ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!! (Post No.3153)

chanda-2

Translated by London swaminathan

Date: 14 September 2016

Time uploaded in London: 9-16 AM

Post No.3153

Pictures are taken from various sources; thanks.

 

“வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டி வந்தோமென்று கும்மியடி

சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்”

–தேசியகவி சுப்பிரமணிய பாரதி

cahnda-3

இதனால் சகல ஐயர்களுக்கும் (Priests) அறிவிப்பது என்ன வென்றால் , உங்கள் பிஸினஸ் பார்ட்னர்களாகப் (Business Partners) பெண்களும் வரவிருக்கிறார்கள். போட்டிக்குத் தயாராகுங்கள்!

 

பிரிட்டனில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் நகரம் லெஸ்டர் (Leicester). லண்டனிலிருந்து 130 மைல் தொலைவில் உள்ளது. அங்கே ஒரு புரட்சி நடந்திருக்கிறது. ஒரு இந்துப் பெண்மணி இந்துசமயப் புரோகிதர் ஆகிவிட்டார். அட! அவர் தன்னை புரோகிதர் என்று அறிவித்தால் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? லெஸ்டர் இந்து சமூகம் அவளை புரோகிதராக ஏற்றுக் கொண்டது! அவர் பெயர் சந்தா வியாஸ்.

 

 

பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே ஆசை — புரோகிதராக வேண்டும் என்று. எல்லா ஆசைகளும் அவ்வளவு எளிதில் நிறைவேறிவிடுமா? இல்லை.

 

அவர் கல்யாணம் முடித்து மூன்று மகள்களை   பெற்றெடுத்தார். சமூக ஊழியராகப் பணியாற்றினார். பழைய ஆசை திடீரென மேலுக்கு வந்தது. அப்பாவிடம் அனுமதி கேட்டார். விவாக மந்திரங்களைப் பயின்றார். கல்யாணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவதென்று முடிவு செய்தார். செய்தி பரவியது.

 

பிரிட்டனில் வசிக்கும் இந்துக்கள், கால, தேச, வர்த்தமானத்தை மனதில் கொண்டு மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் படைத்தவர்கள். மேலும் வேத காலத்தில் கார்கி, மைத்ரேயி போன்ற உலகப் புகழ் அறிஞ ர்கள் இந்து மதத்தில் இருந்ததையும் அவர்கள் அறிவர். சாவித்திரி, திரவுபதி போன்ற பேரறிஞர்கள் இந்து மதத்தில் இருந்ததும் அவர்களுக்குத் தெரியும். பெரிய வழக்கறிஞர்களைத் தோற்கடிக்கும் அளவுக்கு திரவுபதியும் சாவித்ரியும் வாக்குவாதம் செய்ததை அவர்கள் மஹாபாரதத்தில் படித்துள்ளனர். அது மட்டுமல்ல; அவ்வையா ர் போன்ற சங்க காலப் புலவர்களையும் சபரி போன்ற வேடர் குலப் பெண்களையும் அவர்கள் அறிவர். பெண்களில் மாமேதைகள் அவர்கள்.

 

இந்தப் பிண்ணனியில் சந்தா வியாசுக்கு திருமணம், பிறந்த நாள் வைபவங்கள், புதுமனை புகு விழாக்கள் (கிருஹப் ப்ரவேசம்) நடத்த அழைப்புகள் வந்த வண்ணமுள்ளன.

 

சந்தா வியாசுக்கு ஆங்கிலமும் குஜராத்தி மொழியும் தெரியும் என்பதால் மந்திரங்களின் விளக்கங்களை ஆங்கிலத்திலும் சொல்லி நடத்துவதால் இளம் தலை முறையினருக்கு பெரு மகிழ்ச்சி.

chanda-vyas1

 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

–தேசியகவி சுப்பிரமணிய பாரதி

 

–subham–

 

 

 

Leave a comment

Leave a comment