இங்கேயே இருக்கிறது ஜென்! (Post No.3960)

Written by S NAGARAJAN

 

Date: 1 June 2017

 

Time uploaded in London:-  5-49  am

 

 

Post No.3960

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இதோ இதோ இங்கேயே இருக்கிறது ஜென்!

Zen is Right Here!

 

ச.நாகராஜன்

 

ஜென் மாஸ்டர் ஷ்ன்யு சுஸுகி ரோஷி (Shunryu Suzuki Roshi) ஜப்பானைச் சேர்ந்த புத்த துறவி. 1959இல் அவர் சான்பிரான்ஸிஸ்கோ வந்தார். அப்போது அவருக்கு வயது 55.

மேலை நாட்டில் புத்தரின் போதனைகளை எடுத்துரைப்பது அவருடைய நோக்கம். ஜென் பிரிவில் ஆர்வமாய் இருந்த அமெரிக்கர்களுக்கு ஜஜென் என்னும் தியானப் பயிற்சியை அவர் கற்பித்தார்.

அடர்ந்த காட்டில் அமைந்திருந்த டஸ்ஸாஜாரா மலைத்தொடரில் அவர் 1967 முடிய வாழ்ந்திருந்தார்.

அவர் ஆயிரக்கணக்கானோரைச் ச்ந்தித்தார். அவா பேசும் மொழி பெரும்பாலும் “மௌனம்” தான். ஒரு தேநீர் கோப்பையை எப்படி எடுப்பது, எப்படி நடப்பது போன்றவற்றால் கூட அவர் கற்பித்தார்.

அவரது அணுக்க சீடராக இருந்த ஷன்யு சுஸுகி (Shunryu Suzuki) தனது அனுபவங்களையும் ரோஷியின் வாழ்நாளில் ந்டந்த சுவையான சம்பவனக்களையும் தொகுத்து இதோ இங்கேயே இருக்கிறது ஜென் என்ற பொருளில் – Zen is Right Here – ஒரு சுவையான சம்பவத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.

அதில் உள்ள சுவையான சம்பவங்களில் சில:

*

 

சீடர் ஷன்யு சுஸுகி தனது மாஸ்டரான ரோஷியிடம் ஒரு நாள் தேநீர் அருந்துகையில் இப்படிக் கேட்டார்:

“மாஸ்டர். உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?”

அதற்கு மாஸ்டர் இப்படி பதிலளித்தார்:

“எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். உனக்கு இல்லை!”

*

 

மாஸ்டர் ரோஷி ஒரு முறை இப்படி மாணவ்ர்களைப் பார்த்துச் சொன்னார்:

“மற்றவ்ர்கள் எதிரில் உங்களை நான் திட்டினால் அதைப் பெரிதாக் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அது என் சொல்படி கேட்காத இன்னொருவருக்காக இருக்கலாம். உங்களைப் பிரம்பால் நான் அடித்தேன் என்றால் அது உங்களிடம் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன், நீங்கள் ஒரு நல்ல மாணவர்’ என்று அர்த்தம். சில சமயம் அது உங்களுக்காக இருக்கலாம், சில சமயம் உங்களுக்கு அடுத்தாற் போல இருக்கிறாரே அவருக்காகக் கூட இருக்கலாம்!”

*

 

மாஸ்டர் ரோஷியை அவரது சொற்பொழிவு ஒன்று முடிந்த பின்னர் அவரிடம் வ்ந்து “ஏன் நீங்கள் தலையை மொத்தமாக மழித்திருக்கிறீர்கள்” என்று ஒருவர்  கேட்டார்.

அதற்கு மாஸ்டர் தன் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே இப்படி பதில் சொன்னார்:

“அது தான் அடிப்படையான ஹேர்ஸ்டைல்”

*

 

உளவிய்ல் சிகிச்சை அளிக்கும் உளவியலாளர் ஒருவர் மாஸ்டரிடம் வந்து, “பிரக்ஞை என்றால் என்ன” என்று கேட்டார்.

அதற்கு  மாஸ்டர் சொன்னார்:” பிரக்ஞையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் என் மாணவர்களுக்கு ஒரு பறவையின் கீதத்தை எப்படி கேட்பது என்று சொல்லிக் கொடுக்க முயல்கிறேன்.”

 

*

 

ஒரு நாள் சீடர் ஷன்யு சுஸுகி மாஸ்டரிம் இப்படி புகார் செய்தார்:

“எனது மனம் ஒரு நிலைப்பட்டு இருப்பதே இல்லை. தியானத்தின் போது அங்கும் இங்கும் அலை பாய்கிறது”

அதற்கு மாஸ்டர் சொன்ன பதில் இது:

உனது முதுகெலும்பை நேராக நிமிர்த்தி விட்டால், உனது மனம் அமைதியாக இருக்கும்.”

*

 

ஒரு மாணவன் மாஸ்டரைப் பார்த்து, “ஏன் ஜப்பானியர்கள் தங்கள் டீ கோப்பையை இப்படி மிகவும் மெலிதாகச் செய்திருக்கிறார்கள். அது மிக சுலபமாக உடைந்து விடுகிறதே” என்று கேட்டார்.

மாஸ்டர் சொன்னார் இப்படி: “ அது ஒன்றும் மெலிதாக இல்லை.  உனக்குத் தான் அதை எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை.

எப்போதுமே  உனது சுற்றுப்புறச் சூழலை நீ தான அனுசரித்து அத்ற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். அதற்கு நேர் எதிர்மாறாக எதையும் எதிர்பார்த்து .நடக்கக் கூடாது”

*

 

இப்படி ஏராளமான சம்ப்வங்களால் வாழ்க்கை முழுவதும அவர் பாடம் போதித்து வந்தார்..

*******

 

 

Leave a comment

Leave a comment