
Written by London Swaminathan
Date: 11 May 2017
Time uploaded in London: 21-58
Post No. 3899
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
(முதல் பகுதி நேற்று வெளியாகியது)
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (குறள் 466)
பொருள்:
ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய் தாலும் கெட்டுப்போவான்; மற்றும் செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் கெட்டழிவான்.
இதைத் தான், கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கும் சொன்னார். நீ க்ஷத்ரியன்; போர் செய்வது உன் தொழில். எழுந்திரு (உத்திஷ்ட) என்றார்.
புத்தனும் தம்மபதத்தில் (314) இதைச் சொல்கிறான்:
“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும். ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – இது புத்தன் வாக்கு.

கண்ணனும் பகவத் கீதையில் “ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40)-
“நல்லது செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான்” என்பது கண்ணன் வாக்கு.
ஒரு நீதிபதி இருக்கிறார். அவர் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை அளிக்க வேண்டிய தருணத்தில் ஜீவகாருண்யம் பற்றிப் பேசிவிட்டு கடமையைச் செய்யமாட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எத்தனை பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவர் கொலை செய்தவராகக் கருதப்பட மாட்டார்.
இது போல போர் வீரர் ஜாதியில் பிறந்த அர்ஜுனன் போர் செய்யாமல் தப்பிக்க முயன்றபோது கிருஷ்ணன் கண்டிக்கிறான்
ச்ரேயான் ஸ்வதர்மஹ– அவனவன் தொழிலே சிறந்தது (3-36) என்றும் கண்ணன் மொழிகிறான்.
to be continued………………………….
–Subham–