
Written by London swaminathan
Date: 18 September 2016
Time uploaded in London:10-31 AM
Post No.3165
Pictures are taken from various sources; thanks.
அனுமனை– ஆஞ்சநேயனை — மாருதியை – சொல்லின் செல்வன் என்றும் மாபெரும் இலக்கண மேதை என்றும் அனைவரும் போற்றுவர்.
அனுமனை நினைத்தேலேயே சொல்வன்மை பெருகும் என்று சம்ஸ்கிருத துதி சொல்லும்:
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
அனுமானை நினைத்த மாத்திரத்தில் அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம், உற்சாகம், சொல்வன்மை எல்லாம் கிடைக்கும். அவனை வழிபட்டால் இவை எல்லாம் நமது உடைமை ஆகிவிடும்.
கம்பன் சொல்கிறான்- இந்த சொல்வன்மைக்குக் காரணம் அவன் சூரியனிடம் இலக்கணம் படித்ததே என்று.
வால்மீகி ராமாயணமும், அனுமன் அஷ்டோத்தரமும் அவனை “நவ வியாகரண பண்டிதன்” என்று போற்றுகிறது. கம்பன் அவனைப் போற்றும் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது:–
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா
—அனுமப் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:
ஓங்கி உலகளந்த உத்தமன் சுவர்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களைக் கடந்தான். செந்தாமரைக் கண்களையும், சக்கரப் படையையும் உடைய அவன் இதோ இராமனாக இருக்கிறான். அப்பேற்பட்டவன் பொன்னால் ஆன குண்டலங்களை அணிந்த அனுமனைக் காணமுடியவில்லை. பழமையான இலக்கணம் முதலிய சாத்திரங்களைச் சூரியனிடம் கற்றுத் தேர்ந்த அனுமான் இப்படிப்பட்டவன் என்று எடுத்துக் கூறவும் முடியுமோ?
(அனுமன் தனது சுய ரூபத்தை காட்ட பேருருவம் எடுத்ததைக் கூறும் பாடலுக்கு அடுத்து வரும் பாடல் இது)

Anjaneya is seen in Yajna Fire
நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்களே. அவையாவன: இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம்.
அனுமன் கற்ற நவ (9) வியாகரணம் என்ன என்பதை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சந்திர சேகர இந்திர சரஸ்வதி அவர்களின் சொற்களில் காண்போம்:-
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வியாகரணம் : வேதத்தின் வாய்
இலக்கண நூல்கள்
இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்” என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”, “இந்துசேகரன்” என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’ வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள்.
‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்” என்பது.
சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன.
வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது.
பர்த்ருஹரியின் “வாக்யபாதயம்” என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.
‘நவ வ்யாகரணம்’ என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூரிய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.
நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
–Subham–
Krishnan Nallaperumal
/ September 18, 2016“தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.” போன்ற அப்பட்டமான முரண் செய்திகளைப் பரப்புவதனால்தான் இன்றுவரை தமிழ் பிராமணர்களைப் பார்த்து பிறர் நகைக்க இடம் தருகின்றீர்கள். இது தகவல் புரட்சியின் காலம். எந்தத் தகவலையும் சரியா தவறா என்று எடைபோடுவதற்கு உலகளாவிய அளவில் அறிஞர்கள் உள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு வலைப்பதிவு செய்யவேண்டும். முதலில், தொல்காப்பியம் இப்போது கிடைத்துள்ள இலக்கண நூல்களில் பழமையானதே தவிர அதுவே தமிழ் இலக்கணத்துக்கு மூலம் அன்று என்று தொல்காப்பியரே தொல்காப்பியத்தில் பதிவிட்டுள்ளார். (“என்மனார் புலவர்” என்ற வார்த்தைகளை தொல்காப்பியம் எங்கும் பரக்கக் காணலாம். தொல்காப்பியத்துக்கு முன்பே அகத்தியம் தமிழ் இலக்கண நூல் இருந்தது என்பதையும் தமிழர் அறிவர்.)
தமிழ் இலக்கண அமைப்பும், சமற்கிருதம் மற்றும் அதற்கு மூலமான வேதஆரிய மொழிகளின் இலக்கண அமைப்பும் முற்றிலும் வேறானது. தமிழில் உள்ள உயர்திணை, அக்றிணை அமைப்பு சமற்கிருதத்தில் இல்லை; இதற்குச் சான்றாகத் தமிழறிஞரும், மொழியில் அறிஞருமான(73 மொழிகளை அறிந்த பன்மொழிப்புலவர்) தேவநேயப் பாவாணரின் ‘ஒப்பியன் மொழிநூல்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு மேற்கோள் தருகிறேன். http://www.tamilvu.org/library/lA46A/html/lA46Anl1.htm
———–
Prof.Dr.Krishnan N.
Professor of Information Technology and Engineering
Centre for Information Technology and Engineering
Manonmaniam Sundaranar University
Tirunelveli – 627358
Tamil and Vedas
/ September 18, 2016Dear Dr Krishnan
Thanks for reading the post and sending comments. Since your comment was too long, I have edited it, but left the link
you have mentioned, so that interested people can read others’ point of view.I have written my opinion only after reading
Vellaivaranaar, Thevaneya Pavanar, Ilakkuvanar and others.
Still I stick to my views. You are entitled to your views.
My linguistics research did not stop there. There is more to come.
if you are interested, please keep reading it.
Your short comments are always welcome.