
Written by London Swaminathan
Date: 14 May 2017
Time uploaded in London: 20-10
Post No. 3908
Pictures are taken from various sources; thanks.
contact: swami_48@yahoo.com
பெண்களின் அழகு எப்போது குறையும்? பெரியோர்களின் பெருமை எப்போது மறையும்? என்று ஒரு கவிஞர் அழகாகப் பாடி வைத்திருக்கிறார். கவிஞரின் பெயர் மட்டும் கிடைக்கவில்லை. நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல் இது.
கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே – கற்றருளை
வேட்ட பெரியோர் பெருமையெல்லாம் வேறுஒன்றைக்
கேட்டபொழுதே கெடும்
பொருள்-
கற்றைக் குழலார் கவினெல்லாம்= அடர்த்தியான மயிரை உடைய பெண்களின் அழகு எல்லாம்
ஓர்மகவைப்பெற்றக் கணமே பிரியும் = ஒரு குழந்தையைப் பெற்ற அந்த நொடியே நீங்கிவிடும்
அது போல
கற்றருளை வேட்ட பெரியோர் பெருமையெல்லாம் = கடவுள் அருளைப் பெற விரும்பிய பெருமைகள் எல்லாம்

வேறுஒன்றைக்கேட்டபொழுதே கெடும் = கெட்ட விஷயங்களைக் கேட்டாலேயே போதும்; மறைந்துவிடும்
கெட்டது செய்ய வேண்டும் என்பது கூட இல்லை. கெட்ட விஷயங்கள் கா தில் விழும் அளவில் நின்றாலேயே போதும்; பெருமை எல்லாம் சீர் குலையும்.
குழந்தை பெற்ற பின்னால், பெண்களைப் பொறுத்த மட்டில் இளம் குமரி என்ற நிலை மாறி அம்மா, மாமி என்ற நிலைக்குத் தள்ளப்படுவர்.
நல்லோரைப் பொறுத்த மட்டில், இவரும் கூட அப்படிச் செய்வாரா? வேலியே பயிரை மேய்ந்தது போலல்லவா இருக்கிறது என்பர்.
பல சாமியார்கள் ஒரு தப்புச் செய்தாலும் உடனே பத்திரிக்கைகளில் பெரிய எழுத்தில் செய்தி வந்து விடும்.
ஆகையால் மிகவும் கவனமாக வாழவேண்டும்.
–சுபம் —