
Written by London Swaminathan
Date: 1 September 2017
Time uploaded in London- 20-50
Post No. 4178
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி
எனது பழைய பள்ளிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2017ல் சென்றேன். இதற்கு மு மதுரை சென்றபோதெல்லாம் இருள் சூழ்ந்திருக்கும் அல்லது நான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருபேன்.இப்பொழுது சூரிய பகவான் ஒளிவீச, அதில் அப்பள்ளியில் பணியாற்றிய பாரதியின் சிலை புதுப் பொலிவுடன் மிளிர நல்ல புகைப் படங்கள் எடுத்தேன்.

வீர பாரதி! கம்பீர பாரதி!! எனது பள்ளியில் பாரதி!
இந்தப் படத்தைப் பயன்படுத்துவோர் படம் எடுத்தவர் லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரையும் சேர்த்தால் பாரதியின் பரிபூரண ஆசியைப் பெறுவர்
My brother Suryanarayanan adds
Santanam Suriyanarayanan 1966.sslc படித்த ஆண்டு.பாரதி பேச்சுபோட்டியில்first prize.இந்த சிலை திறப்புவிழா பசுமையாக நினைவில் உள்ளது.அந்த ஆண்டு ,பள்ளிவிழாவில் பாரதியின்,ரா.பி.சேதுப்பிள்ளை வசனம் பேசினேன்.பக்தவத்சலம் எங்களுக்கு பரிசளித்தாா்.thanks for reminding this
Santanam Suriyanarayanan சிலை திறப்பின்போது மிக அருகில் நின்றிருந்தேன்.thanks to teachers,especially திரு.வி.ஜி.சீனிவாசன்
ஏதோ ஒரு காரணத்தினால் நான் அன்று (1966) அப்பள்ளிக்குப் போகவில்லை. மதுரைக் கல்லூரியில் சேர்ந்த உற்சாகத்தில் பழைய பள்ளியை மறந்திருக்கலாம்
எப்படியாகிலும் எங்கள் தமிழ் குரு வி.ஜி.எஸ்,ஸை நினைவுகூற, இப்பொழுது, ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.

முறுக்கு மீசையும் மொபைல் போனும் : எச்சரிக்கை
நான் படித்த, பாரதியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்குள் சென்றேன். சிருங்கேரி சங்கராசார்யாரின் அபூர்வ புகைப்படக் கண்காட்சியையும், எனது அருமை பாரதியார் சிலையையும் புகைப்படம் எடுப்பதற்கு முன்னர், ஒரு பெரிய போர்டு பளிச்செனத் தென்பட்டது. மொபைல் போன் பற்றி எச்சரிக்கை லண்டனிலுள்ள பள்ளிக் கூடங்களிலும் உள்ள து. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனின் முறுக்கு மீசைக்கும் தடை விதிக்கப்படதைப் பார்த்து ‘’சிரி சிரி’’ என்று சிரித்தேன். எங்கள் காலத்தில் யூனிfஆர்ம் (Uniform) கூடக் கிடையாது. இப்பொழுது எல்லோரும் சீருடையுடன் காணப்பட்டனர்.





