அமிர்தமும் விஷமும்: மஹாபாரதம் தரும் அற்புத ஸ்லோகம் (Post No.3635)

Written by London swaminathan

 

Date: 14 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 20-02

 

Post No. 3635

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

அமிர்தம் என்ற சம்ஸ்கிருதச் சொல் திருக்குறளில் குறைந்தது மூன்று இடங்களிலும் (64, 720, 1106) சங்க இலக்கியத்தில் குறைந்தது 37 இடங்களிலும் பயிலப்படுகிறது. இது பற்றியும் அமிர்தம் என்ற சம்ஸ்கிருதச் சொல் சங்கத் தமிழ் நூல்களில் மூன்று விதமாக (அமிழ்தம், அமிர்தம், அமுதம்) என்று கையாளப்படுவது குறித்தும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

 

இப்பொழுது மஹாபாரத பாடல்கள் சிலவற்றைக் காண்போம். அத்துடன் அமிர்தத்தையும் விஷத்தையும் ஒப்பீட்டும் பார்ப்போம்.

 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியது அமிர்தம். அதற்கு ஈடு இணையானது எதுவும் இல்லாததால் அதிக இனிமையானது, இன்பம் பயப்பது எல்லாவற்றையும் அமிர்தமென்போம். தேவாமிர்தம் என்றும் சொல்லுவதுண்டு.

யத் த அக்ரே விஷம் இவ

பரிநாமே அம்ருதோபமம்

தத் சுகம் சாத்விகம் ப்ரோக்தம்

ஆத்ம புத்தி ப்ரசாதஜம் (6-40-37)

 

முதலில் விஷம் போல இருந்து பின்னர் எது அமிர்தம் போலத் தோன்றுகிறதோ அது சாத்வீக மகிழ்ச்சி (இன்பம்) மனதுக்கும் ஆன்மாவுக்கும் சாந்தி தருவதால் இந்த இன்பம் கிட்டுகிறது.

விஷ்யேந்த்ரிய சம்யோகாத்

யத் தத் அக்ரே அம்ருதோபமம்

பரினாமே விஷம் இவ

தத் சுகம் ராஜசம் ஸ்ம்ருதம் (6-40-38)

 

எது முதலில் புலன் இன்பம் காரணமாக அமிர்தம் போலத் தோன்றுகிறதோ, ஆனால் நாளடைவில் விஷம் போல ஆகிறதோ அது ராஜச இன்பம் ஆகும்

 

சாத்வீக இன்பத்துக்கு மருத்துவர் தரும் மருந்துகளையும் சிகிச்சைக ளையும் எடுத்துக் காட்டலாம். முதலில் நமக்கு கசக்கும்; பின்னர் நோய் குணமானவுடன் இனிக்கும்

அதே போல சிறு வயதில் அம்மா அப்பா சொல்லும் புத்திமதி,,,,ள் விஷம் போலக் கோபத்தைத் தரும். ஆனால் வயதானவுடன் அவர்கள் புத்தி சொல்லாவிடில் நாம் எவ்வளவு சீரழிந்து போயிருப்போம் என்று எண்ணி மகிழ்வோம்.

 

இது போலவே ஆன்மீகத்திலும் எடுத்துக் காட்டுகள் உண்டு.

இரண்டாவது பாடல் சிற்றின்ப சுகம் முதலில் சுகம் தந்தாலும் பிற்காலத்தில் சம்சார சாகரத்தில் – குடும்ப பாரத்தில்— ததளிக்கும் போது அது சிற்றின்பமே, பேரின்பமில்லை என்று தெளிவு பிறக்கும்.

 

எது இனிமையானதோ அது அமிர்தம்; எது மிகவும் திருப்தியை உண்டாக்குகிறதோ அது அமிர்தம்; பழங்கள் அமிர்தம் போன்றவை (மஹா பாரதம் 3-155-44)

 

தண்ணீரும் அமிர்தம் (3-152; 6-116-23)

சுவையான கதை அமிர்தம் போன்றது (1-90-5)

 

ஆறுதல் தரும் சொல் அமிர்தம் போன்றது (1-147-24; 149-19; 3-79-17)

 

ந த்ருப்யாமி கதாம் ச்ரவணம்

அம்ருதஸ்வாத சம்மிதம் (1-90-5)

அமிர்தம் போன்ற சுவையுடன் சொல்லப்பட்ட கதை கேட்பதால் நான் திருப்தி அடையவில்லை.

 

திருவள்ளுவர் கண்ட அமிழ்தம்:–

 

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ் (64)

 

இனிமை மிக்க அமிதத்தை விட மிகவும் இனிமையானது- தம்முடைய குழந்தையின் பிஞ்சுக் கரங்களால் அளாவப்பட்ட கூழ்.

 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி  கொளல் (720)

 

படிக்காதவர் கூட்டத்தில் பேசுவது தூய்மை இல்லாத முற்றத்தில் (சாக்கடையில்)  சிந்திய அமிழ்தம் போன்றது.

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள் (1106)

 

காதலியின் தோளைத் தொடும்போதெல்லாம், உயிர் தளிர்ப்பதால், அந்தப் பெண்ணின் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விஷம் எது?

 

ஒரு முனிவரின் மகனுடைய கோபத்தை விஷத்துக்கு ஒப்பிடுகிறது மஹாபாரதம் :–விஷகல்ப ரிஷேஹே சுதஹ (1-36-23)

 

திரவுபதிக்கு ராஜ சபையில் ஏற்பட்ட அவமானத்தை நினைத்து தருமர் (யுதிஷ்டிரர்) வருத்தப்பட்டார். இந்த அவமானம் விஷத்துடன் ஒப்பிடப்படுகிறது (3-35-17)

 

விஷம் கொடுத்தவனுக்கு என்ன என்ன விளைவுகள் ஏற்படுமோ அது போல திருதராஷ்டிரனின் படைகளுக்குத் தோல்வியால் வாயில் நுரை தள்ளியது; கைகால்கள் சுண்டி இழுத்தன.(6-79-23)

 

–Subaham–

 

Leave a comment

Leave a comment