
Written by London swaminathan
Date: 16 September 2016
Time uploaded in London: 9-52 AM
Post No.3158
Pictures are taken from various sources; thanks.
நேற்று வெளியான முதல் பகுதியைப் படித்துவிட்டு கீழேயுள்ள இரண்டாம் பகுதியைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்.
மஹாபாரதத்தில் பல இடங்களில் ஜாதிகள் பற்றிய குறிப்புகள் உள. சில முக்கியமான விஷயங்களை மட்டும் காண்போம்:-
சத்யம் தானம் க்ஷமா சீலம் ந்ருசம்ஸ்யம் தமோ க்ருணா
த்ருஷ்யந்தே யத்ர நாகேந்த்ர ச ப்ராஹ்மண இதி ஸ்ம்ருத:
ஆரண்ய பர்வன் 177-16
வாய்மை, கொடை, பொறுமை, ஒழுக்கம், கருணை, தன்னடக்கம், நல்லெண்ணம் முதலியன எவனிடத்தில் காணப்படுகிறதோ அவனே பிராம்மணன்
சூத்ரே ச ஏதத் பவேத் லக்ஷ்யம் த்விஜே தத் ச ந வித்யதே
நவை சூத்ரோ பவேத் சூத்ரோ ப்ராஹ்மணோ ந ச ப்ராஹ்மண:
ஆரண்ய பர்வன் 177-20
இவை சூத்திரனிடத்தில் காணப்படுமானால் அவன் சூத்திரனும் இல்லை; இவை பிராமணனிடத்தில் காணப்படாவிடில் அவன் பிராமணனும் இல்லை.
ஆக நற்குணங்கள் எங்கு இருக்கிறதோ அவனே பிராமணன்:
இதைத் திருவள்ளுவனும் சில குறள்களில் அழகாகச் சொல்லுவான்:–
மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் 134)
ஓதும் வேதத்தை மறந்தால் கூட ஐயர்கள் பிறகு கற்றுக்கொள்ளலாம்; ஆனால் ஒழுக்கம் ஒருமுறை கெட்டாலும் அவன் கெட்டவனே.
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் (குறள் 30)
எல்லா உயிர்களிடத்திலும் அருளைப் பொழிவதால் அறவோரே அந்தணர்.
இன்னொரு இடத்தில் செப்புவான்:-
ஆ பயன் குன்றும் அறு தொழி லோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள் 560)
நல்ல ஆட்சி நடக்காவிடில், பசு மாடுகள் பால் கறக்காது; ஐயர்கள் எல்லாம் வேதங்களை மறந்து விடுவார்கள்.
வள்ளுவனுக்குப் பிராமணர்கள் பற்றி அவ்வளவு அக்கறை என்பதை இக்குறள்கள் மூலம் அறியலாம்.
மாஹாபாரத ஆரண்யக பர்வத்தில் மேலும் பல பாடல்கள் உள:–
யதி தே வ்ருத்ததோ ராஜன் ப்ராஹ்மண: ப்ரசமீக்ஷித:
வ்யர்த்தா ஜாதி ததா ஆயுஷ்மன் க்ருதி யாவத் த்ருஷ்யதே
சர்வே சர்வாசு அத்யானி ஜனயந்தி யதா நரா:
வாக் மைதுனம் அத ஜன்ம மரணம் ச சமம் ந்ருணாம்
பொருள்:-
ஒருவர் பிழைப்புக்காக பிராமணனாக இருந்தால் ஜாதி வீண்; எதுவரைக்கும் செயலில் பிராமணனாக இல்லையோ அது வரை ஜாதி என்பதே வீண்.
எல்லா மனிதர்களும் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; உணவு, புணர்ச்சி, பிறப்பு இறப்பு இவை எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவையே.
ஆக ஒருவனுடைய குண நலன்களே அவனை வேறுபடுத்தி காட்டுகின்றன.
மூன்றாவது பகுதியில் பாரதியின் கருத்துகளைக் காண்போம்.
My old articles on the same subject:–
Caste Divisions in Ancient Tamil Nadu
Posted on July 4, 2014
Eighteen groups of Indians!
Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.
–சுபம்–
You must be logged in to post a comment.