கார்பன் மானாக்ஸைடு தரும் அபாயம்! (POST No. 2333)

co metre

Radio Talk written by S NAGARAJAN

Date: 16 November 2015

POST No. 2333

Time uploaded in London :– 9- 31 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

carbon-monoxide-alarm-199357

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015; Part 2 posted on 7th ;Part 3 on 8th nov.Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov.; Part 6- 12th; Part- 7- 13th.Nov.;part 8 on 14th nov.;part 9 on 15th nov.

 

வாகனக் கழிவாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மானாக்ஸைடு ஒரு நச்சு வாயு. சிகரட் புகைக்கும் போதும், மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்தும் கூட இந்த நச்சு வாயு வெளிப்படுகிறது.

அபாயகரமான இந்த வாயு சுவாசத்தின் போது உள்ளே சென்றால் தலைவலி, கிறுகிறுப்பு, தடுமாற்றம், நினைவாற்றல் இழப்பு, வாந்தி எடுத்தல், சுவாசிப்பதில் சிரமம்,மார்பு வலி, நினைவற்று கோமாவில் இருத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

CarbonMonoxideDetectorBG_hero_image

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதாக இந்த வாயுவினால் வீட்டிலும் வெளியிலும் பாதிக்கப்படுவதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.

சமையலுக்காக வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்டவ்வுகள் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்தாத ஸ்டவ்வுகளாக இருப்பது அவசியம்.

வீட்டில் கார் காரேஜில் நின்ற நிலையிலேயே வெகு நேரம் கார் எஞ்சினை இயக்காமல் இருக்க வேண்டும். காரின் எஞ்சின்களை கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றாத தரக்கட்டுப்பாடு நிலையில் உருவாக்கப்பட்டதா என்று சோதித்து கார்களை தெரிவு செய்ய வேண்டும்.

சிகரட்டை புகைக்கும் ஒருவர் தனக்குக் கெடுதலைச் செய்து கொள்வதோடு அருகில் உள்ள மற்றவருக்கும் கார்பன் மானாக்ஸைடை வெளிப்படுத்துவதன் மூலம் கேடு விளைவிக்கிறார். ஒரு பாக்கட் சிகரட்டை புகைக்கும் ஒருவருக்கு கார்பன் மானாக்ஸைடின் அளவு இருபது பார்ட்ஸ் பர் மில்லியன் (0 parts per million)என்ற அபாய அளவில் இருக்கிறது.கார்பன் மானாக்ஸைடு நுரையீரல் வழியே ரத்தத்தை அடைந்து ஹீமோகுளோபினுடன் கலக்கிறது. உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் ரத்தத்தின் திறனைக் குறைக்கிறது. கார்பன் மானாக்ஸைடின் அளவு ஒருவரின் ரத்தத்தில் அதிகமாகும் போது அவரது ரத்தம் ஆக்ஸிஜனை ஏந்திச் செல்லும் திறனில் குறைவு படுகிறது. நாளாக நாளாக இதய வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளை உருவாக்குகிறது.

ஆகவே சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்கும் வாகனப் புகை வெளியேற்றத்தைத் தடுப்பதும், வீட்டிலும் வெளியிலும் புகை பிடிப்பதால் ஏற்படும் கார்பன் மானாக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுப்பதும் வளி மண்டலத்தைச் சுத்தமாக்க உதவும் வழிகளாகும்.

கார், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்துவோம். புகை பிடிப்பவரிடம் கார்பன் மானாக்ஸைடு தீமைகளைக் கூறி அவரைக் காப்பாற்றும் செயலையும் செய்ய ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் முயல வேண்டும். ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலுக்கும், இல்லச் சூழலுக்கும் எதிரியான கார்பன்மானாக்ஸைடு நச்சுப் புகையைத் தவிர்ப்போம்; வாழ்வை வளமாக்குவோம்!

To be continued……………………………..

Leave a comment

Leave a comment