Written by London Swaminathan
Date: 11 September 2017
Time uploaded in London- 9-30 am
Post No. 4202
Pictures are taken from various sources; thanks.
ப்ரஹ்லாத போஷகத்வம் தவ ஸித்தமஹோ ஹிரண்ய வைரித்வம்,
தஸ்மாத் நரஸிம்மகுரோ ஹ்ருத்ஸ்தம்பம் மே விபித்யபுர ஏஹி
“இந்த ஸ்லோகத்தில் நம் குருநாதர் பரமகுருநாதரை நேரில் பார்த்துக் கேட்பதுபோல் கேட்கிறார். ஹே நரஸிம்ம குரோ என்று அந்த அபிநவ நரஸிம்மபாரதீ என்ற குருவை வணங்கிப் பிரார்த்திக்கிறார்.
ஹே குரோ, உங்களுக்கும் நரஸிம்ம மூர்த்திக்கும் பலவிதத்திலும் ஸாம்யமே காணப்படுகிறது. எவ்விதமென்றால் ‘ப்ரஹ்லாத போஷகத்வம்’, ‘ஹிரண்ய வைரித்வம்’ என்ற முக்கியமான தர்மங்கள் இரண்டும் ஸமமாகவே உங்கள் இருவரிடமும் பொருந்தி இருக்கின்றன. உக்ர நரஸிம்மர் ப்ரஹ்லாதன் என்ற அசுர பாலகனை அபயம் கொடுத்து அனுக்ரஹம் செய்தபடியால் அவனைப் போஷித்தார், காப்பாற்றினார். அதனால் ப்ரஹ்லாத போஷகரானார்.
சாந்த நரஸிம்ம ரூபமான தாங்களோ ‘ப்ரக்ருஷ்டோ ஹ்லாத: ப்ரஹ்லாத:’ என்ற வ்யுக்தத்தின்படி பக்தர்களுக்குப் பலவிதத்திலும் உத்கிருஷ்டமான ஆனந்தத்தைக் கொடுக்கிறீர்கள். ‘ஹ்லாதம்’ என்றால் ‘ஆனந்தம்’ என்று பொருள் கொள்ளலாம்.

ஆனந்தம் என்பது பொதுவாக விஷயானந்தத்தையே குறிக்கும். அதுவோ விஷயங்களின் மாறுபாடுகளை அனுசரித்து மாறுபடக்கூடியது.தைத்ரீயத்திலும், பிருஹதாரண்ய உபநிஷத்திலும் இந்த ஆனந்தங்களைப் பற்றி விரிவாகக் கூறியிருப்பதை இந்த ஸந்தர்ப்பத்தில் கொஞ்சம் சுருக்கமாகக் குறிப்பிட்டால்தான் வாசகர்களுக்கு குருநாதரது சுலோகத்தில் அர்த்தம் நன்கு விளங்குமாதலால் அதைக் கொஞ்சம் காண்பிக்கிறோம்.
சுலோகத்திலுள்ள ‘ப்ரஹ்லாத’ பதத்திதிற்கும் ‘ஹ்லாத’ பதத்திற்கும் அர்த்தத்தில் எவ்வளவு வேற்றுமை இருக்கிறது என்பதையும் வாசகர்கள் இந்த விளக்கத்தின் மூலம் உணரலாம்.
தைத்ரீயோபநிஷத்தில் ‘தஸ்யேயம் ப்ருதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணாஸ்யாத் . ஸ ஏகோ மானுஷ ஆனந்த:’ என்று கூறப்பட்டிருக்கிறது அதாவது பூமண்டலத்துக்கே சக்ரவர்த்தியாயிருப்பவனுக்கு ஏற்படும் ஆனந்தம்தான் மானுஷாநந்தம் எனப்படுகிறது. அந்த சக்ரவர்த்தி நல்ல ஆரோக்யமும் தேஹதிடமும் பலமும் யௌவனமும் நல்ல கீர்த்தியும் படிப்பும் குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும். தர்மபுத்திரர்போல் ஏகச் சத்ராதிபதியாகவும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்
ஓர் ஆனந்தம் அவனுக்கு இருப்பதாகக் கூறலாம். ஆனால் அவன் தேவலோக ஸுகங்களில், காமனை உள்ளவானாயிருந்தால் அவ்வித காமனையில்லாத சுரோத்திரனுடைய ஆனந்தத்தில் நூற்றில் ஒரு பங்காகத்தான் அந்த சக்ரவர்த்தியின் ஆனந்தம் இருக்கக்கூடும்.
இப்படியே ஹிரண்யகர்பானந்த்தம் வரையில் ஒவ்வொரு படியிலும் நூறு மடங்கு ஆனந்தம் விருத்தியாகிக் கொண்டே போனா லும் அந்த ஹிரண்ய கர்ப்ப ஆனந்தம் வரையிலுள்ள எல்லா ஆனந்தங்களும் நிஷ்காமனான பிரஹ்மம்மவித்தின் ஆனந் தத்தில் ஒரு பாகமேயாம். ஆகவே காமனையில்லாத ப்ரஹ்மவித்தின் ஆனந்தம்தான் எல்லாவற்றையும் விட மேன்மையானது. அதைத்தான் பிரஹ்மானந்தம் என்று சாஸ்திரங்களில் பாஷ்யகாராதிகள் வர்ணிக்கிறார்கள்.
அதைத்தான் முன்கூறிய ப்ரஹ்லாத போஷகத்வம் என்ற சுலோகத்திலுள்ள ப்ரஹ்லாத பதத்தால் நம் குருநாதர் குறிப்பிடுகிறார்.
ஹ்லாதம் என்றால் ஆனந்தம் ப்ரஹ்லாதம் என்றால் உத்க்ருஷ்டமான ஆனந்தம். உத்க்ருஷ்டம் என்றால் எதைவிட உத்க்ருஷ்டம் என்ற கேள்வி வருகிறது.
மானுஷானந்தத்தை விட மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம் நூறு மடங்கு உயர்ந்தது.
அதைவிட தேவ கந்தர்வானந்தம் நூறு மடங்கு சிறந்தது.
இப்படியே பித்ருக்கள், ஆஜான தேவர்கள், கர்ம தேவர்கள், தேவர்கள், இந்திரன், பிருஹஸ்பதி, ப்ரஜாபதி என்ற முறையில் ஒன்றைவிட ஒன்று 100 மடங்கு உயர்ந்தது என்று சொல்லிக் கடைசியாக ஹிரண்ய கர்ப்பானந்தம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஆனால் பிரஹ்மவித்தானவன் ஆனந்தமோ எல்லை இல்லாதது. நிரதிசயமானது என்று தைத்ரீய உபநிஷத்திலும் பிருஹதாரண்யகம் முதலியவற்றிலும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அப்பேற்பட்ட நிரதிசய ஆனந்தத்தைதான் ப்ரஹ்லாத பதத்தால் குருநாதர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது எல்லை இல்லாத ஆனந்தமாகிய பிரஹ்மானனதந்தத்ததையே தம் பக்தர்களுக்கு அளிக்க வல்லமையுள்ளவர் குருநாதர்.”
xxxx
இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அடங்கிய இப்புத்தகம் இல்லம்தோறும் இரு க்க வேண்டும். வாங்கிப் பயன் பெறுக.
ஆதாரம்: ஸ்ரீ குருகிருபா விலாஸம்
ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் திவ்ய மஹிமைகளை எடுத்துக் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு, எழுதியவர்– ஸ்ரீ பாஷ்ய ஸ்வாமிகள், முதல் பாகம், 2011
–SUBHAM–


