ஆரோக்கிய மேம்பாட்டிற்கான மந்திரங்கள்! (Post No.4934)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 21 April 2018

 

Time uploaded in London –  7-29  AM  (British Summer Time)

 

Post No. 4934

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் பத்திரிகையில் ஏப்ரல் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

லலிதா சஹஸ்ரநாமத்தில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான மந்திரங்கள்!

 

.நாகராஜன்

 

1

நம்முடைய நுல்கள் எல்லாம் உலகினரின் ஒட்டு மொத்த நன்மைக்காக எழுதப்பட்டிருப்பது ஹிந்துத்வத்தின் தனிச் சிறப்பாகும். எந்த சாஸ்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ம்ங்களாசாஸன ஸ்லோகம் ஒன்று இருக்கும். அது அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும்.

வாக்படர் எழுதிய அஷ்டாங்க ஹிருதயம் என்னும் நூலில் உள்ள் மங்களாசாஸன ஸ்லோகம் ராகாதி ரோகான்’ என்று ஆரம்பிக்கிறது.

ஆசை முதலிய ரோகங்கள் சதாகாலமும் சரீரமெங்கும் வியாபித்துள்ள்ன. விஷய விருப்பம்,, அறிவின்மை, ஆறுதலற்ற நிலை ஆகிய விசாரங்களை உண்டு பண்ணுகின்றன.

இத்தையகையவற்றை எந்த ஒரு அபூர்வ வைத்தியர் அடியோடு அழிக்கின்றாரோ அவரை வணங்குவேனாக!

(அந்த வைத்தியரது  குணங்கள் ந்மக்கும் வரும் படி பிரார்த்திப்போம்)

 

இதே போல் சரக சம்ஹிதையில் ஆரம்ப ஸ்லோகங்கள் பாரத்வாஜ ரிஷியிடமிருந்து தோன்றிய அற்புத உண்மைகள் அக்னிவேசர் வாயிலாக மனித குல நன்மைக்காகத் தரப்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.

 

2

லலிதா சஹஸ்ரநாமத்தில் பல நாமாக்கள் ஆகாரத்தைப் பற்றிக் காணப்படுகின்றன.

  • புஷ்டி (444வது நாமம்) தேகத்திற்குப் புஷ்டி தருவன
  • ருதிர ஸம்ஸ்திதா (420வது நாமம்) ரக்த தாதுவில் உறைபவள்.
  • ஸ்நிக்தௌன ப்ரியா (492வது நாமம்) தைலம், கிருதம், வாஸா, மஜ்ஜா இவை க்லந்த அன்னத்தில் பிரியமானவள்
  • மாம்ஸ நிஷ்டா ( 500வது நாமம்) மாம்ஸ தாதுவில் இருப்பவள்.
  • மேதா நிஷ்டா (507வது நாமம்) மேதா தாதுவில் இருப்பவள்
  • மதுப்ரீதா (510வது நாமம்) மதுவில் பிரியம் கொண்டவள்
  • த்த்யன்னாஸக்த ஹ்ருதய: (512வது நாமம்) தயிர்சாதத்தில் பிரியமானவள்.
  • அஸ்திஸம்ஸ்திதா (516வது நாமம்) அஸ்தி தாதுவில் இருப்பவள்
  • முத்கௌதனா ஸக்தசித்தா (517வது நாமம்) அரிசி, புயத்தம் பருப்பு, வெல்லம், தேங்காய், சீரகம், நெய், பால், முதலியவை சேர்த்துச் சமைத்த முக்தாச அன்னத்தில் மனம் கொண்டவள்.
  • மஜ்ஜா ஸம்ஸ்தா ( 524வது நாமம்) மஜ்ஜா தாதுவில் இருப்பவள்.
  • ஹரித்ரான்னைகரஸிகா (526வது நாமம்) மஞ்சள் பொங்கலை ரஸிப்பவள்
  • சுக்ல ஸம்ஸ்திதா ( 531வது நாமம்) சுக்ல தாதுவில் இருப்பவள்.
  • ஸர்வௌ தன ப்ரீத ஸித்தா ( 533வது நாமம்) எல்லா அன்ன வகைகளிலும் விருப்பமுடையவள்.
  • தாம்பூல பூரித முகி ( 557வது நாமம்) தாம்பூலம் நிறைந்த வாயினள்.
  • அன்னதா (667வது நாமம்) அன்னத்தை அளிப்பவள்
  • ம்ஹாக்ராஸா ( 752வது நாமம்) பெருங் கவளம் கொள்பவள்

17)  மஹாசனா ( 753வது நாமம்) பெருந்தீனி உள்ளவள்

 18) த்ன தான்ய விவர்த்தனீ (886வது நாமம்) தனத்தையும் தான்யத்தையும் விருத்தி செய்பவள்.

 

4

தேவதைகளுக்கு நிவேதனம் செய்யும் போது வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் ஆகியவற்றுடன் அந்த தேவதைக்கு உரிய பிரியப்பட்ட தனிப்பட்ட வஸ்துக்களையும் படைப்பதால் நமது உடலில் புஷ்டி ஏற்படும்.

இதர ஆரோக்கிய நலங்கள் அனைத்தும் தோன்றும்.

தொன்று தொட்டு லலிதா ஸஹஸ்ர நாமத்தை இல்லந்தோறும் வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமியில் ( சிலர் அன்றாடம்)  சொல்லி வருவது மரபாக இருந்து வருகிறது.

இதனால் சகல சௌபாக்கியங்களையும் காலம் காலமாக ஹிந்து குடும்பங்கள் அடைந்து வருவது கண்கூடு.

இதோ போல விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான ஏராளமான நாமங்கள் உள்ளன. அன்றாடம் ஒதும் போது அடிப்படையான ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் இது தருவது அனுபவத்தால் உணரப்படும் ஒன்று!

ஓதுவோம்; உய்ர்வோம்.

*****

 

 

Leave a comment

Leave a comment