
Written by S NAGARAJAN
Date: 11 JUNE 2018
Time uploaded in London – 7-15 am (British Summer Time)
Post No. 5097
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
நரேந்திர மோடி நாளுக்கு 20 மணி நேரம் உழைப்பதன் ரகசியம்!
ச.நாகராஜன்
ரிபப்ளிக் டி.வியில் ஆர்னாப் கோஸ்வாமி வெள்ளியன்று (8-6-18) பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மாவோயிஸ்டுகள் கொல்லச் சதி தீட்டும் கடிதத்தை வெளியிட்ட போது நாடே திடுக்கிட்டது.
பல கோடி ரூபாய் இதற்குத் தேவைப்படுகிறது என்றும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களையும் கட்சிகளையும் இதற்கு உதவி கோரி நாடலாம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாக்கியத்தைக் காண்பித்து அந்த நிறுவனங்களும் கட்சிகளும் எவை எவை என்று கேட்டார் ஆர்னாப்.
நாடே அறியத் துடிக்கும் விஷயம் இது.
மாவோயிஸ்டுகளை இரக்கமின்றி நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று அவர் கூறிய போது தேசமே ஆமாம் ஆமாம் என்று ஒரே குரலில் கூறியது.

ஹ்யூமன் ரைட்ஸ் என்ற பெயரில் அந்த இயக்கத்தில் இந்த வம்பு கோஷ்டிகள் புகுந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றின் பெயரிலும் பெண்ணியக்கம் பெயரிலும் மனித உரிமைகள் பெயரிலும் உள்ளே நுழைந்து தேசத்தைத் துண்டாட நினைக்கும் தேசத் துரோகிகள் கடையில் ராஜீவ் காந்தி ஸ்டைலில் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.
அருண் ஜேட்லியின் நான்கு விதமான தேசத் துரோகிகளின் பட்டியலையும் இந்த டி.வி.நிகழ்ச்சி அறிமுகப் படுத்தியது.
சரி, நரேந்திர மோடி என்ன ‘பாவம்’ செய்தார் – இந்த தேசத் துரோகிகளின் பார்வையில் விழுவதற்கு.
பதிலை அனைவரும் அறிவோம்.
நாட்டிற்காக நாளுக்கு இருபது மணி நேரம் உழைக்கிறார் என்பது தான் பதில்.
அதாவது இருபத்து நான்கு மணி நேரத்தில் 83.88 சதவிகிதம் அவர் உழைக்கிறார்.
நாடு ஒன்றுபட்டு முன்னேறி விட்டால் நாசகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாதே.

2
நரேந்திர மோடி லண்டனில் 18, ஏப்ரல், 2018 அன்று வெஸ்ட்மினிஸ்டர் சென்ட்ரல் ஹாலில் ‘பாரத் கி பாத் சப்கே சாத்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒருவர் மோடி அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி:
“ நீங்கள் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி இதற்கான சக்தியும் உந்துதலும் கிடைக்கிறது?!”
அதற்கு உடனே மோடி அவர்கள் நகைச்சுவையாக பதில் அளித்தார்:” நான் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிலோ வரை திட்டலையும் ஏசலையும் ஜீரணிப்பதால்!”
பின்னர் அவர் கேள்விக்கான பதிலைக் கூறலானார்:
‘அவன் ஒரு பாரமல்ல; அவன் எனது சகோதரன்’ என்ற கதையை முதலில் கூறினார்.
ஒரு இளம் பெண் அவளது சின்னத் தம்பியை தூக்கி வைத்துக் கொண்டு மலையின் மீது தினமும் ஏறிக் கொண்டிருந்தாள். ஒரு சந்யாசி அவளைப் பார்த்து,” அவனைத் தூக்கிக் கொண்டு மலை மீது ஏறுகிறாயே, உனக்குக் களைப்பாக இல்லையா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த இளம் பெண் பதில் சொன்னாள்: “அவன் எனது தம்பி.”
சந்யாசி கேட்டார்:”அது எனக்குத் தெரியும். ஆனால் தினந்தோறும் அவனைச் சுமந்து மலை மீது ஏறுவது சிரமமாகத் தோன்றவில்லையா?”
ஒவ்வொரு முறை சந்யாசி இப்படிக் கேட்கும் போதும் அந்த இளம் பெண் கூறிய பதில்: “அவன் எனது தம்பி.”
கடைசியாக ஒரு நாள் முத்தாய்ப்பாக அவள் சந்யாசியிடம் கூறினாள் : “எனது தம்பியைத் தூக்கிக் கொண்டு போவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சுமையாகத் தோன்றவில்லை.”
மோடி கதையைக் கூறி விட்டுத் தொடர்ந்தார் : “அந்தப் பெண் போல தேசத்திற்காகவும் எனது சகோதர சகோதரிகளான 125 கோடி பேருக்காகவும் உழைக்கும் போது எனக்கு களைப்பே தோன்றவில்லை.”
உண்மையான அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய ஒரு சிறந்த தேசத் தொண்டனின் பதில் இது.

இப்படிப்பட்ட தேசபக்தனை மாவோயிஸ்டுகளும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களும் கட்சிகளும் விரும்பவில்லை; விரும்பாது என்பது நிதர்சனமான உண்மை.
ராஜீவ் காந்தி ஸ்டைலில் என்றால் தற்கொலைப் படையை தயார் செய்ய வேண்டும் அதற்காக பல கோடி ரூபாய்களும் ஏராளமான ஆயுத தளவாடங்களும் தேவை என்று கடிதம் குறிப்பிடுவதில் ஆச்சரியம் இல்லை.
தேசம் இந்த துரோகிகளால் ஒரு இளம் பிரதமரை இழந்தது போதும்.
இவர்களை இனம் கண்டு, கண்டு பிடித்து உடனடியாக நாடு கடத்த வேண்டும்.
ஜனநாயகத்தின் பெயரால் இந்த தேசத் துரோகிகள் தேசத்தைப் பிரிக்கும் எதை வேண்டுமானாலும் கூறிக் கொண்டு திரியலாம் என்று நினைத்தால் அதற்கு இந்திய மக்களின் பதில்”
“அது நடக்காது, ‘தோழா’! அதற்கு முன் உன் பாவச் சுமையால் நீயே அழிவாய்!” என்பது தான்!
ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டிய தருணம் இந்திய வரலாற்றில் இதுவே தான்!
சேர்வோம்; வெல்வோம்!
***