பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம்….. ( Post No.2981)

akhand bharat

Article Written S NAGARAJAN

Date: 18 July 2016

Post No. 2981

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விப்போம்!
ச.நாகராஜன்

 

ilove my india

 

உலகத்தின் தலையாய பீடத்தில் பாரதம் இருந்தது என்பதைப் பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகவே அவற்றை மீண்டும் இங்கு கூற வேண்டிய அவசியமில்லை. ‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விக்க மஹாத்மாவை பாரதி போற்றினான்.

 
ஒளி இழந்த நாட்டிலே ஒளி கொடுக்க வா வா வா என்று அனைவரையும் அழைத்தான். வலிமையற்ற போகின்ற பாரதத்தைப் போ போ போ என்று அவன் துரத்தினான்.
அவனே கூறிய படி, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மஹிமை இல்லை!

 

 
இன்றைய பாரதத்தின் நிலை என்ன?
அறிக்கை வந்து விட்டது! பார்ப்போம்!!
உலகின் மிகச் சிறந்த நாடாக ஸ்வீடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்! ஸ்வீட் ஸ்வீடன்!! வாழ்த்துக்கள்!!!

 
மக்களின் நலனைக் காப்பதில் முதலிடம் பெற்றுள்ளது ஸ்வீடன்.
உலகில் உள்ள மனித குலத்தின் பொது நன்மையை உறுதி செய்து அதைக் காக்கப் பாடுபடுவதிலும் அது முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா???

 

 
163 நாடுகள் கணிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியா 70வது இடத்தைப் பெற்றுள்ளது.
நமக்குப் பின்னே 93 நாடுகள் உள்ளன என்று ‘பெருமை’ப்படுவதா (இன்றைய தரித்திர புத்தி அப்படித் தான் நினைக்க வைக்கும்!)

 
அல்லது நம்மை விட் 69 பேர் முந்தைய இடத்தில் இருக்கிறார்களே முய்னறு முன்னேற வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறதா! ஒளி படைத்த பாரதன் அப்படித் தான் நினைப்பான்!

 
‘தி குட் கண்ட்ரி இண்டெக்ஸ் – 2015’ (The Good Country Index – 2015) என்பது உலக நன்மைக்காக ஒரு நாடு எவ்வளவு தூரம் உழைத்து நல்லதைச் செய்கிறது, என்பதைக் காக்கும் குறியீட்டெண் ஆகும்.

 

 

விஞ்ஞானம், பண்பாடு, அமைதி, பாதுகாப்பு, காலநிலை மாறுபாடு, ஆரோக்கியம்., சமத்துவம் உள்ளிட்ட 35 குறியீடுகளைக் கொண்டு அளக்கப்பட்டு உல்கிற்கு ஒரு நாட்டின் பங்களிப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்த்து ஒரு நாட்டின் தர வரிசை இதில் நிர்ணயிக்கப்படுகிறது.

 
ஸ்வீடன் 163 நாடுகளில் முதல் இடத்தைல் பிடிக்க லிபியா கடைசியில் நிற்கிறது.
உலக அமைதிக்கான பங்களிப்பில் சீனாவிற்குக் (27) கீழே மூன்று இடங்கள் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சமத்துவம் கடைப்பிடிப்பதில் ஒரே அவலம். 124ஆம் இடத்திற்குத் தள்ளபபட்டுள்ளது.

 

akhand baharat 2
இந்தியாவின் இடம் : ஆரோக்கியத்தில் 37வது இடம், விஞ்ஞானத்தில் 62வது இடம், பண்பாட்டில் 119வது இடம், காலநிலை காப்பதில் 106வது இடம், உலக ஒழுங்கில் 100வது இடம்.
முற்பட்ட இடங்களில் இருப்பதை நினைத்துப் பெருமைப் படும் அதே வேளையில் இதர துறைகளில் மேம்பட வேண்டும் என ஒவ்வொரு பாரதீயனும் உறுதி எடுத்தால் முதல் இடத்தைப் பிடிக்க மாட்டோமா என்ன!
புகழோங்கிய பண்டைய நாளை அடைவோம்.
பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்!
வாழ்க பாரதம்!
**********

Leave a comment

Leave a comment