
Written by London swaminathan
Date: 14 December 2016
Time uploaded in London:- 11-34 am
Post No.3448
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com

சைவ மறுமலர்ச்சியின் தந்தை ஆறுமுக நாவலர்; அவர் பணி செய்திராவிடில் இலங்கைத் தமிழர் ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருப்பர். இதே போலத் தமிழ் நாட்டில் அருட்பிரகாச ராமலிங்க அடிகள் செய்த பணி மகத்தானது. எளிய தமிழில், பாரதிக்கும் முன்னோடியாக நல்ல கவி புனைந்தவர். ஆறுமுக நாவலரும் வள்ளலாரும் பிராமணர்கள் அல்ல. இருவருக்கும் இடையேயும் வேண்டாத மோதல் ஏற்பட்டு (ஏற்படுத்தப்பட்டு) கோர்ட் வரை சென்று விட்டது. இறுதியின் ஏனோ தானோ என்று அந்த சண்டை முடிந்தது. நல்ல வேளை, இந்து மதத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை. இருவர் புகழும் வாழ்க.
நான் மதுரையில் வடக்கு மாசிவீதியில் யாதவர் பள்ளியில் (யாதவா ஸ்கூல்) ‘ஐந்தாப்பு’ வரை (மதுரை பாஷை- ஐந்தாம் வகுப்பு) படித்தேன். தினசரி பிரார்த்தனை வள்ளலாரின் பாடல்தான்: “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே……………..”
பின்னர் வீடு வீடாகச் சென்று நான் பஜனை செய்த காலங்களில் பாடியதும் வள்ளலார் பாடலே- “அம்பலத் தரசே அருமருந்தே, ஆனந்ததேனே அருள் விருந்தே”. என் தந்தைதான் இதைச் சொல்லிக் கொடுத்தார். அவரே எனக்கு “முன்னவனே யானை முகத்தவனே” — என்ற வள்ளலாரின் பிள்ளையார் பாட்டையும் சிறுவயதில் சொல்லிக் கொடுத்தார். 60 வருடங்களுக்கும் மேலாக இதை தினமும் சொல்லி வருகிறேன்! பள்ளிக்கூடத் தமிழ் நூலில் மனப்பாடப் பகுதியில் வள்ளலாரின் பாடல் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்…………”. இவ்வாறு வள்ளாலார் எம் வாழ்வில் கலந்தவர்.
சின்ன வயதில் சிவாஜி கட்சி — எம்.ஜி ஆர். கட்சி என்று பிரிந்து பள்ளிக்கூடங்களில் சண்டை போடுவோம். பெரியவன் ஆனபோது காஞ்சி சங்கராச்சார்யார் கட்சி- சிருங்கேரி ஆச்சார்யாள் கட்சி என்று மதுரையில் சண்டை போட்டார்கள்; என் தந்தையோ பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் இருவரையும் ஆதரித்தவர்..

அதுபோலத்தான் இந்த வள்ள்லார்- நாவலர் மோதலும் என்பது எனது கணிப்பு. கீழேயுள்ள தகவல் நாவலரின் தமையானார் புதல்வர் எழுதியது. மறுதரப்பு வாதம் இருந்தால் விமர்சனப் பகுதியில் தெரிவியுங்கள்:–




–subham–
mahadevan2013
/ December 14, 2016வேண்டாத விஷயத்தை ஏன் எழுதினீர்
R.Nanjappa (@Nanjundasarma)
/ December 14, 2016இது இதுவரை பலருக்கும் தெரியாத செய்தி. துரதிருஷ்டமானது. ஆனால் இதன் அடிப்படை புரிந்துகொள்ளக்கூடியதே.
சமய உலகில் குரு-சிஷ்ய பரம்பரை என்று தொடர்கிறது. இத்தகைய ஒரு பரம்பரையில் வருபவர்களே அந்த சமூகத்தால் அங்கீகரிக்கப் படுவார்கள். ஸ்ரீல ப்ரபுபாதர் இதை ” Disciplic succession ” என்று சொல்வார்.
ஆனால் “ஆன்மீகம்” என்று பார்த்தால், தெய்வ அருள் யார்மீது பாயும் எனச் சொல்லமுடியாது. It blows where it listeth. இத்தகைய அருளாளர்களை அவர்கள் ஜீவித காலத்திலேயே அறிந்து போற்றுவது அரிது.
பரம்பரையில் வருபவர்கள், சாத்திரம், சடங்கு, தீக்ஷை, என்று போவார்கள். அருளாளர்கள் தனித்து நிற்பார்கள். இவர்கள் பழைய ஏற்பாடுகளை மறுப்பதில்லை-வெறுப்பதில்லை; ஆனால் அவை [அனைத்தும்] தேவை இல்லை என்னும் கருத்துடையவர்கள். சிஷ்யர்கள்- அபிமானிகளுக்கிடையே சச்சரவு எழுவது சகஜம்.
இந்தக் கோணத்தில் பார்த்தால், நாவலர்-வள்ளலாருக்கிடையேயான கருத்து வேற்றுமை தெளிவாகிறது. வள்ளலார் சைவ மரபில் வந்தாலும், அதைத் தாண்டிச் சென்றவர்; நாவலர், மரபில் நின்றொழுகியவர்! உருவ வழிபாடு என்று தொடங்கினாலும், நாளடைவில் வள்ளலார் அருவ-ஜோதி வழிபாட்டை மேற்கொண்டார். எல்லாவித கோட்பாட்டு மரபுகளையும் தாண்டி “தெய்வ அருள் ” என்பதையே முக்கியமாகக் கொண்டார். ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதையே வற்புறுத்தினார். சமரச சன்மார்கம் என்றார்! இது வழிவழிச் சைவ சமயிகளுக்கு சம்மதமில்லாமல் போனது ஆச்சரியமில்லை யல்லவா!
ஒருவர் உண்மையிலேயே அருளாளரா என்பதை அவர் வாழ்ந்த விதத்திலிருந்துதான்- அவருடைய சீலம், ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்துதான் அறிந்துகொள்ள முடியும். கொள்கை எதுவானாலும், நடத்தைதான் ப்ரதானமானது. இவ்விதத்தில் இந்த இருவருமே பெரியவர்கள் தான்!
ஒருவர் செய்த/அருளிய நூல்கள் உண்மையிலேயே அருள் சக்தி வாய்ந்தவையா என்பதை அவை தோற்றுவிக்கும் தாக்கத்திலிருந்துதான் தெரிந்துகொள்ள முடியும். உண்மையான அருள் நூல் எளிமையானதானாலும் வாழ்க்கையை மாற்றியமைக்கும்; நம் மனப்போக்கை மேம்படுத்தும். நம்மை அந்த அருள்வெள்ளத்தில் கொண்டு சேர்க்கும். மரபு வழி வந்த எழுத்து, கருத்துச் செறிவு, நடை, மொழிவளம் ஆகியவற்றில் சிறந்து கருத்துக்கு விருந்தானாலும், அது பெரும்பாலும் புத்தியைத் தொடுவதோடு மட்டும் சரி. இப்படிப் பார்த்தால், வள்ளலாரின் எழுத்துக்கள் மனதைத் தொடுகின்றன.
வேதாந்த மரபில், ஸ்ரீ ராமக்ருஷ்ணர், எந்தப் பரம்பரையிலும் வராதவர். இவருடைய குருமார்களில் ஒருவரான தோதாபுரி, ஸ்ரீ சங்கரரின் அத்வைத [தச நாமி] பரம்பரையில் வந்தவர். ஆனாலும் ஸ்ரீ ராமக்ருஷ்ணரை மற்ற சங்கர மடத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை! Disciplic succession என்று இல்லாததால் இவரை மற்ற வங்காளி வைஷ்ணவ பரம்பரைகளும் அங்கீகரிப்பதில்லை. ஆனாலும் The Gospel of Sri Ramakrishna போன்று சத்தியத்தை எளிதாகச் சொன்ன நூல் எது? Where words come out from the depth of Truth!
நமது ரமண மஹர்ஷிகளின் நிலையும் இதுதான். அவரும் எந்த குருவும் இல்லாமல், எந்தப் பரம்பரையையும் சேராமல் தனித்து நின்றார்! அவருடைய உயர்ந்த நிலையை சங்கர மடங்கள் உணர்ந்திருந்தாலும் அவரைக் கொண்டாடுவது இல்லை! ஒருமுறை சிருங்கேரி சிஷ்யர் ஒருவர் ஸ்ரீ ரமணருக்கு மரபுப்படி சன்யாஸ தீக்ஷை தர முற்பட்டார். தெய்வச்செயலால் அது நிறைவேறவில்லை. பின்னர் இதை அறிந்த ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் அவரைக் கடிந்துகொண்டார்! ரமணரின் பெயர் உலகில் பரவுவதற்குக் காரணமான பால் ப்ரன்டனை அவரிடம் அனுப்பியதே காஞ்சி பரமாசார்யார்தான்! இருந்தாலும், ரமணாஸ்ரமத்தில் வேதம் ஓதுவது சரியில்லை என்று சொல்லி வேதபண்டிதர்களுக்குத் தடை விதித்ததும் காஞ்சி மடம்தான்!
ப்ராசீன பரம்பரை என்று வந்தால், மடங்கள் அதையே போற்றுகின்றன. இது அவற்றின் கடமை. ஆனால் ஆன்மீகம் மடங்களுக்கு வெளியிலும், பரம்பரைக்கு அப்பாலும் தழைக்கும் என்பதை உண்மையான அருளாளர்கள் காட்டுகின்றனர். நாம் எல்லா பெரியவர்களையும் வணங்குவோம்!
Santhanam Nagarajan
/ December 15, 2016நான்கு விஷயங்களைச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.ந்1) இந்தக் கட்டுரையை இன்னும் முழுமையாக கூடுதல் விவரங்களுடன் தந்தால் தான் நாவலர் மற்றும் வள்ளலார் பற்றிய சரியான விவரங்களைப் புரிந்து கொள்ள முடியும்2) வள்ளலார் – நாவலர் கேஸ் நடந்த போது நாவலர், நீதிபதி இருந்த கோர்ட்டில் வள்ளலார் உள்ளே நுழைந்தார். உடனே நாவலர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். இந்த ஒரே காரணத்தினால் இவ்வளவு மரியாதைக்குரிய – கேஸ் போட்டவரே எழுந்து நிற்கும் மரியாதை – ஒருவர் தவறு செய்திருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்தார். வள்ளலார் மீதான வழக்கு தள்ளுப்டி செய்யப்பட்ட்து.3) வள்ளலார் உலகம் கண்டிராத மஹா பெரிய மஹான். அவரை இன்றும் கூட தமிழர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. சரியாகப் போற்றவில்லை. அந்தக் காலத்தில் அவரை எப்படி அறிந்து கொண்டிருப்பார்கள்? நேரில் அவரது அற்புதங்களை அனுபவித்தவர்கள் மட்டும் அந்த மஹா பெரியவரை அதிசயத்துடன் பார்த்து வணங்கினர். வள்ள்லாரின் அணுக்க பக்தர் தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதிய வள்ளலார் சரித்திரம் படித்தால் சகல சந்தேகங்களும் பறந்து போகும் 4) திரு நஞ்சப்பா அவர்கள் கூறியது சரி. காஞ்சி மஹா பெரியவர் உலகம் முழுவதும் ரமணரை அறிமுகப்படுத்திய பால் பிரண்டனை அவரிடம் போகுமாறு பணித்தவர். ஆனால் அவரே ரமணர் தன் தாய்க்கு ஆலயம் அமைப்பதை வேண்டாமே என்று சொல்லி செய்தி அனுப்பினார். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. பரமாசார்யர் ஆசிரம நியதிக்கு உட்பட்டவர். ரமண மஹரிஷியோ அதியாஸ்ரமி. ஆஸ்ரம விதிகளுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு ஒரே கட்டளை அன்னை மீனாட்சியின் கட்டளை தான். இறைவனின் செயல்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். நிறைய நிறையப் படிக்கப் படிக்க தெய்வீக உண்மைகள் புரிய வரும் அல்லது அந்த உண்மைகளை ந்ம்மால் அறிய முடியாது என்ற உண்மையாவது புரிய வரும்! ச.நாகராஜன்