பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது! (Post No. 2385)

atom bomb

Radio Talk written by S NAGARAJAN

Date: 13 Decemberember 2015

Post No. 2385

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

  1. நான்கு அணுகுண்டுகள் வெளிப்படுத்தும் வெப்பம் அளவு பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது!

 

     சமீபத்தில் (2013ஆம் ஆண்டு ஜூன் மாதம்) ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பூமியின் வெப்பம் அதிகரிப்பதைப் பற்றி எச்சரித்து பிரபல விஞ்ஞானியான ஜான் குக் ஒரு பெரும் எச்சரிக்கையை விடுத்தார்.        

 

 

   க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள க்ளோபல் சேஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் (Global Change Institute) பணியாற்றும் இவர் தது உரையில் பூமியில் இப்போது விநாடிக்கு விநாடி அதிகமாகும் வெப்பத்தின் அளவானது ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்ட அணுகுண்டானது வெளிப்படுத்திய வெப்ப அளவைப் போல நான்கு மடங்கிற்குச் சமம் என்று தெரிவித்தார்.அதாவது நான்கு அணுகுண்டுகளை ஒவ்வொரு விநாடியும் போட்டால் எவ்வளவு வெப்பம் உண்டாகுமோ அவ்வளவு வெப்பம் உருவாகிறது பூமியில்! இதற்குக் காரணம் மனிதன் க்ரீன்ஹவுஸ் வாயு எனப்படும் கார்பன் வாயுவை மிக அதிகமாக வெளிப்படுத்துவதே ஆகும்.

 

 

      பூமி அதிக வெப்பமாக ஆகிக் கொண்டே வருவதற்கான காரணங்களில் மனிதன் வெளிப்படுத்தும் கார்பனே முக்கியமானதும் முதலாவதுமான காரணமாக அமைகிறது. பூமியின் வெப்பத்திற்கு மனிதன் எவ்வளவு காரணமாக அமைகிறான் என்பதை ஆராயப் புகுந்த போது அனைத்து வெப்பத்திற்கும் அவனே காரணம் என்பது  தெரிய வருகிறது.

 

 

    கடந்த 20 ஆண்டுகளாக பூமி வெப்பமாதல் பற்றிய ஆராய்ச்சி நடத்தி வரும் விஞ்ஞானிகளில் 97 சதவிகிதம் பேர் இதை ஆமோதித்திருப்பதாக ஜான் குக் கூறினார்.’

 

 

     இப்படி அதிகமாக வெளிப்படுத்தப்படும் வெப்பத்தில் 90 சதவிகிதம்  பெருங்கடல்களைச் சென்று அடைகிறது. நிலம், பனிப் பரப்பு, மற்றும் மிருகங்களின் மீது ஏற்படும் விளைவுகள் ஆகிய அனைத்தையும் தெரிவிக்கும் இயற்கையான உஷ்ணமானி போல அமையும் கடல்கள் இந்த உஷ்ணநிலை உயர்வை நமக்கு அறிவிக்கின்றன.

 

 

    மனிதர்கள் அபாயமான இந்த விளைவை நன்கு உணர்ந்து கார்பன் அளவைக் கட்டுப் படுத்தும் முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

 

 

    ஆகவே ஒவ்வொருவரும் கார்பனை வெளிப்படுத்தப் பெரிதும் காரணமாக  அமையும் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய படிப்பினை ஆகும்.

 

******** 


Leave a comment

Leave a comment