
Radio Talk written by S NAGARAJAN
Date: 25 November 2015
Post No. 2359
Time uploaded in London :– 6-00 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
LED – LIGHT EMITTING DIODE- எல்.ஈ.டி அல்லது லைட் எமிட்டிங் டையோட் என்று அழைக்கப்படும் ஒளியீரி அல்லது ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் நீண்ட காலம் உழைக்கும் வல்லமை பெற்றவை. அன்றாடம் நாம் வழக்கமாக உபயோகிக்கும் incandescent bulb எனப்படும் வெப்பத்தால் ஒளி விடும் கனலொளிர் விளக்குகளை ஒப்பிடும் போது காம்பாக்ட் ப்ளோரெஸெண்ட் விளக்குகள் 35000 மணி நேரங்கள் அதிக பட்சமாகவும் 10000 மணி நேரம் குறைந்தபட்சமாகவும் வடிவமைப்புக்குத் தக்கபடி ஒளிர்கின்றன. இது சம்பிரதாயமான பல்புகள் அதிகமாக எரியும் 2000 மணி நேரம் அல்லது குறைந்தபட்சமாக எரியும் 750 மணி நேரத்துடன் ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம் என்பது தெளிவாகப் புலப்படும்.
சாமான்யனுக்கான எளிமையான விளக்கமாக இதைக் கூற வேண்டுமெனில் ஒளியுமிழ் இரு முனைய விளக்குகள் அதாவது உரிய வடிவமைப்புடன் கூடிய எல்.ஈ.டி விளக்குகளை ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஒருவர் பயன்படுத்தினால் அதை இருபது வருடங்களுக்குப் பின்னால் மாற்றினால் போதும். ஒரு ஒளியுமிழ் இரு முனைய விளக்கானது காலப் போக்கில் அதன் பிரகாசத்தை இழக்கிறது. அதன் ஆரம்பகால பிரகாசத்தில் 70 விழுக்காடு குறைந்து விட்ட நிலையில் அதை மாற்றினால் மட்டுமே போதும். இதனால் பராமரிப்புச் செலவும் குறையும்.
சம்பிரதாயமான பல்புகளை ஒப்பிடும் போது இந்த ஒளியுமிழ் இரு முனைய விளக்கானது 80 முதல் 90 விழுக்காடு ஆற்றல் திறனை உடையது. சம்பிரதாயமான பல்புகள் 20 விழுக்காடு ஆற்றல் திறனையே உடையது.
அத்தோடு ஒரு சிறிய ஒளியுமிழ் இரு முனைய விளக்கு 25 கனலொளிர் விளக்கை ஈடு செய்வதால் மாசில்லா சூழ்நிலை ஏற்படுத்துகிறது. அனைத்து இல்லங்களிலும் தொழிலகங்களிலும் இந்த விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டால் பூமி எவ்வளவு பசுமையாக ஆகி விடும்! சிந்திப்போம் செயல்படுவோம். ஒளியீரி விளக்குகளுக்கு உடனடியாக மாறுவோம்!
***
You must be logged in to post a comment.