
Written by LONDON SWAMINATHAN
Date: 16 JUNE 2018
Time uploaded in London – 7-33 am (British Summer Time)
Post No. 5116
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் இல்லாத நாடுகளே உலகில் இல்லை; போர்னியோ (இந்தோநேஷியா) காட்டுக்குள் சம்ஸ்கிருத கல்வெட்டுகள்; மத்திய ஆஸிய பாலைவனத்தில் சம்ஸ்கிருதச் சுவடிகள்; சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு; துருக்கியில் வேதகால தெய்வங்களைக் கூறும் கி.மு1400 ஆண்டுக் கல்வெட்டு. எகிப்தில் தசரதன் (கி.மு1300) கடிதங்கள்; துருக்கியில் தசரதன் (துஷ்ரட்ட) பிரதர்தனன் ஆட்சி; தென் கிழக்காசிய நாடுகளில் 1500 ஆண்டுகளில், 1000 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள். ஜப்பான் கொரியா முழுதும் போதிசேனர் மூலம் ஸம்ஸ்க்ருத்ச் சுவடிகள்; மேலை நாடுகள் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இதாலியன்,ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம்– தமிழிலோ ஸம்ஸ்க்ருதக் கலப்பில்லாமல் ஒருவர் கூட, ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாத நிலை. எந்தப் பத்திரிக்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஸம்ஸ்க்ருத சொற்கள்!!!
ஸம்ஸ்க்ருதம் இல்லாத கட்டுரை, பிளாக், உரை, சொற்பொழிவு, நாளிதழ், டிவி, அன்றாடப் பேச்சு — எதுவும் இல்லை! நிற்க.
இப்பொழுது லோகேஷ் சந்திரா என்பவர் எழுதிய நூலில் ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி அரிய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். இதோ லோகேஷ் சந்திரா செப்பும் அற்புதச் செய்திகள்:-
ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருத மொழியை பொங்கோ (BONGO) என்று அழைப்பர்

பொன் =பிராஹ்மன்
கோ = மொழி
இளவரசர் ஷோடோகு ஜப்பானின் முதல் அரசியல் சட்டத்தை ஸம்ஸ்க்ருத துதியுடன் — உஷ்னீசவிஜயா – தாரணீ என்று– எழுதி புனிதப் படுத்தினார். இது ஓலைச் சுவடியில் குப்தர் கால லிபியில் (எழுத்தில்) பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி.706-ல் போதிசேனர் என்ற இந்திய யோகியை புத்தமத ‘க்யோகி’ (GYOGI) ஜப்பானிய- ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழியில் வரவேற்றார்.
டாய்ஞ்சி கோவிலில் போதிசேனரும், புத்தஸ்திராவும் ஜப்பானியர்களுக்கு ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொடுத்தார். 1300 ஆண்டுகளுக்கு ஸம்ஸ்க்ருதம் கற்பித்த அறையை குரு ஒனோ (ABBOT ONO) எனக்குக் காண்பித்தார்.
ஜப்பானிய புஸ்தகங்களை உள்ளபடி அறிய வேண்டுமானால் ஸம்ஸ்க்ருத அறிவு அத்யாவஸியம் என்பதை கோபோ டைச்சி (கி.பி806) அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஷிங்கோன் (SHINGON) கோவில்களில் தினசரிப் பிரார்த்தனைகள் ஸம்ஸ்க்ருத மந்திரங்களுடன் ஹோமத்துடன் நடை பெறுகின்றன.
மெய்ஜி புனர்நிர்மாணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய அறிஞர்கள் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் சென்று ஸம்ஸ்க்ருதம் பயின்றனர்.
தி யங் ஈஸ்ட் (THE YOUNG EAST) என்ற பத்திரிக்கையில், இந்திய- ஜப்பானிய உறவு பற்றி பேராசிரியர் ஜுஞ்சிரோ டகாகுசு (PROF.JUNJIRO TAKAKUSU) ஏழு கட்டுரைகள் எழுதினார். அவற்றில் இந்தியாவிலிருந்து ஜப்பான் பெற்றது என்ன? என்று விளக்கினார்:

1, 2- யோகிகள் பற்றிய கட்டுரை
3 இந்து மத தெய்வங்கள்
4 சங்கீதமும் நாட்டியமும்
5 சதுரங்க விளையாட்டும் பருத்தித் துணியும்
6 பெயர்களும் சொற்களும்
7 மேலும் பல பெயர்களும் சொற்களும்
அவர் கொடுத்த நீண்ட பட்டியலில் அன்றாட வழக்கிலுள்ள ஜப்பானிய சொற்களின் ஸம்ஸ்க்ருத மூலம் கட்டப்பட்டுள்ளது:
ஜப்பானிய மொழி — ஸம்ஸ்க்ருத மொழி
ஹதா = பதாகா (கொடி, சின்னங்கள்)
சரவ= சரவா (தட்டு)
கஹர ஓடு= கபால
அபட = அற்புத
சொர = ஸ்வர் (வானம்)
மோஷ= மூர்ச்சா (MODULATION ஏற்றி இறக்கும் குரல்)
டஸ்ஷின்= தக்ஷிணை

அகா= அர்க்ய (தீர்த்தம்/தண்ணீர் AQUA)
(எனது கருத்து– இன்றும் பிராஹ்மணர் குடும்பங்களில் குழந்தைகளுக்கு அமுது ஊட்டும்போது மம்மம் சாப்பிடு ‘அக்கம்’ குடி என்று சொல்லுவர்- இவை இரண்டும் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து பிறந்த லத்தீன் மொழிச் சொற்கள்- ஆக்வா AQUA= தண்ணீர்)
நமோ = நம (ஸ்தே; ஸ்காரம்’ நம’ சிவாய)
வனன் = வந்தனம்
பன்டய்= வந்தே (மாதரம்)
தேர= மூத்தோர் (பாலி, ஸம்ஸ்க்ருத சொல்)
அரண்ய (கோவில்)= அரன்
கரன் = சங்காராம
தோ= தூப, பகோடா
ஷுமி-தன்= சுமேரு (நடுப்பகுதி)
ஷரி= சரீர
அகட (விஷ முறிவு)= அகத
ரூரி= வைடூர்ய
ஹரி = ஸ்படிக
(எனது கருத்து- ஹரி என்பது மஞ்சள் பச்சை ஆகிய நிறக் கற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் பயன்படுத்தப்படுகிறது)
கேச = காஷாய உடை
கண்ட (நிறம்) = கந்த
செந்தன் = சந்தன
க்யார= அகரு/ அகில்
கரிரோகு= ஹரீதக (கடுக்காய்)
ஆமலக = ஆமலக/நெல்லிக்காய்
உடோங்கே= உடும்பரா
குன்ரோகு= குன்டுருக
யென்பு= ஜம்பூ (நாவல் மரம்)
ஷர = சால
தொரயோ/ பைதர= தால பத்ர
முட (வீண்)= முதா
செட்சுன= க்ஷண ( நொடியில்)
யஜுன் = யோஜனை (தூரம்)
கிசா = கஜ/யானை
முஷிர= மற்கட (குரங்கு)
கர்யோபிங்க ( வான் குருவி)= கலவிங்க
பிடா (அறிவு)= வேத
யுக , யுய் = யோகி, யோக
ஷமோன், பிகு= ஸ்ரமண, பிக்ஷு
டலி, ஜபி= தகனம் (ஜபிட-பாலி மொழி)
ட்சுசுமி/ துடுமி- துந்துபி ( வாத்யம்)
இன்னும் பல சொற்களை அவர் பட்டியலிட்டுள்ளார். நல்ல ஸம்ஸ்க்ருத அறிவுடையோரே அவற்றை புரிந்து கொள்ள முடியும்.
-சுபம்-