
Written by London swaminathan
Date: 19 FEBRUARY 2017
Time uploaded in London:- 20–49
Post No. 3651
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
ஆர்ய தரங்கிணி என்னும் ஆங்கில நூலில் ஏ.கல்யாணராமன் (Aryatarangini by A.Kalyanaraman) எழுதிய விஷயங்களின் சுருக்கத்தை மூன்றாம் பகுதியில் கொடுத்தேன். அவர் சொல்லும் வேறு சில விஷயங்கள்:–
எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள் ) தங்களை சூரியனின் புதல்வர்கள் என்று கூறிக்கொண்டனர். கி.மு.2500ம் ஆண்டில் இப்படி அழைத்துக்கொண்ட முதல் மன்னன் ஆண்ட நாகரின் பெயரும் சூரியபுரி! இதை இந்தியாவிலுள்ள சூரியவம்சத்துடன் ஒப்பிடலாம். இக்ஷ்வாகு வம்சத்தில் திலீபன், ரகு, ராமன் ஆகியோர் தோன்றினர். இவர்கள் அனைவரும் சூரியகுலத்தில் உதித்த அரசர்கள். (தமிழ் மன்னர்களில் சோழர்களும் சூரிய குலத் தோன்றல்களே). இவர்கள் அனைவரும் 14 ஆவது மனுவான வைவஸ்வத மனுவின் வழியில் வந்தவர்கள். அவருடைய காலம் கி.மு.3000 ஆக இருக்கலாம்.
இந்திய மன்னர்கள் சூரிய தெய்வங்களான ஆதித்யர்கள் (அதிதியின் மகன்கள்= ஆதித்யர்கள்) வழி வந்தவர்கள் ஆவர். எகிப்தில் மன்னர்களின் மூச்சு, நைல் நதிக்கு உயிரோட்டம் கொடுத்ததாகச் சொல்லுவர். இந்தியாவில் நீர்க் கடவுளான வருணனை மன்னர்களுடன் ஒப்பிடுவர்.
இந்த ஒற்றுமைகளை எல்லாம் கண்ட சில ஆராய்ச்சியளர்கள், எகிப்திலிருந்தே, இந்திய கலாசாரம் வந்ததாகச் சொன்னார்கள். இதை நியாயப்படுத்துவதற்காக எகிப்திய மன்னர்களின் காலத்தை முன்போட்டனர். எகிப்தியர்களுக்கு மிகவும் முந்தையது சப்தசிந்து நாகரீகம் என்று நான் காட்டுவேன்.
எகிப்தில் நாகரீகம் தோன்றியது கி.மு.3200 -எனலாம்.. ரிக்வேதத்தில் காணப்படும் கலாசாரம் இதைவிட குறைந்தது 1000 ஆண்டுகளாவது பழமையானது. எகிப்தியர்கள்தான், இந்தியாவிலிருந்து கடன் வாங்கி இருக்க வேண்டும். இதற்கு ஆதாரங்கள் உள.
எகிப்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குதிரைகள், சக்கரம் பூட்டிய ரதங்கள், குயவர் சக்கரம், இரும்பு உபகரணங்கள், ஆயுதங்களூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை துருக்கி, லெபனான் ஆகிய பகுதிகளை ஆண்ட மிட்டனி (Mitanni) அரசர்களிடமிருந்து கிடைத்திருக்கலாம்.

வில்- அம்பு
ரிக் வேதத்தில் வில்- அம்பு பிரயோகம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. பயுவின் பிராரத்தனை (6-75) ஒரு எடுத்துக் காட்டு. இந்த வில்- எதனால் ஆனது என்பதை வேதம் சொல்லாவிடினும், உலோகம், கொம்பு, மரத்தால் வில்கள் செய்யப்படதாக அக்னி புராணம் சொல்லும். கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணிணி அம்புகளை கார்முக என்று குறிப்பிடுகிறார். பாணினி, கௌடில்யர் முதலியோர் பனைமரத்தால் ஆன வில்லைக் குறிப்பிடுகிறார்கள். மஹேச்வாச என்ற விசேஷ வில்லைப் பாணினி குறிப்பிடுகிறார். இது ஏழரை அடி நீளமானது. சாதாரண வில் ஆறு அடி நீளம் உடையது. எகிப்தியர்களும் இதே அளவுடைய வில் பயன்படுத்தினர். சம்ஸ்கிருதத்தில் வில்- அம்புக்கு உள்ள பெயர்களே அவஸ்தன், கிரேக்க, லதீன் மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
எகிப்து மீது படையெடுத்த ஹிக்ஸோஸ் (Hyksos) குதிரை பூட்டிய ரதங்களைப் பயன்படுத்தியது, எகிப்தில் புதிய தாக்கத்தை உண்டாக்கியது. அதற்குப் பின்னர், எகிப்திய ராணுவத்தில் குதிரைப் படை வந்தது. ஆசிய நாட்டு மரங்களை தேருக்குப் பயன்படுத்துவது கொஞ்சம் காலம் நீடித்தது. இந்தப் படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து திமில் இருக்கும் பிராம்மணி காளைகள் இறக்குமதி செய்யப்பட்டன. போர் என்னும் கலையை ஹிக்ஸோஸ் படை எடுப்பு முழு அளவுக்கு மாற்றிவிட்டது என்று சர் எச். கார்டன் (Sir H.Gordon) கூறுகிறார்.
–subham–