ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை (கட்டுரை எண். 2814)

ராம சீதா

Written by london swaminathan

 

Date: 15 May 2016

 

Post No. 2814

Time uploaded in London :–  17-24

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ராமரும் லெட்சுமணரும் வனவாசத்துக்குப் புறப்பட்டனர். சீதையுடன் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் பஞ்சவடி என்ற இடத்தை அடைந்தனர். ஐந்து ஆலமரங்கள் அழகாக ஒரே இடத்தில் இருந்ததால் அந்த இடத்துக்கு சம்ஸ்கிருதத்தில் பஞ்சவடி ( தமிழில் 5 ஆலமரம்) என்று பெயர்.

 

அங்கே பர்ணசாலை அமைக்க தீர்மானித்தனர் (இலைகளால் வேயப்படும் குடிசைக்கு பர்ணசாலை என்று சம்ஸ்கிருதத்தில் பெயர்). இங்கே பர்ணசாலை அமைக்க, இந்த இடத்துக்குச் சொந்தக்காரரைச் சந்தித்து அனுமதி பெற்று வா என்று லெட்சுமணனை ராமபிரான் அனுப்பினார்.

 

லெட்சுமணன், அந்த இடத்தின் சொந்தக்காரரைத் தேடிப்போகையில் ஒரு மரத்துக்கு அடியில் ஒரு சிறு உருவம் தோன்றியது. அவர்தான் அந்த இடத்தின் சொந்தக்காரர் என்று லெட்சுமணன் நினைத்தான். அவரிடம் அனுமதி பெறுவதற்காக அவன் அங்கே தியானத்தில் அமர்ந்தான். அவனது தியானத்தில் ஒரு உருவம் பற்றிய வருணனை மனக் கண்கள் முன்னால் வந்தது. அதாவது குணம் குறியுடையதாக ஒரு உருவம் கையால் நாக்கை இழுத்துப் பிடிப்பது போலும், மற்றொரு கையால் கௌபீனத்தை (கோமணத்தை) இழுத்துப் பிடிப்பது போலும் கண்டான். தியானம் முடிந்தவுடன் ராமனிடம் வந்து தான் கண்ட காட்சியைச்சொன்னான்.

RAMA ARCH

இராமன் உடனே நமக்கு உத்தரவு கிடைத்துவிட்டது. நாம் குடிசை அமைக்கும் பணியைத் துவக்கலாம் என்றான்.

எப்படி அண்ணா, உத்தரவுகிடைத்தது என்று நினைக்கிறாய்? என்று இளவல் (தம்பி) வினவினான்.

 

நாக்கை இழுத்துப் பிடிக்கும் காட்சி– எவனுக்கு சுவையையும், சொல்லையும் அடக்கி ஆளும் திறன் உண்டோ என்பதையும் கோமணத்தை இழுத்துப்பிடிக்கும் காட்சி— எவனுக்கு காமத்தை அடக்கி ஆளும் திறன் உண்டோ — அவனுக்கு எங்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதையே காட்டுகிறது என்று ராமன் விளக்கினான். நாம் அந்நெறியில் பிறழாது வாழ்வதால் நமக்கு உத்தரவாகிவிட்டது என்றான்.

 

இருவரும் குடில் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்தனர்.

‘யா காவாராயினும் நா காக்க’ – என்ற வள்ளுவன் சொல்லும், ‘இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்’ – என்ற பெரியோர் வாக்கும் இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.

 

ஆனந்த ராமாயணம்

‘300 ராமாயணம்’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் நூல் எழுதினார். ஆனால் நான் பிரிட்டிஷ் லைப்ரரிக்கு போகும் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தமிழ் ராமாயணம் கிடைத்து வருவதைப் பார்க்கையில் 3000 ராமாயணங்கள் இருக்கலாம் என்று எழுதினேன். சென்ற வாரம் பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்ற போது ராமஸ்வாமி அய்யர் என்பவர் பாடல் வடிவில் சில ராமாயண காண்டங்களை இயற்றி அதற்கு ‘ராமஸ்வாமீயம்’ என்று பெயர் கொடுத்திருப்பதைக் கண்டேன். அந்த நூலின் சில பக்கங்களையும் அட்டையையும் ‘பேஸ்புக்கில்’ வெளியிட்டேன்.

 

ஆனந்த ராமாயணம் என்பது வால்மீகி, கம்பன், துளசி ராமாயணம் அளவுக்குப் பிரசித்தமாகவில்லை. இதையும் வால்மீகி இயற்றினார் என்றே சொல்லுவர். இதில் ஒன்பது காண்டங்களும் 12,252 ஸ்லோகங்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. வால்மீகி ராமாயணத்தில் காணப்படாத பல விஷயங்களும் கதைகளும் இதில் இருக்கின்றன.

-சுபம்-

 

Leave a comment

Leave a comment