஒருவரும் இவ்வளவு அழகாக, “மாம்பழ வாயினிலே குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம்என்று பாடினதில்லை.

 

 

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்:- 1906ஆம் வருஷம். நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் அவரை முதல் முதல் சந்தித்தேன். சென்னையில் தம்புச் செட்டித் தெரு அல்லது லிங்கிச் செட்டித் தெரு இரண்டில் ஒன்று. அங்கே, ஒரு வீட்டுத் திண்ணையில் கல்கத்தா காங்கிரஸுக்குப் போக அவரும் ஆயத்தமாக இருந்தார். என்னுடைய வக்கீல் தொழில் தோழர், இப்போது, ‘நரசிம்ம ஸ்வாமிஎன்று சொல்லப்படும் சேலத்து நரசிம்மய்யரும், நானும், பாரதியாரோடு சேர்ந்து, மூவருமாக கல்கத்த்ஆ போக ஏற்பாடு செய்து கொண்டு சந்தித்தோம். தேஜஸ் பொருந்திய முகம், உருமாலையுமில்லை; கையில் தடியுமில்லை; அழகும் ஒளியும் சிரிப்பும் வீசிய முகம். பளிச்சென்று இப்போதும் கண் முன் வந்து நிற்கிறது.பிறகு புதுச்சேரியிலும் அந்த முகத்தைக் கண்டேன். இரு தடவை கண்டேன். குதித்துக் குதித்துப் பாடுவதையும் கேட்டேன். நல்ல சாப்பாடும் போட்டார். எனக்கும் ஆர்.வி.கிருஷ்ணய்யர் (அவரும் அப்போது சேலத்தில் வக்கீல்) இருவருக்கும் சாப்பாடு போட்டு, பாடவும் பாடினார். பிறகு சென்னையில் பல முறை சந்தித்திருக்கிறோம்; ஒரு முறை மகாத்மா காந்தி முன்னிலையில்.

(தினமணி சுடர் , சென்னை பாரதி அநுபந்தம், 5-9-1954 இதழில் எழுதியது)

 

 bharathi

கு..ராஜகோபாலன்: ‘ஞாயிறு வையமாகிய கழனியில் வயிர வொளியாகிய நீர் பாய்ச்சுகிறது’   – இத்தகைய அகண்டமான கற்பனையைகவிக்குக் கவிஎன்று சொல்லப்படும் ஷெல்லி முதலியவர்களின் வாக்குக்கு வெளியே காண்பது கடினம்.

 

கி.சந்திரசேகரன்:- பாரதியின்ஞாயிறுஎன்ற வசன காவியத் துணுக்குகளை வாசித்தால் வேதபாஷை நடையையும் வேத இலக்கியத்தின் சுடர்ப் பொறிகளையும் அவன் தனதாக்கிக் கொண்டிருப்பது தெளிவாகும்.

அமுதன்:- பாரதி தமிழின் உயிருக்கு உயிராகியவர். தமிழ் உயிர் திரண்டு உருண்டு உருவாகிய போது, பாரதி ஆயிற்று.

 

சங்கு சுப்ரஹ்மண்யன்:- அவரது வாழ்க்கையின்று என்னைப் போன்றவர்களுக்கு ஒரு படிப்பினை உண்டு.’எத்தகைய துன்பங்களுற்றாலும், பட்டினி கிடந்தாலும் தேசப் பணியையும், தாய்மொழித் தொண்டையும் மறக்கலாகாதுஎன்பதே அந்தப் படிப்பினை. (‘சுதந்திரச் சங்குசென்னை 9-9-1931 இதழில் எழுதியது)

 

அருமையான கண்ணோட்டங்கள்

பாரதியார் கவிநயம். பாரதியார் பாநலம், பாரதியும் வேதாந்தப் பேழையும், பாரதியாரின் வாழ்க்கைத் தத்துவம், பாரதியார் கவிதை, கவிதை ரஸாயனம், பாரதியும் விஞ்ஞானமும், பாரதி நடந்த பாதை, பாரதியின் மந்திரக் கவிகள் என்பன போன்ற தலைப்புகளைப் பார்த்தாலேயே பாரதியாரை அறிஞர்கள் எத்தனை விதமாகப்பார்த்துள்ளார்கள் என்பதை உணரலாம். ராஜாஜி முதல் தென்னாப்பிரிக்கா டர்பன் எஸ்.முனுசாமிப் பிள்ளை வரை பாரதியாரை நன்கு அறிந்தவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளனர் என்பது ஒரு தனிச் சிறப்பு.

 

பாரதி ஆர்வலர்கள் ஒவ்வொரு கட்டுரையாக பல்வேறு பழைய இதழ்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? முடியாது.

அற்புதமான இந்த கட்டுரைக் கோவையை ரா..பத்மநாபன் போன்ற பாரதி பக்தர் ஒருவராலேயெ தொகுக்க முடியும். அவருக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப் பட்டுள்ளது.

 

பாரதி ஆர்வலர்களுக்கான இன்றியமையாத ஒரு நூல்: ”பாரதியார் கவிநயம்

*******

Leave a comment

Leave a comment