குஞ்சிதபாதம் என்றால் என்ன? (Post No.4833)

Written by London Swaminathan 

 

 

Date: 20 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-24 AM

 

Post No. 4833

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;

 

சிதம்பரம் முதலிய இடங்களில் நடராஜர் காலைத் தூக்கி ஆடுவார். அப்போது வளைந்து நிற்கும் — தூக்கிய திரு அடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.

 

மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.

 

காஞ்சிப் பெரியவர் சமாதி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர் சிதம்பரம் சென்று தரிசிக்க வேண்டும் என்றார். அவரது உடல்நிலை இருக்கும் நிலையைப் பார்த்து தொண்டர்கள் மிகவும் தயங்கினர். அவரது எண்ண அலைகள் நடராஜர் காதுகளை அடையவே அற்புதம் நிகழ்ந்தது. மறு நாளே சிதம்பரம் தீட்சிதர் சிலர் பிரசாதத்துடன் வந்து சுவாமிகளைத் தரிசித்துச் சென்றனர்! அவர்கள் நடராஜப் பெருமானின் காலை அலங்கரிக்கும் குஞ்சித பாதத்தையும் கொண்டு வந்தனராம்; அதை அவர் தன் சிரம் மேல் வைத்து வணங்கினாராம்.

அகராதியில் இல்லாத தமிழ் சொல்!

குஞ்சிதபாதம் என்றால் என்ன? என்று தமிழ் அகராதியில் தேடினேன். ‘நடராஜரின் வளைந்த பாதம்’ என்ற செய்தி மட்டுமே வந்தது.

 

ஆ.சிங்காரவேலு முதலியாரின் தமிழ் என்சைக்ளோபீடியாவிலும் (அபிதான சிந்தாமணி) தேடினேன்; விக்கிபீடியாவிலும் தேடினேன்; பயனிலை.

கூகுளில் தேடினேன்— திரு, திருமதி. குஞ்சிதபாதங்கள் வந்தனர்.

 

இன்னும் ஆழமாகத் தேடினேன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் குஞ்சிதபாதம் கொண்டுவரச் சொன்ன சம்பவம் வந்தது.

 

நாங்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் சிதம்பரம் சென்ற போது மேடை மீது ஏறி நின்று நடராஜப் பெருமானையும், சிவகாமியையும் தரிசிக்க ஒரு தீட்சிதர் உதவி செய்தார். அவரிடம் குஞ்சித பாதம் கேட்ட போது அருள்கூர்ந்து கொடுத்தார். அது முழுக்க முழுக்க வெட்டிவேரினால் ஆனது- ஒரே கம கம  வாசனை; இப்பொழுது எங்கள் வீட்டு சுவாமி ரூமில் (PRAYER ROOM) மணம் பரப்பி வருகிறது.

 

–SUBHAM—

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

Leave a comment

3 Comments

  1. KCHANDRASEKARAN KRISHNAMURTI's avatar

    KCHANDRASEKARAN KRISHNAMURTI

     /  October 28, 2019

    Very nice and informative. When I was discussing with my daughter I chanced to come across Kunjithapadam & your blog. I too read about Maha Periyava miracle with reference to Kunjithapadam. Glad that we are related.

  2. Sathyarthi Chandrasekaran's avatar

    Sathyarthi Chandrasekaran

     /  October 27, 2021

    வெகு ஸ்வாரஸ்யமான கட்டுரை! வடமொழியில் “kuñcita” என்றால் “வளைந்த” என்ற பொருளே…

  3. Unknown's avatar

    Haran Arampamoorty

     /  January 11, 2025

    ஆமாம் இந்த தெய்வீக சிதம்பர குஞ்சிதபாதம் இன்று நமது பூசை இரு அறைகளை கமழ வைக்கிறது. அந்த நடராஜர் இரு பலன்களை எமக்கு அள்ளித்தந்த அருளை எப்படி மறக்க முடியும்.

Leave a comment