கார்பன் தரும் சவால்! Post No. 2353

factory-smoke-pollution-g-001

Radio Talk written by S NAGARAJAN

Date: 23 November 2015

Post No. 2353

 

Time uploaded in London :– 6-14 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஒளிச்சேர்க்கை எனப்படும் PHOTOSYNTHESIS மூலமாகவே ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பூமியின் வளி மண்டலம் அமைந்துள்ளது ஆனால் அற்புதமான இந்த வளி மண்டலத்தை நச்சுப் புகையை அதிகமாகக் கக்குவதன் மூலம் மாசு படுத்துகிறோம்.மரங்கள் இயற்கையாகவே கார்பனை உறிஞ்சி ‘இயற்கைச் சமநிலையை’ ஏற்படுத்தினாலும் கூட  செயற்கையாக மனிதன் வெளிப்படுத்தும் கார்பன் இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அளவு அதிகமாக இருக்கிறது.

 

 

கார்பன் CARBON அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை ஆராய பன்னாட்டு விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை ஐரோப்பிய கமிஷன் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆப்பிரிக்காவில் வளரும்  இரோகோ (IROKO) என்ற ஒரு மரம் MICROBES எனப்படும் சில நுண்ணுயிர்களுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ள புகையை சுண்ணாம்பாக மாற்றுகிறது என்பதை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்துள்ளது.

 

 

புவி வெப்பமாதல் எனப்படும் குளோபல் வார்மிங் Global Warming  அபாயத்தால் உலகெங்கும் உள்ள காடுகள் தாங்கள் மண்ணில் சேமித்து வைத்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் இது தக்க ஒரு மாற்றாக அமையும் என்பது  நல்ல செய்தி. வறண்ட அமில மண்ணில் இந்த மரங்கள் நடப்பட்டால் மண்ணில் காணப்படும் கால்சியத்துடன் கார்பன் டை ஆக்ஸைடைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட கனிமத்தை இரோகோ மரங்கள் உருவாக்குகின்றன. இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப்புகையினால் மாசு படுத்தப்படும் வளி மண்டலம் சுத்தம் செய்யப்படுகிறது. சிலவகை பாக்டீரியாக்களுடனும் காளான்களுடனும் இது உரிய முறையில் சேர்க்கப்பட்டால் இந்த மரம் உருவாக்கும் கனிமம் சுண்ணாம்பாக மாறுகிறது பொலிவியா, ஹைதி, இந்தியா ஆகிய நாடுகளில் இப்போது கார்பன் சவாலைச் சமாளிக்க இந்த இரோகோ மரங்களை நட்டு சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Igi-Iroko

 

இந்த மரம் தொழிலகத் திட்டங்களுக்குப் பயன்படுவதோடு இதனால் உருவாகும் சுண்ணாம்பின் மூலம் ஒரு ‘பயோ சிமெண்டை’ உருவாக்கவும் இப்போது அறிவியல் ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

இந்த இரோகோ மரத்தை ஆப்பிரிக்காவின் தேக்கு மரம் என்று ஆப்பிரிக்கர்கள் கூறுகின்றனர். அத்தோடு அதை வெட்டி வீட்டு உபயோகத்திற்காக அனாவசியமாகப் பயன்படுத்தினால் பயன்படுத்துபவருக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

 

இது போன்ற மரங்களை இனம் கண்டு கார்பன் சவாலைப் புது விதமாக நவீன அறிவியல் முனைந்திருப்பது உலக மக்கள் அனைவரும் வரவேற்கும் ஒரு நல்ல செய்தி தானே!

iroko 2

iroko tree

***

Leave a comment

Leave a comment