
மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 2
Research Article written by London swaminathan
Date: 15 July 2016
Post No. 2974
Time uploaded in London :– 17-59
( Pictures are taken from various sources; thanks)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Please read the first part published yesterday, where there is a detailed introduction
(( முதல் படம் “போர் அபோர்” இன மக்கள், பெண்ணின் படம். வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் இனம். தலைமுடியை, ஆண்கள் கிராப் வெட்டுவது போல வெட்டிக்கொள்வர். ஏராளமான பாசிமணி, விலை மதிப்பு குறைந்த நீலக்கற்கள், பச்சைக்கற்கள் உடைய நகைகளை அணிவர்.))
பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் –
மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 1 கட்டுரையைப் படித்துவிட்டு இந்த இரண்டாவது கட்டுரையைப் படிக்கவும்.
உலகம் முழுதும் பழங்குடி மக்கள் மரபு அல்லது ஜாதி அல்லது குலச் சின்னங்களை (TOTEM SYMBOLS) வைத்திருக்கின்றனர். இந்த சின்னங்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே இருக்கிறது. ஆனால் நாகரீக முன்னேற்றம் காரணமாக அவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதாவது அப்பொழுதே இந்திய சமுதாயம் அவ்வளவு முன்னேறிவிட்டது.
ஆனால் இன்று பழங்குடி மக்கள், நாகரீக சமுதாயத்துக்கு இடையே எப்படி வாழ்கின்றனரோ, அப்படி இதிஹாச காலத்திலும் பழங்குடி மக்கள் வாழ்ந்தனர். ராமாயண கலத்தில், கு ரங்கைச் சின்னமாகக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அவர்களின் மன்னரே வாலி, சுக்ரீவன். அதே காலத்தில் கரடிச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவனே ஜாம்பவான். அதே காலத்தில் கழுகுச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவரே ஜடாயு. இவை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததால், நமது புராண, இதிஹாச எழுத்தர்கள் அவர்களைக் குரங்கு, கரடி, கழுகு என்று சித்தரித்துவிட்டனர்.
இதற்குப் பின்னர், மஹாபாரத காலத்தில், கிருஷ்ணனும் அர்ஜுனனும், நாகர்கள் வாழ்ந்த காண்டவ வனத்தை எரித்தபோது, நாகர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல தலைமுறைகளுக்கு நீடித்து, ஜனமேஜயன் காலத்தில் சர்ப்ப யாகம் நடந்து, பின்னர் ஆஸ்தீகர் என்பவர் மூலம் சமரச ஒப்பந்தம் நடந்தது. இதை இன்றும் பிராமணர்கள் தினமும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லி நாகர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். இந்த நாகர் இன மக்களை, பாம்பு என்று நமது புராணிகர்கள் முத்திரை குத்திவிட்டனர். நாகர்கள் பின்னர் அமெரிக்கா சென்று மாயா, ஆஸ்டெக் நாகரீகத்தை நிறுவினர். இது பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். காண்டவ வனம் என்பதை, அர்த்தமே புரியாமல், வெளிநாட்டினர், கோண்ட்வானா (காண்டவ + வன) என்று சொல்லி வருகின்றனர்.
மஹாபாரதத்தில் அயு என்ற மன்னனுக்கும் தவளை இனத்துக்கும் நடந்த சண்டை பற்றி கதை உள்ளது. உண்மையில் அது தவளைகள் அல்ல; தவளையை மரபுச் சின்னமாகக் கொண்ட மக்களே!
எங்கெங்கெல்லாம் பறவைகள், மிருகங்கள் பற்றிய கதைகள் வருகின்றனவோ அங்கெங்கெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அந்த பிராணிகளின் சின்னங்களை, மரபுச் சின்னங்களாகக் கொண்டவர்களையே.

((இரண்டாவது படம் சுலிகாடா மிஷ்மி ஆண் படம்))
மிகப் பழைய காலத்தில் இவை நடந்ததால் நாம் அதை மிருகங்கள் என்று நம்பத் துவங்கிவிட்டோம். ஆனால் வால்மீகி ராமாயணம் போன்றவற்றில் , அனுமன், நவ வியாகரணத்தில் வல்லவன், சொல்லின் செல்வன் என்றெல்லாம் வருணிகப்படும் போதே அவன் குரங்கு அல்ல, குரங்கைச் சின்னமாக உடைய வானர இனத்தில் பிறந்தவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜடாயு என்ற கழுகு இன மன்னன், தசரதனைத் தன்னுடைய தந்தை போன்றவன் என்று வருணிப்பதிலிருந்தே ஜடாயும் மனிதன் என்றும், கழுகைச் சின்னமாகக் கொண்டவன் என்றும் புரியும்.
வேதத்தில் சான்று!
மண்டூக மகரிஷி என்றால் தவளை முனிவர் என்று பொருள். ஒரு காலத்தில் அவரது முன்னோர்கள் தவளையை சின்னமாக கொண்ட மக்கள என்பது தெரிகிறது.
இதே போல, காச்யப மகரிஷி என்றால் ஆமை என்றும் ,கௌசிக மகரிஷி என்றால் ஆந்தை என்றும் அ ர்த்தம். உண்மையில் இவர்கள் எல்லாம் அந்தந்த சின்னம் உடைய பழங்குடிகளில் பிறந்தவ ர் கள். சாண்டில்ய -பறவை (வேத கால ரிஷி)
கருடன் சின்னத்தை உபயோ கித்தவர்கள், எப்பொழுதுமே நாகர்களுக்கு எதிராக இருந்தனர். உலகம் முழுதும் மெக்ஸிகோ நாட்டு கொடி முதல் பல சின்னங்களில் இதை இன்றும் காணலாம்.
மஹாபாரத, ராமா யண காலத்திலேயே தேர்களில் கொடிகளுடன் சென்ற இந்துக்கள்தான் உலகில் சின்னங்கள், கொடிகள் முதலியவற்றைத் தோற்றுவித்தவர்கள். இது பற்றியும் முன்னரே ஒரு ஆராய்ச்சி க் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
இப்போது பழங்குடி இனமக்களிடையே புழங்கும் ஜாதி/மரபுச் TOTEM SYMBOLS சின்னங்களைக் காண்போம்:–
ஒராவன் இன மக்கள்
டிர்கி- இளம் சுண்டெலி
எக்கா- ஆமை
கிஸ்போட்டா – பன்றி
லக்னா – கழுதைப் புலி
பாக் – புலி (மூலம் :- வ்யாக்ர என்ற சம்ஸ்கிருதச் சொல்)
குஜ்ரார்வ்யா- எண்ணை
ஜெடி-வாத்து
கொய்பா- காட்டு/ மரநாய்
மீஞ்சி – விலாங்கு மீன் ( மூலம் – மீனம்)
சிர்ரா- அணில்
ஒரு பழங்குடி இனத்திலேயே எத்தனை பிரிவுகள், எத்தனை சின்னங்கள் பாருங்கள்!
யாருக்கு எது சின்னமோ அதை அவர்கள் புனிதமாகக் கருதுவர்; அதை சாப்பிடவும் மாட்டார்கள்!

((இந்தப்படம் நாகா இன மக்க்ள் படம்; மணிப்புரி, குல்கி இன மக்கள் பேசும் மொழியுடன் தொடர்புடைய மொழி பேசுவர்.))
சாந்தல் இன மக்கள்
எர்கோ – எலி
முர்மு – மான்
ஹம்ஸ்டா – குள்ள வாத்து (ஹம்சம் – அன்னம்_
மாவ்டி – புல்
பெஸ்ரா – கழுகு
ஹெம்ரோன் – வெற்றிலை
சாரென் – கார்த்திகை நட்சத்திரம் (மூலம்- சரவண)
சங்க – சங்கு ( சம்ஸ்கிருதம்)
குவா – பாக்கு
கரா – எருமை
இதில் பல சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதையும் பல சொற்கள் தமிழ், சம்ஸ்கிருதச் சொற்களில் இருந்து வந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் ஒரே மொழிக்குடும்பம்தான், அதிலிருந்தே சம்ஸ்கிருதமும், பின்னர் தமிழும் வந்தன என்பதும், உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் இவ்விரு மொழிகளே தாய்-தந்தை என்பதையும் என்னுடைய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மெய்ப்பித்துள்ளேன்.
பூம்ஜி இன மக்கள்
சால்ரிசி- சால் வகை மீன்
ஹன்ஸ்டா – வாத்து (க்ஹம்ச)
லெங் – காளான்
சாண்டில்ய -ப்றவை (வேத கால ரிஷி)
ஹொம்ரோன் – வெற்றிலை
துமரங் – பூசனி
நாக் – பாம்பு (நாக)
மஹிலி இனம்
துங்ரி – அத்திப் பழம்
டுரு – டுரு புல்
காந்தி – பிராணியின் காது
ஹம்ஸ்டா – வாத்து
முர்மு – மான்
இந்த இனத்தின் பிராணிகளின், தாவரங்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத் தொடர்புடையவை.
கோரா இன மக்கள்
காஸ்யப் – ஆமை (காஸ்யப ரிஷியின் பெயர்)
சௌலா – சால் மீன்
கசிபக் – கொக்கு
ஹம்ஸ்டா – ஹம்ச
புட்கு – பன்றி
சாம்பு – காளை
கூர்மி இன மக்கள்
கேசரியா – கேசரி புல்
டரார் – எருமை
டுமுரியா- அத்தி
சஞ்ச்முகுரார் – சிலந்தி
ஹஸ்டோவர்- ஆமை
ஜல்பனுவார் – வலை
சங்கோவர் – சங்கு
கதியார்- பட்டுத்துணி
பாக்பௌவார்- புலி
இப்படி ஒவ்வொரு இனத்திலும் பல குழுக்கள்; அவர்களுக்கு பல பிராணிகள், தாவரங்கள் மரபுச் சின்னங்கள். அவர்களுடைய பெயர்களில் பல சம்ஸ்கிருத மூலச் சொற்களின் திரிபு!
ஏன் இவ்வளவு இனம்? ஏன் இவ்வளவு உட்பிரிவு? இதற்கெல்லாம் வெளிநாட்டுக் காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் பல சம்ஸ்க்ருதப் பெயர்கள்? ஒருவேளை உள்நாட்டு மக்களுடன் தொடர்பு ஏற்பட்டு மொழிக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சப்பைக் கட்டு கட்டுவர் வெளிநாட்டார். அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை — என்ற கதைதான்.
இந்தப் படத்தில் காட்டிய ஒவ்வொரு பழங்குடி இன மக்களுக்கும் ஒரு சிறப்பியல்பு, பழக்க வழக்கம் இருக்கிறது. இந்த வேறுபாடுகள் எப்படி வந்தன? எல்லா வற்றிலும் ஆரிய- திராவிட இனவெறியைப் புகுத்தும் வெளிநாட்டினர், இந்த விஷயத்தில் பேந்தப் பேந்த முழிக்கின்றனர்.
–தொடரும்
You must be logged in to post a comment.