
Green Sea Turtle. Chelonia mydas. Maui, Hawaii, USA.
Written by S NAGARAJAN
Date: 27 March 2016
Post No. 2668
Time uploaded in London :– 9-59 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

மெக்ஸிகோவைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர் எல் ஹிஜோ டெல் சான்டோ (El Hijo del Santo) புதிய யுத்தம் ஒன்றில் ஈடுபட்டு உலகத்தினரிடையே பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
இந்த யுத்தம் நீரில் வாழும் ஆமைகளை வேட்டையாடுவோரையும் கடல் வாழ் திமிங்கிலங்களை அழிப்போரையும் எதிர்த்துச் செய்யும் யுத்தம்.
முகமூடியை அணிந்து மல்யுத்த அரங்கத்தில் எதிரியுடன் சண்டை செய்து வழக்கமாக வெற்றியையே பெறும் இந்த வீரர் முகமூடி இல்லாமல் நேருக்கு நேர் கடல் வாழ் உயிரினங்களைக் காக்கச் செய்யும் போர் அனைவருக்கும் முன் உதாரணமாக இலங்குகிறது.
டிஜுவானா என்ற நதி வடமேற்கு மெக்ஸிகோவில் ஓடுகின்ற நதி. இந்த நதியில் குப்பைகளும், கழிவு நீரும் சேர்வதைக் கண்டு மனம் பொறாத அவர் இப் பகுதி வாழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதைத் தனது தலையாய பணியாக மேற்கொண்டார். “மல்யுத்தம் செய்வதை விட சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை எதிர்த்துப் போர் புரிவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.இதில் அனைவரும் சேர வாரீர்” என்கிறார் அவர்.
கடலில் வாழும் திமிங்கிலங்களும் ஆமைகளும் பெருமளவில் அழிந்துபட்டு வருவதைக் கண்ட அவர் அவற்றிற்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும் அவரது குரலைக் கேட்ட பல்லாயிரக்கணக்கானோர் அவருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆமைகளை உணவாகச் சாப்பிட வேண்டாம் என்ற அவரது வேண்டுகோளை ஏற்று கடல் ஓரமாக ஒதுங்கும் ஆமைகளைப் பிடித்து உணவாக உண்பதை மெக்ஸிகோ மக்கள் தவிர்க்க ஆரம்பித்ததோடு ஆமை முட்டைகளையும் கூட காப்பாற்ற ஆரம்பித்து விட்டனர். மெக்ஸிகோ அரசு இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்ட போதிலும் கூட மல்யுத்த வீரரின் ஈடுபாடு காரணமாக கடந்த 50 ஆண்டு காலமாக வெகு வேகமாக அழிந்து வந்த இந்தக் கடல் வாழ் உயிரினம் இன்று காப்பாற்றப்பட்டுள்ளது.
மலைக்க வைக்கும் தொகையான் எட்டு லட்சம் டாலர் தொகையுடன் ஆமைகளையும் திமிங்கிலங்களையும் காக்க இறங்கிய அவரது பணி மாபெரும் வெற்றி பெற்று உலகத்தினருக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்து விட்டது. மல்யுத்த வீரரின் புதிய யுத்தத்தில் மக்களும் ஈடுபட்டு வெற்றி பெற்றது ஒரு புதிய சுவையான செய்தி தானே!
You must be logged in to post a comment.