
Date: 17 FEBRUARY 2018
Time uploaded in London- 8-53 am
Written by London swaminathan
Post No. 4756
PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்; அவன் வாரி வழங்கும் வள்ளல்; கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்தான். அவனிடம் பரிசு பெற்ற பலர் அவனைப் பாராட்டினர். ஆனால் அறிஞர் பெருமக்களோ எல்லாம் இறைவன் செயல் என்று தனி மனிதன் துதியில் இறங்கவில்லை.
பரிசு வாங்கியவர்களில் ஒருவர் அரசனை இந்திரனே, சந்திரனே, பாரியே ஓரியே, காரியே என்று புகழ்ந்தார். வேறு ஒரு அறிஞர் ‘’அவனின்றி ஓர் அணுவும் அசையாது — எல்லாம் ஈசன் செயல் — ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று சொன்னார்.

‘’ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருதஹ கஸ்யஸ்யத்வித்தனம்’’
—–ஈஸாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரம்
பொருள்
இந்த உலகம் முழுவதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது; எல்லாம் அவன் கட்டுப்பாட்டில் உள்ளது; அவரவர்களுக்குரியதை அனுபவியுங்கள்; பிறருடைய செல்வத்துக்கு ஆசைப் படாதீர்கள்
எத்தனை முறை பரிசு கொடுத்தாலும் இதே கதைதான். அரசனோ தன்னைப் புகழ்வதையே விரும்பினான். இறைவன் பற்றிய புகழ்ச்சியை அவன் விரும்பவில்லை. ஆனால் அறிஞர் பெருமக்களிடம் என்னைப் புகழ்ந்து பேசுங்கள், பாடுங்கள் என்று சொல்லத் துணிவும் இல்லை.
ஒரு முறை இதை அறிஞருக்கு குறிப்பால் உணர்த்துவோம் என்று கருதி இருவரையும் அழைத்தான்; தன்னை எக்காலமும் முக்காலமும் புகழும் ஒரு ஆளுக்கு ஒரு பூசணிக்காய்க்குள் ரத்தினக் கற்களை நிரப்பிக் கொடுத்தான் அதை வாங்கியவர் வெறும் பூசணிக்காய் என்றே நினத்தார். குறைந்த மதிப்புள்ள இரண்டு நாணயங்களை அறிஞரிடம் கொடுத்தார். இருவரும் புதிய பரிசுப் பொருட்களுடன் அரண்மனையிலிருந்து வீடு சென்றனர்.

பூசணிக்காய் வாங்கியவருக்குக் கொஞ்சமும் திருப்தி இல்லை. அவர் வீட்டின் வழியாகச் சென்ற அறிஞரை அழைத்து நீங்களே இந்தப் பூசணிக்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்; அவரும் அதை மனமுவந்து ஏற்று, என்னிடமுள்ள இரண்டு காசுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
அறிஞர் பெருமகன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் பூசணிக்காயைக் கொடுத்து சமைக்கச் சொன்னார். அவள் அதை வெட்டிய அடுத்த நிமிடம் ரத்தினக் கற்கள் கீழே விழுந்தன. உடனே அந்த அறிஞர் நமக்குத் தேவையானதற்கு மேல் எதுகிடைத்தாலும் அதற்கு ஆசைப்படக்கூடாது; ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்ற உபநிஷத மந்திரத்தைச் சொல்லி, அரசனிடமே அந்த ரத்தினக் கற்களைக் கொடுத்து பூசணிக்காய் விஷயத்தைச் சொன்னார். அரசனனுக்குகு பெரும் வியப்பு!!
நான் இந்த ஆளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக காய்க்குள் மறைத்து ரத்தினக் கற்களை வேறு ஒருவருக்குக் கொடுத்தேன். நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறதே’ என்று வியந்தான். பின்னர் அ’வனின்றி ஒரு அணுவும் அசையாது’ என்பது உண்மையே என்பதை ஏற்று தனது தவற்றையும் அறிந்தான்.
அவனுடைய அஹங்காரம் அகன்றது; யார் யாருக்கு என்ன என்னவென்பதை இறைவன் ஏற்கனவே நிச்சயித்து விட்டான்; நான் ஒரு கருவி மட்டுமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.
இறைவனின் கணக்குப்படியே எல்லாம் நடக்கும் என்பதை உணர்ந்தான்.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

xxxx
MY OLD ARTICLES:
https://tamilandvedas.com/tag/indran/
24 Dec 2016 – அப்போது உமையம்மை அவன் முன் தோன்றி, அவனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள்:- யக்ஷன் வடிவில் வந்தவர் தனது கணவரே என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் சொன்னாள். அப்போதுதான் தேவர்களின் செருக்கு அழிந்தது. பின்னர் இந்திரனும் சிவனை …
பழமொழிகளில் இந்துமதம் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/பழமொழிகளில்-இந்த…
அவனின்றி ஒரு அணுவும் அசையாது (20). Picture: Sri Krishna. பிள்ளையார் சுழி போட்டாயிற்று பிள்ளையார் பிடிக்க குரங்கானது உரு ஏறத் திரு ஏறும் ஒன்றாகக் காண்பதே காட்சி ஆருமில்லார்க்கு தெய்வமே துணை (அகதிக்குத் தெய்வமே துணை) தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் (தனக்கும் …
You visited this page on 16/02/18.
இறைவன் செயல் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/இறைவன்-செயல்/
ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை நறுக்கும் போது ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது. மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று கேட்டார். அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- அவனன்றி ஓர் அணுவும் அசையாது‘ …

–சுபம்–