காளிதாசன் கண்ட பறக்கும் பாம்பு (Post No.3547)

e4c34-flying2bsnake

Written by London swaminathan

 

Date: 15 January 2017

 

Time uploaded in London:- 17-49

 

Post No.3547

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

காளிதாசன் உலக மஹா கவிஞன். ஏழே நூல்கள் எழுதி இந்த அளவுக்கு உலகப் புகழ் பெற்ற கவிஞனைக் காணமுடியாது. கிரேக்க மொழியில் இரண்டே நூல்கள் (இலியட், ஆடிஸி) எழுதிப் புகழ்பெற்ற ஹோமரைவிடப் பெரியவர் என்றே நான் சொல்லுவேன். காவியமே இல்லாத மொழியில்  முதல் முதல் காவியம் எழுதியதாலும் நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் வாழ்ந்த ஐரோப்பாவில் அவர் வாழ்ந்ததாலும் வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் தூக்கலாகவே ஹோமரைப் புகழ்ந்து தள்ளுவர். அ தாவது “ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை” — என்ற கதை! ஆனால் வால்மீகி, வியாசன், ரிக்வேதத்தின் 400 கவிஞர்கள், உபநிஷத ஞானிகள் ஆகியோருக்குப் பின்னர் வந்த காளிதாசன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே  இவ்வளவு புகழ் எய்தினாரென்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 1250-க்கும் மேலான உவமைகளை அள்ளிக் கொட்டிய காளிதாசனை ஒப்பிட வேண்டும் என்றால் சங்கத் தமிழ் புலவர் 450 பேர் உள்பட குறைந்து 500 கவிகளின் படைப்புகளை நான் பார்க்கவேண்டி இருக்கிறது.

04597-snakesthatfly_600x337

 

மேலும் இலக்கிய நயத்துக்காகவும் உவமைகளுக்காகவும் புகழ் பெற்ற காளிதாசனின் நூலில் ஏராளமான விஞ் ஞான (அறிவியல்) பூகோள (புவி இயல்) செய்திகள் இருப்பது பலருக்கும் தெரியாது. இன்று பறக்கும் பாம்பு பற்றிய ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

 

1997-ல் காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தைப் படிக்கையில், ரகுவின் அம்புகள் பறக்கும் பாம்புகள் போலப் பறந்தன என்று காளிதாசன் எழுதியதைப் படித்துவிட்டு புத்தக margin மார்ஜினில் பறக்கும் பாம்பு என்று ஒரு ஆச்சரியக் குறி போட்டு வைத்திருந்தேன்.

 

அதைக் கற்பனை என்றே கருதி இருந்தேன்; அண்மையில் பி.பி.சி.யில் ஒரு செய்திப்படம் (டாகுமெண்டரி) பார்த்தபோது இந்தோ நேஷியாவில் அப்படி இருப்பதும் அது பறப்பதைப் படம்பிடிக்க அவர்கள் மிகவும் பிரயத்தனப் பட்டதும் தெரியவந்தது. உடனே ஓடிப்போய் ரகு வம்ச காவியத்தைப் புரட்டிப் பார்த்து அந்தக் குறிப்புடன் அருகில் பி.பி.சி. ஒளிபரப்பு என்றும் எழுதி வைத்தேன். இப்பொழுது பறக்கும் பாம்பு Flying Snake, Flying Serpent என்று கூகுள் செய்தாலோ விக்கி பீடியாவும் யூ ட்யூபும் (You Tube) ஏராளமான படங்களையும் கட்டுரைகளையும் தருகின்றன. பல தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலத்தே இப்படி காளிதாசன் இமயமலையின் நீளம், பறக்கும் விமானியின் அனுபவம், பாரசீகம் (ஈரான்) முதல் இந்தோநேசியா  வரையுள்ள நிலவியல் விஷயங்கள்– நாடுகள் பற்றி எழுதியதெல்லாம் அவன் மிகப்பெரிய அறிவாளி என்பதைக் கட்டுகிறது.

28542-snake2bflying2b1

இதோ ரகுவம்ச காவியத்தில் அவன் சொன்னது:-

தாமே வெற்றி பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் ரகுவும் இந்திரனும் போரிட்டனர். அவர்கள் விட்ட அம்புகள் இறக்கைகளையுடைய பறக்கும், கொடிய விஷப்பாம்புகள் போல இருந்தன. இந்திரன் விட்ட அம்புகள் கீழ்நோக்கியும் ரகு விட்ட அம்புகள் மேல் நோக்கியும் ப றந்தன. இருவரது சேனைகளும் அச்சத்துடன் விலகி நின்றன.

 

 

இந்த ஒரு விஷயத்தை மட்டும் காளிதாசன் எழுதி இருந்தால் இது ஒரு கற்பனை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் காளிதாசனோ காந்தம் முதல் உருப்பெருக்காடி (பூதக் கண்ணாடி) வரை பேசுகிறான். ஆகவே அப்படி ஒதுக்கிவிடமுடியாது.

 

பறக்கும் பாம்புகள் Glider கிளைடர் போல லாவகமாகத் தரை இறங்கும் வகைப் பாம்புகளாலும். இவை இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், இலங்கைத் தீவு, லாவோஸ் வியட்நாம், கம்போடியா முத லிய நாடுகளில் காணப்படுகின்றன. ஆக காளிதாசன் இறக்கை கட்டிய பாம்புகள் என்ற உவமையைப் பயன்படுத்தி அம்புக ளைக் குறிப்பிட்டது கற்பனை அல்ல ; காளிதாசனுக்கு இவை பற்றி நன்கு தெரியும் என்றே தோன்றுகிறது.

நீங்களும் Flying Snake, Flying serpent  என்று கூகுள் செய்தாலோ, யூ ட்யூபில் போட்டாலோ இக்காட்சியைக் காணலாம்.

 

-சுபம்-

Leave a comment

Leave a comment