
Written by S Nagarajan (written for AIR)
Date: 7 March 2016
Post No. 2606
Time uploaded in London :– 8-44 AM
( Thanks for the Pictures;
படங்கள் வெவ்வேறு இடங்களிருந்து எடுக்கப்பட்டவை;நன்றி )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
உலகில் மாறி வரும் தட்பவெப்ப மாறுபாடுகள் அனைவருக்கும் கவலையளிக்கும் ஒரு பெரிய விஷயமாக ஆகி கொண்டு வரும் நேரத்தில் இமயமலைக் காடுகளைப் பற்றிய சமீபத்திய செய்தி ஒன்று அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சமீபத்திய ஆய்வு ஒன்று கிழக்கு இமாலயப் பகுதி பழுப்பு நிறமாக ஆகிக் கொண்டு வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை முன் வைக்கிறது! அதாவது இமயமலைக் காடுகளில் பச்சைப் பசேலென அழகுடன் திகழ்ந்து வந்த மரங்கள் பழுப்பு நிறமாக மாறி வாடி வருகின்றன என்பதே இதன் பொருள்!
சாதாரணமாக வளம் கொழிக்கும் நாட்களில் கூட இவை பசுமை இழந்து வருகின்றன என்பது ஆய்வு தரும் செய்தி!
1982ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு முடிய எடுக்கப்பட்ட சாடலைட் காட்சிச் சித்திரங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1990 ஆம் ஆண்டு வரை பசுமையாகக் காட்சி அளித்த இமயமலைக் காடுகளின் மரங்கள் திடீரெனத் தங்கள் பசுமையை இழந்து ஒளி இழந்து வாடும் காட்சிகளை அதற்குப் பின்னர் காண்பித்தன. இவை வறண்டு பட்டுப் போவதாலேயே பழுப்பு வர்ணமாக மாறி வருகின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்திய க்ளோபல் சேஞ்ஜ் பயாலஜி ஜர்னலில் (Global Change Biology Journal) வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு இமாலயப் பகுதி காடுகளில் உள்ள மரங்கள் ஒளிச்சேர்க்கை இல்லாமல் வாடுவதையே இது குறிக்கிறது. இதன் மூல காரணம் புவி வெப்பமயமாதலே ஆகும். நாளுக்கு நாள் உஷ்ணம் அதிகமாகிக் கொண்டே போவதால் அதன் நேரடி விளைவுகளில் ஒன்றாக நமதுக் காட்டுச் செல்வமும் அழிய ஆரம்பிப்பதையே இது காட்டுகிறது!
வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே புவி அதிக வெப்பமயமாவதற்கான காரணம் என்பதால் உடனடியாக வாகன நச்சுப் புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தல் நமது தலையாய கடமை ஆகும்!
********
You must be logged in to post a comment.