கம்பன் பாட்டில் கீதை வரிகள் (Post No.4190)

Written by London Swaminathan

 

Date: 7 September 2017

 

Time uploaded in London- 12-50

 

Post No. 4190

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்மசம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

–பகவத்கீதை 4-8

 

பொருள்

 

நல்லோரைக் காத்தற்கும், துஷ்டர்களை அழித்தற்கும், தருமத்தை நிலைநாட்டுதற்கும் யுகம் தோறும் வந்துதிப்பேன்

 

 

இதே பொருள் தொனிக்கும் கம்பன் பாடல் இதோ!

அறம்தலைநிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்தநீதித்

திறம்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்

இறந்து உகநூறித்தக்கோர் இடர்துடைத்து ஏகைஇண்டுப்

பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

–பிணிவீட்டுப் படலம், சுந்தர காண்டம்

 

பொருள்

 

தன்னுடைய பொன்னடிகளைப் போற்றுபவரின் பிறப்பை அறுக்கும் அந்தப் பரம்பொருள் (ராமன்),

அறம் தலை நிமிர்ந்துவளரச்செய்து,

வேதங்கள் உலக உயிர்களிடத்தில் கருணைகொண்டு சொல்லிய

நீதியின் வழிகளை உலகத்தால் அறிந்து மேற்கொண்டு ஒழுகும்படி அவர்களை நன்வழியில் செலுத்தி,

கொடியவர்கள் இறக்கும்படி அழித்து,

நல்லவர்களின் துன்பங்களைப் போக்கி

அதன்பின்பு

தனக்குரிய இடத்துக்கே செல்லுமாறு

இப்பொது இங்கே அவதாரம் செய்துள்ளான்

–இவை எல்லாம் அனுமான் கூறியது

 

கீதைக்கும் கம்பனுக்கும் உள்ள தொடர்பைக் காட்ட பெரிய நிபுணர் குழு தேவை இல்லை. இரண்டையும் படித்தவர்க்கு உடனே புரிபடும்

செய்தி:

நல்லோரைக் காக்க

தீயோரை அழிக்க

அறத்தை நிலைநாட்ட ராமன் அவதாரம்

அனுமான் அறிவிப்பு

 

–subham–

Leave a comment

1 Comment

Leave a comment