ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

Research Article Written by London Swaminathan 

 

Date: 27 April 2018

 

Time uploaded in London – 15-33

 

 

Post No. 4954

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

உலகப் புகழ்பெற்ற காஷ்மீரப் புலவன் கல்ஹணனன் செப்புகிறான்

 

“The reputation of the great does not by any means conform to their birth place”. Rajatarangini 4-41

 

ஒருவர் பிறந்த இடத்தினால் பெரியோரின் புகழ் குறையாது; மங்காது.:

 

இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் சாது சந்யாசிகளும் மஹான்களும் பிறக்கும் இடத்தைப் பட்டியலிட்டுப் பார்த்தால் விளங்கிவிடும்.

 

அவர்கள் எந்த இனத்திலும் எந்த நாட்டிலும், எந்த   இ டத்திலும், எவருக்கும் பிறப்பார்கள். உலகப் புகழ்பெற்ற இந்திய ஞானிகளில் பெரும்பாலோர் எவருக்கும் தெரியாத தொலைதூர கிராமங்களில் பிறக்கிறார்கள். கீழேயுள்ள சுவையான  பட்டியலைப் பாருங்கள்; நேரம், காலம், இடம் என்று தேர்ந்தெடுக்காமல் பிறப்பது தெரியும். அவர்களை யாரும் தனிச் சொத்தாகக்  கருதுவதில்லை

 

அவர்கள் உலகிற்கே சொந்தம்; கல்ஹணர் சொல்லுவது சரியே

 

கீழேயுள்ள பட்டியல் விரிவானது அல்ல. ஊருக்கு ஒரு ஞானி இருப்பதால் சேர்த்துக் கொண்டே போகலாம் இதோ ஒரு சின்னப்பட்டியல்:-

 

A

அருணகிரிநாதர்- திருவண்ணாமலை

ஆதிசங்கரர்- காலடி, கேரளம்

அன்னமாசார்யா- தல்லபாக, ஆந்திரம்

அரவிந்தர்- கல்கத்தா

ஆனந்தமயீ மா- கியோரா, வங்கதேசம்

ஆழ்வார்கள் 12

ஆண்டாள் – திருவில்லிப்புத்தூர்

பெரியாழ்வார்-திருவில்லிப்புத்தூர்

நம்மாழ்வார்- திருக்குருகூர்

பொய்கை ஆழ்வார்- திருவெஃகா

பேயாழ்வார்- மயிலை

பூதத்தாழ்வார்- மஹாபலிபுரம்

திருமழிசை ஆழ்வார்- திருமழிசை

தொண்டரடிப்பொடி ஆழ்வார்- மண்டன்குடி

மதுரகவி- திருக்கோளூர்

திருப்பாணாழ்வார்- உறையூர்

குலசேகராழ்வார்- திரு வஞ்சிக்களம்

திருமங் கை ஆழ்வார்- குறையலூர்

B

பாஸ்கராச்சார்யா- பீஜப்பூர்

பக்தி வேதந்த ப்ரபுபாத (ISKCON)- டாலிகஞ்ச்

புத்தர்- கபிலவஸ்து

 

E

ஏகநாத்- பைதான்,மஹாராஷ்டிரம்

 

G

குருநானக்- நான்கானா சாஹிப் (பாகிஸ்தான்)

கேசவ பலிராம் ஹெட்கேவார் (RSS)- நாகபுரி

 

J

ஞானதேவ்- அபேகான்  , மஹாராஷ்டிரம்

 

K

காஞ்சி மஹா ஸ்வாமிகள்- விழுப்புரம்

கபீர்தாஸ்- காசி

குழந்தையானந்த சுவாமிகள்- சமயபுரம், மதுரை

கனகதாசர்- பாட கிராமம், கர்நாடகம்

கம்பன் – தேரழுந்தூர்

 

M

மஹா வீரர்- குண்டக்ராம- பீஹார்

 

மாதவ ஸதாசிவ கோல்வல்கர்  (RSS)- ராம்டெக்

மஹாத்மா காந்தி- போர்பந்தர்- குஜராத்

மத்வர்- பாஜக ,உடுப்பி

முத்து ஸ்வாமி தீக்ஷிதர்- திருவாரூர்

மாணிக்கவாசகர்- திருவாதவூர்

 

மீராபாய்- சௌகரி, ராஜஸ்தான்

முக்தாபாய்- அபேகாவ்ன்

 

N

நாராயணகுரு – செம்பழந்தை, கேரளம்

 

நரசிம்ம மேதா- டாலஜ , குஜராத்

நாயன்மார் 63- பெரும்பாலோர் தமிழ்நாட்டு கிராமங்கள்

நிவ்ருத்தி- அபேகாவ்ன்

நாம்தேவ்- தண்ணீரில் மிதந்துவந்தார்

 

P

புரந்தரதாஸர்- தீர்த்தஹல்லி,கர்நாடகம்

பரமஹம்ச யோகானந்தர்- கோரக்பூர், உ.பி

R

ராமகிருஷ்ண பரமஹம்சர்- கமார்புகூர், மேற்கு வங்கம்

ரமண மஹரிஷி – திருச்சுழி

ராமனுஜர்- ஸ்ரீ பெரும்புதூர்

ராகவேந்திரர்- புவனகிரி, தமிழ்நாடு

சமர்த்த ராமதாஸர்- ஜாம்ப்

பத்ராஜலம் ராமதாஸர்- நலகொண்டபள்ளி

ராமதீர்த்தர்- முரளிவாலா, பஞ்சாப்

வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் – மருதூர்

 

ராம்தாஸ் சுவாமி- காஞ்சன்காடு, கேரளம்

ரவிதாஸர்- கோவத்தன்பூர், உ.பி.

S

சாரதாதேவி- ஜய்ராம்பாடி, மேற்கு வங்கம்

சத்ய சாய்பாபா- புட்டபர்த்தி, ஆந்திரம்

ஷீர்டி சாய்பாபா- சீர்டிக்கு அருகில்

சேஷாத்ரி ஸ்மாமிகள் – திருவண்ணாமலை, ஊஞ்சலூர் தொடர்பு

ஷியாமா சாஸ்திரி- திருவாரூர்

 

சோபான-  அபேகாவ்ன்

சுப்ரமண்ய பாரதி- எட்டயபுரம்

சுவாமி சிவானந்தர்- பத்தமடை, தமிழ்நாடு

 

சுந்தரர்- திருநாவலூர்

ஸ்வாமிநாராயண்- சாபைய- உ.பி

சூர்தாஸ்- சிரி, டில்லிக்கு அருகில்

 

சித்தர் 18 – சமாதிகள் மட்டுமே பிரஸித்தம்

 

திருஞான சம்பந்தர்- சீர்காழி

திருமூலர்- காஷ்மீர்

திருவள்ளுவர்- மயிலை-சென்னை

துளசிதாசர்-சூகர் க்ஷேத்ர சோரன்

திருநாவுக்கரசர்–திருவாமூர்

தியாகராஜர்- திருவாரூர்

துக்காராம்- டேஹு

 

வல்லபாசார்யா- வாரணாசி/காசி

ஸ்ரீவல்லப- பீதாபுரம், ஆந்திரம்

ஸ்வாமி விவேகாநந்தர்- கல்கத்தா

வியாசர்- கங்கை நதித் தீவு

வால்மீகி- காட்டின் நடுவில்

இந்தப் பட்டியல் முழுப் பட்டியல் அல்ல- நேரம் கிடைக்கும்போது இரண்டாம் பட்டியலும் வரும்; மூன்றாம் பட்டியலும் வரலாம்!

 

–சுபம்–

Leave a comment

1 Comment

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    இந்தப் பட்டியலில் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் பிறந்த இடத்தைப்பற்றிச் சொல்லவேண்டி யிருக்கிறது. ஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதியுள்ள ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சரித்திரத்தில் [மூன்றாம் பதிப்பு, 1975], ஸ்வாமிகள் காஞ்சீபுரத்தில் பிறந்தார் என எழுதியிருக்கிறார். ஸ்வாமிகள் சஞ்சரித்ததாகச் சொல்லப்பட்ட 17 இடங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ஊஞ்சலூர் இல்லை. ஸ்வாமிகள் திருவண்ணாமலையில் 40 ஆண்டுகள் இருந்தார். அப்போது, ஒரே ஒரு நாள் மட்டும் அருகிலுள்ள சீலைப்பந்தல் கிராமத்திற்கு ஒரு மணி நேரம் சென்றுவந்தார். ஸ்வாமிகள் திருவண்ணாமலையை விட்டுப் பிரிந்திருந்த நிகழ்ச்சி இது ஒன்றுதான் !

    ஆனால் பின்னாட்களில் ஊஞ்சலூரில் ஒரு அதிஷ்டானம் ஏற்பட்டது, இதன் தலைமையகம் கோயம்புத்தூரில் இயங்கியது. ஸ்வாமிகள் சூக்ஷ்ம பிரவேசத்தில் அருளுபதேசம் செய்ததாகவும் சொல்லப்பட்டது.

Leave a comment