பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்! (Post No 2653)

vivekananda saffron

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 22 March 2016

 

Post No. 2653

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

விவேகானந்தர் வழி

 

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்!

 

ச.நாகராஜன்

 

கல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும்  துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.

அது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்.

 

 

இதைத் தொடர்ந்து தனது அனுபவம் ஒன்றையும் அவர் கூறலானார்.

 

அவர் மேலை நாட்டுக்குச் செல்கையில் கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவ்ரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர். வாதம் ஆரம்பமானது.

 

 

தங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.

 

 

வசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை. ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.

சிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில் , :”இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.

 

ஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே!

 

நடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா! என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.

 

ஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.இதைக் கூறி முடித்த ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.

 

அந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

“நன்றாய் சொன்னாய், சின்ஹா! நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் ம்தத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண்டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.. ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய்? எங்கே உன் மதப்பற்று? எங்கே உன் தேசபக்தி? ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?” என்று கேட்டார்.

 

ஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

அதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.

 

 

ஸ்வாமிஜி கூறிய வழியில் நடக்க வேண்டியது நமது கடமை!

************

 

Leave a comment

5 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    ஸ்வாமி விவேகானந்தரின் வழியைப் பின்பற்றுவதானால், இன்று முதலில் ராமக்ருஷ்ண மடத்துத் துறவிகளின் காலரைத்தான் பிடிக்கவேண்டும்! ஏனெனில் அவர்கள் தான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ஹிந்து அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள்! மேலும் கிறிஸ்தவர்கள் இன்றளவும் செய்து வரும் மதமாற்றத்தைக் கண்டுகொள்ளாமல் எல்லாமதமும் சமமே என்றெல்லாம் கூட்டம் கூட்டிப் கூவிப் பிதற்றுகிறார்கள்! எல்லோருக்கும் குல்லா போடுவதற்காக ஸ்வாமிஜியின் ஆணித்தரமான கருத்துக்களை வெளியிடாமல் அமுக்குகிறார்கள்! முந்தைய UPA சர்க்காரிடம் 100 கோடி ரூபாய் மானியம் பெற்றுக் கொண்டவர்கள் இந்த அளவாவது விஸ்வாசம் காட்டவேண்டாமா?

  2. Yogesh B's avatar

    Yogesh B

     /  March 22, 2016

    Jai hind

  3. Raghavan Narayanasamy's avatar

    Raghavan Narayanasamy

     /  March 22, 2016

    Dear sir, excellent article. As vivekananda said why hindus are like this.
    What measure we have to take to prevent this. What is preventing us from
    ban the conversion.

  4. Tamil and Vedas's avatar

    Thanks for all your valid and interesting comments.
    I and my elder brother S Nagarajan are keenly following your comments.

  5. Tamil and Vedas's avatar

    Thanks for your comments.

Leave a comment