ஒரு நடிகையின் விநோத ஆசை!

sarah-bernhardt-5

Compiled by London swaminathan

Date: 18 April 2016

 

Post No. 2736

 

Time uploaded in London :–  20-58

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சென்ற நூற்றாண்டின் புகழ் பெற்ற நாடக நடிகை சாரா பெர்னார்ட். அவர் நோவாய்ப்பட்டு படுத்த படுக்கையாய்க் கிடந்தார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியவுடன் நடிப்பதையே விட்டுவிட வேண்டுமென்று  டாக்டர்கள் அறிவுரை பகன்றனர்.

ஆனால் அவரோ, படுக்கையை விட்டு எழுந்தவுடன் மீண்டும் நடிப்புத் தொழிலுக்கு வந்தார்.

Sarah-Bernhardt-portrait

இவ்வாறு அவர் மீண்டும் நடிக்க வந்தவுடன் ரசிகர்களுக்கு பரம சந்தோஷம். ஒரு பணக்கார ரசிகர் அவரிடம் ,நேரில் போய் உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? சொல்லுங்கள்; எதைக் கேட்டாலும் செய்கிறேன் என்றார். அவரும் தயங்காமல் எனக்கு ஒரு சவப்பெட்டி வேண்டும். நான் நடிக்கத் துவங்கினால், எந்த நிமிடமும் சாவு நேரிடும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள் என்றார். அந்த ரசிகரும் கொஞ்சமும் தயங்கவில்லை. அதற்கு ஏற்பாடு செய்தார்.

 

அந்த ஊரிலேயே மிகவும் புகழ்பெற்ற, மரணக்கிரியை அலுவலத்திலிருந்து நடிகைக்கு தகவல் வந்தது. உங்களுக்கு சவப் பெட்டி செய்யும்படி எங்களுக்கு ஒரு ‘ஆர்டர்’ வந்துள்ளது. உங்களுக்கு எந்த மாதிரி சவப்பெட்டி வேண்டும் என்று சொல்லுங்கள்.

 

உடனே நடிகை சாரா, எனக்கு நல்ல கருங்காலி மரத்தில் சவப்பெட்டி செய்து, அதற்கு வெள்ளியில் கைப்பிடிகள் வையுங்கள் என்றார். சிறிது காலத்துக்குப் பின்னர், அந்த வெள்ளி கைப்பிடிகள், தங்கக் கைப்பிடிகளாக மாற்றப்பட்டன.

இவ்வாறு சவப்பெட்டி செய்யப்பட்ட பின்பும் அவர் நீண்ட நாட்கள் உயிரோடிருந்தார். ஆனால் ஒரு போதும் சவப்பெட்டியைவிட்டு அவர் அகலவேயில்லை. அவருடைய கால் மாட்டிலேயே ஒரு ஸ்டாண்டில் அந்த சவப் பெட்டி வைக்கப்படிருந்தது. அவர் எங்கு சுற்றுப் பயணம் செய்தாலும், அந்த சவப்பெட்டியும் அவர் பின்னாலேயே கொண்டு செல்லப்பட்டது!

ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்டபோது அவர் சொன்னார்: “என்னுடைய பூத உடல் விரைவில் மண்ணோடு மண்ணாகிவிடும். ஆனால் என் புகழ் என்றும் நீடிக்கும்” என்றார்.

Xxx

hippopotamus-meat-1

நீர்யானை!!!

லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பெண்மணி வந்தார். நீர் யானை இருக்கும் பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பாதுகாவலரிடம் கேட்டார்:-

ஐயா, இந்த நீர் யானை பெண்ணா? ஆணா?

விலங்கின் பாதுகவலர் சொன்னார்:

அம்மணி! இது என்ன கேள்வி. அது ஆணா, பெண்ணா என்பது இன்னொரு நீர்யானை கண்டறிய வேண்டிய விஷயம்” என்று!

Xxx சுபம் xxx

 

Leave a comment

Leave a comment