
கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2 (Post No.4932)
WRITTEN by London Swaminathan
Date: 20 April 2018
Time uploaded in London – 7-29 am (British Summer Time)
Post No. 4932
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
WRITTEN by London Swaminathan
Date: 20 April 2018
Time uploaded in London – 6-39 am (British Summer Time)
Post No. 4933
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

அந்தப்புர ஆபத்துகள்!
மன்னரின் அரண்மனையில் உள்ள அந்தப்புரம் ஒரு ஆபத்தான இடம் என்று சாணக்கியன் எச்சரிக்கிறான். அது சதித்திட்டங்களின் உறைவிடம் . ஆகையால் முன் எச்சரிக்கை அவஸியம் என்று சாணக்கியன் நுவல்கிறான். அந்தப்புரம் என்பது அகழி, மதில் சுவர் ஆகியவற்றால் பாதுக்காக்கப்பட வேண்டும்; பாம்பு,தீ, விஷம் ஆகியன வராத இடமாக இருக்க வேண்டும். ( பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து தீயினால் கொலை செய்ய துரியோதணன் முயன்றது சாணக்கியனுக்கும் தெரியும்)
அந்தப்புரத்தில் பல ரஹஸிய அறைகள், கதவுகள், மருந்து மூலிகைகள் இருத்தல் நலம்; தாதியர் இருக்க வேண்டும்; அந்தப்புர அதிகாரியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்க வேண்டும்.
அசோகன் இதற்கென ஒரு அதிகாரியை நியமித்ததும் அவர் பெயர் ‘ஸ்த்ரீ அத்யக்ஷ மாஹாமாத்ரா’ என்றும் அறிகிறோம்.
அந்த அதிகாரி காதல் பரீக்ஷையில் (தேர்வில்) தேறியவராக இருக்க வேண்டும் என்பான் கௌடில்யன்.

அதிகாரிகளின் சம்பளம்
அந்தர்வம்ஸிகா என்ற அந்தப்புர அதிகாரி க்கு அதிக சம்பளம் கொடுக்க கௌடில்யன் யோஜனை கூறுகிறான். அவருக்கு 24,000 பணம். அதாவது பிரதம மந்திரி, மஹாராணி, இளவரசர், ராஜாவின் அம்மா, தலைமைக் குருக்கள் ஆகியோருக்கு அடுத்த நிலை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 48,000 பணம் சம்பளம் (அர்த்த சாஸ்திரம் 5-3)
அந்தப்புரத்தை காவலர்கள், அலிகள், உளவாளிகள் , வயதானவர்கள் கண்காணிக்க வேண்டும். துறவிகள், கோமாளிகள், பொது மகளிர் உள்ளே செல்லக்கூடாது. குளித்துவிட்டு, சுத்தமாக வரும் பொது மகளிர் உள்ளே அனுமதிக்கப்படலாம். மஹாராணியின் உறவினர்களுக்குக் கூட அனுமதி கிடை யாது. யாரேனும் நோய்வாய்ப்பட்டால மட்டும் அனுமதி உண்டு. (அர்த்த சாஸ்திரம் 5-3)
மன்னரைச் சந்திப்பதற்கு முன்னர் மன்னரின் தோழியர்கள் மஹாராணியை உடல் பரிசோதனை (Body Search) செய்ய வேண்டும் விமான நிலயத்தில் கத்தி, வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதை சோதிப்பது போன்ற Body Search பாடி செர்ச்.
2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் இதை எழுதி இருப்பதைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்டு (007 James Bond Films) திரைப்படம் எல்லாம் தோற்றுவிடும் போலத் தோன்றுகிறது. மஹாராணிகள் உடல் சுத்தமும் பரிசீலிக்கப்படும்.
கௌடில்யன் சொல்கிறான்:-
மஹாராணியின் அறையில் மறைந்திருந்த சொந்த சஹோதரனே பத்ர சேனன் என்ற மன்னரைக் கொன்றதை அறிக .
அன்னையின் படுக்கைக்குக் கீழே ஒளிந்திருந்து மகனே தந்தையும் மன்னனும் ஆன காருசாவைக் கொன்றதை மறவாதே.
பொறியுடன் தேன் கலந்து தருவதாகச் சொல்லி காசி ராஜனை மஹாராணியே விஷம் வைத்துக் கொன்றதையும் அறிக.
காற் சிலம்பு, ரத்தினக் கல், கண்ணாடி ஆகியவற்றில் தடவிய விஷத்தால் மன்னர்களைக் கொலை செய்த செய்திகளையும் மறவாதே.
தலை முடியில் மறைத்து வைத்த கத்தியால் மன்னர்களைக் கொலை செய்த மஹாரணிகளையும் வரலாறு சொல்கிறது– அர்த்த சாஸ்திரம்1-20, காம சுத்திரம் 7-51/54

கீழ்ஜாதி நந்த வம்சம்
சாணக்கியன் இவ்வளவு விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம், அவர் தூக்கி எறிந்த நந்த வம்சத்தினர் மஹா அட்டஹாசம் செய்துவிட்டனர். ஒர் மஹாராணி, கீழ் ஜாதி அம்பட்டனுடன் தொடர்புகொண்டதால் அந்தப் பேரரசு தோன்றியது என கிரேக்க, ரோமானிய வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்துச் சென்றனர். அவர்களுடைய பெயர்கள்
கிரேக்கர் டயடோரஸ் சிகுலஸ் Diodoros Siculus (கி.மு. முதல் நூற்றாண்டு);
ரோமானியர் கர்டியஸ் ரூபஸ் Curtius Rufus (கிபி. முதல் நூற்றாண்டு)
சமண மாத நூல்கள் நந்த வம்ச மன்னன் ஒரு வேசிக்கும் அம்பட்டனுக்கும் பிறந்தவன் என்று எழுதிவைத்துள்ளன.
அசோகன் தனது அந்த்ப்புரத்தை மிகவும் கண்காணித்தானாம். ஒரு இளவரசனும் அந்தப்புர அழகியும் அரட்டை அடித்ததை அறிந்து இருவரையும் அடித்தே கொன்றதாக ‘திவ்யாவதானா’ சொல்கிறது.
‘முத்ராராக்ஷசம்’ என்ற ஸம்ஸ்க்ருத நாடகமும் அரண்மனைச் சதித் திட்டங்களை எழுதியுள்ளன.
நம்பத்தகுந்த, பாதுகாப்புச் சோதனைக்களுக்கு உடப்பட்ட பெண்களைக் கொண்டே அரசனைக் குளிப்பாட்ட வேண்டும். எண்ணெய் மஸாஜ் Oil Massage செய்ய வேண்டும்; சாமரம் வீசச் செய்யவேண்டும் என்று மநுஸ்மிருதியும் இயம்பும் (7-219)

பொய்க்கதைகள் மூலம் காதல் டெஸ்ட்
ராணிக்கும் மற்றொரு மந்திரிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக உளவாளி மூலம் வதந்தி பரப்புதல் முதலியன பற்றி கௌடில்யன் பேசுகிறான். மற்றொரு வழிமுறையையும் கௌடில்யன் விவாதிக்கிறான். அதாவது உளவாளி ஒருவன் வணிகன் போல வந்து மஹாராணியின் நெருங்கிய தோழியுடன் காதல் கொள்ளுதல்; அவளுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அள்ளி வீசுதல்; பெண்கள் எப்போதுமே பரிசு, நகை என்றால் மயங்கி விடுவார்கள். மற்றொரு உளவாளி அந்தப் பெண்ணுக்கு காதல் குளிகை தர வேண்டும் அதை அவள் பிரயோகித்தால், அந்த வணிகன் அவளுக்கு அடிமையாகி விடுவான் என்று சொல்ல வேண்டும். அதை அவள் நம்பி வாங்கி விட்டால் அந்த வணிகன் அவளுக்கு வசப்பட்டது போல நடிக்க வேண்டும்.
அவள் மஹாராணிக்கு மிக நெருக்கமானவள் என்பதால் மஹாரணிக்கும் செய்தி எட்டும். தோழி மூலம் அவளுக்கும் காதல் குளிகை தரவேண்டும்; ஆனால் அதில் பயங்கர விஷம் இருக்கும். மஹாராணி அதை நம்பி மன்னனுக்கு படுக்கை அறையில் கொடுத்தால் மன்னன் சாவான்.
இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதால்தான் மன்னர்களை எச்சரிக்கிறான் சாணக்கியன்.
அரண்மனைச் சதி நடந்த, ‘குனாலா- அவனது மாற்றாந்தாய் திஷ்ய ரக்ஷிதா சம்பவத்தை’ திவ்யாவதான என்ற நூல் காட்டுவதால் அக்காலத்தில் இவை எல்லாம் உண்மையில் நடந்ததாகவே தோன்றுகிறது.
சந்திர குப்தனின் நெருங்கிய நண்பனான பர்வதக, ஒரு விஷ கன்னிகை மூலம் இறந்ததை ‘முத்ராராக்ஷசம்’ என்னும் ஸம்ஸ்க்ருத நாடகமும், ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண மத நூலும் காட்டுகின்றன. மாற்றாந்தாய் தனது மகனுக்குப் பட்டம் வேண்டி இப்படிச் செய்ததாக அறிகிறோம்.
சாணக்கியன் கொடுத்த விஷம்
விஷத்துக்கு விஷமே முறிவு- என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் சாப்பிட்டால் நாளடைவில் விஷத்தை முறிக்கும் சக்தி வந்துவிம். ஹோமியோபதியும் இதே அடிப்படையில்தான் சிகிச்சை கொடுக்கிறது மௌர்யப்
பேரரசனான சந்திர குப்தனுக்கு சாணக்கியன் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்தானாம். அப்போதுதான் அவன் விஷத்தினால் இறக்கமாட்டான் என்று.
ஆயினும் துர்தரா என்ற மஹாராணி கர்ப்பமாக இருந்தபோது இது நடந்ததால் அவள் உடம்பில் விஷம் ஏறி இறக்கும் தருவாய் வந்துவிட்டது. உடனே கருவில் இருந்த சிசுவை caesarean operation சிசேரியன் ஆபரேஷன் மூலம் சாணக் கியன் எடுக்க வழி செய்தான். அப்படியும் அந்த குழந்தையின் உடலில் ஒரு சொட்டு (பிந்து) விஷம் ஏறியதால் அவனுக்கு பிந்துசாரன் என்று பெயர் வந்ததாக ‘பரிசிஷ்டபர்வன்’ என்ற சமண நூல் சொல்லும்.
மனுவும் கூட மனுதர்ம சாஸ்திரத்தில் விஷம் பற்றி எச்சரிக்கிறான்.
நம்பத் தகுந்த பரிசாரகர் செய்த உணவை, மற்றவர்களைச் சாப்பிடச் செய்து பரிசோதித்த பின்னரே மன்னன் சாப்பிட வேண்டும். மந்திரம் ஜபித்து விஷம் போனவுடன் சாப்பிட வேண்டும். விஷ முறிவு மூலிகைகளை உணவுடன் சேர்க்க வேண்டும். விஷத்தை முறிக்கும் ரத்தினக் கற்களை எபோதும் அணிந்திருக்க வேண்டும்.
-மநு 7-217/218
மன்னர்கள் ஒழுக்கம் தவறி நடந்தால் அழிவார்கள் என்பதையும் சாணக்கியன் விளம்புவான். ஒரு பிராஹ்மணப் பெண் மீது கை வைத்த மன்னன் போஜ தண்டக்யா கூண்டோடு அழிந்தான். காமத்தினால் கரால வைதேஹன் என்ற அரசன் ஒழிந்தான் (அர்த்த சாஸ்திரம் 1-6)
மநுவும், அடக்கமில்லாது ஆட்டம்போட்டு அழிந்த மன்னர்களின் பட்டியலைத் தருகிறான்- வேனன், நஹுஷன், பிஜாவன் மகனான சுதாஸ்; மநு 7-41/42)
.
–SUBHAM–