WHAT IS CORONA VIRUS? (Post 7622)

Compiled from BBC and Al Jazeera

A virus causing severe lung disease that started in China has spread to 27 other countries, including the UK.

The coronavirus had infected 78,159 people in China as of 26 February, with 2,717 of them dying.

What are the symptoms?

It seems to start with a fever, followed by a dry cough.

After a week, it leads to shortness of breath and some patients require hospital treatment.

The incubation period – between infection and showing any symptoms – lasts up to 14 days, according to the World Health Organization (WHO).

But some researchers say it may be as long as 24 days.

And Chinese scientists say some people may be infectious even before their symptoms appear.

How deadly is the coronavirus?

Based on data from 44,000 patients with this coronavirus, the WHO says:

  • 81% develop mild symptoms
  • 14% develop severe symptoms
  • 5% become critically ill

The proportion dying from the disease, which has been named Covid-19, appears low (between 1% and 2%) – but the figures are unreliable.

Thousands are still being treated but may go on to die – so the death rate could be higher. But it is also unclear how many mild cases remain unreported – so the death rate could also be lower.

To put this into context, about one billion people catch influenza every year, with between 290,000 and 650,000 deaths. The severity of flu changes every year.

Can coronavirus be treated or cured?

Right now, treatment relies on the basics – keeping the patient’s body going, including breathing support, until their immune system can fight off the virus.

However, the work to develop a vaccine is under way and it is hoped there will be human trials before the end of the year.

Hospitals are also testing anti-viral drugs to see if they have an impact.

Infographic showing the symptoms of the coronavirus

‘யோகா’ ஒரு சமுத்திரம் – 5 லட்சம் சுவடிகள் ! (Post No.7612)

Tevaram manuscript in British library

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7612

Date uploaded in London – 24 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

yoga in alphabet

ஞானஸ்ய காரணம் கர்ம, ஞானம் கர்ம விநாசகம்

பலஸ்ய கரணம் புஷ்பம், பலம் புஷ்ப விநாசகம்

ஞான மார்க ப்ரபோதினி

பழத்தை உண்டாக்கியது பூ ; அந்தப் பழமே பூவின் முடிவுக்குக் காரணம் ஆகிவிடுகிறது.

ஞானத்தை  உண்டாக்கியது கர்மவினையே ; அந்த ஞானமே  கர்மவினைக்கு முடிவுகட்டி விடுகிறது .

எளிய நடை ; அதி அற்புதமான தத்துவம் . இந்த நூல் வெளியாகவில்லை!! tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியா தங்கத்துக்கும் வைரத்துக்கும் பெயர்பெற்ற இடங்கள். இதைக் கொள்ளையடிக்க கஜினி முகமது முதல் கொலம்பஸ் வரை புறப்பட்டதையும் கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளில் இறங்கி அதுதான் இந்தியா  என்று பெயரிட்டதையும் இன்று வரை அந்த கரீபியன் கடல்  தீவுகளுக்கு மேற்கு இந்தியா (West Indies) என்று பெயர் இருப்பதும் நீங்கள் அறிந்ததே ; அதற்குப் பின்னர் 700 ஆண்டுகளுக்கு துலுக்கர்களும் 300 ஆண்டுகளுக்கு வெள்ளையர்களும் இந்தியாவைக் கொள்ளையடித்ததும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

எனக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது . அதாவது இந்தியாவின் மஹத்தான பொக்கிஷம் ஒன்று உலக லைப்ரரிகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது . அது என்ன?

ஐந்து லட்சம் சம்ஸ்கிருத , பிராகிருத, பாலி மொழி சுவடிகள் ஆகும்.! ( இதில் தமிழ் சுவடிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.. ஏனெனில் இதை பெங்களூரைச் சேர்ந்த பாண்டுரங்கி எழுதிய கட்டுரையிலிருந்து தருகிறேன்.).

உலகிலுள்ள 215 கல்வி நிறுவனங்கள் ,  நூலகங்களில் ஐந்து லட்சம் சுவடிகள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சம் சுவடிகள் ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன், இலங்கை, நேபாளம் முதலிய நாடுகளில் உள்ள 40 ஸ்தாபனங்களில் இருப்பதாகவும் பாண்டுரங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளார். (K T Pandurangi, The Wealth of Sanskrit Manuscripts in India and Abroad, Bangalore 1997 ) tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாரசீக மொழிகளில் உள்ள சுவடிகளை அவர் கணக்கில் சேர்க்கவில்லை. இதற்கு முன்னர் தியோடர் ஓப்ரக்ட்(Theodor Aufrecht)  , பிரான்ஸ் கீல்ஹான் (Franz Kielhorn) , ஜார்ஜ் பியூலர் (George Buhler) , செஸில் பென்டெல் (Cecil Bendell) , ஏ ஸி பர்னல் ( A C Burnell) , ஹர பிரசாத் சாஸ்திரி (Hara Prasad Shstri)  , ஆர்.ஜி.பண்டார்க்கர் (R G Bhandarkar)  , குப்புசுவாமி  சாஸ்திரி Mm Kuppuswami  Sastri) ,டாக்டர் வி.ராகவன் (Dr V Raghavan) , பி.கே. கோடே ( P K Gode)   முதலிய பல அறிஞர்கள் எடுத்த நன் முயற்சியால் சம்ஸ்கிருத, பாலி , பிராகிருத மொழி சுவடிகள் பற்றி தெரிய வந்தது. சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட புதிய கேட்டலாகஸ் கேட்டலகோரம் ( The New Catalogus Catalogorum, Department of Sanskrit, Madras University) ‘அட்டவணைகளின்  அட்டவணை’ ) புஸ்தகம் நமக்கு சுவடிப் பட்டியலைத் தருகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அது ஒரு கலைக்களஞ்சியம் . அதில் வெறும் சுவடிப்பட்டியல் மட்டும் இல்லாமல் அதிலடங்கிய விஷயம் , அதை எழுதியோர்,தொ குத்தோர் , பாஷ்யம் செய்தோர் முதலிய பல விஷயங்கள் உள .

இதற்கு அடுத்தாற்போல யோகா சம்பந்தப்பட்ட சுவடிகள் மட்டும் எவ்வளவு என்று ஆராயாப் புகுந்த கே.எஸ். பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்) எழுதினார். அதில் கண்ட சுவையான விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டு (Bullet Points) களில் தருகிறேன்.

ராஜ யோகம், ஹட யோகம் லய யோகம், மந்த்ர யோகம் என பல பிரிவுகள் உண்டு. யோகம் பற்றிய புஸ்தங்களைத் தவிர ஆகம, பவுத்த, ஜைன நுல்களுக்கிடையேயும் யோக விஷயங்கள் வருகின்றன. ஆகையால் அவ்வளவையும் சேகரிப்பதே ஒரு பெரிய கடினமான பணி . tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆனால் யோகா என்பது மனிதனின் ஆன்மீக , உடல் ஆரோக்கிய , மன ஆரோக்கிய விஷயங்களுக்கு உதவுவதாலும் , இன்று உலகம் முழுதும் அதில் ஆர்வம் காட்டுவதாலும் கடினமான பணியைச் செய்துதான் ஆகவேண்டும் .

அடையாறு நூலகம் , தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முதலிய இடங்களில் இன்னும் பல யோகா சுவடிகள் அச்சேறாமல் உள்ளன.

யோகா சுவடிகளில்  சுந்தரதேவ எழுதிய ‘ஹட சங்கேத சந்திரிகா’ முக்கியமானது . வேறு பல ஹடயோக நூல்களில் இல்லாத அரிய பல விஷயங்களை சுந்தரதேவ எழுதி இருக்கிறார் . இந்த சுவடியின் பிரதிகள் வேறு பல நகரங்களிலும் கிடைக்கின்றன; சுந்தர தேவ 1650-1750 இடையே வாழ்ந்தவர். அவர் பல்கலை வித்தகர்; காவ்ய, யோக, ஆயுர்வேத , வேதாந்த விஷயங்களில் வல்லவர். நூலின் அடிக்குறிப்பிலிருந்து அவர் காஸ்யப கோத்ரத்தைச் சேர்ந்த தென்னிந்திய பிராமணர் என்பதும் காசி மா நகரில் குடியேறியவர் என்றும் தெரிகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவர் 90 வேதாந்த, வைத்ய, யோக ஆசிரியர்களின் நுல்களைக் குறிப்பிடுவதால் அவருடைய மேதா விலாசம் விளங்கும்; கே. எஸ் பாலசுப்ரமணியன் இதை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றார்.

சுந்தரதேவ குறிப்பிடும் பல யோக நூல்கள் இன்று காணக்கிடக்கில. அவை யாவை ?

விரூபாக்ஷ எழுதிய அம்ருத சித்தி யோக;

கோரக்சனாத எழுதிய அமருக ப்ரபோத;

யோக சம்க்ரஹ , எழுதியர் பெயர் இல்லை

பாதஞ்சல யோக சம்க்ரஹ – இது பதஞ்சலியின் யோக சூத்ரம் அல்ல ; இது வேறு. tamilandvedas.com, swamiindology.blogspot.com

சாயா  புருஷ யோக ;

சாயா  புருஷ லட்சண;

ஞான யோக ப்ரபோதினி ;

குண்டலினி பஞ்சகாதி நிரூபணம்;

ராஜ யோக சார;

சித்தாந்தசார ;

யோக ரஹஸ்யம்;

ஸ்வர சாஸ்த்ர சம்க்ரஹ.

இவை அனைத்துக்கும் எழுதியோர் பெயர் கிடைக்கவில்லை

பரமேஸ்வர யோகி எழுதிய பரமேஸ்வர யோகின் , சுவடி வடிவில் அடையாறு நுலகத்தில் உள்ளது.

தஞ்சாவூர்  சரஸ்வதி மஹாலில் இன்னும் வெளியிடப்படாத யோக நூல்கள் சுவடிகளாக உள்ளன . tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோகத்தைப் பயில்வோம்! சுக போகத்தை அடைவோம்!!

–subham–

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2 (Post No.7607)

WRITTEN BY S Nagarajan

Post No.7607

Date uploaded in London – 23 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சென்ற கட்டுரையின்  தொடர்ச்சி (சென்ற கட்டுரை எண் : 7517 வெளியான தேதி :31-1-2020)

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாத பத்திரிகை ஹெல்த்கேர்  பிப்ரவ்ரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

புத்தகச் சுருக்கம் : Perfect Digestion by Deepak Chopra

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2

(தீபக் சோப்ரா எழுதியுள்ள ‘பெர்ஃபெக்ட் டைஜெஸ்ஷன்”)

ச.நாகராஜன்

ஆயுர்வேதம் கூறும் பழைய அறிவுரை ஒன்று உண்டு! அது இது தான் :

சரியான உணவுத் திட்டம் இல்லாத மருந்து பயனற்ற ஒன்று; சரியான் உணவுத்திட்டம் இருந்தாலோ மருந்திற்கான அவசியமே இல்லை!

(Without proper diet medicine of no use, and with proper diet medicine is of no need!)

 ஆயுர்வேதம் அடிப்படையான ஆறு சுவைகளைக் கூறுகிறது.

அவையாவன :

இனிப்பு : ஜீனி, தேன், அரிசி, பாஸ்தா பால், க்ரீம், வெண்ணெய் போன்றவை

புளிப்பு : எலுமிச்சை, சீஸ், யோகர்ட், ப்ளம், வினிகர் போன்றவை

உப்பு : எந்த உப்பு உணவும்

உரைப்பு : மிளகாய், மிளகு, இஞ்சி, உரைப்பான பொருள்கள்

கசப்பு : சில கீரைகள் (பாகற்காய் உள்ளிட்டவை)

துவர்ப்பு : பீன்ஸ், மாதுளை, ஆப்பிள் உள்ளிட்டவை

அறுசுவைகளும் உணவுத்திட்டத்தை சமச்சீராக்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இந்த ஆறு சுவைகளும் இருக்கும்படியான உணவுத்திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ஆயுர்வேதத்தின் முதல் அறிவுரை.

எந்த உணவை நீக்க வேண்டும்? விடை சுலபமானது. எந்த உணவு உங்களைப் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறதோ, எந்த உணவு உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லையோ, அதை நீக்கி விட வேண்டும்.

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இன்னொரு உத்தி – ஆயில் மசாஜ்.

சரியான எண்ணெயைக் காய்ச்சி சற்று சூடான நிலையில் தலையிலிருந்து கால் வரை தேய்த்து மெதுவாக மசாஜ் செய்தல் வேண்டும்.

உடலில் 107 மர்ம (ஸ்தான) ங்கள் உள்ளன. இவற்றில் மூன்று முக்கியமானவை.

  1. சிர மர்மம் 2) ஹ்ருதய மர்மம் 3) பஸ்தி மர்மம்.

இவற்றுள் மூன்றாவதாக இருக்கும் மர்மம் தான் உடலின் பல இயக்கங்களுக்கு முக்கியமானதாக அமைகிறது.

இந்த மர்மத்தின் அடிப்படையில் தான் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்படும் உத்திகளும் அறிவுரைகளும் உள்ளன.

உடலைச் சீராக வைத்துக் கொள்ள சில உடல் பயிற்சிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

யோக முத்ரா, உத்தியான பந்தம், வஜ்ராசனம், பவன முக்தாசனம், புஜங்காசனம் போன்றவற்றை (குரு மூலமாக) கற்றல் வேண்டும்.

ஜீரணம் என்பதில் உள்ள முக்கியமான அம்சம் உடல் மற்றும் உணர்ச்சி மீதான கட்டுப்பாடாகும்.

நீங்கள் உண்ணும் உணவு மட்டுமல்ல ‘நீங்கள்’ என்பது; உங்கள் உணவு உடலுக்குள் சென்ற பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதும் முக்கியமானது.

உணவையும் அது உண்ணும் அனுபவத்தையும் ஒரு அருமையான விஷயமாகக் கருதி அனுபவித்தல் வேண்டும்.

வாயு சம்பந்தமான அனைத்து தோஷங்களையும், வியாதிகளையும் தவிர்க்க நீங்கள் உங்கள் உணவு மற்றும் உடல் மீதான  முழுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆறு சுவைகளையும் கொண்ட உணவுத் திட்டம் மேலானது.

உடலின் இயக்கங்களின் மீது அழுத்தம் (Strain) இருக்கக் கூடாது. அப்படி அழுத்தம் ஏற்படுத்தும் உணவுகளை இனம் கண்டு தவிர்த்தலும், உடலில் அழுத்தம் ஏற்படும் இடங்களைக் காண்பதும் அதைத் தவிர்த்து வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதும் அர்த்தமுள்ளதாகும்.

இதைச் செய்தால் பூரண ஆரோக்கியம் கொண்டவர்களாக ஆவீர்கள்.

***

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 1(Post No.7517)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7517

Date uploaded in London – 31 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் தமிழ் மருத்துவ மாத இதழில் ஜனவரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை (ஹெல்த்கேர் ஆசிரியர் R.C.ராஜா, 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் 627006, தமிழ்நாடு, இந்தியா)

புத்தகச் சுருக்கம் : Perfect Digestion by Deepak Chopra

நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 1

(தீபக் சோப்ரா எழுதியுள்ள ‘பெர்ஃபெக்ட் டைஜெஸ்ஷன்”)

ச.நாகராஜன்

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், யோகா மாஸ்டர், வாழ்க்கை முறை நெறியாளர் தீபக் சோப்ரா அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

ஏராளமான நல்ல புத்தகங்களை எழுதியுள்ளவர் அவர்; அவரது புத்தகங்கள் உலகெங்கும் லட்சக் கணக்கில் விற்று சாதனை படைத்திருக்கின்றன.

நல்ல ஜீரணத்தை அடைவதற்கான வழிகள் என்ற அவரது புத்தகம் அருமையான புத்தகம். 127 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

மனிதன் ஆரோக்கியமாக வாழ அவன் எடுத்துக் கொள்ளும் உணவு மிக முக்கியமானது. குடல், இரைப்பை, குடல் நாளம் ஆகியவை எப்படிப்பட்ட உணவை ஏற்கும், எவற்றை எடுத்துக் கொண்டால் உடலில் பிரச்சினைகள் தோன்றும் என்ற அடிப்படை அறிவை அறியாததால் தான் உலகில் பெரும்பாலானோருக்கு ஜீரணம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.

அந்த வகையில் நல்ல அறிவுரைகளைத் தந்து ஜீரணம் பற்றிய முழு விவரங்களைத் தொகுத்து விளக்கி ஆயுர்வேத அடிப்படையிலான ஆலோசனைகளை வழங்குகிறார் இந்தப் புத்தகத்தில் தீபக் சோப்ரா.

செரிமானக் குடல் தடம் சிக்கலான ஒரு உறுப்பு.

மாறிக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பில் 98 சதவிகிதம் அணுக்கள் சென்ற வருடம் உடலில் இல்லாதவை,

இந்த ஒரு உண்மையே உடல் அமைப்பு மாறிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. இதை முதலில் உணர வேண்டும்.

ஒரு ஆச்சரியாமான உண்மை, உங்களின் உடல் எலும்புகள் ஒவ்வொரு மூன்று மாதமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது தான்!

இர்ரிடபில் பவல் சிண்ட் ரோம் (Irritable Bowel Syndrome – IBS) எனப்படும் குடல் பதற்றப் பிணிக்கூட்டு நோய் ஒரு ‘வில்லங்கமான’ வியாதி.

எதையும் சாப்பிட விடாது; சாப்பிட்டவுடன் டாய்லெட்டை நோக்கி ஓட வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வியாதி.

வெளியில் சாப்பிட முடியாது; பயணம் போக முடியாது; விருந்தில் கலந்து கொள்ள முடியாது, ஏன் அண்டை அயலார் உறவினர் வீட்டிற்குக் கூட சகஜமாகப் போக முடியாது; எதையாவது  கொடுத்துச் சாப்பிடச் சொன்னால்…” – என்ன செய்வது என்ற இடைவிடாது தொற்றிக் கொண்டிருக்கும் பயமே காரணம்!

இந்த வியாதி பற்றிய முழு விவரத்தையும் நோய்க்கான தீர்வையும் விளக்கமாகத் தருகிறது இந்த நூல்.

ஆயுர் வேத வைத்திய முறை உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாகப் பிரிக்கிறது.

முதலில் இந்த மூன்றில் நாம் எந்த வகை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தக்கபடி நமது உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்காக மூன்று வினாத்தாள்கள் 20 கேள்விகளுடன் தரப்பட்டுள்ளன. அதற்கு விடையளித்த பின்னர் கொடுக்கப்பட்ட சரியான விடைகளுடன் ஒத்துப் பார்த்து நீங்கள் எந்த டைப் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

முதலாவது வகையினர்

வாத வகையினர் (Characteristics of Vada Type)

ஒல்லியான உடல்வாகு, எடை குறைவு

சுறுசுறுப்பாகச் செயல் புரிவர்

ஒழுங்கற்ற பசி எடுக்கும் தன்மையும் சீரற்ற ஜீரணமும்

விட்டு விட்டுத் தூங்குதல், இன்சோம்னியா நிலை போல இருத்தல்

சுறுசுறுப்பு, நல்ல கற்பனா திறன், குதூகலமான தன்மை

உணர்ச்சிவயப்படக்கூடியவர், அடிக்கடி மனநிலை மாறும் தன்மை (Changing moods)

ஒரு விஷயத்தை உடனே கிரஹிப்பவர், அதே போல மறந்தும் போய்விடுவர்

கவலைப்படும் சுபாவம்

மலச்சிக்கல் வரும் தன்மை

சுலபமாக களைப்படைவர், அதிக வேலை செய்வர்

மன மற்றும் உடல் ஆற்றல் பொங்கிப் பொங்கி வரும் (Mental and physical Energy comes in bursts)

இரண்டாவது வகையினர்

பித்த வகையினர் (Characteristics of Pitta Type)

நடுத்தர உடல் வாகு கொண்டவர்

நடுத்தர வலிமை அதே போன்ற தாங்கும் சக்தி கொண்டவர்

நல்ல பசியும் தாகமும் கொண்டவர், நல்ல ஜீரண சக்தி உண்டு.

கோபம் கொள்பவர், மன அழுத்தத்தில் எரிச்சல் அடைபவர்

சிவப்பான தோற்றம், மச்சம் உள்ளவர்

சூரிய வெளிச்சம் ஆகாது, வெப்பம் அதிகமாக இருப்பின் தாங்க மாட்டார்

ஊக்கமுடையவர், சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பவர்

கூரிய புத்தி

துல்லியமானவர், நல்ல குரலுடன் பேசுபவர்

அந்தந்த வேளை உணவை விட்டுக் கொடுக்கவே முடியாதவர்.

பொன் நிறம்/பழுப்பு/ சிவப்பு முடியினர்

மூன்றாவது வகையினர்

கப வகையினர் (Characteristics of Kapha Type)

திடமான உடல்வாகு கொண்டவர்,வலிமையானவார், நல்ல உடல் வலிமை, தாங்கும் சக்தி அதிகம் கொண்டவர்

சீரான சக்தி; மெதுவாகவும் நளினமாகவும் செயல் புரிபவர்

அமைதியானவர், பதற்றமில்லாத ஆளுமை கொண்டவர், கோபம் மெதுவாகத் தான் வரும்

அமைதியானவர், மிருதுவானவர், வெளுத்தவர், எண்ணெய்ப்பசை கொண்ட தோல் கொண்டவர்

புதிய விஷயங்களை மெதுவாகப் புரிந்து கொள்வர், ஆனால் தீர்க்கமான நினைவாற்றல் இருக்கும்

நல்ல, நீண்ட தூக்கம்

சற்று உடல் பருமன் உண்டு

மெதுவான ஜீரண சக்தி, நிதானமான பசி

அன்பானவர், பொறுமையானவர், மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்

தன்னுடையது என்ற குணம் உண்டு,திருப்தியான சுபாவம் கொண்டவர்

ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் எந்த வகை என்பதைச் சுலபமாக நிர்ணயித்து விடுவார்.

சில அடிப்படை விதிகள்

நல்ல ஜீரண சக்தி அடைய சில அடிப்படையான விதிகள் உண்டு. அவையாவன:

நல்ல அமைதியான இடத்தில் உண்ணுதல் வேண்டும்.

உட்கார்ந்து உணவை உண்ண வேண்டும்.

மன அழுத்தம், சோர்வு,கவலையுடன் சாப்பிடக் கூடாது

அதிகமாக உண்ணக் கூடாது

ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த உணவை உண்ணக் கூடாது. ஐஸ் போட்ட திரவ வகைகளை உட்கொள்ளக் கூடாது

மென்று உண்ண வேண்டும்; பேசியவாறே சாப்பிடக் கூடாது

நிதானமாக உண்ண வேண்டும்.

உணவு உண்டபின் அது நன்கு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவு உண்ணல் வேண்டும்.

அவ்வப்பொழுது சமைக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணுங்கள்.

எளிய நடைமுறைகள் தாம் இவை.

இவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையெனில் ஜீரண சக்தி குறைந்து சாப்பிட்ட உணவு வகைகள் அப்படியே இரைப்பையில் தங்கும்.

இதன் ஒரு விளைவாக ஏற்படுவது தான் ஆயுர்வேதம் குறிக்கும் ஆமா (Ama)

இதனால் ஏராளமான கோளாறுகள் உடலில் ஏற்படும். வாயில் வெள்ளைப் படலமாகத் தோன்றுவது இதன் ஒரு அறிகுறி.

இந்த அஜீரணக் கோளாறை நீக்க ஒரு எளிய சின்ன வழி உள்ளது.

முதல் வழி வாரத்தில் ஒரு நாள் எளிய கஞ்சி உணவு போன்ற திரவ உணவை மேற்கொள்வது.

அடுத்த இன்னும் ஒரு எளிய வழி.சாப்பிட்ட பின்னர் கொதிக்க வைத்த வெந்நீரை குடிக்கக் கூடிய பொறுக்கும் சூட்டுடன் அவ்வப்பொழுது நாள் முழுவதும் இரண்டு அல்லது மூன்று மடக்கு குடிக்க வேண்டியது தான்.

ஒரு பிளாஸ்கை வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது இந்த வெந்நீரை அருந்தி வந்தால் ஆமா போய் விடும்.

ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படிச் செய்தால் போகாது; பல முறை இந்த வெந்நீர் குடிப்பதை மேற்கொள்ள வேண்டும்.

இதன் விளைவாக முதல் சில வாரங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஏனெனில் உடலில் சேர்ந்துள்ள ‘ஆமாவை’ உடல் சிறுகச் சிறுக வெளியேற்றுவதால் இது ஏற்படும். சில வாரங்களில் பழையபடி சில முறை மட்டுமே சிறுநீர் கழிக்கும் நிலை திரும்பி விடும்.ஆனால் ஜீரணத்திற்கு தீங்கு பயக்கும் ‘ஆமா’ பொயே போய் விடும்.

ஜீரணத்திற்காக ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில மூலிகைகளும் உண்டு. இவற்றை அன்றாடம் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய்: இரைப்பையில் தோன்றும் எரிச்சலை நீக்குவது இது. இரத்தத்தில் உள்ள இனிப்பையும் இது சமனப்படுத்தும் (

கொத்துமல்லி : பித்த தோஷத்தை நீக்கும்.

லவங்கம் மற்றும் கிராம்பு : ஜீரணத்தை ஊக்குவிக்கும்.

(அடுத்த பகுதியுடன் இந்த புத்தகச் சுருக்கம் முடியும்)

***

எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து (Post No.7516)

WRITTEN  BY LONDON SWAMINATHAN

Post No.7516

Date uploaded in London – 30 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மே 24, 1992 தினமணியில் நான் எழுதிய கட்டுரைகள்:–

1.ரஷ்ய ராக்கெட்டுகள் ஏலம்

2.எல்விஸ் பிரெஸ்லி தபால் தலை

3.டைட்டானிக் கப்பல் விபத்து விசாரணை

4.எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து

இதில் ‘எக்ஸ்டசி உயிர்கொல்லி மருந்து’

பற்றிய செய்தியைக் காண்போம்–

Pure ecstasy takes the form of a white powder. It is known as MDMA which is short for 3,4 Methylenedioxymethamphetamine. Although police seizures of MDMA powder have increased in recent years, it remains less common than ecstasy tablets or capsules. Ecstasy is also very occasionally sold as crystals.

—subham—

மலர் மருத்துவம்! FLOWER MEDICINE– 2, ரெஸ்க்யூ ரெமடி! (Post No.7488)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7488

Date uploaded in London – 24 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மலர் மருத்துவத்தில் உள்ள 38 மருந்துகள் பற்றிய முதல் கட்டுரையை அடுத்து வருகிறது ரெஸ்க்யூ ரெமடி!

மலர் மருத்துவம்! – 2 – ரெஸ்க்யூ ரெமடி!

ச.நாகராஜன்

டாக்டர் எட்வர்ட் பாச் (Dr Edward Bach, M.B. B.S., M.R.C.S., L.R.C.P., D.P.M.,  (CAMB) உலகிற்குத் தந்த   மலர் மருந்துகளில் அற்புதமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி! (Rescue Remedy)

இந்த மருந்து அவசரகால உதவி மருந்து. திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி போன்றவற்றால் ஏற்படும் மோசமான பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தான் இந்த ரெஸ்க்யூ ரெமடி!

38 மலர் மருந்துகளில் ஐந்தின் கலவை இது.

ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlahem) For Shock

ராக் ரோஸ் (Rock Rose) For terror and panic

இம்பேஷன்ஸ் (Impatiens) For mental stress and tension

செர்ரி ப்ளம் (Cherry Plum) For desperation

க்ளமேடிஸ் (Clematis) For the bemused, faraway, out-of-the body feeling which often precedes fainting or loss of consciousness)

ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படுவது ரெஸ்க்யூ ரெமடி.

இதை எப்படிச் செய்வது?

மேற்கண்ட ஐந்து மருந்துகள் உள்ள பாட்டில்களிலிருந்து இரண்டு இரண்டு துளிகளை எடுத்துச் சேர்த்துக் கொண்டு அத்துடன் ஒரு அவுன்ஸ் – அதாவது 30 cc – பிராந்தி அல்லது ஆல்கஹாலைச் சேர்க்க வேண்டும். இது தான் ரெஸ்க்யூ ரெமடி.

பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டு அவசரகாலங்களில் உபயோகப்படுத்தலாம்.

டாக்டர் பாச்  இந்த அவசரகால மருந்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பர். இன்று உலகில் ஏராளமானோர் இதைக் கைவசம் வைத்திருக்கின்றனர்.

ஏனெனில் விபத்து எப்போது எந்த ரூபத்தில் எங்கு வரும் என்பது யாருக்குத் தெரியும்?

அதிர்ச்சியில் உறைந்த யாருக்கேனும் இதைக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டம்ளர் நீரில் மூன்று துளி ரெஸ்க்யூ ரெமடியைக் கலக்க வேண்டும். இதைப் பாதிக்கப்பட்டவர் சிறிது குடிக்க வேண்டும். அவர் கலக்கம் நீங்கி அமைதியை அடைய அடைய ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு வாய் இந்த நீரைக் குடிக்க வேண்டும், அவ்வளவு தான்.

இதை நீடித்து ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமெனில் ஒரு டீ ஸ்பூன் நீரில் மூன்று துளிகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை தண்ணீர் அருகில் கிடைக்கவில்லை எனில், இந்த ரெமடியின் துளிகளை மட்டும் பாதிக்கப்பட்டவரின் உதடுகள், நாக்கு, பல் ஈறுகளில் தடவி விட்டால் போதும்.

இதை வெளிக் காயங்களுக்கு மருந்தாகக் கூடப் பயன்படுத்தலாம்.

காயம் பட்ட இடத்தில் ஆயின்மெண்டாக (Ointment) – பூச்சு மருந்தாகப் – பூசலாம்.

ஆறு துளிகளை 16 அவுன்ஸ் நீரில் கரைத்தால் ஆயின்மெண்ட் ரெடி!

தீராத துக்கமா, திடீரென்று வரும் துயரச் செய்தியா அதிலிருந்து மீள இதைப் பயன்படுத்தலாம்.

1930இல் முதன்முதலாக இந்த மருந்தை டாக்டர் பாச் உபயோகப்படுத்தினார்.

அப்போது  அவர் ராக் ரோஸ், க்ளமேடிஸ் மற்றும் இம்பேஷன்ஸ் ஆகிய மூன்றை மட்டுமே கலந்து இதை உருவாக்கிப் பயன்படுத்தினார். மற்ற இரண்டை அவர் அப்போது கண்டுபிடித்திருக்கவில்லை.

பின்னால் இது ஐந்து மலர் மருந்துகளின் கூட்டுச் சேர்க்கை கலவையானது.

ரெமடி பற்றிய சுவையான சம்பவம் ஒன்று இது:-

திடீர் புயலில் படகு ஒன்று சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் படகில் சிக்கிக் கொண்ட இருவர் ஒருவாறாக மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்டவருள் ஒரு இளைஞன் நினைவிழந்திருந்தான். அவன் உடம்பு நீலம் பாய்ச்சியிருந்தது. அவனது உடைகளோவெனில் கடல் உப்பினால் விரைப்பாகி இருந்தது.

டாக்டர் பாச் வேகமாக அவர்களிடம் ஓடினார். உடனடியாக ரெஸ்க்யூ ரெமடியை அவர்கள் உதடுகளில் தடவி விட்டார். தொடர்ந்து இதை அவர் பயன்படுத்தினார்.

அந்த இளைஞனை பீச்சிலிருந்து அருகிலிருந்த ஹோட்டல் ஒன்றிற்குக் கொண்டு சென்றனர். ஹோட்டலை அடையுமுன்னரே அவனுக்கு சுயநினைவு திரும்பி விட்டது. ஹோட்டலை அடைந்த போது அவன் ஒரு சிகரட் இருக்கிறதா என்று கேட்டான்!

இது போல உலகெங்கும் ஆயிரக்கணக்கான வியப்பூட்டும் கேஸ்கள் இன்றளவும் இந்த ரெஸ்க்யூ ரெமடியினால் ஏற்பட்டுள்ளன; பிரமிக்க வைக்கும் சம்பவங்களை பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் சொல்லி வருகின்றனர்.

மலர் மருந்துகள் மிக மிக எளிமையானவை.

“ஆகவே இந்த சிகிச்சைமுறை பற்றி தவறாக அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டாம். இன்னும் ஆய்வுகள் அதிகமாக ஆக, படைப்பின் எளிமையை இன்னும் அதிகமாக நீங்கள் உணர்வீர்கள்” என்று டாக்டர் பாச் கூறி இருப்பது எவ்வளவு பொருள் பொதிந்த ஒன்று.

அவரது கூற்று இது: “Let not the simplicity of this method deter you from its use, for you will find the further your researches advance, the greater you will realize the simplicity of the Creation.”

மலர் மருத்துவம் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டோமெனில் நமது வீட்டிலும் ஒரு மலர் மருந்து – கிட் (Kit)  – பெட்டி தேவையாக இருக்குமல்லவா?!

***

HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422)

Acupressure in Rig Veda

HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422)

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7422

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

I explained the medical knowledge in the Rig Vedic hymn 10-136 yesterday on the basis of R T Griffith’s comments. Griffith (1826- 1906) makes another interesting comment in the next Rig Vedic hymn in the Tenth Mandala (10-137)

I add my comments about the Vedic seers’ knowledge about the two monsoons of India and Naturopathy including massage and acupressure.

Here is the full hymn:-

Rig Veda 10-137

xxx

Griffith says,

10-137-7

This stanza is important as showing that the Indians employed touches or laying-on of hands to relieve suffering or to restore health. See also X-60-12

Griffith’s translation of 10-60-12 also talks about hand cure:-

Felicitous is this mine hand, yet more felicitous is this.

This hand contains all healing balm, and this makes whole with gentle touch . tamilandvedas.com , swamiindology.blogspot.com

10-137-4

The Wind speaks , weakening malady: yaksma may be sickness in general, or the name of a large class of diseases, probably of consumptive nature.

10-137-1

Who committed sin: sickness and death being regarded as the consequence of sins.

Xxx

My Comments

This hymn is received from the great Seven Seers; Hindus named the Ursa Major constellation in the northern sky as Seven Seers (Sapta Rishi) constellation. They also named the twin star at the end of the seven star system as Vasishta and his wife Arundhati.

These Seven Seers and the chaste woman Arundhati are worshipped by Hindus for over 2000 years from the Himalayas to Kanyakumari. 2000 year old Sangam Tamil literature has all the praise for the chaste Hindu wife Arundhati in umpteen places. Seven Star system is worshipped by the Tamils according to Narrinai verse 231 by Tamil poet Ilanaganar. tamilandvedas.com , swamiindology.blogspot.com

The Sapta Rishis say one stanza each in the hymn; they are

Bharadvaja, Kasyapa, Gautama, Atri, Visvamitra, Jamadagni,

and Vasishtha.

xxxx

Two Monsoons in the Rig Veda

Meteorology and Two Monsoons

10-137-2 speaks of the two winds from the seas. My interpretation is that they are South West Monsoon and North East Monsoon. Kalidasa of first century BCE, travels with the S W monsoon up to the Himalaya in his poem Megadhuta. He is the oldest poet who tracks the monsoon from south to north. He is the oldest tourist guide who describes all the places along the path of the S W monsoon.

10-137-1 shows the belief in the Karma theory of Hindus. What we get in this birth is from the acts we did in our previous births; Diseases come out of sins. Even atheists would agree that the sinful acts(smoking, drinking, too much indulgence etc)  done during this birth would result in several types of diseases. tamilandvedas.com , swamiindology.blogspot.com

10-137-5 is about the wind born cure. Several patients carry oxygen cylinders for easy breathing. Hindus know from the early days that fresh, unpolluted air refreshes the body and mind. Maruts mentioned here are Wind Gods. Maruti (Hanuman, Anjaneya) is derived from this wind deity Marut.

10-137-6 is about the hydrotherapy; people use water to cure various diseases. This includes the holy dip in cold water, hot water springs and the springs with medicinal properties. Modern day spas are also included.

10-137-7  is about the ten fingers used to cure diseases. Those who believe in the human aura interpreted it as the magical vibration that passed to the patients. Those who don’t believe in such things interpret is as massage and acupressure.  We have already seen Acupuncture in the Bhisma’s Bed of Arrows. So here we may interpret it as Acupressure and Massage techniques with ten fingers. These are all part of Naturopathy.

All the Seven Rishis use nature as balms. Their soothing words will give psychological treatment to the patients. Placebo effect is great.

So I look at this hymn as a hymn on Naturopathy, Magical hand cure, Hydrotherapy, Meteorology and the Fresh air therapy which we get in hilly tourist resorts. tamilandvedas.com , swamiindology.blogspot.com

Hydrotherapy

Long Live the Vedic Seers.

–subham–

நோய் தீர்க்கும் 2 அற்புத வேத மந்திரங்கள் -Part 2 (Post No.7421)

Acupressure in Rig Veda

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7421

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Vedic Seers knew Monsoons
Hydrotherapy in Rig Veda

TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS- Part 1(Post No.7418)

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 4 JANUARY 2020

Post No.7418

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

நோய் தீர்க்கும் 2 அற்புத வேத மந்திரங்கள் -Part 1 (Post No.7417)