
Compiled by London swaminathan
Date: 8 September 2016
Time uploaded in London: 6-24 AM
Post No.3133
Pictures are taken from various sources; thanks.
லண்டனில் ஒரு பள்ளிக்கூடம் இருந்த இடத்தில் ஆடம்பர இந்திய ஹோட்டல் வருகிறது. ஒரு நாள் அறை வாடகை 350 பவுன் (35000 ரூபாய்)! இதில் 70 அறைகள் இருக்கும். வருவோருக்கு இந்து முறையில் நமஸ்தே கிடைக்கும்; ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவும் இருக்கும். யோகாவும் பயிற்றுவிக்கப்படும். ஹோட்டல் முழுதும் இந்தியப் பொருளாலேயே அலங்கரிக்கப்படும்.
இந்திய வந்தனோபசாரத்தை — விருந்தோம்பலை — மக்களுக்குக் காட்டுவது முக்கிய நோக்கமாகும். இது சவுத் பேங்கில் (South Bank) டவர் பிரிட்ஜ் (Tower Bridge) அருகே இருக்கிறது. ‘நான்’ , ரொட்டி, இந்திய தேநீர், சமோசா முதலியவற்றுடன் பல்வேறு வகை இந்திய உணவு பரிமாறப்படும். இது லலித் ஹோட்டல் குரூப்பைச் சேர்ந்தது. ஹோட்டலின் விலை ஐந்து கோடி பவுன் (500 கோடி ரூபாய்).லலித் சூரியின் மனைவி டாக்டர் ஜ்யோத்ஸ்னா சூரி இதன் மானேஜிங் டைரக்டர்.
கட்டிடத்தின் விலை 15 மில்லியன் பவுன்கள். அதற்குப்பின்னர் அதை ஹோட்டலாக மாற்ற 30 மில்லியன் செலவு!
லண்டனுக்குப் போனால் ஜாக்கிரதை!

லண்டனில் இந்தியர்கள், பாகிஸ்தானியர், கறுப்பர்கள் வசிக்கும் பகுதிகளுக்குப் போகாதீர்கள்; உங்கள் பாதுகாப்புக்காக இதைச் சொல்லுகிறோம் — என்று சீன விமான நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இது இனவெறி விளம்பரம் என்று லண்டனில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது
ஏர் சைனா Air China விமானத்தில் போடப்படும் பத்திரிக்கையில் In flight magazine இந்தக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. பெண்கள் தனியாக போகக்கூடாது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எழுதியுள்ளனர்.
இது இனச் சிறுபானமையினருக்கு மட்டும் எதிரானதல்ல. லண்டனுக்கே எதிரான அறிவிப்பு என்று எம்.பி.க்களும் பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
குளவிக்கூடு: ரயில சர்வீஸ் ரத்து!
அதிகாலை எழுந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தால் ஒரு விநோத அறிவிப்பு?
“நார்பிடன் Norbiton வழியாக லண்டன் வா ட்டர்லூ London Waterloo ஸ்டேஷனுக்குச் செல்லும் காலை 5-51 ரயில் சர்வீஸ் ரத்து என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். ரயில் பெட்டிகளில் இரவோடு இரவாக குளவிகள் கூடு கட்டி இருந்தன என்பதே இதற்குக் காரணம்!”

இதைக் கேட்ட அதிகாலை பயணிகளுக்கு ஒரே கோபம். குளவி கூடு கட்டினால் அதை விலக்கிவிட்டு ரயிலைக் கொண்டுவரக்கூடாதா? அல்லது குளவிகள் உள்ளே போகாமல் கதவுகளை மூடி வைத்திருக்கக்கூடாதா? என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.
கோடை காலம் வந்துவிட்டால் ரயில்கள் மெதுவாக வேறு ஓடும்! ரயில் பாதை வெப்பத்தால் விரரிவடைவதால் வேகக் கட்டுப்பாடு அமலுக்கு வரும். குளிர் காலம் வந்துவிட்டாலோ, பனி பெய்து ரயிலகள் ரத்தாகும். ஒரு நாள் லண்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் பாடம் நடத்திவிட்டு, ” பையன்களே , பெண்களே! வெளியே பனி பெய்வதை ஜன்னல் வழியாகப் பாருங்கள். எல்லோரும் தாமதமின்றி வீடு போய்ச் சேருங்கள் என்று சொல்லிவிட்டு ஓடி வந்து ரயிலில் ஏறினேன். ‘இந்தப் பக்கம் ரயில்கள்’ போகாது’ ‘அந்தப் பக்கம் ரயில்கள் போகாது’ என்று அறிவிப்பு வந்துகொண்டே இருந்தன. பல லைன் Lineகளுக்கு மாறி மாறி பாதி தூரம் வந்தேன். “மிக பயங்கரமாக பனி பெய்வதால் எல்லா பஸ்களும் எல்லா ரயில்களும் ரத்து; ரயிலை விட்டு இறங்குங்கள்” என்று ஒரு ஸ்டேஷனி ல் அறிவித்தார்கள். இரவு முழுவதும் கெண்டகி ப்ரைடு சிக்கன் Kentucky Fried Chicken கடையில் ஒரு மூலையில் குந்தி இருந்தேன். நானோ வெ ஜிட்டேரியன் Vegetarian . காப்பிகூட வாங்கப் பிடிக்கவில்லை. அதிகாலையில் பக்கத்தில் வசித்த ஒருவரை அழைத்தேன். அவரும் எனக்கும் காரை ஓட்ட பயமாக இருக்கிரது உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் என் கார் உங்கள் ஸ்டேஷன் வரை வரும் என்று சொல்லி வந்தார். தப்பித்தேன் பிழைத்தேன் என்று காரில் ஏறிச் சென்றேன் அடுத்த சில மணி நேரத்தில் பஸ்கள் ஓடத் துவங்கின. அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தேன். உண்மையில் ஒருவருடைய முட்டாள்தனமான முடிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் ஓடக்கூடிய அளவுக்குதான் பனி பெய்திருந்தது.
ஆகையால் குளவி மட்டுமில்லை; கொசுவுக்குக் கூட லண்டன் போக்குவரத்து நின்றாலும் நிற்கும்!
xxx
லண்டன் திருடன் பலே திருடன்!
சில நாட்களுக்கு முன் லண்டனில் கற்பழிப்புகள் அதிகரிக்கின்றன. மிகவும் பாதுகாப்பாற்ற நகரம் லண்டன் என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகள் போட்டன. இன்று மாலையில் உலகம் முழுதும் சுற்றிய ஒருவரின் மோட்டார் சைக்கிள் லண்டனில் தொலைந்து போயிற்று.
லண்டன் கென்சிங்டனைச் Kensington சேர்ந்த எலி கூரி Eli Coory படத் தயாரிப்பாளர். அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுவதற்காக மூன்றாண்டுகளாக மோட்டார் சைக்கிளில் உலக வலம் வருகிறார். அவர் சொன்னார்: “அலாஸ்காவில் கரடிகளுக்குப் பயப்படாமல் அதன் நடுவே ஓட்டி வந்தேன். சிலி நாட்டில் எரிமலை பொங்கும் போதும் மலைக் கணவாய்களைக் கடக்கையில் காட்டு நாய்கள் விரட்டும் போதும் ஓட்டி வந்தேன். உலகில் பாதுகாப்பற்ற இடங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் இடையூறின்றி ஓட்டி வந்தேன். இளம் வயது புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்ட இதைச் செய்தேன். இறுதியில் லண்டனில் ஓட்டல் வாசலில் நிறுத்தியிருந்த வண்டியை யாரோ களவாடிவிட்டார்கள்”.
(அவருடைய பைக்கின் விலை 18,000 பவுன்கள்).
“இதயமில்லாத் திருடர்கள் இப்படிச் செய்துவிட்டார்களே. அதுவும் உலகப் புகழ் பெற்ற லண்டனில் இப்படித் திருட்டு நடந்தது மிகவும் வெட்கக்கேடு” என்றார்.
–subam–
You must be logged in to post a comment.