
100 year old lady sells berries on the road!
Written by London Swaminathan
Date: 8 September 2016
Time uploaded in London: 21-34
Post No.3136
Pictures are taken from various sources; thanks.

A over 100 year old Sadhu with his incredible long hair at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal
ஒரு பந்தியில் (வரிசையில்) யார் யார் உட்கார்ந்தால் அந்த வரிசையே தூய்மையாகிவிடும், புனிதமாகிவிடும் என்று மனுஸ்மிருதியில், மனு ஒரு பட்டியல் கொடுக்கிறார். அதில் 100 வயதுக் கார்களையும் சேர்த்திருக்கிறார். அவர்கள் அனுப்பும் VIBRATIONS வைப்ரேஷன்ஸ் — எல்லோரையும் உயர்த்திவிடும். அதுவும் அவர்களை யாருடன் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கையில் 100 வயதானவர்களின் மதிப்பு இன்னும் உயர்கிறது!
அவர்களுக்கு “பங்தி பாவனாள்” என்று பெயர்
ஆக்ரயா: சர்வேஷு வேதேஷு சர்வ ப்ரவசனேஷு ச
ஸ்ரோத்ரியான் அன்வயஜா: ச ஏவ விக்ஞேயா: பங்க்திபாவனா:
வேதார்த்தவித்ப்ரவக்தா ச ப்ரஹ்மசாரி சஹஸ்ரத:
சதாயுஸ்சைவ விக்ஞேயா: ப்ராஹ்மணா: பங்க்திபாவனா:
—மனு 3- 184-186
வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், அதன் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= ஷடங்கம்=சடங்கு) அறிந்தவர்கள், அவர்கள் வம்சத்தில் பிறந்தவரகள், ஆகியோர் வரிசையைப் புனிதப்படுத்துவர்.
குருவினிடத்தில் வேதப் பொருளை அறிந்தவன், அதைச் சொல்லிவைப்பவன், பிரம்மச்சாரி, ஆயிரம் பசுக்களை தானம் செய்தவன், நூறு வயதானவன் ஆகியோரும் எங்கே உட்காருகிறார்களோ அந்த வரிசையே தூய்மை ஆகிவிடும்!
மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் மனு இதைச் சொல்லுகிறார்.

இந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் வேதம் கற்றவர்கள், தானம் செய்தவர்கள். ஆனால் இதில் வயதுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டிருப்பது விஷேஷமானது. நூறு வயது ஒருவர் வாழ்கிறார் என்றால் அவர் வாழ்வு சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்; மேலும் வேத மந்திரங்களில் நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது.
வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும்.
வாழ்க நூற்றாண்டு கண்டோர்!
You must be logged in to post a comment.