
Amid MP’s forests, mountains, fields and villages stands Raisen’s wall, a structure that evokes more questions than answers. (Pratik Chorge/HT Photo)
Written by London swaminathan
Date: 17 January 2017
Time uploaded in London:- 9-09 am
Post No.3552
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com

Look closely, the two snakes are not knotted up but artfully entwined, indicating that the artist took care over the design. The icon stands at one end of the wall, near Gorakhpur. (Pratik Chorge/HT PHOTO)
உலக அதிசயங்களில் ஒன்று சீன நெடுஞ்சுவர். விண்வெளியிலிருந்தும் காணக்கூடியது. 5500 மைல் நீளம் உடையது. இடையிடையே சுவர் இல்லாத அல்லது மறைந்து போன பகுதிகளும் உண்டு. இதற்கு அடுத்த நீண்ட சுவர் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது. இதன் நீளம் ஐம்பது மைல்கள்தான். ஆயினும் இது ஒரு வரலாற்றுப் புதிராகவே இருந்து வருகிறது. இதை யார் கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்? என்று தெரியவில்லை.
இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலுக்கும் ஜபல்பூருக்கும் இடையே உள்ளது. இது கோரக்பூர் தேவ்ரி என்ற கிராமத்திலிருந்து — சோக்கிகர் வரை செல்கிறது. விந்திய மலைப் பள்ளத்தாக்குகள், தேக்குமரக் காடுகள், லாங்கூர் இனக் குரங்குகள் வசிக்குமிடங்கள், கிராமங்கள், கோதுமை வயல்கள் ( ராய்சென் மாவட்டம்) வழியாக இந்த 80 கிலோமீட்டர் சுவர் கட்டப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு அணையும் இதைத் தடுக்கிறது.
இந்தச் சுவர் வழியாக நடந்து சென்றால் போகப்போக பல அதிசயப் புதிர்கள் வந்து கொண்டே இருக்கும்! பாழடைந்த கோவில்கள், யாரும் வசிக்காத வீடுகள், உடைந்த சிலைகள், படிக்கட்டுகள் உடைய படிக் கிணறுகள், கரை எழுப்பப்பட்ட குளங்கள், விநோதமான நாகர் (பாம்பு) சின்னங்கள் என்று யாரும் விளக்கமுடியாத தடயங்களைக் காணலாம். இதைக் காணும் வரலாற்று ஆர்வலர்கள் நாம் இப்போது மேல்பரப்பை மட்டும் கண்டு ‘நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம்’. இன்னும் தோண்டத்தோண்ட ‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல’ பல அதிசயங்கள் வரும் என்கின்றனர்.
இதுபற்றி ராய்சென் நகர மருந்துக்கடை வணிகர் ராஜீவ் சோபே (57) கூறியதாவது: “1980 ஆம் ஆண்டுகளில் இதைப் பார்த்தது முதல் நான் மோட்டார் சைக்கிளில் பலருடன் சென்று ஆராய்ந்து கொண்டே இருக்கிறேன். ஒருநாள் சுகதேவ் மஹராஜ் என்ற துறவி என் கடைக்கு வந்தார். தனது குடில் வரை இந்தச் சுவர் வருவதாகச் சொல்லி தனக்கும் இது பற்றி அறிய ஆர்வம் உண்டு என்றார். அது முதல் நானும் அவரும் பலரையும் காலில் செருப்பு இல்லாமல் அழைத்துச் சென்று, கோவில் பகுதிகளை ஆராய்ந்து வருகிறோம்”.

தொல்பொருட் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நாராயண வியாஸ் சொன்னார்: ” இந்த சுவர் இந்த ப்பகுதியில் கிடைக்கும் கற்களால் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அதன் மீது நடந்து செல்லும் அளவுக்கு அகலம் உள்ளது. ஆயுதங்களும் ஆட்களும் மறைந்து இருக்க மாடங்கள் உள்ளன. இதைப் பார்க்கையில் இது ஒரு ராணுவப் பாதுகாப்புச் சுவர் போல உள்ளது.”
ஆனால் கோரக்பூர் ஜோதிடர் ராகவேந்திர கார்வே, “நடுக்காட்டில் எதற்கப்பா பாதுகாப்புச் சுவர்?” என்று இடை மறிக்கிறார். இவரும் நாராயண வியாசும் சுவரை பெரிய சர்வே செய்துள்ளனர்.
இது பத்து அல்லது பதினோராம் நூற்றாண்டுச் சுவர் என்றும் பார்மர் வம்ச மன்னர் ஆட்சிக் காலத்தில் தோன்றியது என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஆயினும் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.
காலசூரி வம்சத்தினர் போரில் ஆர்வமுடையோர். அவர்களைத் தடுத்து நிறுத்த பார்மர் வம்ச மன்னர்கள் இதைக் கட்டியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். பார்மர் வம்ச கோவில்கள் கட்டிடங்களிலுள்ள உத்திகள் இங்கே காணப்படுகின்றன என்பது அவர்களுடைய வாதம்.
இந்த இடத்தைச் சுற்றி வசிப்பவர்கள், முன்னர் அங்கிருந்த சிம்மவாஹினி அம்மன், கால பைரவர் சிலைகள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. இப்போது உடைந்த சிலைகள் மட்டுமே உள்ளன. பலரும் இந்தச் சுவரின் கற்களை எடுத்துச் சென்று வீடு கட்டுகின்றனர். இதை முறையாகப் பாதுக்காக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

The wall zig-zags across the Vindhya mountains just north of the Bhopal Jabalpur Road in Raisen district, and alongside, a man-made pond has been discovered. (Pratik Chorge, Ashwin Patil/HT Photo)
In most Indian temples, elephant icons have been used at the base, their strength metaphorically holding up the stones. Could that have been the case with the temples inside Raisen’s wall too? (Pratik Chorge/HT PHOTO)
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது; நன்றி.
–Subham–

