
Written by London swaminathan
Date: 19th August 2016
Time uploaded in London: 18-34
Post No.3074
Pictures are taken from various sources; thanks for the pictures.
சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து தோன்றிய சம்ஸ்கிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் எதிரிகளையும் கொல்லும் சக்தி உண்டு. உலகில் எத்தனையோ வகையான ஆயுதங்கள் உண்டு. ஆனால் மொழி ஆயுதம் என்பதை இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.
உண்மைக் கவிஞர்கள் கோபப்பட்டால் தங்கள் எதிரிகள் மீது சரம கவி பாடுவர். இதைப் பாடிய மாத்திரத்தில் எதிரி சுருண்டு விழுந்து இறந்து விடுவார். சிலர், பரிதாபப்பட்டு மீண்டும் அவரை உயிர்த்தெழவும் கவிதை பாடுவர். உடனே அவர் உயிர் பெற்று எழுவார். இது சாபங்கள் என்ற வகையில் வராது.
சாபங்களில் கவிதை பாடும் பணி இல்லை. சொற்களோ வாக்கியங்களோதான் இருக்கும்.சாபங்களில் இருந்து விமோசனம் பெற நீண்ட காலம் ஆகும். ஆனால் சரம கவிகளிலிருந்து விடுதலை பெறுவது உடனே நடக்கும்.
இந்தியாவில் சரம கவி சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.
காளிதாசன் — போஜராஜன் மோதல், நக்கீரர் — குயக்கோடன் மோதல், நந்திவர்மன் சம்பவம் எனப் பல உண்டு
சிவப் பிரகாச சுவாமிகள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காண்போம்.

சிவப் பிரகாசர் ஒருநாள் மணிமுத்தா நதியில் குளித்துவிட்டு வருகையில் மாஞ்சோலை வழியாக வந்தார். சோலைக்கு வெளியே இருந்த ஒரு மாமபழத்தைப் பார்த்தவுடன் இதை சிவ பெருமானுக்கு நைவேத்யம் செய்வோம் என்று எடுத்தார். அதைப் பார்த்த காவற்காரன், இவர் மாம்பழத்தைத் திருடுபவர் என்று நினைத்து அவர் ஆடையைப் பிடித்து இழுத்து வந்தான். மனம் வருந்திய சிவப் பிரகாசர் அவனைத் தண்டிக்க எண்ணி,
“அடுத்து வரும் தொண் டனுக்கா வந்தகனைத் தாளா
லடர்த்ததுவுஞ் சத்தியமேயானால் – லெடுத்ததொரு
மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி
சாங்கனிக்கா தித்தன் வரத்தான்”
என்னும் வெண்பாவைப் பாடிச் சூரியன் உதித்தவுடன் உயிர் துறக்கும்படி செய்தார்.
பொருள்:
ஒரு தொண்டனுக்காக, சிவ பெருமான், யமனைக் காலால் உதைத்த து உண்மையானால், சிவத் தொண்டனாகிய என் ஆடையை பிடித்திழுத்து வருந்தச் செய்த இந்த மஹா பாவி, ஆதித்தன் உதித்த மாத்திரத்தில் இறந்தொழியட்டும்.”
அவன் நற்கதி அடையட்டும் என்பதுவே அவருடைய உள்நோக்கம் ஆகும்.
சிவப் பிரகாசர் ஒருநாள், தன்னுடைய ஞானகுருவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஆகாயத்தில் சந்திரன் உதித்தது. அதன் அழகைக்கண்டு களித்து கவி மழை பொழிந்தார்:–
கடன் முரச மார்பக் கதிர் கயிற்றாலேறி
யடைமதி விண்கழை நின்றாடக் – கொடை மருவு
மெங்கள் சிவஞான வேந்த லிறைத்தமணி
தங்கியவே டாரகை கடாம்
இவர் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது கவி பாடத்தோன்றியது. அவர் அப்பொழுது பாடிய 40 பாடல்களும் நன்னெறி என்னும் நூலில் உள்ளன.
இவர் பாடிய நூல்களுள் மிகவும் சிறப்பானது நன்னெறி ஆகும். அதன் அழகை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.
சிவப் பிரகாசர் 35 நூல்களைப் பாடியுள்ளார்.
–Subham–
You must be logged in to post a comment.